Wednesday, December 12, 2007

என் பயணம்

38000 feetabove sea level..


டிசம்பர் 8-ம் தேதி காலை 2 மணிக்கு என் ஃப்ளைட். 7th evening hospital-லிருந்து வீட்டிற்கு வரும் போது மாலை 6 ஆகிவிட்டது. கடைசி நேர பாக்கிங். ஒரு செக் லிஸ்ட் வைத்து எல்லாம் சரி பார்த்தேன். ஆனாலும் மனதில் ஒரு கவலைதான். இதற்கு முன் வெளிநாட்டிற்கு செல்லும்போது, மாசிக்குதான் ஒரே குஷி.. " என் பொண்டாட்டி ஊருக்கு போறா"- னு எல்லோருக்கும் ஒரு போன் போட்டு விடுவார்.. வீடு ரொம்ப பிசி ஆக இருக்கும். போலீஸ்காரர்களெல்லாம் நம்மை சுற்றி வேடிக்கை பார்ப்பார்கள். எல்லோரும் ஆளுக்கு ஒரு லிஸ்ட் வைத்திருப்பார்கள். மாசியும் மிகவும் அக்கறையோடு எல்லாவற்றையும் வாங்கி என்னிடம் கொடுத்து அவசியம் வாங்கி வரும்படி சொல்லுவார் . என்னை ஏர் போர்ட்டில் கொண்டு விடுவார்.(சில வருடங்கள் முன்பு வரை ஏர்போர்ட் செக்யூரீட்டி தமிழ் நாடு போலிஸ் வசம் இருந்தது. அதனால் அவரும் அவர் ஃரண்ட்ஸும் என் கூட ப்ளேன் வாசல் வரை வ்ந்து வழி அனுப்புவார்கள். )

சென்னை ஏர்போர்ட் செல்ல 'Aviation express taxi --ல் செல்ல திட்டமிட்டேன். கடசியில் என் சகோதரி தன் கார் ட்ரைவரை அனுப்பினார். ட்ரைவர் பத்தரை மணி போல கொண்டுவிட்டுவிட்டு போய்விட்டார். இரண்டு மணிக்கு கிளம்ப வேண்டிய விமானம் மூன்று மணிக்கு கிளம்பியது. புரியாத ஒரு ஃரெஞ். புரியாத ஒரு ஆங்கிலம்.. ஏதோ லேட் ஆனதற்கு மன்னிப்பு கோருகிறார் என்று மட்டும் புரிந்தது. அவசர அவசர அவசரமாக ஒரு snacks . லைட்டெல்லாம் off பண்ணிவிட்டார்கள். எனக்கும் நல்ல தூக்கம். ப்ளேனுக்குள் நம் பாண்டிச்சேரி மக்கள் கூட்டம். கடைசியில் ப்ளேன் நின்றதும், கேப்டன் ஏதோ சொல்ல எல்லோறும் கை தட்டினார்கள். (எதற்கு கை தட்டினார்களென்று யாரை கேட்பது). பாரிஸ் வந்து அடையும் போது காலை ஒன்பது மணி (local time). பயங்கர பசி. குளிர். இந்த ப்ளேன்களில் பசிக்கும் போது நமக்கு தேவையான சாப்பாடு கொடுக்கமாட்டார்கள். எலவேட்டரில் இறங்கி ட்ராம் புடிச்சு அடுத்த டெர்மினலுக்கு சென்றேன். you are the last passenger என்று ஒரு அம்மணி கூறினார். அந்த டெர்மினலிலிருந்து ஒரு பஸ் மூலமாக பாரிஸ்- ஹூஸ்டன் ப்ளேனுக்கு சென்றேன். இந்த ஃfளைட் கிட்டதட்ட 11 மணி நேர ஃFளைட். இது மாதிரி long flight-l ட்ராவல் பண்ணும்போது வெஜிட்டேரியனாகி விடுவது நல்லது. சீக்கிரம் சாப்பாடு கிடைக்கும். சாப்பிடும் படியாகவும் இருக்கும். ஏதோ சாப்பிட்டுவிட்டு பின்னும் ஒரு தூக்கம். தலை வலி வேறு. க்ரீன் லேண்ட் வழியாக செல்லும் போது கீழே பார்த்தேன். அம்மாடியோவ்..என்ன அழகு.. மேக மூட்டம் இல்லாததால் நில பரப்பு நன்றாக தெரிந்தது. நிலமா? இல்லை.. ஒரே பனி(snow capped mountains) .. ஆங்காங்கே கொஞ்சம் மலை தெரிந்தது. மனிதர்கள் வாழ சான்ஸே இல்லை. ஆனால் ரொம்ப அழகாத்தான் இருந்தது.

