Thursday, February 14, 2008

உதவிய கரம்

திருச்சிக்கு ஒரு வேலையாக 2 நாட்கள் பயணம். ட்ரைவிங் லைஸன்ஸ் இந்த மாத கடைசியில் expiry ஆவதால் renew பண்ண அங்கு செல்ல வேண்டியதிருந்தது. இங்கு சென்னையில் பண்ண முடிந்திருக்குமா என்று தெரியவில்லை. திருச்சி சின்ன நகரமாக இருப்பதாலும், நிறைய வருடங்கள் வாழ்ந்ததால் எல்லோரையும் எனக்கு தெரியும். ஒரு feeling of comfort.

ஆர்.டி.ஓ ஆபிஸ் எப்பவும் போல ஒரு பரபரப்பு. வாசலில் ஒரு போர்டு. அதில் " இங்கு பணியாற்றுபவர்கள் லஞ்சம் வாங்குவதில்லை. ஆகவே லஞ்சம் கொடுக்க முயற்சி செய்யாதீர்கள்" என்று எழுத பட்டிருந்தது. இதற்கு முன்பு 2 தடவை என் மாசியுடன் சென்றிருக்கிறேன். அவரை பார்த்ததும், எல்லோரும் ஒரு வித அட்டென்ஷனில் வேலை செய்வார்கள். இவர் வந்த வேலையை சீக்கிரமாக முடித்துக் கொடுத்துவிட்டு அவரை அனுப்புவதிலே குறியாக இருப்பார்கள் (லஞ்ச ஒழிப்பு அதிகாரியை யாருக்குத்தான் பிடிக்கும்?).
அரசாங்க அலுவலங்கள் யாவும் ஒரே மாதிரியாகத் தான் இயங்குகிறது. ஒரே மாதிரியான பேப்பர் ஒர்க்.. எங்குப் பார்த்தாலும் பைல்கள்...என்னுடைய லைசன்ஸும் வேகமாக கிடைத்தது. என்னை முன்பின் பார்த்திராத ஒரு டாக்டர் எனக்கு மெடிக்கல் certificate கொடுத்தார்.(எப்படி டாக்டர்களால் இப்படி செய்ய முடிகிறது?) எப்படியோ சென்னையில் போலிஸ்காரர்களின் தொந்தரவிலிருந்து தப்பித்துக் கொள்ள ஒருலைஸன்ஸ். இன்னும் சில வேலைகள்.. இவை யாவையும் முடித்துவிட்டு அவசரமாக rockfort express-ல் கடைசி நேரத்தில் ஏறும் போது, ஒரு கரம் என்னை பிடித்து உதவி என் பெட்டிகளைக் கொண்டு என் சீட்டுக்கு அடியில் வைத்து உதவியது. சிரித்துக்கொண்டே ஒரு நன்றி... பொதுவாக ட்ரெயினில் பயணம் செய்யும் போது பக்கத்தில் இருப்பவர்களுடன் பேசும் பழக்கம் எனக்குக் கிடையாது. ஏதாவது புத்தகம் படிப்பேன் அல்லது தூங்கிவிடுவேன். ஆனால் இந்த தடவை மிக சுவாரஸ்யமாக ஒரு விடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தேன். டிக்கெட் பரிசோதகர் டிக்கெட்டை வாங்கி பரிசோதித்துவிட்டு சென்ற பின்பு தூங்கலாம் என்று நினைத்தபோது எனக்கு உதவிய உதவுங் கரம் என் எதிர்த்தார்போல் வந்து உட்கார்ந்தது. 25 வயது பையன். சென்னைக்கு எத்தனை மணிக்கு ட்ரைன் போய் சேரும் என்றான் (ஆங்கிலத்தில்). "காலை ஐந்து மணிக்கு" என்றேன்.
" இதுதான் முதல் தடவையாக இந்த ட்ரையினில் வருகிறீர்களா" என்று கேட்டேன். what what என்றான்.. ஓஹோ தமிழ்தெரியாது போலும். ஆகவே ஆங்கிலத்தில் கேட்டேன். ஆமாம். முதல் தடவை என்றும் நாசிக்கிலிருந்து திருச்சிக்கு வேலை விஷயமாக வந்ததாகவும் சொன்னான். சென்னை வந்ததும் தன்னை எழுப்பி விடுமாறு சொல்லிவிட்டு மேல் பர்த்தில் ஏறி படுத்துவிட்டான்.
ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து எதிர் சீட்டில் உட்கார்ந்து மிகவும் restless ஆக இருந்தான் சந்தோஷ்.(அதுதான் அவன் பெயர்). நான் எழுந்ததும் ஒரு அட்ரஸைக் காண்பித்து 'எங்கே எப்படி" செல்ல வேண்டும் என்று கேட்டான். ஒரு நிமிடம் எக்மோரில் ஆட்டோக்காரர்கள் கையில் இவன் மாட்டினால் என்ன ஆகும் என்று யோசித்து என்னோடு கூட வரும்படி சொன்னேன். யோசித்துவிட்டு 'சரி' என்றான்.
