Thursday, April 9, 2009

உயர்ந்த மனிதன்

வாழ்க்கையில் நிறைய பேர சந்திக்கிறோம். சிலரை பார்த்ததும் பிடிச்சு போகுது. சிலருடைய செயல்களால் அவர்களை பிடிக்கும். ஒரு சிலரை நாம் பார்க்கும்போதே அவர்கள் ரொம்ப கவலையாக இருப்பதா தெரியும். இன்னும் சிலர் அழகா சிரிச்சுக்கிட்டே இருப்பாங்க.. அதில சிரிச்சு சிரிச்சே கழுத்தை அறுப்பவர்களும் இருப்பாங்க.. பெரிய தத்துவத்தைக் கண்டு பிடிச்சிட்டேனோ? ஹ்ம்ம்..
இன்றைக்கு நான் ஒரு உயர்ந்த மனிதரை சந்திதேன்,,, உயரம் என்றால் நெட்டையாக இருப்பார்களே.. அப்படிப்பட்டவரல்ல.. குணத்தில், உள்ளத்தில்..இவ்வளவு சின்ன வயதில் இவ்வளவு சகிப்புத்தன்மையா? எப்படி இப்படிப் பாசத்தைக் கொட்ட முடியும்?

இரண்டு வாரத்திற்கு முன்பு.....
'excuse me ' என்று ஒரு குரல்.. திரும்பிப்பார்த்தேன். அழகான ஒரு இளம் பெண், அழகிய உயரமான ஒரு ஆண். இரண்டு பேரும் கை கோர்த்துக்கொண்டு லிஃப்ட் பக்கத்தில் நின்றிருந்தார்கள் .' can you tell me where the pathology lab is?" .. கையில் ஒரு சின்ன பாட்டில். அதில் சில ' tissues". வேறு ஆஸ்பத்திரியில் இருந்து " biopsy specimen" இரண்டாவது ஒபினியன்காக கொண்டு வந்திருக்கிறார்கள் போலும் என்று நினைத்துக்கொண்டே லேப் இருக்கும் இடத்தை காண்பித்தேன். அவர்களை மறந்துவிட்டேன்.

ஒரு வாரத்திற்கு முன்பு....
இவர்கள் இருவரையும் ' காபி ஷாப்பில் பார்த்தேன். அந்த பெண்ணின் கண் கலங்கியிருந்தது.. அவளை அணைத்துக்கொண்டு அந்த பையன் ஏதோ சமாதானம் சொல்லிகொண்டிருந்தார்.. காபி ஷாப் பக்கத்திலிருந்த மீன் தொட்டிகளை வெகு நேரம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். இது மாதிரி அழுதுக்கொண்டிருப்பவர்களை தினம் தினம் பார்த்து அது ஒரு தினசரி affair ஆகி விட்டதுதான்.(என்ன செய்ய?)

இன்று காலையில் மறுபடியும் புத்தர் சிலை பக்கத்தில் அந்த பையனை மட்டும் தனியாகப் பார்த்தேன்..அடிக்கடி என்னைப் பார்த்ததாலோ என்னவோ ஒரு நட்புடன் சிரித்தார். ஏதோ கேட்க விரும்புகிறார் என்று மட்டும் தெரிந்தது. " any help?" என்றேன்?
' என் கையை பிடித்துக்கொண்டு ஒரே அழுகை. மடை திறந்து வெள்ளம் கொட்டுவது போல...
'
'தென்றல்' ஒரு மத்தியஸ்த குடும்பத்தை சார்ந்தவள். 25 வயது. பி.இ முடித்துவிட்டு சென்னையில் ஒரு கம்பனியில் வேலை. நல்ல வேலையா என்று சொல்லதெரியலை. ஆனால் பொட்டி தட்டுகிற வேலை....(programmer in a software company). நல்ல வருமானம். பிரபு ஒரு கம்பெனியின் மார்க்கட்டிங்க் மானேஜர். பிரபுவுக்கும், தென்றலுக்கும் நிச்சயதார்த்தம் ஆகி 3 மாதம் ஆகிவிட்டது. சித்திரையில் திருமணம். புடவை, நகை எல்லாம் வாங்கி விட்டார்கள். திருமண மண்டபமும் புக் பண்ணி விட்டார்கள். நிச்சயதார்த்தம் முடிந்த்துவிட்டதால் இரண்டு பேரும் அடிக்கடி சந்திப்பதற்கு பெற்றோர்கள் தடை எதுவும் சொல்லவில்லை. இரண்டு பேரும் தனிக் குடித்தனம் பண்ண வீடு, சில ஃப்ர்ணிச்சர்களுக்கும் ஆர்டர் பண்ணி விட்டார்கள்.
இருபது நாட்களுக்கு முன்பு வலது மார்பில் ஒரு சின்ன கட்டி. லேசாக வலி எடுக்கவே பக்கத்திலுள்ள டாக்டரிடம் சென்றுள்ளார்கள். அந்த டாக்டரும்' பால் கட்டி' என்றாராம். பால் கட்டியா, இன்னும் குழந்தையே பிறக்கலை, அதற்குள் பால் கட்டியாவது என்று ignore பண்ணிவிட்டார்கள். வலி அதிகமாகி, மார் லேசாக வீங்கியதும் ஆஸ்பத்திரிக்கு சென்று பயாப்சி பண்ணியிருக்கிரார்கள். மார்பக புற்று நோய்.. அதுவும் 25 வயதில்... வலது மார்பை எடுக்கும் சூழ் நிலை.. வாழ்க்கையில் அடி எடுத்து வைக்கும் நேரத்தில் இடி....
பிரபுவின் வீட்டார்க்கு தெரிந்ததும் திருமணத்தை நிறுத்த சொல்லி பயங்கர வற்புறுத்தல்.. பிரச்சினைகள்,..
எது என்னவானாலும் நான் தென்றலை விட்டு பிரிய மாட்டேன் என்ற பிரபுவுடன் அவர்கள் வீட்டார் யாரும் பேசுவதில்லை. தென்றலின் பெற்றோர் என்ன செய்ய என்று தவித்து கொண்டிருக்கும் நேரத்தில் பிரபு ஆதரவாக நாளும் பகலும் ஆஸ்பத்திரியில் இருந்து பார்த்து கொள்கிறார். "No matter what happens, me & ThenRal are getting married on the fixed date ""என்று சொல்லிவிட்டு சென்ற பிரபுவை மனதார வழ்த்தினேன். உண்மையிலே உயர்ந்த மனிதன்தான்..........

