Saturday, May 16, 2009

சமர்ப்பணம்

ஆடிக் கிருத்திகை என்றால் வட ஆற்காடு மாவட்டத்தில் மிகவும் விசேஷமான நாளாகும். இது 1980-களில் நடந்தது. ..... அபொழுது மாசி வேலூர் மாவட்டத்தில் வேலை செய்துக் கொண்டிருந்தார். நான் ராணிப்பேட்டை என்ற ஊரில் இருந்தேன். கீழே க்ளினிக்.. மாடியில் வீடு. ஆடிக்கிருத்திகை அன்று எல்ல கடைகளும் அடைத்திருக்கும். மக்கள் கூட்டம் கூட்டமாக காவடி எடுத்து திருத்தணிக்கு பஸ்களிலும், நடந்தும் செல்வார்கள். ஆடி கிருத்திகை அன்று க்ளினிக்குக்கு யாரும் வரமாட்டார்கள். ஆகவே, நான் க்ளினிக்கை சுத்தம் செய்துக் கொண்டிருந்தேன். திடீரென்ரு ஒரே சத்தம் . இரண்டு பேர் ஒரு இளம் வாலிபரை தூக்கிக்கொண்டு வந்தார்கள்... சொட்டசொட்ட ரத்தம். couch-ல் படுக்க வைத்தார்கள். TVS50-ல் போய்கொண்டிருந்தவர்(எங்கள் வீட்டு அருகாமையில்) ஒரு நாய் குறுக்கே வரவே ப்ரேக் போட நிலை தடுமாறி கீழே விழுந்துவிட்டார். முட்டியின் கீழ் ஒரு 5 அங்குலத்திற்கு ஒரு வெட்டு காயம். it was exposing the bone below. அழுத்தி பிடித்துவிட்டு, தையல் போட ரெடியானேன். அவரைத்தூக்கி வந்தவரில் ஒருத்தர் ரத்தத்தை பார்த்து மயக்கம் போட, எனக்கு உதவிக்கு யாரும் இல்லை.. வெளியில் புறப்பட தயாரான என் மாசி, வெளியில் ரத்தம் சொட்டிக் கிடப்பதைப் பார்த்துவிட்டு, மெதுவாக வந்து க்ளினிக் கதவைத்தட்டிவிட்டு திறந்து பார்த்தார்.. கண்களினாலே 'என்ன?' என்றார். என்ன செய்ய என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருப்பதைப் பார்த்து, உள்ளே வந்தார்.' ஓ, தையல் போடணுமா ' என்றார். 'ம்' என்றேன். 'சரி, ரெடி பண்ணு, என்ன செய்ய வேண்டும் என்று சொல்லு " என்றார். காலை மட்டும் கொஞ்சம் தூக்கிபிடித்துக் கொள்ளுங்களேன்" என்றேன். அப்புறம் தையல் போடும்வரைக் கூடவே இருந்து, bandage போட உதவி செய்துவிட்டு, கைகளை கழுவும் போது, ஃபீஸ் வாங்காதே என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.
அடிப்பட்டு வந்தவர் ஒரு போலீஸ்காரர். மஃடியில் இருந்தார். பக்கத்தில் திமிரி என்கிற ஊர்.
இரண்டு நாட்கள் கழித்து போலீஸ்காரர் செக்கப்புக்கு வந்தபோது, ' அம்மா , அய்யா ஒரு போலிஸ் அதிகாரி, அவர் அவ்வளவு நேரம் என் காலை பிடித்துக்கொண்டிருந்தாரே ' என்றார். ....(ரத்தம் எல்லோருக்கும் சிகப்புதானே!)
அன்றிலுருந்து இன்றுவரை போலிஸ்காரர்களின் குடும்பத்தினர் என்னிடம் treatment-ற்கு வந்தால் நான் ஃபீஸ் வாங்குவதில்லை.
இன்று என் மாசிக்கு 60-வது பிறந்த நாள்...வாழ்க்கையில் நல்லவைகளை மாத்திரம் கற்றுக்கொடுத்த அந்த மாமனிதருக்கு.. இது என் சமர்ப்பணம்.
visit him here!!
Masi

12 comments:

மங்கை said...

