Tuesday, September 30, 2008

உடல் உறுப்புகள் தானம்

ப்ளாக் பக்கம் வந்து ரொம்பவே நாளாயிடுச்சுதான்!! எழுதணும்னு தோணும்தேன்.ஆனாலும் வேலை பழுவின் காரணமாக தள்ளி போய்க்கொண்டே இருந்தது. ஆனால் போன வாரம் நான் வேலை செய்யும் ஆஸ்பத்திரியில் நடந்த சில நிகழ்வுகள் மனதை நெருடத்தான் செய்தது. ஒரு பக்கம் இத்தனை விபத்துக்களா, இப்படி அகாலமாக மரணமடைகிறார்களே என்றொரு பயமும், கிலியும் இருந்தாலும், மனதார தங்கள் இனியவர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வருவது உண்மையிலே மிகவும் பாரட்டப்பட வேண்டியதுதான். எமர்ஜென்ஸி ரூமின் வெளியிலும், ஆஸ்பத்திரியின் லாபியிலும், ICU வெளியிலும் முகம் சிவக்க, கண்கள் சிவந்து அழுது, இனிமேல் செய்ய ஒன்றுமில்லை என்று கோவில் முன்பு அழுதுக்கொண்டிருக்கும் ஒரு சாரார்..இதை பார்க்கும் போது மனதை கல்லாக்கிக்கொண்டு செல்ல வேண்டியதாக உள்ளது. http://thekkikattan.blogspot.com/2008/09/donation-of-organs.html . தெகாவின் இந்த கட்டுரையை நான் படித்ததும்தான் இந்த உடலுறுப்புகள்தானம் பற்றி எழுத ஒரு சிறிய முயற்சி எடுத்துள்ளேன். உடலுறுப்புகள் தானம் செய்ய முன் வரும்போது எந்தெந்த மாதிரி நோயாளிகளைத் தேர்வு செய்கிறார்கள்,மருத்துவர்கள் எப்படி ஒரு முடிவுக்கு வருகிறார்கள் என்பது பற்றி மிக சிறியவகையில் எழுதுகிறேன். ஆங்கிலமும் , தமிழும் கலந்து எழுதுகிறேன். ஓகேவா? brain dead என்று ஒரு நோயாளியை சொல்வதற்கு ஒரு ப்ரொடகால்(protocol) உண்டு. அதன் படி நிறைய பரிசோதனை செய்கிறார்கள். இந்த மாதிரி patients வென்டிலேட்டரில் தான் இருப்பார்கள். -apnoea test- -ABG TESTS -ARTERIAL BLOOD GAS ANALYSIS ( தமனியில் எவ்வளவு நல்ல ரத்தம் உள்ளது என்று பார்க்கும் பரிசோதனைகள் செய்யபடுகின்றன) -ALL REFLEXES ARE CHECKED - like corneal reflex, gag reflex etc, -EEG tests-- மூளையில் ஏதாவது ஆக்டிவிட்டி உள்ளதா என்று தெரிவதற்காக. -cool calorie test . குழந்தைகளென்றால் 8 to 1 2 மணிக்கு ஒரு முறை செய்வார்கள். வயதானவர்களென்றால் 6 மணி நேரத்திற்கு ஒரு முறை செய்து பார்க்கிறார்கள். இந்த பரிசோதனைகள் இரண்டு முறை செய்து பார்த்த பின், அவைகளின் ரிசல்டை இரண்டு நரம்பியல் நிபுணர்கள் பரிசோதிக்கிறார்கள். தீர்க்கமாக ஒரு முடிவுக்கு வந்த பிறகுதான் இதைப்பற்றி நெருங்கிய உறவினர்களுக்கு சொல்கிறார்கள். (The