Sunday, January 20, 2008

சிரிங்க!

தமிழ்மணம் பக்கம் எட்டி பார்த்தேன்... ஒரே சீரியஸ் பதிவுகள்!!
வாங்க கொஞ்சம் சிரித்துவிட்டு போங்க!
நம்ப சாஃப்ட்வெர் இஞ்சினீயர்கள பற்றி இன்னும் ஒரு ஜோக்குகூட பார்க்கலை.. ஆனாலும் இந்த டாக்டர்கள் ஜோக்குதான் என் ALL TIME Favourite.. enzzzzoyyyyyy!


"அந்த டாக்டர் ஒரு நாளைக்கு குறைஞ்சது 100 பேரையாவது பாப்பாரு!"

"பெரிய டாக்டரா இருப்பாரு போல இருக்கு!"

"நீங்க வேற! பேஷன்ட் இல்லாம கிளினிக் வாசல்ல நின்னு போற வர்றவங்க 100 பேரையாவது பாப்பாருன்னு சொல்ல வந்தேன்!"
----------------------------------------------------------
"டாக்டர், என் கை பயங்கரமா நடுங்குது."

"நீங்க அதிகம் குடிப்பீங்களா?"

"எங்க டாக்டர், அதான் கை நடுக்கத்துல நிறைய கீழ சிந்திடுதே."
-----------------------------------------------------------
டாக்டர்: அந்த பேஷண்ட் தொல்லை தாங்க முடியலை?

நர்ஸ்: ஏன் டாக்டர்?

டாக்டர்: நான் தான் அவரோட குடும்ப டாக்டர். தினமும் பார்க்கும் போதெல்லாம் ‘டாக்டர் எனக்கு ஞாபக மறதி வியாதி இருக்குனு' ஆரம்பிச்சு அரைமணி நேரம் மறு ஒலிபரப்பு மாதிரி கொல்றாரு.
---------------------------------------------------------------
ஒருவர்: உங்க ஆஸ்பத்திரிக்கு நோயாளிகளே வர்றதில்லேங்கறீங்க.. அப்புறம் எதுக்கு ஏழெட்டு நர்ஸை வேலைக்கு வச்சிருக்கீங்க..?
டாக்டர்: அட்லீஸ்ட் அவங்கள்லே யாருக்காச்சும் உடம்புக்கு வந்தா என்கிட்டதானே காண்பிக்கணும்!
-----------------------------------------------------------------
"டாக்டர் நீங்க கொடுத்த மாத்திரைகள்னால சக்கரை வியாதியே குணமாயிடுச்சு!"
"நான் கொடுத்த மாத்திரைகள்ல எது சக்கரை வியாதிய குணப்படுத்திச்சின்னு கொஞ்சம் சொன்னீங்கன்னா சௌரியமா இருக்கும்!"
---------------------------------------------------------------------
"உங்க கணவர் பூரண ஓய்வெடுக்கணும். தூக்க மாத்திரைகளை பெற்றுக் கொள்ளுங்கள்!"
"அவருக்கு காலையில இந்த மாத்திரைகளை தர வேண்டுமா இல்லை இரவில் தரவேண்டுமா டாக்டர்?"
"மாத்திரை அவருக்கு அல்ல. உங்களுக்குதான்."
------------------------------------------------------------------------------
"அந்த டாக்டர் போலின்னு கண்டுபிடிச்சிட்டியா, எப்படி?"

"கால்ல வெடிப்பு இருக்குதுன்னேன் உள்ளே போனவர் 'கம்' பாட்டிலை எடுத்துட்டு வந்து ஒட்ட முயற்சிக்கறாரு!"
-------------------------------------------------------------------------------------------------
"என் மனைவியை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போகும்போது வாசல்படியிலேயே பிரசவம் ஆயிடுச்சு!"
"அப்ப 'டோர் டெலிவரி'ன்னு சொல்லு...!"
----------------------------------------------------------------------------------
MSN JOKES

Friday, January 18, 2008

விந்தையான மனிதர்கள்.

