Monday, April 14, 2008

சிரி சிரி சிரி....

நான் தான் இப்படி ஜோக்குகளை MSN-லிருந்து காப்பி அடிச்சு போடுகிறேன்னு நினச்சேன். ஆனால், "கலக்க போறது , 'அசத்த போறது' இப்படி எல்லாவற்றிலும் இந்த ஜோக்குகள் வருகின்றனவே!!!...
ம்ம். சரிங்க..... சிரிங்க

நோயா‌ளி: டா‌‌க்ட‌ர் எதை‌ப் பா‌ர்‌த்தாலு‌ம் இர‌ண்டு இர‌ண்டாக தெ‌ரியுது.
டா‌க்ட‌ர்: அ‌ப்படியா அ‌ந்த சோபா‌‌வி‌ல் போ‌ய் உ‌ட்காரு‌‌ங்க கூ‌‌ப்‌பிடு‌கிறே‌ன்.
நோயா‌ளி: இர‌ண்டு சோபா இரு‌க்கே, எதுல உ‌ட்கார‌ட்டு‌ம் டா‌க்ட‌ர்.

"ஏண்டி, மாப்பிள்ளை பஸ் கண்டக்டரா இருந்தவர்னு எப்படிக் கண்டுபிடிச்சே?"
"மொய்ப் பணத்தையெல்லாம் விரல் இடுக்கிலே மடிச்சி மடிச்சி வச்சுக்கிறாரே!"

"குடி குடியைக் கெடுக்குமாடா?"
"நீ வாங்கிக் கொடுத்தா உன் குடி கெடும். நான் வாங்கிக் கொடுத்தா
என் குடி கெடும்!"

"நேற்று உங்க வீட்டுக்கு வந்த திருடனை எப்படி பிடித்தீர்கள்?"
"எதேச்சையாக என் மனைவி செஞ்சிருந்த மைசூர்பாகை அவன் மீது வீச அதனால் பலத்த அடிபட்டு விழுந்தான்!"

திருடன் 1: மாசக் கடைசியிலே திருடப் போனது ரொம்பவும் தப்பாய் போச்சு.
திருடன் 2: ஏன் ஒண்ணுமே கிடைக்கலியா?
திருடன் 1: அதில்லே, திருடப் போன வீட்டில் வீட்டுக்காரன் என்னைப் புடிச்சுக் கெஞ்சிக் கூத்தாடி இருபது ரூபாய் கடன் வாங்கிட்டுத்தான் விட்டான்.

ஒருவர்: எதுக்கு டாக்டர் உங்க கையையே நீங்க புடிச்சுப் பார்த்துட்டு இருக்கீங்க?
டாக்டர்: பேஷண்ட் யாரும் வரலே ‘டச்' விட்டுப் போயிடக் கூடாதில்ல அதான்!'

"என்ன டாக்டர் மருந்துச் சீட்டில ஸ்டெதஸ்கோப்-1 சிரிஞ்சு 2-ன்னு எழுதியிருக்கீங்க?"
"அதெல்லாம் இல்லாம உனக்கு எப்படிப்பா பரிசோதனை செய்து ஊசி போட முடியும்? மொதல்ல அதையெல்லாம் வாங்கிட்டு வா!"

சமையல்காரன்: நான் வேலையை விட்டு விலகிக் கொள்கிறேன் சார். உங்க மனைவியை சமாளிக்க முடியவில்லை!
அவர்: ஏன், மிகவும் கண்டிப்பாக இருக்கிறாளா?
சமையல்காரன்: நான் இங்கு வேலைதான் செய்கிறேன். எப்போது வேண்டுமானாலும் போய்விட முடியும் என்பதை மறந்துவிட்டார்.
உங்களை அதிகாரம் செய்வது போல செய்கிறாரே!

மகேஷ்: ஒரு வாரமா `கழுத்து சுளுக்கு'னு அவதிப்பட்டாயே! இப்ப எப்படி சரியா போச்சு?
ரமேஷ்: பின் பக்கமிருந்த லேடி டைப்பிஸ்ட்டை முன் பக்கம் மாத்திட்டாங்க!

நன்றி. (MSN JOKES)

12 comments:

தமிழ் பிரியன் said...

///ஒருவர்: எதுக்கு டாக்டர் உங்க கையையே நீங்க புடிச்சுப் பார்த்துட்டு இருக்கீங்க?
டாக்டர்: பேஷண்ட் யாரும் வரலே ‘டச்' விட்டுப் போயிடக் கூடாதில்ல அதான்!' ////
:)))))))))) நல்லா இருக்கு

Leo Suresh said...

டாக்டரம்மா
ஜோக் எல்லாம் நல்லா இருந்தது
லியோ சுரேஷ்

கோபிநாத் said...

:)))

சூப்பர்...நல்லாருக்கு ;)

ஆ.கோகுலன் said...

//மகேஷ்: ஒரு வாரமா `கழுத்து சுளுக்கு'னு அவதிப்பட்டாயே! இப்ப எப்படி சரியா போச்சு?
ரமேஷ்: பின் பக்கமிருந்த லேடி டைப்பிஸ்ட்டை முன் பக்கம் மாத்திட்டாங்க!//

:-)))

மங்கை said...

டாக்டரம்மா...எல்லார் மனசையும் லேசாக்கரீங்க...டேங்கஸ் டாக்ட்ரம்மா

நிஜமா நல்லவன் said...

///மங்கை said...
டாக்டரம்மா...எல்லார் மனசையும் லேசாக்கரீங்க...டேங்கஸ் டாக்ட்ரம்மா///



ஒரு நல்ல டாக்டருக்கு அழகே அதுதானே!

நானானி said...

டாக்டர்!
நல்ல சிரிப்பு வெடிகள்...இல்லை வைத்தியம்!

ரசிகன் said...

//
மகேஷ்: ஒரு வாரமா `கழுத்து சுளுக்கு'னு அவதிப்பட்டாயே! இப்ப எப்படி சரியா போச்சு?
ரமேஷ்: பின் பக்கமிருந்த லேடி டைப்பிஸ்ட்டை முன் பக்கம் மாத்திட்டாங்க!
//

ஹா..ஹா.. :)))))

அக்கா,.. இது டாப்பு:))

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

//நோயா‌ளி: டா‌‌க்ட‌ர் எதை‌ப் பா‌ர்‌த்தாலு‌ம் இர‌ண்டு இர‌ண்டாக தெ‌ரியுது.
டா‌க்ட‌ர்: அ‌ப்படியா அ‌ந்த சோபா‌‌வி‌ல் போ‌ய் உ‌ட்காரு‌‌ங்க கூ‌‌ப்‌பிடு‌கிறே‌ன்.
நோயா‌ளி: இர‌ண்டு சோபா இரு‌க்கே, எதுல உ‌ட்கார‌ட்டு‌ம் டா‌க்ட‌ர்//

:))

ஜோக்குகளை சுடுவது என்பது உலகபொதுவாக்கும்! கண்டுக்கப்பிடாது! :))

மங்களூர் சிவா said...

கலக்கல்!!

துளசி கோபால் said...

வருமானம் குறைஞ்சுறப்போகுது.:-))))

பார்த்துக்குங்க.

வாய்விட்டுச் சிரிக்கிறோம்.

ஜுர்கேன் க்ருகேர் said...

மாத கடைசில திருட போனவன் ஜோக்,,ரொம்பவே ரசிச்சேன்.
(நாங்கல்லாம் கடன் வாங்கறவங்க ஜாதி!)