Saturday, May 16, 2009

வாங்க வாங்க.. கையை நனைச்சுட்டு போங்களேன்......நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சில விஷயங்கள்...நிறைய நேரங்களில் சில விஷயங்களை நாம் சீரியசாக எடுத்துக் கொள்வதில்லை.
அது சரி கைய மட்டும் நனைச்சா போதுமா?..... இல்லை.. இல்லவே இல்லை..
நமக்கு தெரிந்தவர்களை ஆஸ்பத்திரியில் பார்க்க செல்லும் முன் நம் கைகளை கழுவிக்கொண்டு செல்ல வேண்டும். அது போல அங்கிருந்து புறப்படும் போதும் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். ஆஸ்பத்திரிகளில் அதெற்கென்று ஒதுக்கப்பட்ட இடங்களில் சென்று கைகளை சுத்தமாக கழுவுங்கள். ஏனெனில், அதிகமான கிருமிகள் கைகள் மூலமாகத்தான் பரவுகின்றன. அல்லது நோயாளியின் பக்கத்தில் வைத்திருக்கும் sanitizers(கிருமி நாசினிகள்) உபயோகியுங்கள். கைகளைக் கழுவிய பின் , அங்கு வைத்திருக்கும் டிஷ்யூவால் கையை துடைத்துவிட்டு அதற்குறிய குப்பைத் தொட்டிகளில் போடவேண்டும். அது போல குழாயை மூடுவதற்கும் டிஷ்யுகளைத்தான் உபயோகிக்க வேண்டும். கழுவிய கையால் குழாயை மூடக் கூடாது. இப்பொழுதெல்லாம் elbow tap உபயோகிக்கிறார்கள். அல்லது காலால் அழுத்தி திறக்கும் குழாய்களை வைக்கின்றனர்.
இது மாதிரி நாம் செய்தால், நமக்கு மட்டும் அல்ல, நாம் சந்திக்க சென்ற நோயாளிகளுக்கும் நல்லது. குடும்பத்தோடு செல்வதை தவிர்க்க வேண்டும். 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அழைத்து செல்வதை தவிர்ப்பது நல்லது. அது போல் பூங் கொத்துக்கள், பழங்கள் கொண்டு செல்வதையும் தவிர்க்க வேண்டும். இவைகளின் மூலம்தான் அதிக கிருமிகள் பரவுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நோயாளியின் கட்டிலில் உட்காருவதை தவிர்க்க வேண்டும்... வெள்ளை அணுக்கள் குறைந்து அவதிப்படும் நோயாளிகளை பார்க்க செல்லும்போது நிச்சயமாக மாஸ்க் போட்டுத்தான் அவர்களை பார்க்க செல்ல வேண்டும். செறுப்பு, ஷூக்களை வெளியில் கழட்டி வைத்துவிட்டு செல்வது நல்லது. அல்லது அறையின் வெளியில் வைத்திருக்கும் ஷூ கவர்களை மாட்டிக் கொள்ள வேண்டும். மேல் சொல்லியவைகளைக் கடைபிடித்தால் நமக்கு வேண்டியவர்கள் அனாவசியமாக கஷ்டப்படுவதைத் தவிர்க்கலாமே!!!!.

17 comments:

thevanmayam said...

நமக்கு தெரிந்தவர்களை ஆஸ்பத்திரியில் பார்க்க செல்லும் முன் நம் கைகளை கழுவிக்கொண்டு செல்ல வேண்டும். அது போல அங்கிருந்து புறப்படும் போதும் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும்.///

நல்ல குறி சொல்லியிருக்கீங்க!! ஜக்கம்மா!!

thevanmayam said...

கை நனைச்சிட்டு வந்தேன்!! சாப்பாடு போடுறாங்க போலன்னு!!
கைகழுவீட்டிங்களே!!

தமிழ் பிரியன் said...

டாக்டரம்மா.. நல்ல விஷயங்களை சொல்லி இருக்கீங்க.. நம்ம மக்கள் அதிகமாக செல்லக் கூடிய அரசு மருத்துவமனைகளை யோசித்துப் பார்த்தேன்.. :(

நமிதா.. said...

அது போல் பூங் கொத்துக்கள், பழங்கள் கொண்டு செல்வதையும் தவிர்க்க வேண்டும்.
///


:)


::))))

மின்னுது மின்னல் said...

டாக்டர் அம்மா !!

sanitizers

டிஷ்யூ

elbow tap


நீங்க சொன்னது எல்லாம் மருத்துவனையில் இருக்கா ?