சில நேரங்களில் சில மனிதர்கள்....
சில நம்ப முடியாத, வேதனை தரும் நிகழ்ச்சிகளை நாம் சந்திக்க நேரும்போது அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் அவ்வளவு எளிதாக வருவதில்லை. இப்படி கூட உலகில் நடக்குமா என்கிற வினா அடிக்கடி எழுவது உண்டு.
அப்படித்தான் நான் இன்று சந்திக்க நேர்ந்த ஒரு விஷயம்... விஷயம்? அல்ல ஒரு நிகழ்ச்சி.. இதிலிருந்து மீழ எத்தனை நாட்கள் ஆகுமோ!!
தமிழ் செல்வியும் அவள் கணவர் செல்வமும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள். கோவை கல்லூரியில் சேர்ந்துப்படிக்கும் போது காதலித்து க் குடும்பத்தினரின் மனக்கஷ்டத்தை சம்பாதித்து, கல்யாணம் செய்து, சென்னையில் ஒரு பெரீய சாஃட்வேர் கம்பெனியில் நல்ல வேலையில் இருந்தார்கள். வீட்டிலுள்ள பெரியவர்களும் சமாதானமாகி இவர்கள் வீட்டிற்கு வந்து போய் இருந்தார்கள்.
செல்வத்திற்கு கல்லூரி நாட்களில் தொத்திக்கொண்ட ஒரு பழக்கம் "பான் பராக்" போடுவது. திருமணம் ஆகி ஒரு வருடத்தில், மலக்குடலில் புற்று நோய் வந்து கஷ்டப்பட்டார். மலக்குடலை வெளியில் வைத்து தைத்து அவருக்கு chemotherapy and Radiation என்று மாற்றி மாற்றி வைத்தியம். தமிழ்செல்வி மிகவும் friendly type. சிரித்த முகம். அத்தனைக் கஷ்டங்களிலும், தன் கணவரை நல்லபடியாகக் கவனித்துக் கொள்வார். வார்டிலுள்ள எல்லா செவிலியர்களிடமும் நல்ல பழக்கம். செல்வமும் வைத்தியம் பலனளிக்காமல் ஒரு வருடத்திற்கு முன்பு இறந்துவிட்டார். இறக்கும் போது செல்வத்தின் வயது 31.
கணவனின் பதினாறாவது காரியம் முடிந்தவுடன் இந்த இளம் பெண், தன் பெற்றோரின் ஆதரவில் தொடர்ந்து வேலைப் பார்த்து வந்தாள்.

கடந்த ஒரு வாரமாக நான் அவளை ஆஸ்பத்திரியில் ஒரு ஆணுடன் பார்க்க நேரிட்டது. ஒரு வித்தியாசமும் தெரிந்தது.. கழுத்தில் புதிதாக மஞ்சள் கயிறு..,, என்னைப் பார்ப்பதைக் கொஞ்சம் தவிர்த்தாள்.......

இன்று அவளாக என்னைத்தேடி வந்தாள். மனம் விட்டுப் பேசினாள். கண்களிலிருந்து மாலை மாலையாக கண்ணீர்.

செல்வம் இறந்தபிறகு, செல்வத்தின் தம்பி ( விஜயகுமார்) தமிழ் செல்வியை திருமணம் செய்ய விரும்பி இரு வீட்டினரின் அனுமதிப் பெற்று ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். கல்யாணத்திற்கு முன்பு
விஜயகுமார் பற்றி தமிழுக்கு அதிகம் தெரிய வாய்ப்பில்லை. அவர் ஒரு marketing executive. ஊர் ஊராக சுற்றும் வேலை. அடிக்கடி பெங்களூரு ,மும்பே, கொல்கட்டா என்று ஊர் சுற்றுபவர். தமிழை விட இரண்டு வயது இளையவர். வெளியூருக்கு சென்றால் அங்கிருந்து தமிழுக்கு ஒரு மெஸ்ஸேஜ்.. ஒரு பத்தாயிரம் ரூபாய் அவர் அக்கௌண்டில் செலுத்தும்படியிருக்கும். இரண்டு முறை அவள் உடனே பணம் transfer செய்தாள். அதன் பிறகு சந்தேகம் வரவே நிதானித்தாள். இதற்கிடையில் விஜயகுமார் இவளுடன் தங்குவதை குறைத்து கொள்ள ஆரம்பித்தார். சந்தேகம் வலுக்கவே, தமிழ் தனது உறவினரை வைத்து பெங்களூரில் என்ன செய்கிறார் என்று உளவு பார்க்க ஆரம்பித்தாள்.....
விஜயகுமார் ஒவ்வொறு முறையும் தன்னை விட மிக அதிகமான வயதுள்ள பெண்களுடனே ஹோட்டலில் தங்குவார். யாருக்கும் அறவே சந்தேகம் வராது. பார்ப்பவர்களுக்கும் அவர் சகோதிரியாகவோ அல்லது நெருங்கிய பெரியம்மவாகவோதான் தெரியும். அதனால் பிரச்னைகள் வர வாய்ப்பு இல்லை. இப்படி ஒரு வினோதமான sexual perversion. ஒரு வழியாக மன நல மருத்துவரை சந்தித்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும்போது அடுத்த பேரிடி.....
விஜயகுமாரின் கழுத்தில் ஒரு சின்ன கட்டி.. மாத்திரைகளின்( psychiatric drugs) தாக்கமாகா இருக்கலாம் என்று இரண்டு வாரம் அசட்டையாக இருந்துவிட்டார்கள்...
இரத்த பரிசோதனை.... பயாப்சி.. lymphoma என்று diagnosis...

