Saturday, January 12, 2008

"அபார்ஷன்கள்"

திலகவதியின் அம்மா வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு பிரசவ ரூமுக்குள் செல்வதை வேடிக்க பார்க்க ஒரு பெரிய கூட்டமே இருந்தது. மிக ஏழ்மையானவள் என்பதை பார்த்த உடனே சொல்ல முடியும். திலகாவின் தந்தை ஒரு ஓரமாக நின்று அழுதுக் கொண்டிருந்தார். அவள் அண்ணனின் வாயிலிருந்து வீரமான வார்த்தைகள்.. " இப்பவே அவனை ஒழித்து கட்டுகிறேன்.. ..... etc.. etc..அத்தனை அசிங்கமான வார்த்தைகள்.. கேட்பவரை கூசச் செய்தது...ஒரு குடிகாரன்.. பொறுப்பற்றவன்...தகப்பனும் அப்படித்தான். வேலைக்கு செல்வதில்லை. அதனால் தான் திலகா வேலைக்குச் செல்ல வேண்டியதாகிவிட்டது.

காலை மணி ஏழு.. செவிலியர்களெல்லாம் பிரார்த்தனை போய்விட்டு ட்யூட்டி மாறும் நேரம்.. ... பரபரப்பு.. ஆக்ஸிஜன் சிலிண்டர் ... செவிலியர்கள் அங்குமிங்கும் ஓட்டம்.. .... திலகாவிற்கு
18 வயதுதான் இருக்கும்.. பிரச்னை பெரிது என்பது பார்த்த உடனே தெரிந்தது. very Bad odour was emanating from her body.
மூச்சுவிட கஷ்டப்பட்ட திலகாவை மயக்க மருத்துவர் "intubate" செய்து ஒரு ventilator-ல் கனெக்ட் செய்தார்.. வித விதமான மருந்துகள்...எதனால் இப்படி collapse ஆகிவிட்டாள் என்று யாரும் காரணம் கேட்கவில்லை. முழு மூச்சாக அவளை resuscitate பண்ணுவதில்தான் இருந்தார்கள்... ஒரு வழியாக அவள் stabilise ஆனதும் நான் வெளியில் வந்து திலகாவின் அம்மாவிடம் என்ன நடந்தது என்று கேட்டேன்...
ஒனபதாம் வகுப்புவரை படித்திருந்த திலகா குடும்ப சூழ்நிலை காரண்மாக ஒரு துணி கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். முதலாளிக்கும் அவளுக்கும் தொடர்பு.. அவர் திருமணமானவர்.. ..3 மாத கருவை ஒரு மருத்துவச்சி எருக்கம் பால் குச்சியை கர்ப்பப்பைக்குள் திணித்து.. ஒரு சூப்பரோ சூப்பர் அபார்ஷன்.. செப்டிக்காகி மிகவும் சீரியசாகிவிட்டாள்.
இது நடந்தது 1978-ம் வருடத்தில்... அப்பொழுதுதான் Inj Gentamicin-ம் Bactrim மாத்திரைகளும் அதிகமாக மருத்துவ உலகத்தில் உபயோகிக்க ஆரம்பித்திருந்தார்கள்... இரண்டுமே toxic to the kidneys.. 21 வது நாள் திலகா இறந்துவிட்டாள்....
இந்த பெண்மணியின் இறப்பு என்னை, என் மன நிலையை அந்த காலத்தில் மிகவும் பாதித்தது...இளம் பெண்களின் இறப்பு ... I was just not able to accept it in my life.... இத்தனை வருடங்கள் கழித்தும் எனக்கு திலகாவின் முகம் நியாபகம் உள்ளது.... .. ..
சில நாட்களுக்கு முன்பு ஒரு article about abortion வாசித்தேன். அபார்ஷன்கள் நம் நாட்டில் குறைந்துவிட்டது என்று நினைத்து கொண்டிருந்த எனக்கு இது ஒரு ஆச்சர்யத்தை கொடுத்தது.. நம் இளம் பெண்கள் இப்படி பட்ட சாவை தேடி செல்வது ஏன்?

ஒரு வருடத்தில் அபார்ஷன் செய்துக்கொள்ளும் 11 மில்லியன் இந்திய மகளிரில் 80,000 பேர் அதன் complications-L இறந்துவிடுகிறார்கள். இவர்கள் இறப்பதற்கான காரணம், " unsafe abortions". 78% of the pregnancies are unplanned among which 25% are unwanted...
These abortios and death due to such unsafe abortions are always a great concern to the family, society and nation....
1978- க்கும் 2008-க்கும்---- 30 வருடங்களுக்கு பிறகும் அதிக வித்தியாசம் இல்லை. .(I mean in the no: of abortions done )
sad! isn't it?
:(

22 comments:

அபி அப்பா said...

