Thursday, January 17, 2008

மங்கைக்காக....

மங்கை மீது எனக்கு ஒரு அபரீதமான மரியாதை உண்டு. இதுவரை அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் எனக்கு அவரோடு கூட நீண்ட காலம் பழகிய மாதிரி ஒரு feeling எப்பவும் உண்டு.....தற்சமயம் எனக்கு இருக்கும் வேலை சுமையில் தமிழ்மணம் பக்கம் வர இயலாவிட்டாலும், அவ்வப்போது எட்டி பார்த்துவிட்டு செல்கிறேன்.

என்னுடைய எவ்வளவோ அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ள மிகவும் ஆசைதான். சில சமயங்களில் நான் தனியாக உட்கார்ந்து யோசிக்கும் போது 'நான் கடந்துவந்த பாதை" எனக்கு பெரிய மலையாகத் தெரியும். இதில் அவ்வப்போது நாம் சந்திக்கும் நல்ல நட்புகள்....

சிறுவயதில் ஆண்களோடு அதிகம் பழகக் கூடாதுஎன்கிற சூழலில் வளர்ந்துவந்த எனக்கு அப்புகுட்டனின் நட்பும், நடனமும், சுறுசுறுப்பும் அதிகமாக என்னைக் கவர்ந்தது. அதிலும் என் சிநேகிதி சந்திரிகா அவன் மீது வைத்திருந்த காதல் ........
ஆனால் அவன் கடைசியில் குடி போதைக்கு ஆளாகி துரும்பாக இளைத்து.. ....அவனை நான் பார்த்த நேரத்தில் என்னால் எந்த உதவியும் பண்ண முடியவில்லை...
இது நான் மிகவும் கவலையுடன், ஆத்மார்த்தமாக உணர்ந்து எழுதியது. ..

11 comments:

Thekkikattan|தெகா said...

ரொம்ப அனுபவிச்சுப் படித்தப் பதிவு, டாக். ஒரு தமிழ் சினிமாவிற்கே உரித்தான கதை போல் இருந்தாலும், உண்மையில் நடந்தது என்று நினைத்து படிக்கும் பொழுது, கஷ்டமாக இருந்தது.

ஒரு நாலைஞ்சு பேர்கிட்ட படிச்சி சொல்லியிருப்பேன், ஃபோன்லேயே...

இரண்டாம் சொக்கன் said...

டாக்டர்...

பயங்கர பிஸியா...ஓடீட்டே எளுதுன மாதிரி இருக்கு பதிவு...இன்னும் கொஞ்சம் சேர்த்திருக்கலாம்.

ஒரு பாட்டி பதிவு, அப்புறம் செவிலியர்கள், மன அழுத்தம் பத்திய பதிவுகள்..அப்பாலிக்கா நீங்க் சேம்சைட் கோல் போட்ற ஜோக்ஸ் இதெல்லாம் சேர்த்திருக்கலாம்...சேர்த்திருக்கனும்.

மங்கை said...

நன்றி டாக்டரம்மா இந்த அன்புக்கு..ம்ம்ம்

//சில சமயங்களில் நான் தனியாக உட்கார்ந்து யோசிக்கும் போது 'நான் கடந்துவந்த பாதை" எனக்கு பெரிய மலையாகத் தெரியும். இதில் அவ்வப்போது நாம் சந்திக்கும் நல்ல நட்புகள்....///

உண்மை...

ரொம்ப நல்ல பதிவு அது...ரொம்ப நெகிழ்வா இருந்துச்சு...ஹ்ம்ம்

துளசி கோபால் said...

ஆத்மார்த்தமா எழுதுனது எப்படி மக்கள் மனசுலே இடம் புடிச்சுருதுன்னு பாருங்க.

வேலைகூடுதல்னு எங்களைப் பார்க்காம இருக்க மாட்டீங்கதானே? :-)))

காட்டாறு said...

அப்புக்குட்டன் பதிவு மனசை தொட்டது. ம்ம்.. ஆனாலும் ஒரேடியா சின்னப் பதிவா எழுதிட்டீங்க.

delphine said...

ஆமா தெகா, நானும் ரொம்ப வருத்தப்பட்டு எழுதினது...

ரொம்ப பிசிதான் சொக்கரே..வேலை அழுத்தம் மனதை அழுத்திவிடும் போல உள்ளது... மார்ச் மாதம் நெருங்குகிறது அல்லவா! அதிக வேலை.ஆனாலும் எனக்கு இந்த டாக்டர்கள் நர்சுகள் ஜோக்குகள் ரொம்பவே பிடிக்கும். இப்பல்லாம் நம்ப சாஃட்வெர் இஞ்சினீயர்கள் பற்றியும் நிறைய ஜோக்குகள் வருகின்றன..

நன்றி மங்கை.. பேனா நட்பு போல...நானும் மகளிருக்காக என்று ஒரு பதிவு போட்டு என்னை கவர்ந்த பதிவுலக பெண்மணிகளை பற்றி எழுத நினைத்துள்ளேன். எல்லாம் நினைப்போடுதான்.ஒன்றும் செயல் படுத்த இயலவில்லை..:(

நன்றி துளசி...
என் நட்புகள் யாவும் மிகவும் emotional (உங்களையும் சேர்த்துதான்.)


காட்டாறு... நன்றி.

தென்றல் said...

ம்ம்ம்.. இப்பபதான் கவனித்தேன்!

நெகிழ்ச்சியான பதிவு(தான்), டாக்டர்!

கோபிநாத் said...

மனதில் பதிந்த பதிவு அது. :)

கண்மணி said...

குட் சாய்ஸ்.நல்ல பதிவு.
மங்கை மீது மட்டும்தானா?அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

delphine said...

நன்றி தென்றல் & கோபி தம்பி.

கண்மணி..அவ்வ்வ்வ்

கோபிநாத் said...

\\கண்மணி said...
குட் சாய்ஸ்.நல்ல பதிவு.
மங்கை மீது மட்டும்தானா?அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

January 18, 2008 4:37 AM


delphine said...
நன்றி தென்றல் & கோபி தம்பி.

கண்மணி..அவ்வ்வ்வ்\\


எல்லாரும் ஒரு அவ்வ்வ்வ்வ் போடுறிங்க அதனால நானும் ஒரு அவ்வ்வ்வ்வ் போட்டுகிறேன்.!