Saturday, May 16, 2009

சமர்ப்பணம்

ஆடிக் கிருத்திகை என்றால் வட ஆற்காடு மாவட்டத்தில் மிகவும் விசேஷமான நாளாகும். இது 1980-களில் நடந்தது. ..... அபொழுது மாசி வேலூர் மாவட்டத்தில் வேலை செய்துக் கொண்டிருந்தார். நான் ராணிப்பேட்டை என்ற ஊரில் இருந்தேன். கீழே க்ளினிக்.. மாடியில் வீடு. ஆடிக்கிருத்திகை அன்று எல்ல கடைகளும் அடைத்திருக்கும். மக்கள் கூட்டம் கூட்டமாக காவடி எடுத்து திருத்தணிக்கு பஸ்களிலும், நடந்தும் செல்வார்கள். ஆடி கிருத்திகை அன்று க்ளினிக்குக்கு யாரும் வரமாட்டார்கள். ஆகவே, நான் க்ளினிக்கை சுத்தம் செய்துக் கொண்டிருந்தேன். திடீரென்ரு ஒரே சத்தம் . இரண்டு பேர் ஒரு இளம் வாலிபரை தூக்கிக்கொண்டு வந்தார்கள்... சொட்டசொட்ட ரத்தம். couch-ல் படுக்க வைத்தார்கள். TVS50-ல் போய்கொண்டிருந்தவர்(எங்கள் வீட்டு அருகாமையில்) ஒரு நாய் குறுக்கே வரவே ப்ரேக் போட நிலை தடுமாறி கீழே விழுந்துவிட்டார். முட்டியின் கீழ் ஒரு 5 அங்குலத்திற்கு ஒரு வெட்டு காயம். it was exposing the bone below. அழுத்தி பிடித்துவிட்டு, தையல் போட ரெடியானேன். அவரைத்தூக்கி வந்தவரில் ஒருத்தர் ரத்தத்தை பார்த்து மயக்கம் போட, எனக்கு உதவிக்கு யாரும் இல்லை.. வெளியில் புறப்பட தயாரான என் மாசி, வெளியில் ரத்தம் சொட்டிக் கிடப்பதைப் பார்த்துவிட்டு, மெதுவாக வந்து க்ளினிக் கதவைத்தட்டிவிட்டு திறந்து பார்த்தார்.. கண்களினாலே 'என்ன?' என்றார். என்ன செய்ய என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருப்பதைப் பார்த்து, உள்ளே வந்தார்.' ஓ, தையல் போடணுமா ' என்றார். 'ம்' என்றேன். 'சரி, ரெடி பண்ணு, என்ன செய்ய வேண்டும் என்று சொல்லு " என்றார். காலை மட்டும் கொஞ்சம் தூக்கிபிடித்துக் கொள்ளுங்களேன்" என்றேன். அப்புறம் தையல் போடும்வரைக் கூடவே இருந்து, bandage போட உதவி செய்துவிட்டு, கைகளை கழுவும் போது, ஃபீஸ் வாங்காதே என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.
அடிப்பட்டு வந்தவர் ஒரு போலீஸ்காரர். மஃடியில் இருந்தார். பக்கத்தில் திமிரி என்கிற ஊர்.
இரண்டு நாட்கள் கழித்து போலீஸ்காரர் செக்கப்புக்கு வந்தபோது, ' அம்மா , அய்யா ஒரு போலிஸ் அதிகாரி, அவர் அவ்வளவு நேரம் என் காலை பிடித்துக்கொண்டிருந்தாரே ' என்றார். ....(ரத்தம் எல்லோருக்கும் சிகப்புதானே!)
அன்றிலுருந்து இன்றுவரை போலிஸ்காரர்களின் குடும்பத்தினர் என்னிடம் treatment-ற்கு வந்தால் நான் ஃபீஸ் வாங்குவதில்லை.
இன்று என் மாசிக்கு 60-வது பிறந்த நாள்...வாழ்க்கையில் நல்லவைகளை மாத்திரம் கற்றுக்கொடுத்த அந்த மாமனிதருக்கு.. இது என் சமர்ப்பணம்.
visit him here!!
Masi

