Sunday, March 23, 2008

சென்னை / பாண்டிவெள்ளிகிழமை 21-03-08 அன்று பாண்டிசேரி பக்கம் ஒரு சின்ன கிராமத்தில் கேம்ப். எனக்கு அன்று விடுமுறை. வீட்டில் ஓய்வெடுக்க ஆசை. ஆனால் நிர்ப்பந்தத்தின் காரண்மாக செல்ல வேண்டிய சூழ்நிலை. பாண்டி என்றதும் ' எங்கள் மக்களுக்கு' ஒரே குஷ், குஷி... கிங் பிஷர் சாப்பிடலாமா, அல்லது ராயல் சேலஞ்சா என்று ஒரு பட்டி மன்றமே பேருந்தில் நடைபெற்றது. அதுவும் காலை ஆறு மணிக்கெல்லாம் ஆரம்பித்துவிட்டார்கள்.


கொஞ்ச நேரம் ஊர் சுற்றி பார்த்தோம். அத்தனை சுத்தம்... கடற்கரை எவ்வளவு சுத்தமாக வைத்திருக்கிறார்கள். பாலித்தீன் பைகள் எதுவும் இல்லாமல் அவ்வளவு சுத்தம்... .. பாண்டியிலிருந்து 4 கிலோ மீட்டர் தூரத்தில் அரியாங்குப்பம் என்றொரு சின்ன கிராமம். அங்கு சென்று போட்டில் "paradise island" என்றொரு ஒரு பீச் சென்றோம். பாமர மக்களுக்கான பீச். அரசாங்கம் அதை இன்னும் கொஞ்சம் develop பண்ணலாம்.


நல்ல மழை .... உண்மையிலே புதுச்சேரி மக்களுக்கு ஒரு 'ஓ' போட்டுவிட்டு இரவு 10 மணிக்கு வீடு வந்து சேர்ந்தோம்.

13 comments:

Thekkikattan|தெகா said...

என்ன ரொம்ப பிசியா? இன்னும் கொஞ்சம் படங்கள் போட்டுருக்கலாம்... எங்கள மாதிரி ஆட்கள் பார்த்தாவது சந்தோஷப் பட்டுக்குவோம் :).

PAISAPOWER said...

பரபரப்பான வாழ்க்கை சூழலில் இருந்து விலகி நிம்மதியாய் இருந்துட்டு வந்திருக்கீங்க....என்சாய்...

சந்தோஷம்....

துளசி கோபால் said...

படங்கள் அருமை.ஆனா விவரம் பத்தாது! இன்னும் கொஞ்சம் விஸ்தரிச்சு எழுதுங்க. காலையில் இருந்து ராத்திரி 10 வரை என்ந்தான் நடந்துச்சு?


ஹேப்பி ஈஸ்ட்டர்(மண்டே)

Unknown said...

பார்க், படகு, சுற்றிலும் தென்னனை மரங்கள், பீச் உள்ள அந்த இடத்தை ஏன் இப்படியே வைத்திருக்கிறார்கள். நல்ல சுற்றுலாத்தலமாக மாற்றினால் அரசுக்கு நல்ல வருமானம் கிடைக்குமே. இதைத்தான் நானும் அங்கு போயிருந்த போது நினைத்தேன்.

கோபிநாத் said...

\\Thekkikattan|தெகா said...
எங்கள மாதிரி ஆட்கள் பார்த்தாவது சந்தோஷப் பட்டுக்குவோம் :).\\

ஆமாம்...கொடுத்துவச்சவுங்க ;))

நானானி said...

ரொம்ப சுத்தமான பதிவு டாக்டர்!
இந்தியாவிலேயே சுத்தமான நகரம் பாண்டி..என்று சொல்லலாமா? அங்கு முடியும் போது இங்கு ஏன் முடியவில்லை? தாமதமான ஈஸ்டர் வாழ்த்துக்கள்!!
30-ம்தேதி பாக்கலாம்.சேரியா?

ரசிகன் said...

டாக்டரக்கா எங்க ஊருக்கு போனாங்களா?. முன்னாடியே தெரியாம போச்சே.. அங்க.. பாக்கறதுக்கு இன்னும் நெறய அருமையான இடங்கள் இருக்கே.
ஆரோவில்,பொம்மையப் பாளையம்,அரிக்க மேடு,பாலர் பவன்,சுண்ணாம்பாறு மிதிப்படகு சவாரின்னு...
புகைப்படங்களில் கூட மழையின் ஈரம்.:)..

ரசிகன் said...

நாலு வரி பயணக் வர்ணனை நல்லாயிருந்தாலும்,எங்க ஊர் அருமை பெருமைகள் பத்தி இன்னும் விளக்கமா எழுதியிருந்தா சூப்பராயிருக்கும்ல்ல..
அதுலயும் பாண்டிச்சேரிக்கு பெரிய பெருமையே நான் பொறந்ததாலதான்னு எங்க பாட்டி சொல்லுவாங்க :P

ரசிகன் said...

// நானானி said...
ரொம்ப சுத்தமான பதிவு டாக்டர்!
இந்தியாவிலேயே சுத்தமான நகரம் பாண்டி..என்று சொல்லலாமா?
//

அப்டி சொல்லுங்க..:)))) நன்றி.. நன்றி ..:).

delphine said...

ரொம்ப ரொம்ப பிசிதான் தெகா..நிறைய படங்கள் எடுத்தேன். ஆனால் எனக்கு சரியா அப்லோட் பண்ணவரலை...:(

சொக்ஸ் நன்றி.. அந்த ஒரு நாள் நல்லாத்தான் இருந்திச்சு.

ஆமா துளசி.. எனக்கு நேரமே இல்லை.. என்ன செய்ய? ம்ம். ஈஸ்டர் ஸண்டே நல்லா இருந்துச்சு.. ஆனால் மண்டே, மண்டைய பிளக்கிறமாதிரி வேலை...

delphine said...

சுல்தான் சார், தனியாரிடம் விட்டால் நம்பள மாதிரி சாதாரண மக்கள் அதை அனுபவிக்க முடியாது. ஆனால் அரசாங்கம் நல்ல டெவலப் பண்ணலாம்.

கோபி...நன்றி.

நனானி. மிக சுத்தமாக இருந்தது.. அதுவும் பீச் பக்கம் ரொம்ப சுத்தமாக இருந்தது. நம்ப ஊர் மரீனா பீச்சும் இருக்குதே! இதில சிங்கார சென்னைன்னு வேற பேசிக்கிறாங்க.

delphine said...

ரசிகன், நான் பாண்டிசேரியில் இருந்தப்போ அடிக்கடி உங்க நியாபகம்தான் வந்தது... நீங்க வந்தப்புறம் ஒருதடவை வற்ரேன். அந்த ஆற்றில போட்டிங் நல்லா இருந்துது...

N Suresh said...

வணக்கம்!

நல்ல படங்கள்!
நல்ல பதிவு!

வாழ்த்துகள்