11 comments:

துளசி கோபால் said...

உண்மையிலேயே உயர்ந்தமனிதர் பிரபு.

நல்லபடியா வாழ்க்கை அமையணுமுன்னு மனமார வாழ்த்துகின்றோம்.

மங்கை said...

ஹ்ம்ம்ம்ம்..உயர்ந்த மனிதன்...அவர்களை கண்டிப்பாக வாழ்த்தவேண்டும்... புற்றுநோய் அவர்களை என்ன செய்துவிடும்.. அதையும் வென்று நீடூழி வாழட்டும்...

பாச மலர் said...

உயர்ந்த மனிதருக்கும் தென்றலுக்கும் வாழ்த்துகள்...

thevanmayam said...

உயரம் என்றால் நெட்டையாக இருப்பார்களே.. அப்படிப்பட்டவரல்ல.. குணத்தில், உள்ளத்தில்///

அருமை டெல்பின்!!

thevanmayam said...

எது என்னவானாலும் நான் தென்றலை விட்டு பிரிய மாட்டேன் என்ற பிரபுவுடன் அவர்கள் வீட்டார் யாரும் பேசுவதில்லை. தென்றலின் பெற்றோர் என்ன செய்ய என்று தவித்து கொண்டிருக்கும் நேரத்தில் பிரபு ஆதரவாக நாளும் பகலும் ஆஸ்பத்திரியில் இருந்து பார்த்து கொள்கிறார். "No matter what happens, me & ThenRal are getting married on the fixed date ""என்று சொல்லிவிட்டு சென்ற பிரபுவை மனதார வழ்த்தினேன். உண்மையிலே உயர்ந்த மனிதன்தான்....///
உண்மையிலேயே உயர்ந்தமனிதர் பிரபு.
தேவா.

அபிஅப்பா said...

இரவே இந்த பதிவை படித்து விட்டேன். ஆனா பின்ன்னூட்டம் போட கூட முடியாம மனசு கனமா ஆகிடுச்சு டாக்டர்!

அவங்க 2 பேரும் நல்லா இருக்கனும் ஆண்டவா!

அபிஅப்பா said...

இரவே இந்த பதிவை படித்து விட்டேன். ஆனா பின்ன்னூட்டம் போட கூட முடியாம மனசு கனமா ஆகிடுச்சு டாக்டர்!

அவங்க 2 பேரும் நல்லா இருக்கனும் ஆண்டவா!

கோபிநாத் said...

அவர்கள் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)

உண்மையில் உயர்ந்த மனிதர் ;)

Thekkikattan|தெகா said...

அடுத்த முறை பார்த்தா சொல்லுங்க, எங்களோட வாழ்த்துக்களையும் அவுங்களுக்கு.

வேற என்ன சொல்றது. 25 வயசில மார்பக புற்று நோய், எங்கே போயிட்டு இருக்கோம் நாமெல்லாம்... என்னமோ போங்க.

delphine said...

வாங்க துளசி..இன்றைக்கு அவர்கள் இருவரும் செக்கப்புக்கு வந்திருந்தாங்க.. ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.

நன்றி மங்கை.. இவங்க இரண்டு பேரும் என் மனதிலிருந்து மறைய ரொம்ப நாளாகும் என நினைக்கிறேன்.. மிக சிறிய வயதில் புற்று நோயால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது.

நன்றி பாசமலர். இன்று என்னால் அவர்களிடம் அதிகம் பேச இயலவில்லை. in fact I told her that I was going to about her in my blog last time when i met Them both

pappu said...

ச்ச... திரும்ப நார்மல் வளர்ச்சி அடுத்து இருக்காதா? பாவம். உண்மையில பிரபுவுக்கு நல்ல மனசுதான். அட, நானும் பிரபுதான். பிரபு எல்லாம் ரொம்ப நல்லவங்களா இருப்பாங்க போலயே?