வாங்க வாங்க.. கையை நனைச்சுட்டு போங்களேன்......நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சில விஷயங்கள்...நிறைய நேரங்களில் சில விஷயங்களை நாம் சீரியசாக எடுத்துக் கொள்வதில்லை.
அது சரி கைய மட்டும் நனைச்சா போதுமா?..... இல்லை.. இல்லவே இல்லை..
நமக்கு தெரிந்தவர்களை ஆஸ்பத்திரியில் பார்க்க செல்லும் முன் நம் கைகளை கழுவிக்கொண்டு செல்ல வேண்டும். அது போல அங்கிருந்து புறப்படும் போதும் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். ஆஸ்பத்திரிகளில் அதெற்கென்று ஒதுக்கப்பட்ட இடங்களில் சென்று கைகளை சுத்தமாக கழுவுங்கள். ஏனெனில், அதிகமான கிருமிகள் கைகள் மூலமாகத்தான் பரவுகின்றன. அல்லது நோயாளியின் பக்கத்தில் வைத்திருக்கும் sanitizers(கிருமி நாசினிகள்) உபயோகியுங்கள். கைகளைக் கழுவிய பின் , அங்கு வைத்திருக்கும் டிஷ்யூவால் கையை துடைத்துவிட்டு அதற்குறிய குப்பைத் தொட்டிகளில் போடவேண்டும். அது போல குழாயை மூடுவதற்கும் டிஷ்யுகளைத்தான் உபயோகிக்க வேண்டும். கழுவிய கையால் குழாயை மூடக் கூடாது. இப்பொழுதெல்லாம் elbow tap உபயோகிக்கிறார்கள். அல்லது காலால் அழுத்தி திறக்கும் குழாய்களை வைக்கின்றனர்.
இது மாதிரி நாம் செய்தால், நமக்கு மட்டும் அல்ல, நாம் சந்திக்க சென்ற நோயாளிகளுக்கும் நல்லது. குடும்பத்தோடு செல்வதை தவிர்க்க வேண்டும். 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அழைத்து செல்வதை தவிர்ப்பது நல்லது. அது போல் பூங் கொத்துக்கள், பழங்கள் கொண்டு செல்வதையும் தவிர்க்க வேண்டும். இவைகளின் மூலம்தான் அதிக கிருமிகள் பரவுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நோயாளியின் கட்டிலில் உட்காருவதை தவிர்க்க வேண்டும்... வெள்ளை அணுக்கள் குறைந்து அவதிப்படும் நோயாளிகளை பார்க்க செல்லும்போது நிச்சயமாக மாஸ்க் போட்டுத்தான் அவர்களை பார்க்க செல்ல வேண்டும். செறுப்பு, ஷூக்களை வெளியில் கழட்டி வைத்துவிட்டு செல்வது நல்லது. அல்லது அறையின் வெளியில் வைத்திருக்கும் ஷூ கவர்களை மாட்டிக் கொள்ள வேண்டும். மேல் சொல்லியவைகளைக் கடைபிடித்தால் நமக்கு வேண்டியவர்கள் அனாவசியமாக கஷ்டப்படுவதைத் தவிர்க்கலாமே!!!!.