treating Neuro surgeon along with the neuro physician comes to a decision that the patient is brain dead and they explain it to the patient's close relatives). உறவினர்களுக்கு இது பற்றி விலாவாரியாகஎடுத்துரைக்கிறார்கள். brain dead ஆன பிறகு மற்ற உறுப்புகள் 12 மணி நேரம் முதல் 48 மணி நேரத்திற்குள் செயலிழந்துவிடும் என்பதையும் தெரியப்படுத்துகிறார்கள். அதன் பிறகு அவர்கள் வைத்தியம் தொடர விரும்புவதும், வேறு ஏதாவது ஆஸ்பத்திரிக்கு செல்வதும் அவர்கள் இஷ்டம். வென்டிலேட்டரை எடுத்துவிட்டால் அவர்கள் உயிர் பிரிந்துவிடும் என்பது பற்றியும் தெரிவிக்கிறார்கள். இதுமாதிரி மிகவும் சீரியசாக இருக்கும் நோயாளிகளின் உறவினர்களை counseling செய்ய சில செவிலியர்கள் உண்டு. அவர்கள் உறவினர்களிடம் உறுப்புகள் தானம் பற்றி பேசுவார்கள். அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்கிறார்கள். உறவினர்கள் ஒத்துக்கொள்ளும் பட்சத்தில், அவர்களின் ஒப்புதலுடன் சில ஒப்புதல் பத்திரங்களில் கையெழுத்து வாங்குவர். அதன் பிறகு " ORGAN TRANSPLANT TEAM" என்று ஒரு டீம் உண்டு. அவர்களுக்கு தெரிவிக்கபடுகிறது. இதற்கிடையே கையெழுத்திட்ட நேரம் முதல் நோயாளிகளுக்கு ஆகும் செலவினை ஆஸ்பத்திரி ஏற்றுக்கொள்கிறது. திரும்பியும் சில டெஸ்டுகள் செய்யப்படுகின்றன. The tests done are ultra sonogram of the abdomen to know about the condition of the liver, liver function tests, HIV ,HCV tests and Renal Function tests. மருத்துவர்களுக்கு எல்லாம் சரியாக இருக்கிறது, இன்னொறு உடம்புக்கு தானம் செய்யலாம் என்று முழு திருப்தி அளித்தால் மட்டும்தான், உடல் உறுப்புகள் harvest செய்ய அனுமதி அளிக்கிறார்கள். அதன் பிறகு ஆப்பரேஷன் தியேட்டரில் வைத்து ஆப்பரேஷன் செய்து, உடல் உறுப்புகளை பதப்படுத்துகிறார்கள். நோயாளியின் உடம்பை நல்லவிதமாக பாக் செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கிறார்கள். உடல் உறுப்புகள் தானம் நமது நாட்டில் மிகவும் சென்ஸிட்டிவான விஷயம். ஜாதி, மதம் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட ஒன்று என்பதையே சொல்ல விரும்புகிறேன். எனக்கு தெரிந்தவரை எழுதிவிட்டேன். ......... அன்று டாக்டர் தம்பதியரின் மகனின் இருதயத்தை எடுத்து சென்ற போது காவல் துறையினரின் செயல் அபரீதமானது