அபி அப்பா said...

நானும் "இலை"யை தூக்கி போட்டு விட்டு சுத்தமா கைகழுவிட்டேன்:-))

மின்னுது மின்னல் said...

நமக்கு வேண்டியவர்கள் அனாவசியமாக கஷ்டப்படுவதைத் தவிர்க்கலாமே!!!!.
//


அவங்க கஸ்டபடுவதை பார்க்க தானே அங்க போறோம் :)

ராமலக்ஷ்மி said...

நல்ல விஷயங்களை வலியுறுத்தியிருக்கிறீர்கள்!

யட்சன்... said...

ஏதோ சாப்பாடு மேட்டர்னு ஓடி வந்தேன்...கைய கழுவீட்டு வர சொல்றீங்க....

இதன் முக்கியத்துவத்தை மழலை பள்ளிகளில் இருந்தே சொல்லித்தருவது சிறந்த் உத்தியாக இருக்கும்.

மங்கை said...

Good one dr amma...

ஆஸ்பத்திரியல இருக்குறவுங்களை பார்க்க போவது கூட எனக்கு பிடிக்காத ஒன்னு...வீட்டுக்கு வந்த பின்னாடி தான் நான் பார்க்க போவேன்

ரங்குடு said...

நானும் என் சிறு வயது முதல் போகாத ஆஸ்பத்திரி இல்லை, பார்க்காத நோயாளி (உறவினர்கள்) இல்லை. எப்பவும் கை நனச்சதில்லை. ஒரு வியாதியும் எனக்கு வந்ததில்லை.

இப்போவெல்லாம் வீட்டை விட்டு வெளியே கோவிலுக்குப் போய்விட்டு வந்தாலும், கை கழுவுனாதான் ஆரோக்கியம்னு தோணுது.

கலி காலம்டா, சாமி.

delphine said...

நல்ல குறி சொல்லியிருக்கீங்க!! ஜக்கம்மா!!///////
டாக்டர், கடைசியில என்ன ஜக்கம்மா என்று கூப்பிட்டுடீங்களே! இருங்க உங்களுக்கும் சீக்கிரம் ஒரு பெயர் வைக்கிறேன்! நிறைய பேருக்கு கை கழுவதின் அவசியனம் தெரிவதில்லை.. அதுதான் அதைப்பற்ரி எழுதினேன்! atleast people will become conscious about it. Right?

delphine said...

கை நனைச்சிட்டு வந்தேன்!! சாப்பாடு போடுறாங்க போலன்னு!!
கைகழுவீட்டிங்களே!!///
வாங்க டாக்டர்.. அவசியம் சாப்பாடு போடுறேன்!! சாப்பாட்டை பார்த்து ஓடிவிடக்கூடாது. ஒகேவா?

அரசு மருத்துவமனைகளை யோசித்துப் பார்த்தேன்.. :(// தமிழ் பிரியன் , நீங்க சொல்வது சரிதான்.. :(

ஹாய் நமீதா... யாரு நீங்க? நீங்க மின்னல்தானே! எனக்குமட்டும் சொல்லுங்க..


நீங்க சொன்னது எல்லாம் மருத்துவனையில் இருக்கா ?/////////

மின்னல், mostly எல்லா மருத்துவமனைகளிலும் இருக்கும். This helps in decreasing the infection rate

delphine said...

நானும் "இலை"யை தூக்கி போட்டு விட்டு சுத்தமா கைகழுவிட்டேன்:-))////////

அபி அப்பா , இந்த டாபிக் பிடிக்கலையா என்ன? தூக்கிபோட்டுவிட்டேங்கிறீங்க... :(
அவங்க கஸ்டபடுவதை பார்க்க தானே அங்க போறோம் :)

மின்னல் , ஆனாலும் ரொம்ப மோசம்தான்..

நன்றி ராமலட்சுமி.

delphine said...

இதன் முக்கியத்துவத்தை மழலை பள்ளிகளில் இருந்தே சொல்லித்தருவது சிறந்த் உத்தியாக இருக்கும்.////
நன்றி யட்சகன்... & hygiene starts from home too!!!


மங்கை.. ஆஸ்பத்திரில இருக்கும்போது போய் பார்க்கலைன்னா அதற்கு ஒரு குறை வேற சொல்வாங்களே!

கோபிநாத் said...

மிக நல்ல தகவல் ;)

Anonymous said...

நான் எப்பவும் சானிடைசர் வைச்சிருப்பேன். உதவும்.