நாங்கள் இருவரும் வெளியில் வரும் போது மணி ஐந்து முப்பது. எனக்காக என் ஆட்டோ ட்ரைவர் வெளியில் காத்து கொண்டிருந்தார். நாங்கள் இருவரும் அதில் ஏறி, நான் நந்தனம் என் ஆஸ்பத்திரியில் இறங்கிவிட்டு ஆட்டோ ட்ரைவரிடம் சந்தோஷை அடையாரில் போய் விட்டுவிட்டு வரும்படி சொன்னேன். அவனுக்கு மிகவும் சந்தோஷம். ஆஸ்பத்திரியில் நிப்பாட்டி வைத்திருந்த என் காரை எடுத்துவிட்டு நான் வீட்டிற்கு சென்றுவிட்டேன்.
காலை பத்து மணிக்கு எனக்கு ஒரு போன். 'மேடம்' மிக்க நன்றி என்று ஆங்கிலத்தில் என் உதவிக் கரம் பேசியது. (எப்படி சந்தோஷுக்கு என் போன் நம்பர் கிடைத்தது?). இந்த உதவிக்கரம் எனக்கு செய்த உதவியை நான் மிக பெரிதாக எடுத்து கொண்டேன். ஏனேனில் அவ்வளவு அவசரமாக ட்ரையினில் ஏறினேன். அந்த நேரத்தில் எனக்கு கிடைத்த உதவி பெரிதாக இருந்தது. .. ......
ஆனாலும் நான் சின்ன வயதில் படித்த இந்த "poem" தான் எனக்கு நியாபகம் வந்தது.
Somebody's Mother
- Mary Dow Brine (1816-1913)
The woman was old and ragged and gray
And bent with the chill of the Winter's day.
The street was wet with a recent snow
And the woman's feet were aged and slow.
She stood at the crossing and waited long,
Alone, uncared for, amid the throng
Of human beings who passed her by
Nor heeded the glance of her anxious eyes.
Down the street, with laughter and shout,
Glad in the freedom of "school let out,"
Came the boys like a flock of sheep,
Hailing the snow piled white and deep.
Past the woman so old and gray
Hastened the children on their way.
Nor offered a helping hand to her -
So meek, so timid, afraid to stir
Lest the carriage wheels or the horses' feet
Should crowd her down in the slippery street.
At last came one of the merry troop,
The gayest laddie of all the group;
He paused beside her and whispered low,
"I'll help you cross, if you wish to go."
Her aged hand on his strong young arm
She placed, and so, without hurt or harm,
He guided the trembling feet along,
Proud that his own were firm and strong.
Then back again to his friends he went,
His young heart happy and well content.
"She's somebody's mother, boys, you know,
For all she's aged and poor and slow,
"And I hope some fellow will lend a hand
To help my mother, you understand,
"If ever she's poor and old and gray,
When her own dear boy is far away."
And "somebody's mother" bowed low her head
In her home that night, and the prayer she said
Was "God be kind to the noble boy,
Who is somebody's son, and pride and joy!"

