Friday, February 8, 2008

கொஞ்சூண்டு ஜோக்குகள்...

வேலை பளு அதிகம்.. சில சமயம் வேலையை விட்டுவிட்டு ஊரோடு போய்விடலாமா என்று கூட தோன்றும்... ஒருவிதமான அலுப்பு சிலசமயங்களில்.. ரொம்ப டென்ஷனாக இருக்கும் போது எனக்கு மருந்தாக இருப்பது இந்த ஜோக்குகள்தான். எப்படியும் Msn jokes site- க்கு ஒரு விசிட் அடிச்சு வாய்விட்டு சிரித்துவிட்டு என் வேலையில் மூழ்குவேன்... அதுபோல இந்த குசும்பன் பதிவையும் பார்க்க தவருவதில்லை. (( ஏன்னா அதில என்னை மறந்து சிரிக்க ஏதாவது இருக்கும். அபி அப்பா இப்பல்லாம் ரொம்ப சீரியஸ் பதிவராகி விட்டார்) .. ... :P
இந்த ஜோக்குகள்ல எனக்கு பிடித்தது பாஸ்போர்ட் சைஸ் எக்ஸ்ரே தான். நீங்களும் சிரிங்களேன்.!!!"அந்த டாக்டர் குறைவா பேசினாலும் அர்த்தத்தோட பேசுவார்!"

"எப்படி சொல்ற?"
"சாப்பாட்டுக்கு முன் சாப்பாட்டுக்கு பின் அப்டீங்கறத `சா'வுக்கு முன் `சா'வுக்கு பின் அப்டீன்னுதான் சுருக்கமா சொல்வார், ஆனா அது எவ்வளவு அர்த்தம் நிறைஞ்சதா இருக்கு பாரு."
"என்ன சார் இது இன்டர்வியூவுக்கு வந்தா எல்லாருக்கும் கண்ணுல சொட்டு மருந்து ஊத்தறாங்க?"
"ஹலோ! இது இன்டர்வியூ இல்ல! வரிசையா எல்லாம் உட்கார்ந்திருந்தா அது கம்பெனி இன்டர்வியூவா? இது கண் ஆஸ்பத்திரி!"


"திருடனுக்கும் போலீஸுக்கும் என்ன வித்தியாசம்?"
"தொப்பைதான்!"


"என்ன டாக்டர் நேத்திக்கு மைனர் ஆபரேஷன்னு சொல்லிட்டு இன்னிக்கு மேஜர்னு சொல்றீங்களே!"
"நான் என்ன பண்ணட்டும்! நேத்தி வரைக்கும் ஒரு இடத்தோட விலைய குறைச்சலா சொல்லிட்டிருந்த தரகர் இன்னிக்கு 5 லட்சம் ஆகும்னு சொல்லிட்டாரே!"


"டாக்டர்... என் பையன் சாக்பீஸ், பல்பம் எல்லாம் சாப்பிடுகிறான்."
"போகப் போகச் சரியாயிடும்மா..."
"நானும் அப்படித்தான் சொன்னேன் டாக்டர். அவன் மனைவிதான் மிகவும் வருத்தப்படுகிறாள்!""அந்த ஆள் சரியான கஞ்சம் தெரியுமா?"
"செஸ்ட் எக்ஸ்ரே எடுக்க எவ்வளவுன்னு கேட்டார் நான் 300 ரூபானேன் அதுக்கு பாஸ்போர்ட் சைஸ் எக்ஸ்ரே போதும்னு சொல்றார்!""சாதாரண ஜுரம் தலைவலின்னு போனா 40 பக்க நோட்டுல மருந்து எழுதி தர்றார் அந்த டாக்டர்!
"சில டாக்டர்கள் அப்படித்தான்!"
"அட! அது இன்னிக்கு ஒரு நாளைக்குத்தானாம், நாளைக்கு நீடிச்சா ஒரு குயர் நோட்டுதான்னு சொல்லிட்டார்."


"டாக்டர் எனக்கு ஆபரேஷன் பண்ணத் தேவையில்லை!"
"ஏன் திடீர்னு அப்படி சொல்றீங்க?"
"உங்க நர்ஸ்களோட அழகே என்ன கொன்னுடும் போல இருக்கு போங்க!"


அந்த டாக்டர் போலி டாக்டர்னு எப்படி கண்டுபிடிச்ச?"
"பிரசவ வலின்னு போனவங்களுக்கு ப்ரூஃபன் பாராசிட்டமால் கொடுத்தாராமே!"


"இந்த டாக்டர் ஆபரேஷனுக்கு 500 ரூபாதான் சார்ஜ் பண்ணுவார்!"
"டெட் சீப்னு சொல்லுங்க!"

17 comments:

ரசிகன் said...

ஹா..ஹா.. எனக்கு ரொம்ப புடிச்சது முதல் காமெடி தான்.. நிஜமாவே அர்த்தமுல்ல ஜோக்ஸ்..ஹிஹி..

இரண்டாம் சொக்கன் said...

படித்தேன்...ரசித்தேன்...வாய்விட்டு சிரித்தேன்...

