Monday, April 6, 2009

கோடைக்கானல்


ம்ம்ம்.... ரொம்ப நாட்கள் தான் ஆகிப் போச்சு....ப்ளாக் பக்கம் வந்து......எல்லோரும் மறந்துதான் போயிருப்பீங்க...இல்ல கொஞ்சம் நிம்மதியாக கூட இருக்கலாம்......
வேலை அதிகம்தான்..இடையில் ஒரு சர்ஜரி... அப்டி இப்படின்னு வாழ்க்கை ஓடிக்கொண்டேதான் இருக்குது.... யாருக்காகவும் எதுவும் நிற்கப்போகிறதில்லைதான்........ஒரு வேளைக் கொஞ்சம் சோம்பலோ! என் கணினி தொந்தரவு தரவே அதை ஃபிக்ஃஸ் பண்ண ஒரு 3 மாதம் பிடித்தது...2000-ம் வருடத்தில் வாங்கியது. இத்தனை வருடம் உழைத்திருக்கிறதே!!!! அதை சரி செய்ய இயலாதலால் மடி கணினி ஒன்று வாங்கிவிட்டேன்..
கடந்த வாரம் அலுவலக வேலையாக நாங்கள் மதுரை சென்றோம். வேலை முடிந்து ஒரு நாள் ஓய்வு கிடைத்தது......சனிக்கிழமை....நாங்கள் யாவரும் கோடை சென்றோம்...10 வருடங்களுக்கு முன்பு சென்றது......மகன் அங்கு படித்ததால் அடிக்கடி போகும் வாய்ப்பு அப்போது கிடைத்தது....எனக்கு மிகவும் பிடித்த ஒரு பிரதேசம்.....காலையில் மிகவும் சுறு சுறுப்பாக மக்கள் இயங்குகிறார்கள்...ஆனால் மாலை 7 மணிக்கெல்லாம் வீடு போய் விடுகிறார்கள். பெண்கள் தலையில் விறகுகளை சுமந்து மலை ஏறுவதை பார்க்கும்போது ஆச்சர்யமாக உள்ளது. 10 வருடத்திற்கு முன்பெல்லாம் 'மாருதி ஆம்னி' வண்டிகள்தான் அதிகமாக இருந்தன. இப்போது எல்லா விதமான வண்டிகளும் உள்ளன.....
there is no life after 7 PM.
யூக்காலிப்டஸ் மரங்களின் மணம்.......திடீரென்று சூளும் மேகம் மூட்டம்....லேசான மழை தூரல்..மிகவும் ரம்மியமாக இருந்தது...அதுவும் சென்னையின் அவசர வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலை......
சரியான படி ப்ளான் செய்யாதலால் தங்க சரியான ஒரு ஹோட்டல் புக் பண்ணவில்லை. ஆகவே தமிழ் நாடு ஹோட்டலின் ரூமில் தங்கினோம்.. எங்களுக்கு துணை எலிகள் தான்....... அப்பாடி... சொல்ல இயலாது... எலிக் குட்டிகள் ஒரே கும்மாளம்தான்....ஆனால் ரூமில் தங்கிய நேரம் மிக குறைவு...ஒரு நாள் முழுவதும் சுற்றிப்பார்த்தோம். நான் மிகவும் ரசித்தது படகு சவாரிதான்... ஒரு மணி நேரம் சென்றோம். கூட வந்த executives- எல்லோரும் சைக்கிள் சவாரி செய்தார்கள்......
ஏரியின் பக்கத்தில் இரண்டு வயதான தம்பதியர்கள் மசாலா டீ போட்டு கொடுக்கிறார்கள்.. அருமையான சுவை.. மக்கள் வரிசையில் நின்று வாங்கிக் குடிக்கிறார்கள்.
home made chocolates என்று எங்கு பார்த்தாலும் விற்கிறார்கள்... அதனோடு கூட யூக்காலிப்டஸ் ஆயில். எது உண்மை, எது போலி என்று தெரியவில்லை.
ஒரு துணியில் யூக்காலிப்டஸ் ஆயிலை கொஞ்சமாக ஊற்றி பற்றவைக்கிறார்கள். அதனை முகர்ந்து பார்த்தால் அதன் வாசனை தூக்கலாக இருந்தால் அதுதான் ஒரிஜினலாம். அதை போல சாக்கலைட்டுகளில் கோகோ பவுடருக்கு பதிலாக 'கருப்புக்கட்டியை' சிலர் உபயோகிக்கிறார்களாம்... (கலப்படம் யாரைத்தான் விட்டது?). அங்கு வாழும் மக்களுக்கு ஒரு விலை, சுற்றுலா பயணிகளுக்கு ஒரு விலை. ஏரி மிகவும் சுத்தமாக உள்ளது. சுற்றிலும் வேலி எழுப்பியிருக்கிறார்கள்.
கோடைக்கானல் மிகவும் சுத்தமாக உள்ளது...ப்ளாஸ்டிக் பைகள் கிடையாது . பொருட்களைக் காகித பைகளில் மடித்து கொடுக்கிறார்கள்.....தங்களுடைய ஊரை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற ஆர்வத்தை பார்த்தேன்...சுற்றுலா பயணிகளை நம்பியிருக்கும் ஊர். நல்ல பல பள்ளிகூடங்களும் உள்ளன. மக்கள் பல பாஷைகள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். வெளி நாட்டு உல்லாச பயணிகள் சிலர் 'guide' களுடன் trekking செல்கிறார்கள்.
குரங்குகளின் ஆதிக்கம் அதிகம்.. மிகவும் உஷாராக நடக்க வேண்டும்...... அங்குள்ள மக்கள் 'அண்ணே அண்ணே' என்று பேசுவது கேட்க இனிமையாக இருந்தது,.. 'கீழ் நாடு' என்று நம்மை சொல்கிறார்கள்... எங்களை அழைத்து சென்ற ஓட்டுனர் மிகவும் சிறிய வயது பையன்... எஞ்சினியரிங்க் முடித்து விட்டு வேலைக்காக காத்துக்கொண்டிருப்பவர். .. season சமயத்தில் வண்டி ஓட்டி சம்பாதிக்கிறார்...
என்னை மிகவும் கவர்ந்த விஷயம்.... பொருட்களை காகிதப்பைகளில் மடித்துக்கொடுப்பதுதான்...அங்கு வாழும் மக்கள் கடைகளுக்கு செல்லும்போது ' துணி பைகளை' கொண்டு செல்வதை பார்க்க முடிந்தது. எதிரில் வரும் 'கீழ் நாட்டு மக்களின் வண்டிகளை மதித்து, நிதானமாக செல்வது......வய்க்கு வாய் அண்ணே அண்ணே என்றுக் கூப்பிட்டு காரியத்தை என்னவோ சாதித்துக்கொள்கிறார்கள்தான்...
வருத்தமான விஷயம்..... தமிழ் நாடு ஹோட்டல்... எவ்வளவு விஸ்தாரமான இடம்...அறையில் இருந்து பார்த்தால் பள்ளதாக்கு தெரிகிறது.. அருமையான இடம்... ஹ்ம்ம்.... ஆனால் service-----just below par..... எல்லா அரசங்க துறைகளும் இப்படித்தான் இருக்குமோ?
25 comments:

கோபிநாத் said...

ஐஐஐஐ..நான் தான் பாஸ்டு ;))

கோபிநாத் said...

நல்லா என்ஜாய் போல..ரைட்டு ;)

நானும் இன்னிக்கு தான் ஒரு பதிவு போட்டேன்ம்மா ;)

தமிழ் பிரியன் said...

கொடைக்கானல் அனுபவம்.. ஆகா மணக்குமே...அனுபவிச்சா தான் தெரியும். ஆனால் சில பதிவர்களுக்கு அதுக்கு வாய்ப்பு கிடைக்குமான்னு தெரியல.. பார்ப்போம்.. ;)

delphine said...

நன்றி கோபி.... அதுசரி.. ஃஃப்ர்ஸ்டா அல்லது ஃபாஸ்டா.. எதுவானாலும் திரும்பி வந்திருக்கிறேனே! ஒரு 'ஓ' போட்டுடுங்க

delphine said...

தமிழ்பிரியன்.. ஒரு பதிவர் சந்திப்பு வச்சுருங்க....நடேசன் பார்க்குக்கு பதிலா ,ப்ரையான் பார்க்ல வச்சுக்குங்க....so simple isn't it?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

டாக்டர் நிசமாவே பார்த்து வருஷமாச்சு.. எப்படி இருக்கீங்க..?! உடல் செளக்கியம்தானே.. உடம்பை பார்த்துக்குங்க..

கொடைக்கானலுக்கு போயி 13 வருஷமாச்சு.. அடுத்த வருஷமாச்சும் போகணும்னு நினைச்சிருக்கேன்..

பிளம்ஸ் வாங்குனீங்களா..?

Thekkikattan|தெகா said...

வாங்க, வாங்க....

என்ன எழுத்து நடையெல்லாம் வித்தியாசமா இருக்கூஊஊ...? :-))

என்ன படத்தில ஊரே தண்ணிக் காட்டுக்குள்ளர நிக்கிற மாதிரி இருக்கு?

changed your template too... and pop up window for comment section?! take it off plz...

doc, enjoyed reading the piece. give us more, mon...

முத்துலெட்சுமி-கயல்விழி said...

