Saturday, June 7, 2008

நான் பணம் கொடுக்கணுமா அல்லது அவர்கள் கொடுக்க வேண்டுமா.... ?????????

சில சமயங்களில் நமக்கு ஏற்படும் நமது நல்ல , கெட்ட அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டால் அதற்கு ஒரு முடிவு கிடைக்கும் என்றே நினைக்கிறேன். ஒரு வருட காலமாக இந்த ஏசியுடன் நான் படும் கஷ்டத்திற்கு அளவே இல்லை. கோவையிலிருந்து, சென்னை வந்த போது, அக்டோபர் மாதமானதால், சென்னையில் வெயிலின் கொடுமை எனக்கு அவ்வளவாக தெரியவில்லை. கோவையில் உபயோகித்துக் கொண்டிருந்த ஒனிடா ஏசியை இங்கு ஃபிக்ஸ் செய்தேன். i seldom used it. ஒரு மூன்று மாத காலம் சரியாக வேலை செய்தது. அதன் பிறகு கேஸ் லீக் என்று மூன்று முறை ரிப்பேயர் செய்ய வேண்டியிருந்தது. திரும்பியும் கொஞ்ச நாட்களில் மக்கர் செய்ய ஆரம்பித்தது. இந்த தடவை அதன் காயில் போய்விட்டது. வாரண்டி முடிந்துவிட்டதால் அதை repair செய்ய 6000 ரூபாய் ஆகும் என்றனர். அதன் பிறகு கேஸ் .. இத்யாதி செலவுகள்..... ஆகவே நான் ஒரு புது ஏசி வாங்க முடிவு செய்து சாம்சங் ஏசி வாங்கினேன். இந்த ஏசியை நான் 2007 அக்டோபரில் வாங்கினேன். தள்ளுபடியில் 19000 ரூபாய்க்கு கிடைத்தது. 3 மாதத்திற்கு ஏசியை அவ்வளவாக உபயோகிக்கவில்லை. இந்த வருடம் பெப்ரவரி மாதம் உபயோகிக்க ஆரம்பிக்கும் போதுதான் சரியான் படி கூலாகவில்லை என்று தெரிந்தது. செர்விஸ் சென்டர் போன் பண்னி , அவர்கள் வந்து கேஸ் லீக் என்று சொன்னார்கள். அடுத்த நாள் ஒருத்தர் வந்து கேஸ் fill பண்ணி சென்றார். ஒரு வாரம் சரியாக இருந்தது. கூலிங் கம்மியானதால் திரும்பியும் ஒரு போன். இப்படியே ஒரு ஐந்து முறை நடந்தது. என்னுடைய பொறுமைக்கும் அளவே இல்லை. ஒவ்வொறு முறையும் உடனே வந்து பார்ப்பார்கள். ஆனால் problem never got solved.
எனக்கும் ஏனோ கத்த தோன்றவில்லை. அதன் பிறகு ஒரு நாள் ஒரு சீனியர் மேனேஜர் போன் செய்து என் ஏசியை replace செய்வதாக கூறினார். நானும் 'சரி'யென்றேன். ...ஒரு வாரம் எந்த communication-ம் இல்லை... இரண்டு வாரத்திற்கு முன்பு ஒரு நாள் நான் நல்ல ஜூரத்தோடு வீட்டில் இருந்தபோது ஒரு போன். அடுத்த நாள் ஏசியை ஃபிக்ஸ் பண்ணுவதாகவும், ஆனால் நான் வைத்திருந்த மாடல் இல்லாததால் வேறு ஒரு மாடல் கொடுப்பதாகவும் சொன்னார்கள். நானும் தூக்க வேகத்தில் 'சரி'யென்று சொன்னேன். எனக்கு அன்றைய நேரத்தில் argue பண்ண முடியவில்லை. I was running high tempertaure.
அந்த வாரத்தில் வெள்ளிக்கிழமை கூப்பிட்டு ஏசி fix பண்ணுவதாக சொன்னார்கள். ஆனால் நான் என்னால் லீவு போடமுடியாது ஆகவே sunday வாங்க என்றேன். sunday யாரும் வேலை செய்வதில்லை என்றார்கள்.

