Thursday, May 14, 2009

பன்றி காய்ச்சலும் , சல்சா நடனமும்


எங்கு திரும்பினாலும் பன்றி காய்ச்சலின் பேச்சுதான்... ஏர்போர்ட்டில் இறங்கினால் ஒரு form கொடுத்து அதை பூர்த்தி செய்ய சொல்கிறார்கள். நம் மக்கள் சிலருக்கு பொறுமை இல்லை. ஏதோ அரசாங்கம் தேவையில்லாமல் தங்கள் நேரத்தை வீணடிப்பதாக நினைக்கிறார்கள்.
பன்றி காய்ச்சல் என்பது ஒரு விதமான flu தான்.
1918- ல் முதன் முதலாக ஃப்ளு காய்ச்சல் வந்து மக்களை தாக்கியது. அப்பொழுது கிட்டதட்ட 80 லட்சம் பேர் உயிர் இழந்தார்கள். ஸ்பானிஷ் ஃப்ளு என்று அழைக்கப்பட்ட இந்த காய்ச்சல், போர் வீரர்களை தாக்கியதால் முதலாம் உலகப் போரை நிறுத்தும் ஒரு சூழ் நிலை ஏற்பட்டதாம். அப்போது இந்திய மக்களையும் அது விட்டுவைக்கவில்லை. அந்த நேரத்தில், இந்த ஃப்ளு காய்ச்சலை எல்லோரும், டெங்கு காய்ச்சல் என்றும், மலேரியா என்றும் நினைத்து சரியான மருத்துவ வசதிகள் இல்லாதா காரணத்தினாலும் நிறைய பேர் இறந்துவிட்டார்கள். ஒரு சிலர் தெய்வ குற்றம் என்று தெய்வத்தை திட்டி தீர்த்து விட்டார்கள். ஸ்பானிஷ் ஃப்ளு என்று அழைக்கப்பட்டாலும் இந்த காய்ச்சல் ஸ்பெயின் நாட்டிலிருந்து ஆரம்பிக்கவில்லை. அப்பொழுது ஸ்பையின் நாட்டிலுருந்துதான் இந்த ஃப்ளுவை பற்றி விவரமாக உலக ஏனைய நாடுகளுக்கு தெரிவிக்கப்பட்டது. (spain was a neutral country in world war 1 )
அடுத்தபடியாக " ஏஷியன் ஃப்ளு- இது 1957 முதல் 1958 வரை தலையைக் காண்பித்துவிட்டு ஒரு சில லட்சம் பேரைக் கொன்றது.
1968- முதல் 1969 வரை ஹாங்காங் ஃப்ளு.. இது 75 ஆயிரம் பேரை கொன்றது.
அதன் பிறகு ஏவியன் ஃப்ளு, bird ஃப்ளு என்று ஒருவிதனமான ஃப்ளு காய்ச்சல் பரவியது. இந்த கய்ச்சல் பறவைகளின் மிக அருகாமையில் வாழும் மக்களை அவதிப்படுத்தியது.. இது 2006-ல் நடந்தது.
தற்சமயம் பன்றி காய்ச்சல்..
இந்த காய்ச்சல்கள் யாவற்றிற்கும் காரணம் ஒரே விதமான வைரஸ்தான் ( influenza virus). ஆனால் அதன் strain & host are different. பன்றி காய்ச்சல் மெக்சிகோ நாட்டில் தான் ஆரம்பமானது. பன்றி வளர்ப்பவர்களிடம் இந்த வைரஸ் கண்டு பிடிக்கப்பட்டது. மனிதனை பாதிக்கும் ஃப்ளு வைரஸும், பறவயை தாக்கும் வைரஸும் சேர்ந்து இந்த புதுவிதமான பன்றி வைரஸ் உருவாகியுள்ளது.
பன்றி காய்ச்சல் வந்தவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு பரவ 2-4 நாட்கள் போதும்.. அதனால்தான் இந்த நோய் மிகவும் சுறுசுறுப்பாக பரவுகிறது. அது சரி.. பன்றி கறி சாப்பிட்டால் இந்த நோய் பரவுமா என்கிற அச்சம் எல்லோரிடமும் இருக்கும். இது அப்படி பரவாது. ஆனாலும், நன்றாக சமைக்கப்பட்ட பன்றி கறிகளை உட்கொள்ளவேண்டும்.
காய்ச்சலின் அறிகுறிகள்:
ஜுரம், கைகால் வலி, ஜலதோஷம், முட்டிவலி, வரட்டு இருமல். .. சரியான படி வைத்தியம் பண்ணவில்லை என்றால், நிமோனியா மாதிரி ஜுரமும், காய்ச்சலும் இருக்கும். அதன் பிறகு இருமினால் இரத்தம் வந்து, இறந்துவிடுகிறார்கள்.
தடுக்கும் முறை:
கைகுலுக்குவதை தவிர்க்க வேண்டும். இருமும் போது துணியை வைத்து வாயை மூடிக்கொள்ள வேண்டும், பக்கத்தில் அமர்ந்து பேசுவதை தவிர்க்க வேண்டும். முகத்தில் mask- அணிய வேண்டும் கையை மிக சுத்தமாக சோப்பு போட்டு அலம்ப வேண்டும். you must use sanitizers to clean the hands.
மருந்துகள்:
oseltamivir & zenamivir. இந்த இரண்டு மருந்துகளும் நம் நாட்டில் வெளி சந்தையில் கிடைப்பதில்லை என்றே நினைக்கிறேன். அரசாங்க மருத்துவ மனைகளில் மாத்திரமே கிடைக்கும். ஆகவே தனியார் மருத்துவமனைகளில் இதற்கு வைத்தியம் பண்ணுவார்களா என்று தெரியவில்லை.
இந்த காய்ச்சல் மட்டும் நம் நாட்டில் வந்திருந்தால் இதற்குள், W.H.O, நம் நாட்டிற்கு வரும் வெளி நாட்டு பயணிகளுக்கு ஒரு தடையை விதித்திருக்கும். அமெரிக்காவில் பரவியுள்ளதால் W.H.O has not yet banned people travelling to US & other western countries. it will affect their economy. எல்லாம் ஒரு பாலிடிக்ஸ்தான்.
ஒரு ஆறுதலான செய்தி. நம் நாட்டு சீதொஷ்ணத்தில் இது மாதிரி புது வைரஸ்களால் தாக்கு பிடிக்க இயலாது. மேற்கத்திய நாடுகளில், குளிர் காலத்தில் ஃப்ளு வராமல் இருப்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அங்கு ஃப்ளு வேக்ஸினேஷன் பண்ணிக்கொள்கிறார்கள்.
ஹ்ம்ம்... பன்றி காய்ச்சலுக்கும், சல்ஸா நடனத்திற்கும் என்ன சம்மந்தம்?
சும்மா.. கொஞ்சம் தலைப்பு வித்தியாசமா இருக்கட்டுமே என்றுதான்.