ஜாலியா டூரா.. ம்.. வடநாட்டுல கவர்ன்மெண்ட் ஹோட்டல்களே எங்க சீப் அண்ட் பெஸ்ட் தேர்வுகள்.. இங்க நல்லா மெயிண்டெய்ன் செய்யறாங்க..

காட்டாறு said...

கீழ்நாட்டு மக்கள் என சரியா தான் சொல்லுறாங்களோ? இன்னும் திருந்தாம ப்ளாஸ்டிக் பை உபயோகிக்கிறாயே? என்று எங்களை பார்த்து திருந்துவாய் என கேட்காமல் கேட்கிறாங்களோ?

எப்படியோ உங்களுக்கு ஒரு ப்ரேக் கிடைச்சிருச்சி. நல்லது.

யட்சன்... said...

வாங்க..வாங்க...

வணக்கமுங்க...உங்களுக்கு நம்மளை மறந்திருக்கும்னு நினைக்கிறேன்...நானொரு குட்டி ப்ளாக்கர் :)

அப்புறமா, ரொம்ப நாளு கழிச்சி உங்களை இங்கிட்டு பார்க்கறதுல நெம்ப சந்தோசமுங்க...

நெறய எழுதுங்க.....

ஒரு டவுட்டு...இப்படி உங்கள மாதிரி நெறய புள்ளி வச்சி ஒரு பதிவர் எழுதுவாரு, அவரு யாருன்னு யோசிச்சிட்டு இருக்கென்....ஹி..ஹி..

யட்சன்... said...

இன்னும் அஞ்சு வருசம் கழிச்சி கொடைக்கானல்..ல..போய் செட்டில் ஆய்டலாமான்னு யோசிச்சிட்டு இருக்கேன்....

வூட்ல வுடுவாங்களா தெரியலை :)

நாகை சிவா said...

ஓஓஓ போட்டாச்சு...

கோடையில் கொடைக்கானல் போனதால் கோடைக்கானல் ஆக்கிட்டீங்க போல ;)

வருக வருக

துளசி கோபால் said...

பார்த்து எவ்வளோ நாளாச்சு..... உங்களைத்தான் சொல்றேன்.

சர்ஜரி முடிஞ்சு இப்ப நல்லா இருக்கீங்களா?

அடுத்தமுறை சந்திப்பேன்:-)

கொடைக்கனால் இன்னும் போகலை.

Paheerathan said...

ஆஹா டாக்டர் ரொம்ப காலமாக காணவில்லை , எங்கே சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டீர்கள் என்று பார்த்தேன்.
திரும்பவும் கொடைக்கானல் பற்றி கூலா ஒரு பதிவோட வந்திருக்கிறீங்க, மகிழ்ச்சி.

மிஸஸ்.தேவ் said...

கோடைக்கானல் போய்ட்டு வந்துற வேண்டியது தான் ஒரு எட்டு ...இங்க சென்னைல வெயில் வெந்து நொந்து நூடுல்ஸ் ஆயிட்டு இருக்கறப்ப அங்க போய் குளு குளுன்னு ரெண்டொரு நாள் நிம்மதியா இருந்துட்டு வரலாம் தான்.

Beem said...

ஆஹா..ரொம்ப்ப நாள் கழித்து கொடைகானல் போட் ஹவுஸ் அதுவும் விஸ்டா பாயின்டில் இருந்து...அருமை;;; அருமை...மலரும் நினைவுகள் வந்துவிட்டது

அபி அப்பா said...

\\வேலை அதிகம்தான்..இடையில் ஒரு சர்ஜரி... அப்டி இப்படின்னு வாழ்க்கை ஓடிக்கொண்டேதான் இருக்குது.... யாருக்காகவும் எதுவும் \\

என்ன டாக்டர் இப்படி சொல்லிட்டீங்க! டாக்டர்ன்னா சர்ஜரி எல்லாம் சகஜம் தானே. சும்மா மருந்து எழுதி கொடுத்தே ஓட்டிடலாம்ன்னு பார்த்தீங்களா?

படிச்சது மறந்துடாம இருக்க அப்ப அப்ப ஆப்ரேஷனும் பண்ணி பழகுங்க டாக்டர்:-)

அபி அப்பா said...

\\அண்ணே அண்ணே என்று அழைப்பது\\

இது அநியாயம்! உங்களை அண்ணேன்னு அழைச்ச கொடைகானல் மக்களை கண்டிக்கித்றேன்:-)

அபி அப்பா said...

வாங்க டாக்டர்! திரும்ப பதிவுலகத்துக்கு வந்ததுக்கு நன்றி!

delphine said...