ம்ம்ம்...

நேர்மையுடனும் நெஞ்சுரத்துடனும் இருந்தரை இந்நாளில் நினைவு கூர்ந்து, அதையே அவரவர் வாழ்க்கையில் கடைபிடிக்க நெஞ்சம் நிறைந்து உறுதிகொள்வோம்

தேவன் மாயம் said...

அன்றிலுருந்து இன்றுவரை போலிஸ்காரர்களின் குடும்பத்தினர் என்னிடம் treatment-ற்கு வந்தால் நான் ஃபீஸ் வாங்குவதில்லை.///

நல்ல போலிஸி!!

தேவன் மாயம் said...

இன்று என் மாசிக்கு 60-வது பிறந்த நாள்...வாழ்க்கையில் நல்லவைகளை மாத்திரம் கற்றுக்கொடுத்த அந்த மாமனிதருக்கு.. இது என் சமர்ப்பணம்.///

நல்லவைகளைக்கற்றுக்கொடுத்த அவருக்கு என் அன்பைச் சொல்லவும்!!

யட்சன்... said...

சந்தேக மில்லாத தங்கம் - அதைச்
சார்ந்து கொண்டாலுமே தாழ்விலாப் பொங்கம்;
அந்த மில்லாதவோர் துங்கம் - எங்கும்
ஆனந்தமாக நிரம்பிய புங்கம்.

- கடுவெளி சித்தரின் இந்த பாடல்தான் எனக்கு நினைவுக்கு வருகிறது.

Thekkikattan|தெகா said...

சாரின் பேர்லயே வைச்சிருக்காரே, மாசு இல்லாத ஒப்பற்றன்னு... இது போன்ற நிகழ்வுகளுக்கு பஞ்சமே இருந்திருக்காதே, டாக்! அழுத்தி -படியும்படியான நிகழ்வுடன் ஒரு நினனைவுகூரல்.

அபி அப்பா said...

மாசு இல்லா மணி டாக்டரம்மா! இந்த 60ம் ஆண்டு தினத்தில் அவருக்கு என் அஞ்சலிகள்!

கோபிநாத் said...

\\ மங்கை said...
ம்ம்ம்...

நேர்மையுடனும் நெஞ்சுரத்துடனும் இருந்தரை இந்நாளில் நினைவு கூர்ந்து, அதையே அவரவர் வாழ்க்கையில் கடைபிடிக்க நெஞ்சம் நிறைந்து உறுதிகொள்வோம்
\\

வழிமொழிகிறேன்.

நாங்களும் குடும்பத்துடன் வருவருடம் ஆடிக் கிருத்திகை அன்று திருத்தணியில் கவடி எடுப்போம். இப்போ இங்க வந்தவுடன் நான் போக முடியவில்லை ;(

பாலராஜன்கீதா said...

அன்புள்ள டாக்டரம்மா,
உங்கள் நினைவுகூரலில் நாங்களும் கலந்துகொள்கிறோம்.

துளசி கோபால் said...

மனசை நெகிழவச்ச பதிவு.

அறுபதாங்கல்யாணம் நடந்துருக்கணும். பாவி மனுசர் அதுக்குள்ளே சாமிக்கிட்டே போயிட்டார். என்ன அப்படிஒரு அவசரமோ ........(-:

வல்லிசிம்ஹன் said...

மாசி சாருக்கு அறுபதா. நல்ல மனிதர் இருந்திருந்தால் எங்களுக்கெல்லாம்

எத்தனை பூரிப்பாக இருக்கும் ஒரு கல்யாணம் நடத்தி இருக்கலாம். டெல்ஃபின். டேக் கேர்.

பாச மலர் / Paasa Malar said...

நல்லதொரு நினைவுகூரல்..

Unknown said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
:)