Saturday, March 15, 2008

சிரிப்பு வெடிகள்... :)

"புடவை, ஜாக்கெட்னு கேட்டு தொல்லை பண்ணாத பெண்ணா இருந்தா கட்டிக்கலாம்!"
"யாராவது காபரே ஆடறவளா பாரு!"


புது கணவன்: என் மனைவி சமையலறை பக்கமே போயிருக்க மாட்டாள் என்று நினைக்கிறேன்!
நண்பன்: எப்படி சொல்கிறாய்?
புது கணவன்: இன்று காலை அவள் முட்டையை சோடா ஓபனரை வைத்து திறக்க முயன்று கொண்டிருந்தாளே!


சாப்பிடும் போது கூட உன் கணவருக்கு ஆபீஸ் ஞாபகமா?"
"எப்படிச் சொல்றே?"
"உப்பு வேணும்னு கேட்டுட்டு டைனிங் டேபிளுக்குக் கீழே கையை நீட்டறார்!"


"ஏய் நீதானடி என் புருஷனின் சின்ன வீடு?"
"ஐயோ, இல்லக்கா! நான் இல்லே!"
"யாருகிட்டடி காது குத்துறே? நீ போட்டிருக்கிற கொண்டையை என் புருஷனைத் தவிர வேற யாராலும் போட முடியாதுடி!"


"அந்த நடிகையின் அம்மா பயங்கரமான சிக்கனக்காரி"
"எப்படி?"
"நடிகையோட திருமணத்தையும் வளைகாப்பையும் ஒரே நாளில் நடத்திட்டாளே!"


ஆசிரியர்: இந்தத் திரவத்திலே ஒரு ரூபாய் நாணயத்தைப் போடப் போகிறேன். இது கரையுமா?
மாணவன்: கரையாது சார்.
ஆசிரியர்: எதனால் அவ்வளவு நிச்சயமாகச் சொல்கிறாய்?
மாணவன்: கரையுமென்றால் நீங்கள் போடமாட்டீங்களே!


"திருடன புடிக்க திருடன் மாதிரி வேஷம் போட்டீங்களே என்னாச்சு கண்டுபிடுச்சீங்களா இன்ஸ்பெக்டர்?"
"அவன் போலீஸ் வேஷம் போட்டு தப்பிச்சிட்டு போயிட்டான்..."


பொண்ணு பார்க்கப் போகணும்னு சொல்லிட்டு வேட்பு மனு தாக்கல் பண்ணிட்டு வரீங்களே?"
"வீடு வீடாய் போய் ஓட்டு கேட்ட மாதிரியும் இருக்கும், பொண்ணு பார்த்த மாதிரியும் இருக்கும்."

(msn jokes)

24 comments:

மங்களூர் சிவா said...

nice jokes

ஜோதிபாரதி said...

நல்லா இருக்கு!

வசந்தம் ரவி said...

:)

இரண்டாம் சொக்கன்...! said...

வந்தேன்...

படிச்சேன்....

வாய் விட்டு சிரிச்சேன்...

சந்தோஷமா போறேன்...

டேங்ஸ் டாக்டர்....

வீரசுந்தர் said...

முட்டை ஜோக் சூப்பரு.

SP.VR. SUBBIAH said...

///ஆசிரியர்: இந்தத் திரவத்திலே ஒரு ரூபாய் நாணயத்தைப் போடப் போகிறேன். இது கரையுமா?
மாணவன்: கரையாது சார்.
ஆசிரியர்: எதனால் அவ்வளவு நிச்சயமாகச் சொல்கிறாய்?
மாணவன்: கரையுமென்றால் நீங்கள் போடமாட்டீங்களே!///

இதுதான் The Best டாக்டர்

delphine said...

Thank you Sivaaaaaaa.

ஜோதிபாரதி... நல்ல ஜோக்குகள் தான்..நன்றிங்க..

ரவி....
நன்றி..:) ரவி, எது பிடிச்சுதுன்னு சொல்லவே இல்லியே.
தற்சமயம் சென்னையிலா?

delphine said...

சொக்ஸ்... ரொம்ப நன்றி.. எனக்கும் சிரிக்க ரொம்ப பிடிக்கும். யாருக்குத்தான் பிடிக்காது? டேங்க்ஸ் சொக்ஸ்... சித்தர் பதிவு எப்படி போகுது?

சுந்தர்... முட்டை ஜோக் பிடிச்சுதா.. ம்ம். மீன சோப்பு போட்டு கழுவினதா ஒரு ஜோக்கு படிச்சுருக்கேன்.

SPVr Sir, நன்றி சார். எப்படியிருக்கீங்க? உங்க பக்கங்கள படிக்க முடியுது ஆனால் வந்து அட்டண்டண்ஸ் கொடுக்க முடியல. இன்னிக்கு ஞாயிற்றுகிழமை.. அதான். கொஞ்ச நேரம் இந்த பக்கம் வர முடியுது..

வீரசுந்தர் said...