டேங்ஸ்....

ஏன் இத்தனை ஸ்ட்ரெயின் பண்றீங்க டாக்டர்...உடம்பை பார்த்துக்கங்க....ம்ம்ம்ம்

பிரேம்ஜி said...

நல்ல இருக்குது Jokes

துளசி கோபால் said...

:-)))))))))))))))))))))))

delphine said...

ரசிகன் நன்றி..

சொக்கரே நன்றி.. தங்கள் அன்பிற்குரிய வார்த்தைகளுக்கு..

ப்ரேம்ஜி முதல் வருகை என்று நினைக்கிறேன். நன்றி.

துளசி
:)

RATHNESH said...

டாக்டர் மேடம்,

வணக்கம். முதன்முறையாக இன்று தான் உங்கள் பதிவைப் பார்த்தேன். எல்லா பதிவுகளும் மிக அருமை. நகைச்சுவை துணுக்குகள் சிரிப்பை வரவழைத்தன. மனம் கொஞ்சம் லேசாவது நிஜம்.

குடும்ப வாழ்வின் கூறுகளைத் தங்கள் அனுபவ / படிப்பு பின்னணிகளுடன் இன்னும் நிறைய எழுத வேண்டும் என்பது என் வேண்டுகோள்.

சதங்கா (Sathanga) said...

டெல்பின் மேடம்,

அனைத்து ஜோக்குகளும் அருமை. வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்னு நீங்களே சொன்னா, பூவாக்கு என்ன பண்ணுவீங்க :) chumma fun.

மங்கை said...

நர்ஸ், பிரசவ வலி ஜோக் சூப்பர் டாக்டரம்மா...

பாச மலர் said...

முதல் ஜோக்தான் மிகவும் பிடித்தது..

தருமி said...

"நானும் அப்படித்தான் சொன்னேன் டாக்டர். அவன் மனைவிதான் மிகவும் வருத்தப்படுகிறாள்!"

:)))))))

சுரேகா.. said...

கலக்குறீங்க டாக்டர்..!

ரொம்ப நல்லா இருந்தது..அதுவும் அந்த சாவுக்கு முன்னால். பின்னால்..சூப்ப்பர்.!

குசும்பன் said...

"டாக்டர் எனக்கு ஆபரேஷன் பண்ணத் தேவையில்லை!"
"ஏன் திடீர்னு அப்படி சொல்றீங்க?"
"உங்க நர்ஸ்களோட அழகே என்ன கொன்னுடும் போல இருக்கு போங்க!"//


சூப்பர்:))))))))))))

தமிழ் பிரியன் said...

நன்றாக இருக்கின்றன. சில நேரங்களில் இது போன்றவைகள் தான் டாக்டர் தரும் மருந்தோ?

delphine said...

Thanks Rathnesh. You too have a beautiful blog.

சதங்கா... VA -ல இருக்கீங்கபோல இருக்கு. ஜூன் மாதம் அங்கிட்டு ஒரு 15 நாள் டூர். சந்திப்போம்.

நன்றி மாமி.
thank you பாச மலர்

டீச்ச்சருங்களுக்கு பல்பம் ஜோக்குதான் பிடிக்கும் போலிருக்கு. அடுத்தது டீச்சருன்ங்க ஜோக்குதான்.

நன்றி சுரேகா.. I am so happy you enjoyed!


குசும்பரே!.. :)

சரியாக சொன்னீர்கள் தமிழ்பிரியன். வாய் விட்டு சிரித்தால் நோய் பறந்தே போய்விடும். :))))))))))))

மங்களூர் சிவா said...

//
டாக்டர் எனக்கு ஆபரேஷன் பண்ணத் தேவையில்லை!"
"ஏன் திடீர்னு அப்படி சொல்றீங்க?"
"உங்க நர்ஸ்களோட அழகே என்ன கொன்னுடும் போல இருக்கு போங்க!"
//

ஆஹா நான் டாக்டர்கிட்ட சொன்னது அதுக்குள்ள வலையேறிடிச்சா!!!!

சகாதேவன் said...

ஒருநாள் கால் வலி வந்தது. பார்த்த ஆர்த்தோ டாக்டர், என் மகனுடன் படித்தவன்(ர்)தான்.
உடனே அட்மிட் செய்து ட்ராக்ஷ்ன் போட்டு ஒரு வாரம் இருக்கவேண்டும் என்று சொல்லி விட்டார்.
என் மகன் அவரிடம் கேட்டான்,"என்ன ரூமெல்லாம் காலியாக இருப்பதால் அப்பாவை தங்க வைத்து விட்டாயா?".
நிலம் விலை கூடுகிறது என்றதும் மைனர் ஆப்பரேஷன் மேஜர் ஆன ஜோக் போலத்தான்.
சகாதேவன்

cheena (சீனா) said...

டாக்டர்,

வாய் விட்டுச் சிரிச்சா நோய் விட்டுபோகும் - உண்மை - சிரிச்சேன் - வலைப்பூ மூலம் வந்தேன்