17 comments:

தருமி said...

சரியான நேரத்தில் வந்த நல்ல விளக்கம்.

உங்களுக்கும் புருனோவுக்கும் பதிவுலகத்தின் நன்றி

புருனோ Bruno said...

உடல் தானம் என்றால் என்ன, உறுப்பு தானம் என்றால் என்ன, கண் தானம் ??, இரத்த தானம் ?? என்ற என் பதிவில் முழு உடல் தானம், உறுப்பு தானம், கண் தானம், எலும்பு தானம், இரத்த தானம் ஆகியவை குறித்து விளக்கியுள்ளேன். சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாம்

முத்துலெட்சுமி-கயல்விழி said...

ம்.. தெரிஞ்சுகிட்டாச்சு டாக்டர்.. நன்றீ.

மங்கை said...

டாக்டரம்மா

எளிமையா புரியற இருக்கு...

தொடர்ந்து எழுதுங்க டாக்ட்ரம்மா...

நன்றி

மங்கை said...

டாக்டரம்மா

எளிமையா புரியற மாதிரி இருக்கு...

தொடர்ந்து எழுதுங்க டாக்ட்ரம்மா...

நன்றி

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

டாக்டரம்மா..

மிக எளிமையாக இருந்தது விளக்கம்..

நானும் என் குடும்பத்தாரிடம் சொல்லி வைத்திருக்கிறேன்..

இருந்துதான் யாருக்கும் பிரயோசனமில்லை.. போகும்போதாவது உதவி செய்வோமே..

தாமதமாக வந்தாலும் உயிரான ஒரு மேட்டரைத் தந்துள்ளீர்கள்..

நன்றி..

யட்சன்... said...

அவசியமான பதிவு....ஆனால் தேடிக்கண்டு பிடித்து படிக்க வேண்டியிருக்கிறது.

வாழ்க தமிழ் பதிவர்களும், திரட்டிகளும்

அப்பால, நிறைய எழுதுங்க ஆத்தா !

போன குவாட்டர்ல...ஒரே ஒரு பதிவுதான் எழுதியிருக்கீங்க.....பார்த்து மனசு வச்சி வாரத்துக்கு ஒன்னாவது எழுதுங்க புண்ணியமாப் போகும்.

”ஆருடா இவன் புச்சா கீறானேன்னு” ரோசனை வருமே....ஹி..ஹி...நான் பழைய ஆளுதான் தாயே!

கோபிநாத் said...

ம்ம்...நல்ல விளக்கம் ;)

delphine said...

நன்றி தருமி சார். டாக்டர் புருனோ அவர்கள் இன்னும் எளிமையாக விளக்கியுள்ளார். எங்கள் ஆஸ்பத்திரியில் இந்த விஷயம் நடந்ததால் எனக்கு இது பற்றி எழுத முடிந்தது.

delphine said...

Thanks Dr.Bruno for the visit. your blog indeed is very informative.

delphine said...

முத்தம்மா நன்றி...

மாமி, நிறைய எழுதத்தான் ஆசை.. ஒரு பதிவு எழுதணும்னு நினைச்சா ஒரு நாள் அதிலே போய் விடுகிறது. என்னத்த செய்ய மாமி... நிறைய நிகழ்வுகள்.. தினம் தினம் பார்க்கிறேன். நேரம்தான் இல்லை.

delphine said...

தெகாவிற்கு ஸ்பெஷல் நன்றி. ..

தமிழன் சார்.. வருகைக்கு நன்றி.. இருந்துதான் பிரயோஜனமில்லை அப்படியெல்லாம் சொல்லாதீங்க.. நாம் இந்த உலகத்தில் ஏதாவது ஒரு விதத்தில் உபயோகமாகத்தான் இருக்கிறோம். நெகட்டிவாக யோசிக்காதீர்கள்.

delphine said...

யட்சகரே நன்றி நன்றி..அதென்ன அப்படி சொல்லிப்புட்டீங்க.. .. உரிமையுடன்'ஆத்தா, தாயீ' என்றழைக்கும் 'சொக்கரை' மறக்க முடியுமா என்ன?

நன்றி கோபி... எனது அடுத்த பதிவு வெகு விரைவில்..

வேளராசி said...

சரியான நேரத்தில் வந்த நல்ல விளக்கம்.தொடர்ந்து எழுதுங்க,நன்றி.

கபீரன்பன் said...

மிகவும் பயனுள்ள பதிவு டாக்டர்.

எல்லோருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.

தங்கள் சேவை தொடரட்டும்.

நன்றி

பிரேம்குமார் said...

ஹிதேந்திரன் உறுப்பு தானத்திற்கு பிறகு நிறைய பேர் இது பற்றி விழிப்புணர்வு பெற்றுள்ளார்கள். மிகுந்த மகிழ்ச்சியான விசயம். தங்கள் பதிவுக்கு பலருக்கு எளிமையாக புரியும் வண்ணம் இருந்தது. மிக்க நன்றி

எம்.எம்.அப்துல்லா said...

என்ன டாக்டர் மாசக் கணக்கா ஒன்னுமே எழுதாம இருக்கீங்க??? உடல்நிலை நலமோடு உள்ளதா??