14 comments:

Thekkikattan|தெகா said...

Very informative post, doc! timely needed post too... thanks!

//இந்த காய்ச்சல் மட்டும் நம் நாட்டில் வந்திருந்தால் இதற்குள், W.H.O, நம் நாட்டிற்கு வரும் வெளி நாட்டு பயணிகளுக்கு ஒரு தடையை விதித்திருக்கும். அமெரிக்காவில் பரவியுள்ளதால் W.H.O has not yet banned people travelling to US & other western countries. it will affect their economy. எல்லாம் ஒரு பாலிடிக்ஸ்தான்.//

அதான் நீங்களும் செஞ்சிருக்கீங்களே :)), யாரும் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாமென... பலிக்குப் பலி :D.

பன்றி காய்ச்சலும், சல்சா நடனமும் - ஆஹா, உங்களுக்கும் இந்த வித்தை தெரிஞ்சுப் போச்சா ... சரி, சரி ;-)

மங்கை said...

டாக்ரம்மா....

இது தான் யட்சனை உள்ளே விடக்கூடாதுன்னு சொல்றது... அவரோட எஃபெக்ட் தான் இந்த தலைப்பு


டாக்ட்ரம்மா இந்த மாதிரி பதிவுகளைத்தான் நாங்க மிஸ் பண்றோம்..

டைம் கிடைக்கறபோவாது எழுதுங்க..

மங்கை said...

//இந்த இரண்டு மருந்துகளும் நம் நாட்டில் வெளி சந்தையில் கிடைப்பதில்லை என்றே நினைக்கிறேன். அரசாங்க மருத்துவ மனைகளில் மாத்திரமே கிடைக்கும். ஆகவே தனியார் மருத்துவமனைகளில் இதற்கு வைத்தியம் பண்ணுவார்களா என்று தெரியவில்லை.///

இது எங்களுக்கு செய்தி டாக்ட்ரம்மா.. நன்றி..

துளசி கோபால் said...

எங்கூர் குளுருக்கு ( இப்போ விண்ட்டர் வேற வந்துருச்சு) இந்த வைரச் எல்லாம் மஜாவாப் பல்கிப் பெருகிடுமாம்.

இப்போவே ஏழெட்டுக் குடும்பங்களை ( அமெரிக்கா ரிட்டர்ன்கள்) ஐஸொலேட் பண்ணி வச்சுருக்கு அரசு!

அம்பது வயசுக்குமேல் எல்லோருக்கும் வருசாவருசம் ஃப்ளூ ஊசி இலவசமாப் போட்டுவிடுது அரசு.


காய்ச்சல் வந்தாத்தான் டாக்குட்டரம்மா தரிசனம் கிடைக்கும் போல இருக்கே. அதுக்காகவாவது 'பன்னி'க்கு ஒரு தேங்க்ஸ் சொல்லிக்கத்தான் வேணும்:-)

நலமா இருக்கீங்களா டெல்ஃபீன்?

ராமலக்ஷ்மி said...

தெரியாத விவரங்களைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிந்தது. மிக்க நன்றி டாக்டர்.

thevanmayam said...