ஒரு வழியாக சனிக்கிழமை மாலை 5 மனிக்கு வருவதாக சொன்னார்கள். வந்தாங்க வந்தாங்க இரவு 8 மணிக்கு. .. அவசர அவசரமாக..ஃபிக்ஸ் செய்தார்கள். .. மாடியில் ஒரு சின்ன டார்ச் வைத்து அவுட் டோர் unit-டை ஃபிக்ஸ் செய்தார்கள். .. ...... .. டெமான்ஸ்ட்ரேஷன்க்கு ஒருத்தர் வருவார் என்று சொல்லிவிட்டு, ஒரு ரிசிப்ட் கொடுத்தனர். அதில் அதன் difference ஆன 5490 ரூ கொடுக்கும்படி எழுதிருந்தது.... எனக்குள் ஒரு வேகம்... ஆனாலும் அந்த சின்ன பசங்களிடம் ஒன்றும் சொல்ல இயலவில்லை. திங்கள் கிழமை வந்து 'செக்கை வாங்கிக் கொள்ளும்படி சொன்னேன். போய்விட்டார்கள்.....

இத்தோடு முடிந்ததா என் கஷ்டம்ம்ம்ம்.... இல்லை.. இல்லை.... புது ஏசி (BIO-Cool) மாட்டிய அடுத்த நாளே அது சரியில்லை என்று தோன்றியது. கூலிங்கே இல்லை. வியர்த்துக்கொட்டியது. என் ரூம் temperature 34 C காமித்தது... சரி.. திரும்பியும் சொதப்பிட்டார்கள் என்று தெரிந்தது........
சரியாக ஃபிட் பண்ணவில்லை.. காப்பர் ட்யூபிலிருந்து கேஸ் லீக் என்று கண்டுபிடித்து.... ஏதோ nitrogen pressure ஏற்றி செக் செய்து ... சரி பண்ணியுள்ளோம் என்று சொன்னார்கள். இன்று காலை ஒரு போன்.. அந்த difference amount செலுத்தும் படி......

சொல்லுங்களேன்.... ...

நான் பணம் கொடுக்கணுமா அல்லது அவர்கள் எனக்கு பணம் கொடுக்க வேண்டுமா.... ?????????...
(How long will this ac be covered under the warranty... from the date of fixing this AC or from the date of buying the previous faulty one?)

29 comments:

Sanjai Gandhi said...

தூக்கக் கலக்கத்தில் இருக்கும் போது அவர்கள் பேசியது நல்லது தான். இல்லை என்றால் நீங்க உங்களோட மாடல் தான் வேணும்னு விவாதம் பண்ணி இருப்பிங்க. அவங்களும் அந்த மாடல் ஸ்டாக் இல்லை மேடம். வரட்டும் தருகிறோம் என்று இழுத்திருப்பார்கள். அவர்கள் உங்களுக்கு போன் பண்ணும் போது இந்த Difference Amount பத்தி சொன்னாங்களா? இல்லை என்றால் வெரி சிம்பிள். நீங்க உபயோகித்த மாடல் ஏசியை மாட்டிவிட்டு இதை எடுத்து போக சொல்லுங்க... இப்போது எந்த நிறுவனமும் Replacement warranty தருவதில்லை. பழுது சரி செய்யும் வாரண்டி மட்டும் தான் தருகிறார்கள். அதற்காக அவர்கள் தரும் குப்பைகளை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை... நீங்க மேலதிக பணம் தர வேண்டாம்... ஒரே capacity உள்ள ஏசியின் பல மாடல்களுக்கு இடையில் 5000 ரூபாய்க்கு மேல் வித்தியாசம் வர வாய்ப்பில்லை... அவர்கள் உங்கள் ஏசியை Second Hand விலைக்கு மதிப்பிட்டிருப்பார்கள். நீங்க பணம் தராதிங்க. நுகர்வோர் கோர்ட்டுக்கு போவேன் என்று சொல்லுங்க. எந்த கடையில் வாங்கினிங்க. சாம்சங்கில் எனக்குள்ள தொடர்புகளை வைத்து உதவ முடியுமா பார்க்கிறேன்.