இந்த poem-க்கும் எனக்கு உதவிய கரத்திற்கும் சம்பந்தமிருக்குதோ என்னவோ தெரியலை....ஆனால் இந்த 'poem' எனக்கு இன்று அடிக்கடி நியாபகம் வந்தது....

22 comments:

Thekkikattan|தெகா said...

Doc,

நல்லதொரு சிச்சுவேஷனல் ப்போயம் அடிக்கடி உங்களின் நினைவில் வந்து போனதில் ஒன்றும் ஆச்சர்யமில்லைதான்...

ஆமாம், எப்படி அவருக்கு உங்களின் தொலைபேசி எண் கிடைத்தது ..:)??

தமிழ் பிரியன் said...

"காலத்தி னாற் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது" என்ற குறள் தான் எனக்கு நினைவுக்கு வருகிறதம்மா!
:)

வவ்வால் said...

//ஆமாம், எப்படி அவருக்கு உங்களின் தொலைபேசி எண் கிடைத்தது ..:)??//

என்னங்க தெகா, அதான் டாக்டரம்மாக்கு வழக்கமா வரும் ஆட்டோ வந்ததுனு எழுதி இருக்காங்களே, ஆட்டோ என்றால் ஆட்டோ மட்டுமா வரும், டிரைவரும் தானே வருவாங்க , அவர் கிட்டே விசாரித்து நம்பர் வாங்கி இருப்பார் அந்த உதவும் கரம் :-))

நல்லவேலை பெட்டித்தூக்கி வைக்க அங்கே இறைவனே வந்தார்னு ரொம்ப "feelings" ஆகலை டாக்டரம்மா :-))

ஜேம்ஸ் பாண்ட், ஷெர்லாக் ஹோம்ஸ் கதைலாம் கொஞ்சம் படிங்க தெகா , சும்மா கரிசல் காட்டு கடுதாசி, கருவாச்சி காவியம், தண்ணீர் தேசம்னு , " man eaters of kumaon" என்று மட்டுமே இருக்காதிங்க! :-))

கால்கரி சிவா said...

//ஆமாம், எப்படி அவருக்கு உங்களின் தொலைபேசி எண் கிடைத்தது ..:)??//

ஆட்டோ டிரைவர்

கோபிநாத் said...

நல்ல அனுபவம்..சுருக்கமாகவும் அழகாவும் சொல்லியிருக்கிங்க..;))

POEM எல்லாம் எப்படி தான் இன்னும் ஞாபகத்துல வச்சியிருக்கிங்க...யப்பா!! ;)

குசும்பன் said...

கோபிநாத் said...
POEM எல்லாம் எப்படி தான் இன்னும் ஞாபகத்துல வச்சியிருக்கிங்க...யப்பா!! ;)//

அதுலாதான் அவுங்க டாக்டர்:)))

delphine said...

தெகா..
வவ்வால் & சிவா சொன்னமாதிரிதான். ஆட்டோ ஓட்டுனரிடமிருந்துதான்.


நன்றி தமிழ் பிரியன்...

வவ்வால்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்...
நல்லவேலை பெட்டித்தூக்கி வைக்க அங்கே இறைவனே வந்தார்னு ரொம்ப "feelings" ஆகலை டாக்டரம்மா :-))///////////////

அந்த நேரத்தில் எனக்கு அவன் கடவுளாகத்தான் தெரிந்தான்.

ரசிகன் said...

//நல்லதொரு சிச்சுவேஷனல் ப்போயம் அடிக்கடி உங்களின் நினைவில் வந்து போனதில் ஒன்றும் ஆச்சர்யமில்லைதான்...

ஆமாம், எப்படி அவருக்கு உங்களின் தொலைபேசி எண் கிடைத்தது ..:)??//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்.....

RATHNESH said...

சகமனிதர்களுக்குள் பரஸ்பரம் செய்து கொள்ள முடிகிற மிகவும் சராசரியான விஷயங்கள் தான் நடந்திருக்கின்றன. இத்தனை நெஞ்சங்களை இது நனைக்கிறது என்றால் மனிதம் என்பது எவ்வளவு வறண்டு போயிருக்கிறது என்று தான் மலைக்க வேண்டி இருக்கிறது டாக்டர்.

நானானி said...

அவ்ளோ நீ....ளப் பொயம் எப்படி இப்பவும் ஞாபகத்திலிருக்கிறது? டாக்டர்?
சம்பவம் சுவையாயிருந்தது.

செல்வம் said...

நல்ல அனுபவம் மேடம்...ஒரு சிறுகதை போல் இருந்தது

இரண்டாம் சொக்கன்...! said...

நானெல்லாம் மாங்கு மாங்கென நிறைய பேருக்கு உதவி செய்திருக்கிறேன்...யாரும் பதிவு போட்டார்களா தெரியவில்லை....

அப்பால உங்களுக்கு மட்டும் ஒரு ரகசியம் சொல்றேன்....என்னோட லைசென்ஸ் எல்லாம் எக்ஸ்பயரி ஆகி நாலஞ்சு வருசம் மேல ஆச்சு......லைசென்ஸ்ங்கற ஒன்னையே நான் மறந்து போயிருந்தேன்...நியாபகபடுத்தீருக்கீங்க....ஹி...ஹி...

துளசி கோபால் said...