ஒரு சிலர் தெய்வ குற்றம் என்று தெய்வத்தை திட்டி தீர்த்து விட்டார்கள். ஸ்பானிஷ் ஃப்ளு என்று அழைக்கப்பட்டாலும் இந்த காய்ச்சல் ஸ்பெயின் நாட்டிலிருந்து ஆரம்பிக்கவில்லை. அப்பொழுது ஸ்பையின் நாட்டிலுருந்துதான் இந்த ஃப்ளுவை பற்றி விவரமாக உலக ஏனைய நாடுகளுக்கு தெரிவிக்கப்பட்டது. (spain was a neutral country in world war 1 )
அடுத்தபடியாக " ஏஷியன் ஃப்ளு- இது 1957 முதல் 1958 வரை தலையைக் காண்பித்துவிட்டு ஒரு சில லட்சம் பேரைக் கொன்றது.//

அடாத வேலைக்கு இடையிலும் இப்படிப் ப்அதிவுகள் போடுவதைப் பாராட்டித்தான் ஆகணும்!!!

thevanmayam said...

இந்த காய்ச்சல் மட்டும் நம் நாட்டில் வந்திருந்தால் இதற்குள், W.H.O, நம் நாட்டிற்கு வரும் வெளி நாட்டு பயணிகளுக்கு ஒரு தடையை விதித்திருக்கும். அமெரிக்காவில் பரவியுள்ளதால் W.H.O has not yet banned people travelling to US & other western countries. it will affect their economy. எல்லாம் ஒரு பாலிடிக்ஸ்தான்.///

நம்மதாங்க தடை விதிக்கணும்!!(ஒரு வேகத்தில் எழுதியது)......

கோபிநாத் said...

நல்ல பதிவும்மா..

தலைப்பை படிச்சவுடன் நானும் மிகுந்த ஆவலாக ஏதே சொல்ல போறிங்கன்னு நினைச்சேன்கிட்டே படிச்சேன் ;)

\\\காய்ச்சல் வந்தாத்தான் டாக்குட்டரம்மா தரிசனம் கிடைக்கும் போல இருக்கே. அதுக்காகவாவது 'பன்னி'க்கு ஒரு தேங்க்ஸ் சொல்லிக்கத்தான் வேணும்:-)\\\\

இதுக்கு ஒரு பெரிய ரீப்பிட்டே ;)

delphine said...

வாங்க தெகா. உங்க ஆளுங்கத்தான் ரொம்ப பாலிடிக்ஸ் பண்ராங்க. சல்சா நடனம் தற்சமயம் எங்க சென்னையில் ரொம்ப பிரபலமாகிட்டே வருதுங்க.. எங்கு பார்த்தாலும் சின்ன கொட்டகை போட்டு சல்சா நடனம் கற்று கொடுக்கிறாங்க..ஹ்ம்ம். எல்லாம் நம்ப டி.வி. கலாச்சாரம்தான்.. இந்த காய்ச்சல் மெக்சிகோவில் ஆரம்பிச்சதால அந்த தலைப்புக் கொடுத்தேன்

நன்றி மங்கை.. கொஞ்ச நாள எழுதணும்னு தோணிக்கிட்டுத்தான் இருந்துச்சு.. இத எழுதவே இரண்டு நாளாயிடுச்சுப்பா.

delphine said...

வாங்க துளசி..நலமே!! இன்னும் இந்தியாவில் பன்றிக்காய்ச்சல்தானா என்று கண்டுபிடிக்க சரியான பரிசோதனை கூடம் இல்லை என்கிறார்கள்... அப்புறம்.. உங்க ப்ளாக் படிச்சுதான் எனக்கு எழுதவே ஆசை வந்தது..எப்ப இந்த பக்கம் வற்ரீங்க?

நன்றி இராம லக்ஷ்மி..அப்புறம் உடம்பை ஜாக்கிரதையா பார்த்துக்கோங்க.

delphine said...

தேங்க்ஸ் டாக்டர் ..நிஜமவே உங்க பதிவுகள் மிகவும் informative ஆக உள்ளது.

delphine said...

கோபி நாத் எனக்கு உங்க கிட்ட பிடிச்சதே இந்த 'ரிப்பீட்டே" தான்.

காட்டாறு said...

Facts and truths! Good post Doctor. But the following is not completely true Doc.
//ஒரு ஆறுதலான செய்தி. நம் நாட்டு சீதொஷ்ணத்தில் இது மாதிரி புது வைரஸ்களால் தாக்கு பிடிக்க இயலாது.//
You had said this too //அப்போது இந்திய மக்களையும் அது விட்டுவைக்கவில்லை.//

Virus may not spread rapidly in Southern India. But it can happen in N.India where the temperature can go below freezing during winter. Do you agree Doc?

delphine said...

நீங்க சொல்வது சரியாக இருக்கலாம் காட்டாறு.. குளிர் பிரதேசங்களில் இந்த வைரஸ் சீக்கிரமாக பரவுகிறது. ஆனாலும் மேல் நாட்டளவு இங்கு ஃப்ளு அதிகமாக இருப்பதாக தெரியவில்லை.