-Houston வந்த போது மதியம் மூன்று மணி. அப்பாடா என்று இருந்தது. ஆனால் பிரச்னைகளே இங்குதான் ஆரம்பமாகிறது. இம்மிக்ரேஷ்ன் முடிந்து, கஸ்டம்ஸ் நுழைந்த போது ஒருத்தர் என்னவோ நான் ஏதோ கடத்தி கொண்டு செல்வது போல என்னை தனியாக அழைத்துச் சென்று கேள்விகளுக்கு மேல் கேள்வி.. "உன் பெட்டியில் இருக்கும் திங்ஸ் எல்லாம் நீதான் பேக் செய்தாயா என்ரும், யாருக்காவது நீ வேறு திங்க்ஸ் கொண்டு வந்திருக்கிறாயா என்றும் கேள்விக்கு மேல் கேள்விகள். திரும்பி ஓடி போய்விடலாமா என்று ஒரு நினைப்பு.....ஆனாலும் நம் மக்கள் மீதுதான் என் கோபம் திரும்பியது.... என் பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஒரு இந்தியரிடமிருந்து, புதினா இலை, கொத்தமலி இலை, கறிவேப்பிலை, மற்றும் சாதம், சாம்பாரெல்லாம் எடுத்து வெளியே போட்டார்கள். தடை செய்யப் பட்டவைகளை நாம் ஏன் கொண்டு செல்ல வேண்டும்? அதனால்தானே இந்தியர்களென்றால் இவ்வளவு கேவலமாக ஒரு ட்ரீட்மெண்ட்?
இந்த விதமான் ட்ரீட்மெண்ட் என் மனதை என்னவோ செய்தது. என் பெட்டிகளை ஸ்கேன் பண்ணிவிட்டு "lady, you may go " என்றார் . அடுத்த ஃFளைட் HOUSTON TO SAN ANTONIO .. அது இரவு 7.55 மணிக்கு. 35 நிமிடம் தான் SAN ANTONIO செல்ல. ஒரு வழியாக San Antanio
வந்து சேர்ந்தேன்.


என் தம்பியின் வீடு ஒரு கன்ட்ரி சைடில் இருக்கிறது.. இரண்டரை ஏக்கர் பரப்பு. ஒரு சிறிய குன்றின் மேலுள்ளது. மிகவும் அமைதியான இடம். road-ல் ஒரு நாளைக்கு பத்து கார்கள் கூட செல்வது கிடையாது. அத்தனை calm place. நல்ல weather. மிகவும் அருமையான இடம். முற்றிலும் இங்கு இருப்பவர்கள் மிகவும் வயதானவர்கள். ரோடில் நாம் நடந்து செல்லும் போது ஒரு hi! சொல்லாமல் போகமாட்டார்கள். ஏகப்பட்ட மான்கள்.. நம் வீட்டிற்கு பின்னால், ரோடில், குட்டிகளோடு செல்வதை பார்க்கும் போது நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் ஒரு செடியையும் விட்டு வைப்பதில்லை.


இப்படியாக என் விடுமுறை ஆரம்பித்துள்ளது.

28 comments:

துளசி கோபால் said...

அருமையா ஆரம்பிச்சிருக்கு உங்க ஹாலிடேஸ்.

நம்மாளுங்களுக்குக்க் கொஞ்சம் போதாதுதான்........

இப்ப எல்லாமே லோக்கலா கிடைக்குது. அப்படியே இல்லைன்னாலும் குடியா முழுகிரும்?

இங்கே நம்மூர்லே பயங்கர அபராதம் கட்டணும்.

எனக்கு மான்குட்டி ரொம்பப் பிடிக்கும். எனக்கு ஒண்ணு பிடிச்சுக்கிட்டு வாங்க:-)


எஞ்சாய் யுவர் ப்ரேக்.

delphine said...