:-(((

காட்டாறு said...

இந்த பதிவை படிச்சதும்.. எனக்கு மனதில் தோன்றியது...காண்ட்ராசெப்டிவ் மெத்தட்ஸ் தெரிஞ்சிக்கிறது/சொல்லிக் கொடுப்பது எவ்வளவு அத்தியாவசியமானது என்பது தான்.

//1978- க்கும் 2008-க்கும்---- 30 வருடங்களுக்கு பிறகும் அதிக வித்தியாசம் இல்லை//
இன்னும் படிப்பறிவில்லாதவர்களும், ஏழ்மைக் கோட்டின் கீழ் இருப்பவர்களின் சதவிகிதம் மாறவில்லையே டாக்டர். :(

மின்னுது மின்னல் said...

ம்

என்னத்த சொல்ல...

துளசி கோபால் said...

வாங்க டெல்ஃபீன்.

விடுமுறை முடிந்துவிட்டதா?

அபார்ஷன் விஷயத்தில்..... குழந்தை வேணுமுன்னு தவிக்கிற பெண்களுக்கு இயற்கையாவே கருச்சிதைவு ஏற்பட்டு,
அது காரணம் மன அழுத்தம் வர்றது சமூகத்தில் இன்னொரு பக்கம் இல்லையா?

ஆனா திட்டமிட்டுக் குழந்தை பெறுவதுதான் நல்லதுன்னு தோணுது. கடவுள் கொடுத்தார்ன்னு சொல்லிச் சொல்லிதான் ஒரு பக்கம் ஜனத்தொகையை ஏற்றிவச்சுருக்கோம்.

குப்பைத்தொட்டிக் குழந்தைகள்
அனாதை ஆசிரமங்கள் எல்லாம் என்ன சொல்லவருதுன்னும் பார்க்கணும்.

Boston Bala said...

அபார்ஷனுக்கு பதிலாக பதினெட்டிலேயே குழந்தைப் பெற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்கிறீர்களா?

ஏன் மூன்று மாதம் வரைத் தள்ளிப் போட்டார்கள்? அதற்கு முன்பே கண்டுபிடிக்கும் நுட்பங்கள் அப்போது கிடையாதா? இப்போதாவது கிடைக்கிறதா?

அவளே சிறுமி. அபார்ஷனுக்கு பதிலாக அவளுக்கும் அந்தச் சின்ன வயதில் குழந்தை பிறந்து அதுவும் கஷ்டப்பட வேண்டுமா?

மங்களூர் சிவா said...

படிச்சதுக்கு ஒரு அட்டெண்டன்ஸ்

மங்களூர் சிவா said...

வருத்தமான விஷயம்தான்.

J K said...

//காட்டாறு said...
இன்னும் படிப்பறிவில்லாதவர்களும், ஏழ்மைக் கோட்டின் கீழ் இருப்பவர்களின் சதவிகிதம் மாறவில்லையே டாக்டர். :(//

ஏமாத்தறவன் எப்படியெல்லாம் ஏமாத்தலாம்னு தெரிஞ்சுகிட்டான். ஏமாறவங்கதான் இன்னும் விழிப்படையல...

மங்கை said...

படித்த பெண்ணோ, படிக்காதவளோ, பணம்க்காரப்பெண்ணோ இல்லையோ, யாராக இருந்தாலும் தன்னை பாது காத்துக் கொள்ளும் வழிமுறைகளை தெரிந்து கொள்ள வேண்டும்...

அதை சொல்லிக்கொடுப்பது நமது கடமை...இந்த கொடுமையை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தும், அதற்காரணங்கள் தெரிந்திருந்தும்,பெற்றோர்களும், கல்வியாளர்களும், ஏன் இந்த சமுதாயமும் ஏன் இன்னும் தூங்கிக் கொண்டிருகிறார்கள் என்று தெரியவில்லை..

என் வீட்டில் நடக்காதவரை எனக்கு சந்தோஷம் என்ற மனோபாவம்..

இதையெல்லாம் படித்தால் மனதுக்கு பாரமாக இருக்கிறது..

இந்த கேஸ்ல பல issues இருக்கு டாக்ட்ரம்மா...

இரண்டாம் சொக்கன் said...

ஆத்தா...