//சுந்தர்... முட்டை ஜோக் பிடிச்சுதா.. ம்ம். மீன சோப்பு போட்டு கழுவினதா ஒரு ஜோக்கு படிச்சுருக்கேன்.
//

பின்ன, சாப்பாடு சுத்தமா இருக்க வேணாமா?

:-)

SP.VR. SUBBIAH said...

////SPVr Sir, நன்றி சார். எப்படியிருக்கீங்க? உங்க பக்கங்கள படிக்க முடியுது ஆனால் வந்து அட்டண்டண்ஸ் கொடுக்க முடியல. இன்னிக்கு ஞாயிற்றுகிழமை.. அதான். கொஞ்ச நேரம் இந்த பக்கம் வர முடியுது..///

It is all right doctor!
உங்கள் பணிகளுக்கு நடுவே நீங்கள் வருவதே பெரிது!

தமிழ் பிரியன் said...

///ஆசிரியர்: இந்தத் திரவத்திலே ஒரு ரூபாய் நாணயத்தைப் போடப் போகிறேன். இது கரையுமா?
மாணவன்: கரையாது சார்.
ஆசிரியர்: எதனால் அவ்வளவு நிச்சயமாகச் சொல்கிறாய்?
மாணவன்: கரையுமென்றால் நீங்கள் போடமாட்டீங்களே!////
ஆசிரியரை நல்லா புரிஞ்ச மாணவர். :))

துளசி கோபால் said...

ஹாஹாஹாஹா......
வாய்விட்டுச் சிரிச்சுக்கிட்டு இருக்கேன்.
நோய் விட்டுப்போகலைன்னா உங்ககிட்டே மறுபடி வருவேன்:-))))

இரண்டாம் சொக்கன்...! said...

தாயே...

சித்தர் பத்தி எழுதனும்...எங்கேயிருந்து ஆரம்பிக்கிறதுன்னுதான் குழப்பமாயிருக்கு....

வெறுமனே நம்ம அனுபவங்களை மட்டும் வச்சி படங்காட்டலாமா...இல்லை..சீரியஸா சித்தர்களை பிரிச்சி மேயலாமான்னு யோஓஓஓஓஒசிச்ச்ச்ச்சிட்ட்ட்ட்டே இருக்கேன்...ஹி..ஹி..

மங்கை said...

:-))

nice டாக்டரம்மா

enRenRum-anbudan.BALA said...

//"ஏய் நீதானடி என் புருஷனின் சின்ன வீடு?"
"ஐயோ, இல்லக்கா! நான் இல்லே!"
"யாருகிட்டடி காது குத்துறே? நீ போட்டிருக்கிற கொண்டையை என் புருஷனைத் தவிர வேற யாராலும் போட முடியாதுடி!"
//
This is my favorite :)))

இரண்டாம் சொக்கன்...! said...

நீங்க என்ன நினைக்கறீங்க டாக்டர்...எதை எழுதலாம் ஒரு யோசனை சொல்லுங்களேன்...

யாராச்சும் ஏன் இன்னும் எழுதலைன்னு கேட்ட...நம்ம டாக்டரம்மா கிட்ட யோசன கேட்ருக்கேன்...அவங்க சொன்னவுடனே எழுதீருவேன்னு டபாய்க்கலாம்ல...ஹி..ஹி...

delphine said...

சுந்தருக்கு கல்யாணம் ஆகலை போல..ம்ம்.

நன்றி.. SPVR Sir... I am so happy to receive a reply from you..

தமிழ்பிரியன்..நன்றிங்க..
துளசி .. உங்களா மாதிரி நகைச்சுவை எழுத எனக்கு இயலாது... நோயெல்லாம் யாருக்கும் வரக்கூடாது துளசி... எப்ப இந்த பக்கம் வற்ரீங்க..?

delphine said...

சொக்ஸ்... பிரிச்சு மேயுங்க.... அப்பால உங்க அனுபவங்களையும் எழுதுங்க.....

மங்கை மாமி.. டேங்க்ஸ்...:P

பாலா,, actually I also liked that!!!

அரை பிளேடு said...

:)

பாச மலர் said...

முட்டை ஜோக்கும், சின்ன வீட்டுக்குக் கொண்டை போடற ஜோக்கும் சூப்பர்..

நல்லாச் சிரிக்க வச்சீங்க..

நானானி said...

டாக்டர்! சிரிப்பு வெடிகள் 1000வாலாக்களாக வெடித்தன.
கடைசி வெடி அர்த்தமுள்ளது.
உங்களிடம் வரும் நோயாளிகளுக்கு மருந்தில்லாமல் ஜோக் சொல்லியே குணப்படுத்திவிடுவீர்கள் போல. இனி உங்களிடமே வரலாம்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சிரிச்சேன்; சமையலறை-முட்டை;ஒரு ரூபா -மாணவன்
நன்று

Anonymous said...

வாய் விட்டு சிரிச்சேன்

Rajesh Subramanian said...

னல்லாதான் இருக்கு ஆனால் கொஞ்சம் பழமையாக தெரியுது.