Sunday, January 20, 2008

சிரிங்க!

தமிழ்மணம் பக்கம் எட்டி பார்த்தேன்... ஒரே சீரியஸ் பதிவுகள்!!
வாங்க கொஞ்சம் சிரித்துவிட்டு போங்க!
நம்ப சாஃப்ட்வெர் இஞ்சினீயர்கள பற்றி இன்னும் ஒரு ஜோக்குகூட பார்க்கலை.. ஆனாலும் இந்த டாக்டர்கள் ஜோக்குதான் என் ALL TIME Favourite.. enzzzzoyyyyyy!


"அந்த டாக்டர் ஒரு நாளைக்கு குறைஞ்சது 100 பேரையாவது பாப்பாரு!"

"பெரிய டாக்டரா இருப்பாரு போல இருக்கு!"

"நீங்க வேற! பேஷன்ட் இல்லாம கிளினிக் வாசல்ல நின்னு போற வர்றவங்க 100 பேரையாவது பாப்பாருன்னு சொல்ல வந்தேன்!"
----------------------------------------------------------
"டாக்டர், என் கை பயங்கரமா நடுங்குது."

"நீங்க அதிகம் குடிப்பீங்களா?"

"எங்க டாக்டர், அதான் கை நடுக்கத்துல நிறைய கீழ சிந்திடுதே."
-----------------------------------------------------------
டாக்டர்: அந்த பேஷண்ட் தொல்லை தாங்க முடியலை?

நர்ஸ்: ஏன் டாக்டர்?

டாக்டர்: நான் தான் அவரோட குடும்ப டாக்டர். தினமும் பார்க்கும் போதெல்லாம் ‘டாக்டர் எனக்கு ஞாபக மறதி வியாதி இருக்குனு' ஆரம்பிச்சு அரைமணி நேரம் மறு ஒலிபரப்பு மாதிரி கொல்றாரு.
---------------------------------------------------------------
ஒருவர்: உங்க ஆஸ்பத்திரிக்கு நோயாளிகளே வர்றதில்லேங்கறீங்க.. அப்புறம் எதுக்கு ஏழெட்டு நர்ஸை வேலைக்கு வச்சிருக்கீங்க..?
டாக்டர்: அட்லீஸ்ட் அவங்கள்லே யாருக்காச்சும் உடம்புக்கு வந்தா என்கிட்டதானே காண்பிக்கணும்!
-----------------------------------------------------------------
"டாக்டர் நீங்க கொடுத்த மாத்திரைகள்னால சக்கரை வியாதியே குணமாயிடுச்சு!"
"நான் கொடுத்த மாத்திரைகள்ல எது சக்கரை வியாதிய குணப்படுத்திச்சின்னு கொஞ்சம் சொன்னீங்கன்னா சௌரியமா இருக்கும்!"
---------------------------------------------------------------------
"உங்க கணவர் பூரண ஓய்வெடுக்கணும். தூக்க மாத்திரைகளை பெற்றுக் கொள்ளுங்கள்!"
"அவருக்கு காலையில இந்த மாத்திரைகளை தர வேண்டுமா இல்லை இரவில் தரவேண்டுமா டாக்டர்?"
"மாத்திரை அவருக்கு அல்ல. உங்களுக்குதான்."
------------------------------------------------------------------------------
"அந்த டாக்டர் போலின்னு கண்டுபிடிச்சிட்டியா, எப்படி?"

"கால்ல வெடிப்பு இருக்குதுன்னேன் உள்ளே போனவர் 'கம்' பாட்டிலை எடுத்துட்டு வந்து ஒட்ட முயற்சிக்கறாரு!"
-------------------------------------------------------------------------------------------------
"என் மனைவியை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போகும்போது வாசல்படியிலேயே பிரசவம் ஆயிடுச்சு!"
"அப்ப 'டோர் டெலிவரி'ன்னு சொல்லு...!"
----------------------------------------------------------------------------------
MSN JOKES

15 comments:

இலவசக்கொத்தனார் said...

பல சீரியஸ் பதிவுகளைப் பார்த்தாலே சிரிப்பத்தானே இருக்கு!! :))

சின்ன அம்மிணி said...

உண்மையிலேயே நல்லா இருக்குங்க டாக்டர்.

சின்ன அம்மிணி said...

டாக்டர், உங்களுக்கு ஒரு கேள்வி போட்டிருக்கேன். பதில் சொல்லுங்க சீக்கிரம்

துளசி கோபால் said...

ரசித்தேன்

:-))))))))))))))))))))

delphine said...

கொத்ஸ்...என்னுடைய சீரியஸ் பதிவுகளைத்தான சொல்கிறீங்க..

அம்மிணி சிலசமயம் தனியாக
இருக்கும்போது வெறுப்பாக இருக்கும்...அப்ப நான் இந்த ஜோக்குகள வாசிப்பேன்.

நன்றி துளசி.

delphine said...

அம்மிணி என்ன கேள்வி?

குசும்பன் said...

//"உங்க கணவர் பூரண ஓய்வெடுக்கணும். தூக்க மாத்திரைகளை பெற்றுக் கொள்ளுங்கள்!"
"அவருக்கு காலையில இந்த மாத்திரைகளை தர வேண்டுமா இல்லை இரவில் தரவேண்டுமா டாக்டர்?"
"மாத்திரை அவருக்கு அல்ல. உங்களுக்குதான்."///

இருப்பதிலேயே இதுதான் ஹைலைட்!!!

ஆமாம் மற்ற ஜோக் எல்லாம் உங்க அனுபவமா?:))))

மங்களூர் சிவா said...

//
குசும்பன் said...
//"உங்க கணவர் பூரண ஓய்வெடுக்கணும். தூக்க மாத்திரைகளை பெற்றுக் கொள்ளுங்கள்!"
"அவருக்கு காலையில இந்த மாத்திரைகளை தர வேண்டுமா இல்லை இரவில் தரவேண்டுமா டாக்டர்?"
"மாத்திரை அவருக்கு அல்ல. உங்களுக்குதான்."///

இருப்பதிலேயே இதுதான் ஹைலைட்!!!

ஆமாம் மற்ற ஜோக் எல்லாம் உங்க அனுபவமா?:))))
//
ரிப்பீட்டேய்

கோபிநாத் said...

\\"என் மனைவியை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போகும்போது வாசல்படியிலேயே பிரசவம் ஆயிடுச்சு!"
"அப்ப 'டோர் டெலிவரி'ன்னு சொல்லு...!"\\


எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க....;)))

மங்கை said...

:-)))))))))

haa haa haa

சேதுக்கரசி said...

நீங்க டாக்டர் தானே.. இதுல எந்த ஜோக் உங்களுக்குப் பொருந்தும்? ;-)

அபி அப்பா said...

டாக்டர்!ஒரு நல்ல எழுத்தாளரை போல "அனுவவிச்சு" எழுதியிருக்கீங்க:-)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

காட்டாறு said...

ஹா ஹா ஹா.... சிரிப்பு மருந்து குடுத்த டாக்டர்ன்னு உங்களுக்கு ஒரு பட்டம் கொடுத்திறலாமா?

புதுகைத் தென்றல் said...

நல்ல ஜோக்ஸ். ரசித்தேன், சிரித்தேன்.

நன்றி.

ஜெகதீசன் said...

:))