உண்மை தமிழன் நன்றிங்க... உடம்பு நல்லா இருக்குங்க.. சர்ஜரி முடிந்து 15 நாட்கள்தான் ரெஸ்டில் இருந்தேன்.. அப்புறம் வேலைதான்.... வீட்டில சும்மா இருந்தா போர்தானே..... ப்ளம்ஸ் வாங்காமலா?.. ஆரஞ்சுகள் கூட நல்ல சுவையாக இருந்தன..thanks theka.... எழுதணும்னு நினைக்கிறதுதான்.. வீட்டிற்கு வந்த பிறகும் ஆஸ்பத்திரிலிருந்து ஏதாவது போன் வரும்.......ஏதோ வாழ்க்கை ஒடுகிறது..ம்ம்ம். எழுதி ரொம்ப நாளாச்சுல்ல அதுதான் நடை கொஞ்சம் வித்தியாசமாக இருக்குமோ?முத்துலட்சுமி..தமிழ் நாட்டிலுள்ள எல்லா அரசாங்க ஹோட்டல்களும் சரியானபடி பராமரிப்பது இல்லை. கன்யாகுமரியில் சுமாராக உள்ளது என்று கேள்விப்பட்டேன்.


"எப்படியோ உங்களுக்கு ஒரு ப்ரேக் கிடைச்சிருச்சி. நல்லது."".. ஆமா காட்டாறு நிஜமாகவே ஒரு நல்ல ப்ரேக்தான். அடுத்த மாதம் மதுரைக்கு அலுவல் நிமித்தம் செல்லும்போது, 'மூணார்' போகலாம் என்று நினைத்திருக்கிறேன்..ஹ ஹா...ஹஹா

delphine said...

'அப்புறமா, ரொம்ப நாளு கழிச்சி உங்களை இங்கிட்டு பார்க்கறதுல நெம்ப சந்தோசமுங்க..."....ஹல்லோ குட்டி ப்ளாக்கர் உங்களை மறக்க முடியுமா? 5 வருஷம் கழிச்சு செட்டிலாக போகிறீங்களா? ம்ம்ம்.. ஆனா..ஏதாவது ஒரு ஆத்திரம் அவசரம் என்றால் கீழ் நாட்டுக்கு வர கொஞ்சம் டைம் ஆகும்.. சரியான ஆஸ்பத்திரி வசதிகள் இல்லை.. அது ஒரு குறைதான்..

சிவா , thanks ..கோடைக்கானல் அல்லது கொடைக்கானல் எது சரி? நிஜமாகவே குளுமையாகத்தான் இருந்தது.

வாங்க துளசி.. நல்லாவே இருக்கேன். நிச்சயமாக சந்திக்கணும். பார்க்க ஆவலாக உள்ளேன்.

delphine said...

''ஆஹா டாக்டர் ரொம்ப காலமாக காணவில்லை , எங்கே சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டீர்கள்''.. எங்கேயும் போகலீங்க... இங்க சென்னையில் தான் இருக்கேங்க பஹீரதன்....

வாங்க தேவ் மேடம்... அப்புறம் உங்க அம்மா வலைப் பூக்கள் ரொம்ப நல்லா இருக்குது. அப்பப்ப படிப்பேன்.. ஆனா கமெண்ட் மட்டும் எழுதறதில்லை..(சோம்பலோ?)

பீம்... பீம்பாய்... ஹ்ம்ம். மலரும் நினைவுகள்? தேன் நிலவு கொடக்கானலிலா?

delphine said...

அய்யா தொல்ஸ்.. சர்ஜரி எனக்குத்தான்... ஆப்பரேஷன் பண்ணுவதெல்லாம் மறக்காதுங்க...என்னை ஒன்றும் யாரும்' அண்ணே அண்ணேன்னு கூப்பிடல..........க்கும் கொஞ்சம் ராங்கிதான் நீங்க.. எழுதணும்னு தோணும் தொல்ஸ்....அதிகமா உழைக்கிற மாதிரி தோணுது.....அதுதான் நேரம் இல்லை..

எம்.எம்.அப்துல்லா said...

ஹய்யோ எவ்வளவு நாளாச்சு டாக்டர் அக்காவ பார்த்து. கடைசியா சீமாச்சு அண்ணனின் ஆசிரியர் சம்பந்தப்பட்ட பதிவில் உங்களைப் பார்த்ததா ஞாபகம்!!

உடல்நிலை தற்பொழுது நன்றாக உள்ளதா?? நலம்தானே??

மங்கை said...

டாக்டர் அம்ம்ம்ம்ம்மாஆஆஆஆஆஆ

இனியாவது அடிக்கடி எழுதுங்க... அதிகமா தான் உழைகரீங்க... அதுலேயே இருந்தா எப்படி டாக்டரம்மா.. அப்பப்பா இப்படி refresh பண்ணிக்கனும்...எங்களோட வந்து...