Friday, March 7, 2008

உங்கள் wonderful woman -க்காக

2006 செப்டெம்பர் மாதம் வரை, பிரசவங்கள் பார்ப்பதிலேயே என் professional life இருந்தது. கர்ப்பிணி பெண்கள் 3 மணி முதல் - 24 மணி நேரம் கஷ்டப்பட்டு ஒரு அழகானக் குழந்தையை பெற்று எடுக்கும் போது மொத்த குடும்பமும் சந்தோஷத்தில் திகழ்கின்றன. மருத்துவ ஊழியர்களும் மிக்க சந்தோஷப்படுகிறார்கள். பிரசவத்தில் கஷ்டப்பட்டு இதுவரை இறந்த பெண்கள் எனக்கு தெரிந்து அதிகபட்சம் பத்து பேராக இருக்கலாம். இவர்கள் கிராமத்தில் சரியான படி கவனிக்கப்படாமல் டவுன் ஆஸ்பத்திரிகளில் வந்து இறந்து போய்விடுகிறார்கள். எப்பவுமே சந்தோஷமான பெண்களைப் பார்த்த எனக்கு தற்சமயம் மிக வேதனையாக உள்ளது. 2006 அக்டோபரில் என் professional வாழ்க்கை மாறியது. இப்பொழுது நிர்வாகத் துறையிலிருந்தாலும், இங்கு மனிதர்கள் படும் வேதனை தாள முடியவில்லைதான். அதிலும் ஒரு வயது குழந்தைகள்.......
மகளிர் தினம் பற்றி நிறைய ப்ரோக்ராம்கள் வருகின்றன. ..நம் வாழ்க்கையில் ஒரு சிலரிடம் தான் அதீத அன்பு செலுத்தமுடிகிறது. அவர்களுக்காக நாம் எத்தனைக் கடை வேண்டுமானாலும் ஏறி அவர்களுக்குப் பிடித்த பொருளோ அல்லது உணவோ வாங்கி கொடுப்போம். அது நமது தாயகவும் இருக்கலாம், சகோதிரியோ அல்லது மனைவி, குழந்தைகள் ஏன் நம் காதலியாகக் கூட இருக்கலாம். அல்லது ஒரு நல்ல நண்பியாக கூட இருக்கலாமே! அவர்களுடைய நலனில் நாம் அக்கரை எடுத்துக்கொள்கிறோம் அல்லவா? நாளை "மகளிர்தினம் " கொண்டாடப்படுகிறது. உங்களுக்கு பிடித்தமான ஒரு பெண்மணிக்கு இந்த உதவியை செய்யலாமே! ஒரு " well women HEALTH " செக்கப்புக்கு உதவி செய்யுங்கள். நிறைய நாட்களாக தள்ளி வைத்துக்கொண்டிருக்கும் உங்கள் அபிமான நண்பியை ஹெல்த் செக் அப் செய்யும்படி motivate பண்ணுங்கள். நான் இங்கு ஒரு health check up -க்கு எவ்வளவு செலவாகும் என்று பட்டியலிட்டுள்ளேன். இது மகளிர் ஸ்பெஷல் ரேட். இரண்டு வாரத்திற்கு மட்டும்.......

PACK -I. THIS INCLUDES THE FOLLOWING TESTS.
COMPLETE BLOOD COUNT ( ரத்த பரிசோதனை)
RANDOM BLOOD SUGAR. (சர்க்கரை அளவு)
URINE ROUTINE (யூரின் டெஸ்ட்)
ULTRASONOGRAM OF PELVIS.
GYNEC EXAMINATION WITH PAP SMEAR: (பாப் ஸ்மியர் டெஸ்ட். கர்ப்ப பை புற்று நோய் screening)
THIS COSTS RS 650/-.

PACK II INCLUDES THE TESTS IN PACK I WITH MAMMOGRAM = RS1450/-.

ONLY MAMMOGRAM :RS 800/-.
மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்யும்போது சில வியாதிகளைக் கண்டுபிடிக்க முடிகிறது.... செக்கப் செய்து ஒரு நோயுமில்லை என்று தெரிந்தால் அது மாதிரி ஒரு சந்தோஷம் வேறு எதுவிலும் கிடைக்காது. என்ன நான் சொல்வது சரிதானே!

18 comments:

Thekkikattan|தெகா said...

ஆஹா, டாக் இதுவல்லவோ நல்லுள்ளம் ::)!

நன்றி! இது போன்று யாருக்கும் தோன்றாத விதத்தில் நண்பர்களுக்கு அறிவுருத்தி பல பெண்கள் சார்ந்த முக்கியமான மருத்துவ டெஸ்ட்களை எடுத்துக்க சொன்னதிற்கு...

நீங்க எப்படி இருக்கீங்க?

வசந்தம் ரவி said...

//செக்கப் செய்து ஒரு நோயுமில்லை என்று தெரிந்தால் அது மாதிரி ஒரு சந்தோஷம் வேறு எதுவிலும் கிடைக்காது. //

ஒரு வேளை ஏதாவது இருக்கிறது என்று தெரிந்தால் இருக்கிற சந்தோசமும் போய்விடும்.

