Wednesday, April 23, 2008

ஜோக்குகள் .. நான் ரசித்தவை...

ஜோக்குகள் .. நான் ரசித்தவை.....

நோயா‌ளி: தினமு‌ம் ஒரு ப‌ச்சை மு‌ட்டை சா‌‌ப்‌பிடனுமா... எ‌ன்னால முடியாது டா‌க்ட‌ர்.
டா‌‌க்ட‌ர்: ஏ‌ன் முடியாது?
நோயா‌ளி: ஏ‌ன்னா எ‌ங்க ‌வீ‌ட்டு கோ‌ழி வெ‌ள்ளை மு‌ட்டைதா‌ன் போடு‌ம்.

ஒருவ‌ர்: இரும‌ல்‌ன்னு சொ‌ல்‌லி‌க்‌கி‌ட்டு டா‌‌க்ட‌ர்‌கி‌ட்ட செ‌ன்‌றாயே அவ‌ர் எ‌ன்ன சொ‌ன்னா‌‌ர்?
ம‌ற்றவ‌ர்: இது இரும‌‌ல்தா‌ன்னு... அவரு‌ம் ஒ‌த்து‌க்‌கி‌ட்டா‌ர்.

கடை‌க்கார‌ர்: ம‌ளிக‌ை கடை‌யில வேலை பா‌ர்‌‌த்தவனை மரு‌‌ந்து கடை‌யில வேலை‌க்கு வை‌த்தது ரொ‌ம்ப த‌ப்பா போ‌‌ச்சு.
ம‌ற்றவ‌ர்: ஏ‌ன் அ‌ப்படி சொ‌‌ல்‌‌றீ‌ங்க.
கடை‌க்கார‌ர்: எதை எடு‌க்க‌ச் சொ‌ன்னாலு‌ம் எ‌த்தனை ‌கிலோ வே‌ணு‌ம்னு கே‌ட்‌‌கிறா‌‌ன்.

தொ‌‌ண்ட‌ர்: ந‌ம்ம தலைவ‌ர் ஏ‌ன் ‌திடீ‌ர்னு மரு‌த்துவமனை க‌ட்டுகிறா‌ர்.
ம‌ற்றவ‌ர்: அவரு‌க்கு டா‌‌க்ட‌ர் ப‌ட்ட‌ம் கொடு‌க்‌கிறா‌ங்களா‌ம்... அதா‌ன் தொ‌ழிலை ஆர‌ம்‌பி‌‌ச்சுடலா‌ம்னு பா‌ர்‌க்‌கிறாரு.

"டாக்டர் தலைவலிக்கு நல்ல மருந்து எழுதிக் கொடுங்க!"
"தலைவலியைப் போக்கத்தான் என்னால மருந்து தரமுடியும். தலைவலி வேணுமின்னா போய் டி.வி. பாருங்க."

"ஏங்க, அதான் நர்ஸ் சொன்னாங்கல்ல, இது ஒரு சின்ன ஆபரேஷன் தான், பயப்பட வேண்டாம்னு, அப்புறம் ஏன் இப்படி நடுங்கறீங்க."
"அடி அசடு, நர்ஸ் சொன்னது நம்மகிட்ட இல்லடி, டாக்டர்கிட்ட."

8 comments:

ஜெகதீசன் said...

:)

ramachandranusha(உஷா) said...

என் பங்குக்கு

நோயாளி- டாக்டர், இந்த ஆபரேஷனுக்கு பிறகு நான் வயலின் வாசிக்க முடியுமா?

டாக்டர்- அதுக்கு என்ன தாராளமா வாசிக்கலாம்.

நோயாளி- ஆச்சரியமா இருக்கு எனக்கு வயலின் வாசிக்கவே தெரியாதே

நாஞ்சில் பிரதாப் said...

ஏமாத்திபுட்டீங்களே...உங்க டேஸ்ட் இவ்வளவுதானா?

தருமி said...

கடைசி டாப்!

கோபிநாத் said...

;))

ரசிகன் said...

//
"ஏங்க, அதான் நர்ஸ் சொன்னாங்கல்ல, இது ஒரு சின்ன ஆபரேஷன் தான், பயப்பட வேண்டாம்னு, அப்புறம் ஏன் இப்படி நடுங்கறீங்க."
"அடி அசடு, நர்ஸ் சொன்னது நம்மகிட்ட இல்லடி, டாக்டர்கிட்ட."//

அக்கா.. இது கலக்கல்...:))))))

பிரேம்ஜி said...

ஜோக்ஸ் நல்லா இருக்குங்க.

SanJai said...

//"டாக்டர் தலைவலிக்கு நல்ல மருந்து எழுதிக் கொடுங்க!"

ஜூஜூஜூப்பரு...