கீமோதெரபி ஆரம்பிப்பதற்கு முன்பு இளம் வயதுள்ள ஆண்களுக்கு ஒரு option உண்டு. தங்கள் விந்துக்களை சேமித்துவைப்பது... ஏனெனில் கீமோதெரபி கொடுக்கும்போது விந்துக்களின் எண்ண்ணிக்கை குறைந்து அதன் பிறகு அவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாது போய்விடும்...... (இதற்குறிய முறைய கேட்டு அறியவே என்னிடம் வந்தாள்).

மனம் கனத்துதான் போய்விட்டது.

(பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன)

Thursday, January 17, 2008

மங்கைக்காக....

மங்கை மீது எனக்கு ஒரு அபரீதமான மரியாதை உண்டு. இதுவரை அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் எனக்கு அவரோடு கூட நீண்ட காலம் பழகிய மாதிரி ஒரு feeling எப்பவும் உண்டு.....தற்சமயம் எனக்கு இருக்கும் வேலை சுமையில் தமிழ்மணம் பக்கம் வர இயலாவிட்டாலும், அவ்வப்போது எட்டி பார்த்துவிட்டு செல்கிறேன்.

என்னுடைய எவ்வளவோ அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ள மிகவும் ஆசைதான். சில சமயங்களில் நான் தனியாக உட்கார்ந்து யோசிக்கும் போது 'நான் கடந்துவந்த பாதை" எனக்கு பெரிய மலையாகத் தெரியும். இதில் அவ்வப்போது நாம் சந்திக்கும் நல்ல நட்புகள்....

சிறுவயதில் ஆண்களோடு அதிகம் பழகக் கூடாதுஎன்கிற சூழலில் வளர்ந்துவந்த எனக்கு அப்புகுட்டனின் நட்பும், நடனமும், சுறுசுறுப்பும் அதிகமாக என்னைக் கவர்ந்தது. அதிலும் என் சிநேகிதி சந்திரிகா அவன் மீது வைத்திருந்த காதல் ........
ஆனால் அவன் கடைசியில் குடி போதைக்கு ஆளாகி துரும்பாக இளைத்து.. ....அவனை நான் பார்த்த நேரத்தில் என்னால் எந்த உதவியும் பண்ண முடியவில்லை...
இது நான் மிகவும் கவலையுடன், ஆத்மார்த்தமாக உணர்ந்து எழுதியது. ..

Saturday, January 12, 2008

"அபார்ஷன்கள்"

திலகவதியின் அம்மா வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு பிரசவ ரூமுக்குள் செல்வதை வேடிக்க பார்க்க ஒரு பெரிய கூட்டமே இருந்தது. மிக ஏழ்மையானவள் என்பதை பார்த்த உடனே சொல்ல முடியும். திலகாவின் தந்தை ஒரு ஓரமாக நின்று அழுதுக் கொண்டிருந்தார். அவள் அண்ணனின் வாயிலிருந்து வீரமான வார்த்தைகள்.. " இப்பவே அவனை ஒழித்து கட்டுகிறேன்.. ..... etc.. etc..அத்தனை அசிங்கமான வார்த்தைகள்.. கேட்பவரை கூசச் செய்தது...ஒரு குடிகாரன்.. பொறுப்பற்றவன்...தகப்பனும் அப்படித்தான். வேலைக்கு செல்வதில்லை. அதனால் தான் திலகா வேலைக்குச் செல்ல வேண்டியதாகிவிட்டது.