Thursday, May 14, 2009

பன்றி காய்ச்சலும் , சல்சா நடனமும்


எங்கு திரும்பினாலும் பன்றி காய்ச்சலின் பேச்சுதான்... ஏர்போர்ட்டில் இறங்கினால் ஒரு form கொடுத்து அதை பூர்த்தி செய்ய சொல்கிறார்கள். நம் மக்கள் சிலருக்கு பொறுமை இல்லை. ஏதோ அரசாங்கம் தேவையில்லாமல் தங்கள் நேரத்தை வீணடிப்பதாக நினைக்கிறார்கள்.
பன்றி காய்ச்சல் என்பது ஒரு விதமான flu தான்.
1918- ல் முதன் முதலாக ஃப்ளு காய்ச்சல் வந்து மக்களை தாக்கியது. அப்பொழுது கிட்டதட்ட 80 லட்சம் பேர் உயிர் இழந்தார்கள். ஸ்பானிஷ் ஃப்ளு என்று அழைக்கப்பட்ட இந்த காய்ச்சல், போர் வீரர்களை தாக்கியதால் முதலாம் உலகப் போரை நிறுத்தும் ஒரு சூழ் நிலை ஏற்பட்டதாம். அப்போது இந்திய மக்களையும் அது விட்டுவைக்கவில்லை. அந்த நேரத்தில், இந்த ஃப்ளு காய்ச்சலை எல்லோரும், டெங்கு காய்ச்சல் என்றும், மலேரியா என்றும் நினைத்து சரியான மருத்துவ வசதிகள் இல்லாதா காரணத்தினாலும் நிறைய பேர் இறந்துவிட்டார்கள். ஒரு சிலர் தெய்வ குற்றம் என்று தெய்வத்தை திட்டி தீர்த்து விட்டார்கள். ஸ்பானிஷ் ஃப்ளு என்று அழைக்கப்பட்டாலும் இந்த காய்ச்சல் ஸ்பெயின் நாட்டிலிருந்து ஆரம்பிக்கவில்லை. அப்பொழுது ஸ்பையின் நாட்டிலுருந்துதான் இந்த ஃப்ளுவை பற்றி விவரமாக உலக ஏனைய நாடுகளுக்கு தெரிவிக்கப்பட்டது. (spain was a neutral country in world war 1 )
அடுத்தபடியாக " ஏஷியன் ஃப்ளு- இது 1957 முதல் 1958 வரை தலையைக் காண்பித்துவிட்டு ஒரு சில லட்சம் பேரைக் கொன்றது.
1968- முதல் 1969 வரை ஹாங்காங் ஃப்ளு.. இது 75 ஆயிரம் பேரை கொன்றது.
அதன் பிறகு ஏவியன் ஃப்ளு, bird ஃப்ளு என்று ஒருவிதனமான ஃப்ளு காய்ச்சல் பரவியது. இந்த கய்ச்சல் பறவைகளின் மிக அருகாமையில் வாழும் மக்களை அவதிப்படுத்தியது.. இது 2006-ல் நடந்தது.
தற்சமயம் பன்றி காய்ச்சல்..
இந்த காய்ச்சல்கள் யாவற்றிற்கும் காரணம் ஒரே விதமான வைரஸ்தான் ( influenza virus). ஆனால் அதன் strain & host are different. பன்றி காய்ச்சல் மெக்சிகோ நாட்டில் தான் ஆரம்பமானது. பன்றி வளர்ப்பவர்களிடம் இந்த வைரஸ் கண்டு பிடிக்கப்பட்டது. மனிதனை பாதிக்கும் ஃப்ளு வைரஸும், பறவயை தாக்கும் வைரஸும் சேர்ந்து இந்த புதுவிதமான பன்றி வைரஸ் உருவாகியுள்ளது.
பன்றி காய்ச்சல் வந்தவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு பரவ 2-4 நாட்கள் போதும்.. அதனால்தான் இந்த நோய் மிகவும் சுறுசுறுப்பாக பரவுகிறது. அது சரி.. பன்றி கறி சாப்பிட்டால் இந்த நோய் பரவுமா என்கிற அச்சம் எல்லோரிடமும் இருக்கும். இது அப்படி பரவாது. ஆனாலும், நன்றாக சமைக்கப்பட்ட பன்றி கறிகளை உட்கொள்ளவேண்டும்.
காய்ச்சலின் அறிகுறிகள்:
ஜுரம், கைகால் வலி, ஜலதோஷம், முட்டிவலி, வரட்டு இருமல். .. சரியான படி வைத்தியம் பண்ணவில்லை என்றால், நிமோனியா மாதிரி ஜுரமும், காய்ச்சலும் இருக்கும். அதன் பிறகு இருமினால் இரத்தம் வந்து, இறந்துவிடுகிறார்கள்.
தடுக்கும் முறை:
கைகுலுக்குவதை தவிர்க்க வேண்டும். இருமும் போது துணியை வைத்து வாயை மூடிக்கொள்ள வேண்டும், பக்கத்தில் அமர்ந்து பேசுவதை தவிர்க்க வேண்டும். முகத்தில் mask- அணிய வேண்டும் கையை மிக சுத்தமாக சோப்பு போட்டு அலம்ப வேண்டும். you must use sanitizers to clean the hands.
மருந்துகள்:
oseltamivir & zenamivir. இந்த இரண்டு மருந்துகளும் நம் நாட்டில் வெளி சந்தையில் கிடைப்பதில்லை என்றே நினைக்கிறேன். அரசாங்க மருத்துவ மனைகளில் மாத்திரமே கிடைக்கும். ஆகவே தனியார் மருத்துவமனைகளில் இதற்கு வைத்தியம் பண்ணுவார்களா என்று தெரியவில்லை.
இந்த காய்ச்சல் மட்டும் நம் நாட்டில் வந்திருந்தால் இதற்குள், W.H.O, நம் நாட்டிற்கு வரும் வெளி நாட்டு பயணிகளுக்கு ஒரு தடையை விதித்திருக்கும். அமெரிக்காவில் பரவியுள்ளதால் W.H.O has not yet banned people travelling to US & other western countries. it will affect their economy. எல்லாம் ஒரு பாலிடிக்ஸ்தான்.
ஒரு ஆறுதலான செய்தி. நம் நாட்டு சீதொஷ்ணத்தில் இது மாதிரி புது வைரஸ்களால் தாக்கு பிடிக்க இயலாது. மேற்கத்திய நாடுகளில், குளிர் காலத்தில் ஃப்ளு வராமல் இருப்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அங்கு ஃப்ளு வேக்ஸினேஷன் பண்ணிக்கொள்கிறார்கள்.
ஹ்ம்ம்... பன்றி காய்ச்சலுக்கும், சல்ஸா நடனத்திற்கும் என்ன சம்மந்தம்?
சும்மா.. கொஞ்சம் தலைப்பு வித்தியாசமா இருக்கட்டுமே என்றுதான்.