Tuesday, March 4, 2008

சிரி சிரி சரவணா!

குசும்பனுக்கு சித்திரை மாதம் திருமணம் என்று கேள்விப்பட்டேன். ஐந்து நட்சத்திர ஹோட்டலில் கல்யாணத்திற்கு வருபவர்கள் யாவருக்கும் ரூம் போட்டுக் கொடுக்க போகிறாராம்.. ... எனக்கென்னவோ எல்லொரும் ஏமாந்து போவாங்கன்னுதான் தோணுது. ஒரு five star சாக்கலைட்ட வச்சுட்டு இதத்தான் சொன்னேன் என்பார். எதுக்கும் உஷாரா இருங்க.... அப்புறம், கல்யாணம் ஆன பிறகு நகைச்சுவை உணர்வெல்லாம் காணாம போய்விடும்... இப்பவே நல்லா சிரிச்சுட்டு ஊர் வந்து சேருங்கப்பா சரவணா!

"உன் மாமியார் ஏன் கோபத்தால் `பொங்கி'க் கொண்டிருக்கிறார்!"
"அடுப்பில் வைத்திருந்த பால் `பொங்கி' அவர் காலில் விழுந்துவிட்டதாம்!"

காதலி: நீங்கள் எழுதிய கடிதம் என் அப்பா கையில் கிடைத்து விட்டது.
காதலன்: ஐயையோ, என்ன சொன்னார்?
காதலி: தமிழே சரியா எழுதத் தெரியாத ஒரு மடையனை நீ காதலிக்கலாமான்னு கேட்டார்.

மனைவி: நான் இன்று டாக்டரை பார்த்தேன். எனக்கு சீதோஷ்ண இடமாற்றம் தேவை என்றும், அதனால் கடற்கரை ஓரமாக சென்று ஒரு மாதம் ஓய்வு எடுத்துக் கொள்ளச் சொன்னார். நான் எங்கே போகலாம் என்று நினைக்கிறீர்கள்!
கணவன்: வேறு ஒரு டாக்டரிடம்!

"என் மாமியார் மேல நான் உயிரையே வச்சிருக்கேன் தெரியுமா?"
"ஓ தெரியுமே! அவங்க உங்க மேல உயிலையே வச்சுருக்காங்களே!"

"மாப்பிள்ளை ஒரு டீசல் என்ஜின், டிராக்டர், நூறு டன் உரம் இதெல்லாம் வரதட்சணையா கேட்கிறாரா?"
"ஆமாம்! கல்யாணம்கிறது `ஆயிரம் காலத்துப் பயிர்னு' அவர்கிட்ட யாரோ சொல்லிட்டாங்க."

"அரசியல்வாதியை மாப்பிள்ளையாக்கியது தப்பாப் போச்சு!"
"ஏன்?"
"கல்யாணத்தில் பொண்ணு போட்ட மாலையைக் கழற்றி கூட்டத்தில் வீசுறாரு!"

"டாக்டர், கொஞ்ச நாளா என் கணவருக்கு தூக்கத்துல பேசற வியாதி இருக்கு…"
"பகல்ல பேசறதுக்கு கொஞ்சம் பர்மிஷன் கொடுத்தா சரியாப் போய்விடும்."

கணவன்: நீ பிரசவத்துக்கு அம்மா வீட்டுக்குப் போறேங்கிறதுக்காக சமையல்காரியை ஏன் வேலையை விட்டு நிறுத்தினே?
மனைவி: நான் திரும்பி வர்றதுக்குள்ள அவ பிரசவ லீவு எடுத்துடக்கூடாதேன்னு தான்!

"உன் கணவர் விசிலடிச்ச உடனே சமையலறைக்குள் ஓடுறியே!
உன்னைக் கூப்பிடணும்னா இப்படித் தான் விசிலடிப்பாரா?"
"அப்படி ஒண்ணுமில்லே, குக்கர் விசில் கெட்டுப் போச்சு. அந்த நேரத்திற்கு கரெக்டா இவர் விசில் அடிக்கிறார். அவ்வளவுதான்.

மனைவி: இவ்வளவு நேரம் கரடியா கத்தறேனே! காதுல விழலையா உங்களுக்கு?
கணவன்: கரடி பாஷை எல்லாம் எனக்குத் தெரியாது கமலா.

"எதுக்குய்யா உன் மனைவியைத் தூக்கி வீட்டுக்கு வெளியே எறிந்தாய்?"
"ஒரு மகான்தான் கவலையைத் தூக்கி எறி வாழ்க்கையில் முன்னேறலாம்னு சொன்னார்."

18 comments:

.:: மை ஃபிரண்ட் ::. said...

சூப்பர்.. நல்ல காமெடி கலேக்ஷன் டாக்டரம்மா. :-)

Anonymous said...

சூப்பரோ சூப்பர் டாக்டர்:-))))

பாச மலர் said...

5 ஸ்டார் ஜோக்கும் ..கவலையைத் தூக்கி எரியற ஜோக்கும் ரொம்ப நல்லாருந்துச்சு..

இரண்டாம் சொக்கன் said...