எப்ப ஊர்ல இருந்து வந்தீங்க...எட்டாந்தேதியே வந்திருவீகன்னு பார்த்தேன்..கொஞ்சம் லேட்டா அட்டெண்டென்ஸ் போட்ருக்கீங்க...

மத்தபடி பதிவுபத்தி சொல்லனும்னா....

எய்ட்ஸ் விழிப்புணர்வுன்னு எவ்வளோவ் பணம் செலவு பண்றோம்...அதுல கொஞ்சம் எடுத்து கருகலைப்பு சம்பந்தமா விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்....அரசாங்க மருத்துவமனை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆலோசனை மையங்கள் வைத்து செயல்பட்டால் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கலாம்...

நீங்க என்ன நினைக்கறீங்க டாக்டரம்மா!

பாச மலர் said...

//1978- க்கும் 2008-க்கும்---- 30 வருடங்களுக்கு பிறகும் அதிக வித்தியாசம் இல்லை. .(I mean in the no: of abortions done )
sad! isn't it?//

ஆமாம்..முற்றிலும் உண்மை.
ஏழ்மையும் அறியாமையும் காரணம் என்று ஒரு புறம் கூறினாலும்...படித்த வசதியுள்ள பெண்கள் கூட இதில் விதி விலக்கல்லவே? கவனக்குறைவு...எதையுமே வந்த பின் யோசித்துப் பழகிப் போய்விட்ட சூழல்..நேரமின்மை..இப்படி நிறைய காரணங்கள் கூறலாம்..

கோபிநாத் said...

;((

Thekkikattan|தெகா said...

Doc,

ம்ம்.. என்னாத்தை சொல்வது. இது போன்று நாடுகள் தோறும், கிராமங்கள் தோறும் நடந்தே வருகிறது. கணக்கில் வந்தது நீங்கள் கூறும் எண்ணிக்கை, இன்னும் கணக்கில் வராமல் எத்தனையோ.

இந்த கடவுள் கொடுத்ததாக பிள்ளைகளை எண்ணிக்கையற்று பெற்றுக் கொள்பவர்களை சுனாமி மாதிரி ஏதாவது வந்து வாரிச் சென்றால்தால் உண்டு :)).

//1978- க்கும் 2008-க்கும்---- 30 வருடங்களுக்கு பிறகும் அதிக வித்தியாசம் இல்லை. .(I mean in the no: of abortions done )
sad! isn't it?
:( ///

இது எதிர்காலத்தில் குறையப் போகிறது என்று நினைக்கிறீர்களா, எனக்கு நம்பிக்கையில்லை. வேண்டுமானல் இந்த நவீன மருத்துவ முறைகள் மக்களுக்கு எப்படி இதனை(கர்ப்பமுற்ற பிறகு) ஒழித்தழிக்களாமென்பதை கையகப் படுத்தித் தராலாமே தவிர, மக்களிடத்தில் விழிப்புணர்வு என்பதெலாம் போய் சேர்ந்தாலும், அந்த நேரத்தில் .......

கண்மணி said...

வெல்கம் பேக்
முதல் பதிவுலேயே கடமை உணர்ச்சியா

ம்ம்ம் நடத்துங்க....

delphine said...

அபி அப்பா :)

காட்டாறு, காண்ட்ராசெப்டிவ்ஸ் பற்றி அந்த காலத்தில் பேச ஆரம்பித்தாலே ஏதோ கெட்ட வார்த்தை என்று ஒதுங்கிவிடுவார்கள். ஏழ்மைக்கோடு-- அது எப்படி, எப்போ மாறும்?

மின்னுதுமின்னல்.. நன்றி..

வாங்க துளசி..விடுமுறை முடிந்து நல்லபடியாக வந்து சேர்ந்துட்டேன்....ஆமா துளசி எத்தனை பெண்களுக்கு குழந்தைகள் இல்லாமல் கஷ்டப்படுவதை பார்க்கும் போது கஷ்டம் தான்... எப்பவுமே நம் weakness க்கு கடவுளை கூட்டு சேர்த்துக்கொள்கிறோம்.

delphine said...