காலை மணி ஏழு.. செவிலியர்களெல்லாம் பிரார்த்தனை போய்விட்டு ட்யூட்டி மாறும் நேரம்.. ... பரபரப்பு.. ஆக்ஸிஜன் சிலிண்டர் ... செவிலியர்கள் அங்குமிங்கும் ஓட்டம்.. .... திலகாவிற்கு
18 வயதுதான் இருக்கும்.. பிரச்னை பெரிது என்பது பார்த்த உடனே தெரிந்தது. very Bad odour was emanating from her body.
மூச்சுவிட கஷ்டப்பட்ட திலகாவை மயக்க மருத்துவர் "intubate" செய்து ஒரு ventilator-ல் கனெக்ட் செய்தார்.. வித விதமான மருந்துகள்...எதனால் இப்படி collapse ஆகிவிட்டாள் என்று யாரும் காரணம் கேட்கவில்லை. முழு மூச்சாக அவளை resuscitate பண்ணுவதில்தான் இருந்தார்கள்... ஒரு வழியாக அவள் stabilise ஆனதும் நான் வெளியில் வந்து திலகாவின் அம்மாவிடம் என்ன நடந்தது என்று கேட்டேன்...
ஒனபதாம் வகுப்புவரை படித்திருந்த திலகா குடும்ப சூழ்நிலை காரண்மாக ஒரு துணி கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். முதலாளிக்கும் அவளுக்கும் தொடர்பு.. அவர் திருமணமானவர்.. ..3 மாத கருவை ஒரு மருத்துவச்சி எருக்கம் பால் குச்சியை கர்ப்பப்பைக்குள் திணித்து.. ஒரு சூப்பரோ சூப்பர் அபார்ஷன்.. செப்டிக்காகி மிகவும் சீரியசாகிவிட்டாள்.
இது நடந்தது 1978-ம் வருடத்தில்... அப்பொழுதுதான் Inj Gentamicin-ம் Bactrim மாத்திரைகளும் அதிகமாக மருத்துவ உலகத்தில் உபயோகிக்க ஆரம்பித்திருந்தார்கள்... இரண்டுமே toxic to the kidneys.. 21 வது நாள் திலகா இறந்துவிட்டாள்....
இந்த பெண்மணியின் இறப்பு என்னை, என் மன நிலையை அந்த காலத்தில் மிகவும் பாதித்தது...இளம் பெண்களின் இறப்பு ... I was just not able to accept it in my life.... இத்தனை வருடங்கள் கழித்தும் எனக்கு திலகாவின் முகம் நியாபகம் உள்ளது.... .. ..
சில நாட்களுக்கு முன்பு ஒரு article about abortion வாசித்தேன். அபார்ஷன்கள் நம் நாட்டில் குறைந்துவிட்டது என்று நினைத்து கொண்டிருந்த எனக்கு இது ஒரு ஆச்சர்யத்தை கொடுத்தது.. நம் இளம் பெண்கள் இப்படி பட்ட சாவை தேடி செல்வது ஏன்?

ஒரு வருடத்தில் அபார்ஷன் செய்துக்கொள்ளும் 11 மில்லியன் இந்திய மகளிரில் 80,000 பேர் அதன் complications-L இறந்துவிடுகிறார்கள். இவர்கள் இறப்பதற்கான காரணம், " unsafe abortions". 78% of the pregnancies are unplanned among which 25% are unwanted...
These abortios and death due to such unsafe abortions are always a great concern to the family, society and nation....
1978- க்கும் 2008-க்கும்---- 30 வருடங்களுக்கு பிறகும் அதிக வித்தியாசம் இல்லை. .(I mean in the no: of abortions done )
sad! isn't it?
:(