"பகல்ல பேசறதுக்கு கொஞ்சம் பர்மிஷன் கொடுத்தா சரியாப் போய்விடும்."

இது ஒன்னும் ஜோக்கில்லையாக்கும்...நெசம்...அம்புட்டும் நெசம்....

ஹி..ஹி...

delphine said...

நன்றி இஞ்சி..
நன்றி அனானி... பெயர சொல்லிருக்கலாமே!
நன்றி பாசமலர்.. .. வழ்க்கையில் கவலைகளை தூக்கி எறிவதே இந்த நகைச்சுவைகள்தானே!

சொக்ஸ்.. அப்டீன்னா!

இரண்டாம் சொக்கன் said...

ஹி..ஹி...அப்டீன்னா...அப்டீதான்....ஹி..ஹி..

நிலா said...

டாக்டர் ஆண்ட்டி திருவாரூர சுத்தி ஒரு 5ஸ்டார் ஹோட்டலும் இல்லை. குசும்பன்மாமா கண்டிப்பா 5ஸ்டார் சாக்லேட்தான் கொடுப்பார்

தமிழ் பிரியன் said...

டாக்ரம்மா நீங்களுமா? பாவம் சரவணன் அங்கிள்! இப்படி எல்லாரும் போட்டு கும்முறீங்களே! எம்புட்டு பேரு கும்மினாலும் தாங்குறாறய்யா இவர் ரொம்ப நல்லவருங்க.... :)

தமிழ் பிரியன் said...

நல்ல நகைச்சுவைகள் :)

கயல்விழி முத்துலெட்சுமி said...

டாக்டர் நல்லா சிரிச்சேன்.. அப்பரம் குசும்பன் ஊரிலயோ இல்ல கல்யாணம் ஆகப்போற ஊருலயோ பைவ் ஸ்டார் ஓட்டலே கிடையாது இருந்தால்ல போடுவார்.. :))

சொக்கர் ஏன் பேர் மாத்தி மாத்தி அடையாளங்களில் எனக்கு நம்பிக்கை இல்லைன்னு பதுங்கறாருன்னு இப்ப புரியுதா டாக்டர்.. :)

மங்களூர் சிவா said...

ஜோக்ஸ் சூப்பர்ப் கலெக்சன்

//
இரண்டாம் சொக்கன் said...

"பகல்ல பேசறதுக்கு கொஞ்சம் பர்மிஷன் கொடுத்தா சரியாப் போய்விடும்."

இது ஒன்னும் ஜோக்கில்லையாக்கும்...நெசம்...அம்புட்டும் நெசம்....
//
தெய்வமேஏஏஏஏஏஏஏஏஏ

கண்மணி said...

சூப்பர் இவங்களும் கெளம்பிட்டாங்கய்யா கெளம்பிட்டாங்க
http://kouthami.blogspot.com/2008/03/blog-post_04.html

புது தொடர் விளையாட்டு வாங்கம்மா டாக்டரம்மா

குசும்பன் said...

அவ்வ்வ்வ்:(((

//கல்யாணம் ஆன பிறகு நகைச்சுவை உணர்வெல்லாம் காணாம போய்விடும்... //

பொண்ணுங்க அம்புட்டு மோசமா டார்சர் செய்வாங்களா?:)))

Anonymous said...

குசும்பன் @ சரவணனுக்கு வாழ்த்துக்கள்!!!! சமீபத்துல நகைச்சுவைத்துணுக்குகள் போட்டு கலக்குறீங்க டாக்டர்!!

காட்டாறு said...

//எதுக்கும் உஷாரா இருங்க.... அப்புறம், கல்யாணம் ஆன பிறகு நகைச்சுவை உணர்வெல்லாம் காணாம போய்விடும்... //

டாக்டரம்மா.. நீங்களுமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......

காட்டாறு said...

// இரண்டாம் சொக்கன் said...
"பகல்ல பேசறதுக்கு கொஞ்சம் பர்மிஷன் கொடுத்தா சரியாப் போய்விடும்."

இது ஒன்னும் ஜோக்கில்லையாக்கும்...நெசம்...அம்புட்டும் நெசம்....

ஹி..ஹி...

//

லொல்லா... பாதி நேரம் நெட்ல உட்கார வேண்டியது. மீதி நேரம் தூங்க வேண்டியது. அப்புறம்? க்க்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

அபி அப்பா said...

//Anonymous said...
சூப்பரோ சூப்பர் டாக்டர்:-))))//

டாக்டர் அந்த அனானி நான் தான்! நேத்து ஆபீஸ் விட்டு போகும் முன்ன படிச்சேன் அப்ப சை அவுட் பண்ணிட்டேன் அதனால அனானியா வந்தேன் என்பதை சொல்லி கொள்வதோடு இந்த பதிவில் ஹீரோ டயலாக் சூப்பர் எனவும் சொல்லிக்கிறேன்:-)))

புதுகைத் தென்றல் said...

சும்மா சூப்பர்.

குசும்பன் பாவம்.

ஆள் ஆளுக்கு அதிர்ச்சி கொடுத்துகிட்டு இருக்கோம்.

பாவம் :)