Wednesday, December 19, 2007

என் விடுமுறை!!!!!

ஜெட் லாக் அதிகமில்லை. எப்பொழுதும் போல் இரவு 11 மணிக்கு தூங்கி,காலை 6 மணிக்கு விழித்துவிடுவேன். எந்திரித்து கிச்சன் பக்கம் வந்தால், நமக்கு முன்பே வீட்டிலுள்ள யாவரும் விழித்து ரெடியாகி, ஆபிஸிற்கும், ஸ்கூலிற்கும் செல்ல தயாராகிவிடுகிறார்கள். 7 மணிக்கெல்லாம் வீடு அமைதியாகிவிடுகிறது. அமெரிக்கர்கள் காலையில் வேலைக்கு செல்வதை மிகவும் விரும்புகிறார்கள் போலும்...போன வாரம் முழுவதும் நம் வீட்டு குழந்தைகளுக்கு நிறைய ACTIVITIES. Basket Ball, guitar class, viola class, Regional Orchestra- இப்படியாக டைம் நன்றாக போய்விட்டது. the children have to be kept busy here and so they need to have all these activities. கணவன் மனைவி இருவரும் வீட்டு வேலைகளில் பங்கு கொள்கிறார்கள்...வட மாகணத்தை விட இங்கு வெதர் மிகவும் நன்றாக உள்ளது. கிடைக்கும் நேரங்களில் ஒரு சின்ன வாக்கிங் போய்விடுவேன். நம் ஊரில் ஆடு மாடுகள் எப்படி நிழலில் படுத்து கிடக்குமோ அது போல மான் குட்டிகளும் நிழலில் படுத்து கிடக்கின்றன. இவைகளால், காரோட்டிகளுக்கு கஷ்டமும் உண்டு.. திடீரென்று ரோடில் பாய்ந்துவிடுகின்றன......போன வாரம் ஒரு கான்சர்ட்டுக்காக எங்கள் வீட்டு குழந்தையின் ஸ்கூலுக்கு சென்றோம். 16 வயது பெண்களும், ஆண்களும் பள்ளிகூட வராந்தாவில், கைகோர்த்து கொண்டு, திரிகிறார்கள். அது அவர்களின் கல்ச்சர். (எனக்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது)


நாங்கள் இருக்குமிடம் மிகவும் சுத்தமாக உள்ளது. மக்கள் ஒரு டிசிப்ளினோடு வண்டி ஓட்டுகிறார்கள். ஸ்டாப் -sign-ல் நிறுத்தி இரண்டு பக்கமும் பார்த்து செல்கிறார்கள்.. horn சத்தமில்லை. பொறுமையாக சிக்னலில் நிற்கிறார்கள். நம் நாட்டில் மட்டும் தான் சிக்னல் பக்கம் இரண்டு போலிஸ்காரர்கள் நிற்க வேண்டிய நிலமை.


1989-ல் முதன் முதலில் நான் அமெரிக்கா வந்தபோது நான் மிகவும் சாப்பிட்ட ஒரு பொருள்.. DUNKIN DOUGHNUTS...........

SAN ANTONIO- வில்.. இந்த DOUGHNUTS கிடையாது. ஆகவே நாங்கள் CRISPY CREME என்ற ஒரு கடைக்கு சென்றோம். இங்கு DOUGHNUTS செய்வதை நாம் வெளியிலிருந்து பார்க்க முடியும். பார்க்க நன்றாகத்தான் இருந்தது.. சாப்பிட்டபோதுதான் என்னவோ மாதிரியிருந்தது..(COOKING OIL மாற்றி எத்தனை நாளாச்சோ என்று தோணியது..)


McDonalds -அப்படியேதான் உள்ளது.. அதே சுவைதான். ரெட் மீட் & போர்க் நான் சாப்பிடுவதில்லை. ஆகவே வெறும் french fries and chicken nuggets மட்டும் சாப்பிட்டேன். their apple pie is my all time favourite.


எல்லா டி.வி சேனல்களிலும் traffic update--ம் weather update-ம் எப்பொளுதும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்..

1989-களில் நானும் என் மாசியும் மிக விரும்பி பார்த்த ஒரு ப்ரோக்ராம்- the wheel of fortune- America's no:1 Game Show...... Vana white will never grow OLD??????......it is still going on! won't boredom set in by watching the same show, same person conducting the show, and the same model?