இரண்டாம் சொக்கன்...! said...

கலகம் பிறந்தால் நியாயம் கிடைக்கும் டாக்டர்....கலகம் செய்ய நீங்கள் தயாராய் இருக்கிறீர்களா என்பதுதான் இப்போது கேள்வி!

(அப்பாலிக்கா என்ன ஆச்சு டாக்டர்..ஆளையே காணோம், பிஸியா,இல்லை உடம்புக்கு எதுவுமா?. உடம்பை பார்த்துக்கங்க தாயே!)

மங்களூர் சிவா said...

டாக்டர் உங்க ஆஸ்பத்திரில இருந்து வாட்ட சாட்டமா ரெண்டு பேரை அனுப்பி அந்த சாம்சங் எக்ஸிக்யூடிவ்வை ரெண்டு தட்டு தட்ட சொல்லுங்க ஏசி சரியாகீடும்.

வித்தியாச பணமும் குடுக்க தேவையில்லை.

Anonymous said...

Please dont go for Samsung AC. Better go for Carrier, Voltas, Blue Star, General. Those are very good ac's.

Anonymous said...

Contact the Samsung india customer service manager via email or top manaer in india. The AC/cost and every damnthing will be set right in few hours. I have had personal experience of handling this way.. Best of luck!

U.P.Tharsan said...

நீங்கள் இருவரும் பணம் எனக்கு தரவேண்டும்.. இந்த பதிவை பொறுமையாய் இருந்து நான் படித்ததற்காக.... :-))

வடுவூர் குமார் said...

ஹூம்! கொடுமையாக இருக்கு.
கன்சூமர் கோர்ட் ஒன்று இருக்காமே?? போனா கரெக்டா சொல்லிடுவாங்க “அவுங்களுக்கு”

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

டாக்டர் !
ஏசி பிட் பண்ணியதில் இருந்து தான் வார்ரன்ட்டி காலம் ஆரம்பிக்கும்
எனக்கு தெரிந்து வோல்டஸ் தான் பெஸ்ட் ஏசி .
ஆனால் யாருமே அதனை பரிந்துரைக்க மாட்டார்கள் !
அன்புடன்
அருவை பாஸ்கர் .

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

டாக்டர் !
ஏசி பிட் பண்ணியதில் இருந்து தான் வார்ரன்ட்டி காலம் ஆரம்பிக்கும்
எனக்கு தெரிந்து வோல்டஸ் தான் பெஸ்ட் ஏசி .
ஆனால் யாருமே அதனை பரிந்துரைக்க மாட்டார்கள் !
அன்புடன்
அருவை பாஸ்கர் .

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அடப்பாவமே டாக்டர் கொஞ்சம் ஏன் இப்படி பண்றீங்கன்னு கேள்வி கேளுங்க.. இப்படி இருந்தா எப்படி?

இலவசக்கொத்தனார் said...

சண்டை போடுங்க. இருப்பதிலேயே பெரிய பதவியில் இருப்பவருக்கு போன் பண்ணுங்க. மெயில் அனுப்புங்க. அப்புறமும் வேலை ஆகலைன்னா நுகர்வோர் நீதிமன்றத்திற்குப் போங்க.

delphine said...

Sanjai அவங்க புதுசா fit பண்ணும்போது என்னுடைய சாயிஸ் கேட்டிருக்கணும்.. எதுவும் கேட்கலை. They should have explained to me about the other available models and should have discussed with me the difference in price..எதுவும் கேட்காமல்.....
நானும் என்னுடைய வேலைகளுக்கிடையில் எதுவும் அவர்களுடன் பேச இயலவில்லை... ..
I think they just took things for granted.

delphine said...