வாழ்க்கைப் பயணத்தில் எத்தனையோ நல்ல உள்ளங்களைச் சந்திக்கிறோம். நினைவுப்பெட்டியில் தோண்டிப் பாருங்களேன். முக்கால் பாகம் நல்லவர்கள் நிரம்பிய உலகம்தான் இது.

நல்ல பையன். நல்லா இருக்கட்டும்.

இரண்டாம் சொக்கன்...! said...

poem கொஞ்ச நீளம்தான்...

படிச்சிட்டேன்....

நல்லாருக்கு....

ச்சின்ன சின்ன விஷயங்களைக் கூட ரசிக்க ஆரம்பித்துவிட்டால் வாழ்க்கை மேலும் சுவாரஸ்யமாகி விடுகிறது...இல்லையா டாக்டர்...!

புதுகைத் தென்றல் said...

//வாழ்க்கைப் பயணத்தில் எத்தனையோ நல்ல உள்ளங்களைச் சந்திக்கிறோம். நினைவுப்பெட்டியில் தோண்டிப் பாருங்களேன். முக்கால் பாகம் நல்லவர்கள் நிரம்பிய உலகம்தான் இது.//

எனக்கும் இந்த வகை அனுபவம்தான்.

delphine said...

கோபி, சில நல்ல poem கள் எப்பவும் நல்லா நியபகமிருக்கும். எனக்கு அந்த daffodils போயம் கூட இன்னும் நல்ல நியாபகத்திலிருக்குதே!

குசும்பா.. நன்றி..

ரசிகன் என் பதிவ முழுக்க வாசிச்சீங்களா?

delphine said...

ரத்னேஷ்!
சக மனிதர்களுக்குள் பரஸ்பரம் நடக்கும் விஷயமாக இருந்தாலும் நம் இளைஞர்கள் சில சமயம் 'who cares' என்கிற பாணியில் இருக்கிறார்களோ என்று தோன்றும். சில சமயங்களில் ரோட்டில் அடிபட்டு கிடப்பவரை கண்டும் காணாமல் போகும் சமூகத்தில் தானே நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம்!!!

நனானி!..நன்றி.. 8-ம் வகுப்பில் படித்தது என்று நினைக்கிறேன். அதன் பிறகு என் nephew-ன் பாடப் புத்தகத்தில் ஒரு சில வருடத்திற்கு முன்பு படித்தேன். அதன் அர்த்ததையும் அவனுக்கு விளக்கிக்கொடுத்தேன்... thats why its still fresh in my mind.

thank you செல்வம்.

delphine said...

அப்பால உங்களுக்கு மட்டும் ஒரு ரகசியம் சொல்றேன்....என்னோட லைசென்ஸ் எல்லாம் எக்ஸ்பயரி ஆகி நாலஞ்சு வருசம் மேல ஆச்சு////
too bad சொக்கரே! உடனே renew பண்ணுங்கப்பா..சின்ன சின்ன விஷயங்களில்தான் தற்சமயம் சந்தோஷம் காண்கிறேன்.Life is becoming very interesting!

delphine said...

நன்றி துளசி & புதுகை தென்றல்..
நல்ல உள்ளங்களை நாம் நினைவு கூறும் போது மிகவும் சந்தோஷத்தை அளிக்கின்றதே

மங்கை said...

ஹ்ம்ம்ம்....சொன்ன மாதிரி சின்னதா இருந்தாலும் மனதுக்கு இதமான விஷயங்கள் டாக்டரம்மா..

//In her home that night, and the prayer she said
Was "God be kind to the noble boy,
Who is somebody's son, and pride and joy!"///

ஹ்ம்ம்ம் இது தான் மனுஷங்களுக்கு இருக்க வேண்டிய குணம்....ஹ்ம்ம்ம்
ரொம்ப நல்லா இருக்கு டாக்டரம்மா

காட்டாறு said...

நல்ல நிகழ்வு.

எல்லாருமே கேட்டுட்டாங்க எப்படி ஞாபகம் வச்சிருந்தீங்கன்னு. நானும் கேக்கல. நமக்கு மறதி தான் உண்டு. இந்த மாதிரி யாராவது ஞாபகமா சொன்னா, உடனே எனக்கு ஆச்சர்யமா போயிரும். :-)

கவிதை அருமை.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

டாக்டர் மேடம்..

வந்தவன் என் அப்பன் 'முருகனேதான்' எனக்கு சந்தேகமில்லை.. இனியும் சுதாரிப்பாக இருங்கள். எங்கு நோக்கினும் அவனாகவேத்தான் இருப்பான்..

அனுபவமே கடவுள்..