ஒரு குக்கிங் சானலும் உண்டு...what elaborate cooking they do! என்ன இருந்தாலும் நம் ஊர் சமையலுக்கு எதுவும் ஈடாகாது....

i have a great passion for reading.......இங்கு வந்து இதுவரை ஐந்து புத்தகங்கள் படித்து விட்டேன். அதில் எனக்கு மிகவும் பிடித்த புத்தகம் " the five love languages" by Gary Chapman. visit this site

As an older person, I request all the young and married couples to read this book. என் விடுமுறை மிகவும் மகிழ்ச்சிகரமாக உள்ளது.....

28 comments:

மின்னல் said...

சுட சுட வடையும் போட்டவும்....:))

delphine said...

அய்யோ மின்னல்... அது வடை இல்லை.... அது ஒரு இனிப்பான doughnut

மின்னல் said...

delphine said...
அய்யோ மின்னல்... அது வடை இல்லை.... அது ஒரு இனிப்பான doughnut
///


இது மேல சாக்லெட் கூட தடவி இருப்பாங்க அதானே சொல்லவரீங்க :))


(கமெடிக்காக சிரிப்பானுடன் சொன்னது )

ஆயில்யன் said...

மான் குட்டிகள் போட்டோவை பார்த்ததுமே புரிந்தது
ஒரு நல்ல இடத்தில்
இனிமையான விடுமுறை காலங்களில்

மீண்டும் விடுமுறை தின வாழ்த்துக்கள்

(அது வடை இல்லையா..? அய்யோ நான் வடைன்னுல்ல ஃபீல் பண்ணிட்டேன்! பரவாயில்லை வடைன்னே வைச்சிக்கிறேன் :))

delphine said...

நன்றி. கடகம்.. நம்ப ஊர் வடைய கூட இப்படி மெஷின்ல சுடலாமோ?

துளசி கோபால் said...

மான் அருமை.

டோ நட் வடையும் அருமை.

நானும் இங்கேவந்த புதுசில் 'வடை'யைப் பார்த்து மகிழ்ந்து போனேன்.

இப்பெல்லம் வீட்டுலேயே டோநட் பண்ணும் சின்ன உபகரணம் வந்துருச்சு. ஒரே சமயம் 6 செஞ்சுக்கலாம்.

வடை பண்ண 'அஞ்சலி வடை மேக்கர்' வாங்கியாந்தேன். ஊஹும்...ஒண்ணும் சரியா வரலை(-:

விடுமுறையை நல்லா அனுபவிச்சுட்டு வாங்க.

அங்கத்து கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் எப்படிப் போகுது?

Anonymous said...

/their apple pie is my all time favourite./

I love them too.

Rumya

Thekkikattan|தெகா said...

அட பாவத்தே டாக், நீங்க இருக்கிற இடத்தில டங்கின் டோனட் இல்லையா? சரி விடுங்க அடுத்த லொகேஷன் மாத்தும் பொழுது, காஃபியோட கிடைக்கும்.

என்னது நம்மூரு வடையை டோனட் மாதிரி baking பண்ணிப் பார்க்கப் போறீங்களா :-))?

காத்தெல்லாம் சுத்தமா இருக்குமே... நாசியில இறங்கும் பொழுது ஜில்லுன்னு இருக்குமே :-))

ரசிகன் said...

ஆஹா.. மான் குட்டிகளை,இயற்கையா வீட்டு பக்கத்துல பாக்கரது கற்பனைக்கே நல்லாத்தேன் இருக்கு...

ரசிகன் said...

// // the children have to be kept busy here and so they need to have all these activities. கணவன் மனைவி இருவரும் வீட்டு வேலைகளில் பங்கு கொள்கிறார்கள்...////

உண்மையிலேயே நம்ம ஊர்லயும் பின்பற்ற வேண்டிய விசயம் தானுங்க அக்கா..

ரசிகன் said...

// 16 வயது பெண்களும், ஆண்களும் பள்ளிகூட வராந்தாவில், கைகோர்த்து கொண்டு, திரிகிறார்கள். அது அவர்களின் கல்ச்சர். (எனக்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது)//

ஹிம்.. குடுத்து வைச்சவிங்க... அதுக்கெல்லாம் ஒரு குடுப்பினை வேணும். என்னோட ஸ்கூலுல ,சொம்மா திரும்பி பாத்தாக்கூட வாத்தியாருக்கு மூக்கு மேல வேர்த்திருமில்ல.. ஹிஹி..:P

இரண்டாம் சொக்கன்...! said...