வாங்க சொக்ஸ்.... பிசிதான்.. பிசியோ பிசிதான். இன்றைக்கு கொஞ்சம் நேரம் எனக்காக செலவு செய்துள்ளேன்...கலகமா.. அப்டீன்னா! அதிர்ந்து பேச வராது சொக்ஸ்... அதுதான் என் வீக்னஸ்...

delphine said...

சிவா.... அய்யோ... அதெல்லாம் வேணாங்க.. கேட்டுப் பார்ப்போம்..அப்புறம் முட்டி மோதுவோம்

delphine said...

Thank you Anony...
Yes. I feel Voltas is the best... butthe installation team is not that good..

delphine said...

தர்சன்....
கொடுத்துட்டா போச்சு... .. :)

குமார்
சரியான படி அவர்கள் பதில் கொடுக்காமல் என்னை தொந்தரவு செய்தால் கன்சூமர் கோர்ட்தான்.

பாஸ்கர், எந்த ஏசி.. அக்டோபர் மாதம் வைத்ததா அல்லது இப்ப வைத்ததா?

முத்து அவங்க கரீட்டா நான் ஆஸ்பத்திரியில் இருக்கும்போது போன் பண்ராங்க... சப்தமாக கூட பேச இயலவில்லை.

delphine said...

வாங்க கொத்ஸ்... அமெரிக்காவில் இந்த பிரச்னையெல்லாம் கிடையாதுதானே?.. இங்க நிஜமாகவே கஷ்டம்தான்...
Let me see whether they are escalating my call..

Thekkikattan|தெகா said...

விளம்பரம் பண்ற அளவிற்கு சர்வீஸ் இருக்காதுன்னு தெரிஞ்ச விசயம்தானே, டாக்.

Sanjai, சொன்ன மாதிரி உங்ககிட்ட அந்த விலை வித்தியாசத்தைப் பத்தி விளக்கிச் சொல்லாததாலே, உங்களுக்கு அதே விலை ரேஞ்சில் உள்ள ஏசி யூனிட்தான் வேணுமின்னு இப்பவும் கரார சொல்லிடுங்க. அப்படி அவங்களுக்கு அவங்க பைசாதான் வேணுமின்னா, கன்சூமர் நீதிமன்றம்தான்...

Thamiz Priyan said...

அம்மா, ஏசி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் மாதிரி தான்.... நல்ல நல்ல பெரிய கம்பெனி ஏசி எல்லாம் சீக்கிரமே பாழாய் போவதும் உண்டு. சில டப்பா அசெம்பிள் ஏசிகள் ஆண்டாண்டு காலங்கள் உழைப்பதும் உண்டு. உங்களுக்கு தெரிந்தது தான்... :) இந்த விஷயத்தில் பணம் ஏதும் கொடுக்காதீர்கள்... அப்படி கேட்டால் அந்த கம்பெனியின் உயரதிகாரிகளிடம் புகார் செய்யலாம். அதற்கே பயந்து விடுவார்கள். ஓ ஜெனரல் என்ற ஏசி தான் ஆக பெஸ்ட்... புளூ ஸ்டார், கேரியர், ஓல்டாஸூம் பரவாயில்லை. ஒனிடா, சாம்சங், எல்ஜி போன்றவை ஏசி தொழிலில் உள்ளவை அல்ல. ஆகவே அதன் செயல்பாடுகள் சுமார் தான்...

சதங்கா (Sathanga) said...

மௌனம் கலைக்காததேனோ டாக்டர் ??? நீங்க இம்புட்டு நல்லவங்களா :)))

சுரேகா.. said...

வணக்கம்மா!