பாஸ்டன் பாலா... வாங்க!
அபார்ஷனுக்கு பதிலாக பதினெட்டிலேயே குழந்தைப் பெற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்கிறீர்களா?/////// இல்லை பாலா.. நான் அப்படி சொல்லலை. அந்த பெண்ணின் இயலாமை குடும்ப சூழ்நிலை..ஒரு அன்பை, ஆதரவை எதிர்பார்த்து சென்றிருக்கலாம்.
1970-களில் pregnancy test used to take like 3 days to get the result. இப்ப மாதிரி 30வது நாளில் OTC-ல் pregnancy kit வாங்கி டெஸ்ட் செய்ய முடியாது...
அவளே சிறுமி. அபார்ஷனுக்கு பதிலாக அவளுக்கும் அந்தச் சின்ன வயதில் குழந்தை பிறந்து அதுவும் கஷ்டப்பட வேண்டுமா?//
30 வருடத்திற்கு முன்பு 15 வயதிலே பெண்களுக்கு திருமணமாகிவிடும்..however this girl would not have thought about giving birth...that would have been the greatest STIGMA ..

delphine said...

மங்களூர் சிவா நன்றி..


ஏமாத்தறவன் எப்படியெல்லாம் ஏமாத்தலாம்னு தெரிஞ்சுகிட்டான். ஏமாறவங்கதான் இன்னும் விழிப்படையல...//
கரீட் ஜேகே.

மங்கை.. நாம் இருவரும் சேர்ந்து இது பற்றி ஒரு class எடுக்கலாமா? :)
இந்த கேஸ்ல பல issues இருக்கு டாக்ட்ரம்மா/// என்ன issues மங்கை?

delphine said...

சொக்கரே வந்துட்டேன்... நல்லபடியா என் விடுமுறை போனது.. ஆனால் வந்து "ஜெட் லாக்" னு சொல்வாங்களே அது போல ஆந்தை மாதிரி முழிச்சுட்டு உட்கார்ந்திருக்கேன்... இந்த 'ஜெட் லாக்' பற்றி யாராவது ஒரு தனி பதிவு போட்டிருக்கலாம்..ஹ்ம்ம்.
நீங்க சொல்கிற மாதிரி அபார்ஷன்களுக்கும் ஒரு மையம் வைத்து விழிப்புணர்வு கொணாரலாம்...

பாசமலர்.. படித்த பெண்கள், படிக்காதவர்கள் யாரும் இதற்கு விதிவிலக்கல்ல..i wish people dont go to the quacks for such problems.


கோபி தம்பி :)

delphine said...

தெகா..
30 வருடங்களுக்குள் இந்த அபார்ஷன்கள் குறைந்திருக்கும் என்றே நினைத்து கொண்டிருந்தேன். மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க இந்த மாதிரியான பிரச்னைகளும் அதிகமாகின்றன. நான் வேலை பார்த்த இடங்களில் கருச்சிதை செய்வது கிடையாது அதனால்தானோ என்னவோ எனக்கு அந்த article படித்ததும் மிக கவலையாக இருந்தது.

கண்மணி, நன்றி... எப்படியிருக்கீங்க டீச்சர்?

மங்கை said...

டாக்டரம்மா...

இன்னும் ஜெட்லாக்குல இருக்கீங்களா

வாங்க வாங்க..வந்து பதிவு போடுங்க
உங்களுக்கு ஒரு டேக் அழைப்பு

http://manggai.blogspot.com/2008/01/blog-post_16.htm

தஞ்சாவூரான் said...

மாணவப் பருவத்தில், உடலியல் கல்வியைப் போதித்து விழிப்புணர்வு ஊட்டும்வரை, முறையற்ற கருக்கலைப்புகள், அது சம்பந்தப்பட்ட சாவுகள் தவிர்க்கமுடியாதவை.

இப்போதுள்ள ஓபன் மீடியா கலாச்சாரத்தில், உடல்களைத் தாராளமாகப் பார்க்க முடிகிறது. உடலியல் பற்றித்தான் சரியான அறிவு இல்லை.

சேதுக்கரசி said...

கொடுமையா இருக்குதுங்க :-(

ஆமா, Bactrim பத்தி ஒரு விசயம் சொல்லியிருக்கீங்களே.. நமக்கு ஒருவேளை ஒரு கிட்னி தான் இருக்கக்கூடும்னா அந்த மருந்தைத் தவிர்க்கணுமா? ஏன் கேட்கிறேன்னா சமீபத்தில் ஒருமுறை அதை சாப்பிட்டேன் (UTI-க்காக), இனிமேல் அதைத் தவிர்க்கணுமான்னு யோசிக்கணும். ஏன்னா எங்க குடும்பத்தில் (parent & siblings) 3 பேருக்கு ஒரு கிட்னி தான் இருக்குன்னு அவங்களுடைய 40வது வயதுக்கு மேல் தெரியவந்திருக்கு!