பரபரப்பான சென்னை சூழலிருந்து விலகியிருப்பதே பெரிய ஆறுதலாயிருக்கும்.

இங்க மழை கொட்டி தீர்க்குது டாக்டர்,எதிரியின் இடத்தில் நுழைந்த ஜேம்ஸ்பாண்ட் போல கண்ணில் விளக்கெண்ணை ஊற்றாத குறையாய் உச்ச கட்ட அலர்ட்டுடன் வண்டியோட்ட வேண்டியிருக்கிறது.

சந்தோஷமாய் இருந்துட்டு நிதானமாய் வாங்க தாயே....

முத்துலெட்சுமி said...

உங்க விடுமுறை நன்றாக இருப்பது மகிழ்ச்சி... கிருஸ்மஸ் அண்ட் ந்யூ இயர் வாழ்த்துக்கள் உங்களுக்கு... என்ஜாய்.... :)

நாகை சிவா said...

//ஒரு குக்கிங் சானலும் உண்டு...what elaborate cooking they do! என்ன இருந்தாலும் நம் ஊர் சமையலுக்கு எதுவும் ஈடாகாது....//

அதை சொல்லுங்க :)

delphine said...

துளசி, கிறிஸ்துமஸ்னு- சொல்லமாட்டேங்கிறாங்க.. செல்லாமா HOLIDAYS-னு சொல்லுகிறாங்க..***

Thanks Ramya... kids seem to like it very much.


தெகா.. நன்றி.

delphine said...

ரசிகன்ன்ன்ன்ன்ன்ன்ன்,

தருமி said...

happy holidays........

காட்டாறு said...

//அமெரிக்கர்கள் காலையில் வேலைக்கு செல்வதை மிகவும் விரும்புகிறார்கள் போலும்...
//
சரியா சொன்னீங்க டாக்டர். நமக்கெல்லாம் காலைன்னாலே 10 மணி தான். அது அவங்களுக்கு மதியமாயிரும். ;-)

காட்டாறு said...

//மான் குட்டிகளும் நிழலில் படுத்து கிடக்கின்றன. இவைகளால், காரோட்டிகளுக்கு கஷ்டமும் உண்டு.. திடீரென்று ரோடில் பாய்ந்துவிடுகின்றன......
//

பலமுறை ரோட்டோரத்துல அடித்துப் போட்ட மானை பார்க்கும் போது, மனசு கஷ்டமா இருக்கும்.

மங்கை said...

// 16 வயது பெண்களும், ஆண்களும் பள்ளிகூட வராந்தாவில், கைகோர்த்து கொண்டு, திரிகிறார்கள். அது அவர்களின் கல்ச்சர். (எனக்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது)//

ஆஹா டாக்டரம்மா.... இது இங்கேயெ நடக்குது...
என்சாய் டாக்டரம்மா

.:: மை ஃபிரண்ட் ::. said...

//என் விடுமுறை மிகவும் மகிழ்ச்சிகரமாக உள்ளது.....//

கேட்க சந்தோஷமா இருக்கு டாக்டர். :-)

கோபிநாத் said...

நான் தான் லேட்டா...;((

அம்மா ஜாலியாக கொண்டாடுங்கள்...மான்கள் அருமை..;))

அபி அப்பா said...

டாக்டரம்மா என்னய விட்டுட்டு போனது தான் எனக்கு ஒரே வருத்தம்:-((

கண்மணி said...

hmmm enjoy madam

மஞ்சூர் ராசா said...

நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பது எங்களையும் மகிழ வைக்கிறது.

Compassion Unlimitted said...

Hi..long time here..hope your holidays have charged you up sufficiently
Wish you a very happy new year
TC
CU

குட்டிபிசாசு said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

சேதுக்கரசி said...

இப்ப FOX-ல் வியாழக்கிழமை ஒரு கேம் ஷோ வருது, Are you smarter than a 5th Grader? என்று. அதைப் பாருங்க... சத்தியமா வாரா வாரம் இந்த அஞ்சாம் கிளாஸ் குழந்தைகள் நம்மளை விட ஒழுங்கா பதில் சொல்லுதுங்க. அதுவும் போன வாரம் மிஸ் அமெரிக்கா வந்தா, அவ... smarter than a fifth grader இல்லைன்னு ஆகிப்போச்சு :-)

இன்னொரு நல்ல கேம் ஷோ, NBC-யில் வெள்ளிக்கிழமை வரும் 1 Vs. 100.