கவலையே படாதீங்க! இது அவங்களோட அலட்சியமும், உங்க சகிப்புத்தன்மையும் அதிகமானதால் நடந்தது. இந்த பதிவை அப்படியே ஒரு அதிகாரப்பூர்வ லெட்டரா மாத்தி உங்க முகவரி மற்றும் அந்த டீலர் முகவரியோட tnnugarvor@yahoo.com க்கு அனுப்பி வைங்க! நான் மாநிலச்செயலாளரா இருக்கேன். மோதிப்பாத்துருவோம். அதுவரை பணம் எதுவும் கொடுக்கவேண்டாம்.

இந்த பதிவு பாருங்க!

http://surekaa.blogspot.com/2008/04/blog-post_11.html

நானானி said...

அந்நேரம் என் மகன் அங்கிருந்திருக்கவேண்டும்...அவன் விரட்டுகிற விரட்டலிலும்..கம்பெனியின்
மேல்மேல் அதிகாரிக்கு....ஏன் மேனேஜிங்டைரக்டருக்கே போன் செய்து
கொடுக்கிற கொடையில் புத்தம் புது லேட்டஸ்ட் ஏசியை வாயை மூடிக்கொண்டு மாட்டிவிட்டு பவ்யமாக
துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று வெளியேறிவிடுவார்கள். நாங்கள் சண்டையெல்லாம் போடக் கூடாது என்போம். ஆனால் அந்த வழிக்குத்தான்
பலனிருக்குது. பயமுமிருக்குது. ஆகவே
டாக்டர் பொறுக்காதீர்கள்...பொங்கியேழுங்கள்!!!

Sanjai Gandhi said...

டாக்டர்.. நீங்கள் முன்பு உபயோகித்த மாடல் , வாங்கிய தேதி , விலை மற்றும் தற்போது அவர்கள் அளித்துள்ள மாடல் பெயர் , பொருத்திய தேதி மற்றும் அதன் முழு விலை( வித்தியாச விலை அல்ல) ஆகியவற்றை சொல்லுங்க. உங்களை தொடர்பு கொண்டவர் சாம்சங் அதிகாரியா? நீங்கள் வாங்கிய கடையின் அதிகாரியா? நான் உண்மை விலை சொல்கிறேன். மெலும் சாம்சாங் தென்னிந்திய துணைதலைவரின் இமெயில் முகவரி தரேன். அவருக்கு விரிவாக ஒரு மெயில் தட்டி விடுங்கள். அவர் சென்னை தான். நிச்சயம் உதவுவார். எந்த சூழ்நிலையிலும் நீங்கள் வித்தியாச விலை கொடுக்க வேண்டாம்.

நிஜமா நல்லவன் said...

பணம் கொடுக்காதீர்கள். பேசிப்பாருங்கள். முடியாவிட்டால் நுகர்வோர் நீதிமன்றம் செல்லுங்கள்.

வல்லிசிம்ஹன் said...

ஐய்யோ பாவமே டெல்ஃபின்..நல்லா கத்தல் போடுங்க. எது நடக்குதோ இல்லையோ நம்ம கோவமாவது குறையும். என்னய்யா அநியாயம்.


வொல்டாஸ் தான் பெஸ்ட். எங்க ஏசி 11 வருஷமா நல்லா இருக்கு. நீங்க சொல்கிற மாதிரி டெக்னீஷியன்ஸ் சரியில்லை.
சீக்க்கிரமே ஏசி சரியாக பெஸ்ட் விஷஸ்.

ரசிகன் said...

ரசிதையெல்லாம் வைச்சு,கன்சியுமர் கோர்ட் போக போறேன்னு சொல்லி பாருஙகளேன்:)

தமிழன்-கறுப்பி... said...

பிரச்சனை தீர்ந்துடிச்சா மேடம்...

கோவை விஜய் said...

நுகர்வோர் நீதிமன்றம் தன் அடுதத வழி.

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

தருமி said...

நீங்க கேள்வி கேட்டு ரொம்ப நாளாச்சு போலும். அப்போ ஏதோ ஒண்ணு நடந்திருக்கும் அந்த ஏசிக்கு. என்ன ஆச்சுன்னு சொல்லுங்களேன்