கிரிக்கெட் ரசிகன் said...

டாக்டர் இதில் உள்ளவை கொஞ்சம் முக்கியமானவையாகத் தெரிகின்றனவே சென்னையில் எந்த மருத்துவனைக்கு சென்றால் சரியாக இருக்கும் என்று சொல்லலாமே? கட்டுரைக்கு நன்றி.

delphine said...

தெக்ஸ்.. ரொம்ப நாளாச்சுல்ல! ரொம்ப பிசி தெக்ஸ்...இன்னிக்கு எப்படியாவது எழுதணும்னு நினைச்சு உட்கார்ந்துட்டேன்..நன்றி தெக்ஸ் நல்லா இருக்கேன்.

ரவீவீவீவீவீ.
என்ன நெகட்டிவ் thought? எதுவா இருந்தாலும் சமாளிக்கணும் ரவி...
என்ன இப்படி சொல்லிட்டீங்க.. பொசுக்குனு போய்டுச்சு...போங்க.

delphine said...

கிரிக்கட் ரசிகரே... கொஞ்சம் அல்ல நிறையவே முக்கியமானது
.. ஆஸ்பத்திரி..
அப்பல்லோ ஸ்பெஷாலிடி ஹாஸ்பிடல்.. நந்தனம். சென்னை-35

இரண்டாம் சொக்கன்...! said...

நல்ல முயற்சி டாக்டர்....

ச்சும்மா மகளிர் தினம் , உரிமை என வாய்கிழிய பேசும் நேரத்தில் இம்மாதிரியான விழிப்புணர்வு காரியங்களை செய்யலாம்.

மேமோகிராம்க்கு பாரத் ஸ்கேன், பிரிசிசன் போன்ற லேப்களில் ரூ.600 செய்கிறார்கள் என நினைக்கிறேன்.

நம்ம ஹைகமாண்ட் கூட எங்கள் மருத்துவமனையில், வாரத்தில் ஒரு நாள் கிராமபுற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து அனுப்பப்படும் ஏழை கர்ப்பினி பெண்களுக்கு(குறைந்தது 30 பெண்கள்) இலவசமாய் ஸ்கேன் பார்த்து மருத்துவ ஆலோசனையும் சொல்கிறார்.

நகர்புறத்து பெண்களை விட கிராமத்தில் உள்ள பெண்கள்தான் தங்களின் உடல்நலம் குறித்த விழிப்புணர்வு இல்லாதவர்களாக இருக்கிறார்கள் என நினைக்கிறேன்....

அவர்களுக்கு நிச்சயம் ஏதாவது செய்யவேண்டும்...என்னளவில் நிச்சயமாய் செய்வேன்...ம்ம்ம்ம்ம்

delphine said...

சொக்ஸ் .. கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு.. மகளிர்தினம் வாழ்த்தளவில் மாத்திரம் நின்று விடாமல் எல்லா பெண்களுக்கும் ஒரு விழிப்புணர்வு உண்டாக வேண்டும்...தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். உதவி வேண்டுமென்றால் அணுகுங்கள்.

கண்மணி said...

useful post doctor

தருமி said...

பயனுள்ள பதிவு.
உங்கள் பழைய இனிய அனுபவங்களுக்கும்,தொண்டினுக்கும் பாராட்டுக்கள்.

மங்களூர் சிவா said...

நல்ல பதிவு.

மகளீர் தின வாழ்த்துக்கள்.

யாத்திரீகன் said...

Does such "Womens Day" special program available in other branches of Appollo also ? i.e other than chennai city

தென்றல் said...

தங்களின் நல்லெண்ணம் வாழ்க, டாக்டர்!

/இது மகளிர் ஸ்பெஷல் ரேட். இரண்டு வாரத்திற்கு மட்டும்.......
/

பொதுவா இதற்கு எவ்வளவு செலவாகும்?

துளசி கோபால் said...

அருமையான பரிசாக இருக்குமே இது.

உங்க மருத்துவ மனை தவிர வேற எங்கெல்லாம் இது செஞ்சுக்க வசதி இருக்குன்னு சொன்னீங்கன்னா.....வெளியூர்த் தோழிகளும் பயனடைவார்கள்.


மகளிர்தின வாழ்த்து(க்)கள்.

delphine said...

நன்றி கண்மணி...
தருமி சார் நன்றி.
Thank you Siva. Please get your dear ones undergo a health check up.

delphine said...

யாத்திரீகன்... yes. such special packages are available with all the Apollo Hospitals.

delphine said...

தென்றல் .. இந்த டெஸ்டுகளுக்கு பொதுவாக 1750 ரூபாய் செலவாகும்.

பாச மலர் said...

நல்ல பதிவு..2 வருடம் முன்னால் ஊருக்கு வர்ம்போது செய்து கொண்டேன்..மறுபடி இந்த முறை செய்ய வேண்டும்..

கோவை விஜய் said...

மாஸ்டர் ஹெல்த் செக்கப் அவசியமான ஒன்று

வருமுன் காக்கும் காவல் தெய்வம்

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/