நன்றி. துளசி... மிக அருமையான ஒரு இடம். அதுவும் வட மாகாணங்களில் ஸ்நோ கொட்டும்போது, இங்கு மட்டும் அவ்வளவு அருமையான வெதர்... மான் குட்டிதானே. புடிச்சுடுரேன்(போட்டொ).. அப்புறம் நம்ப ஊர்ல இத்தனை மான் குட்டிகள் இருந்திருந்தா எல்லாம் சுட்டு ஆசையை தீர்த்திருப்பாங்க.

Thekkikattan|தெகா said...

என் பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஒரு இந்தியரிடமிருந்து, புதினா இலை, கொத்தமலி இலை, கறிவேப்பிலை, மற்றும் சாதம், சாம்பாரெல்லாம் எடுத்து வெளியே போட்டார்கள். தடை செய்யப் பட்டவைகளை நாம் ஏன் கொண்டு செல்ல வேண்டும்?//

அதானே ஏன் கொண்டு போக வேண்டும்... கேட்டீங்களே ஓரு கேள்வியெ... இன்னொன்னும் கேள்விப் பட்டிருக்கேன் டாக், ஃப்ராங்பேர்ட் ஏர்போர்டில் சப்பனமிட்டு இட்லி, மிளகாய் பொடி, தெவையலுமாக சாப்பிட்டு நாங்கள் எல்லாம் ரொம்ப உலகம் சுத்தியவர்களாக்கும் என்று காமித்துக் கொள்ளும் மாமியார்களும் வளர்ந்து வருகிறார்கள் இந்த நாட்களில்... கொடுமையடா சாமீ...

நீங்க அனுபவிங்க உங்க ஹாலிடேய்ஸ்-ஆ...

இலவசக்கொத்தனார் said...

நல்லா வந்து சேர்ந்துட்டீங்களா? வாங்க வாங்க.

ஆயில்யன் said...

பிளைட்ல போகும்போது போட்டோ புடிக்கணும்னு எனக்கும் ரொம்ப நாளா ஆசை !


விடுமுறை

பதிவோடு ஆரம்பிக்கிறது!


வாழ்த்துக்கள் டாக்டரம்மா!

அபி அப்பா said...

என்னம்மா என்னய விட்டுட்டு போயிட்டீங்களே:((

கோபிநாத் said...

பயணக் கட்டுரை கலக்கல் ;))

கடைசி பேரா படிக்கும் போது நல்லா என்ஜாய் பண்ணுறிங்கன்னு தெரியுது..;))

என்ஜாய்ம்மா :)

கோபிநாத் said...

வாரம் ஒருமுறை உங்கள் விடுமுறை அனுபவங்களை பதிவாக போடுங்க...காதுல புகை வந்தாலும் ரசிப்போம்ல..;))

கப்பி பய said...

அட நம்ம ஏரியாவுக்கு தான் வந்திருக்கீங்களா..வாங்க வாங்க :))

விடுமுறை சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் :)

Anonymous said...

உங்கள் பதிவுகளை படிக்கும் ஒரு அனாமி
ரொம்ப ஒன்றிவிடாதீர்கள், உங்கள் மாசி சொன்னதில் பேருண்மை உள்ளது, அமேரிக்கா ரசிப்பதற்குதான் , வசிப்பதற்கல்ல ....
சில வருடங்களில் தெரிந்து கொள்வீர்கள்
அன்புடன்
மெளனம்

delphine said...

தெகா.. நிறைய பேருக்கு ப்ளேனில் கொடுக்கும் சாப்பாடு பிடிக்காது என்றே நினைக்கிறேன். ஆனால் ஒரு நாள் கூற்றுக்காக இதையெல்லாம் தூக்கிக்கொண்டு அலைய வேண்டுமா? ம்ம்.

delphine said...

நன்றி கொத்ஸ்.. உங்க பக்கமெல்லாம் நல்ல ஸ்நோன்னு டிவியில பார்க்கிறேன். இங்கு வெதர் ரொம்ப பிரமாதம்.

கடகம்.. இந்த ஃளைட் களெல்லாம் 38000 அடிக்கு மேல பறப்பதால் நமக்கு மேகம் மட்டும்தான் தெரிகிறது. அது என்னவோ க்ரீன்லேண்ட் மேல் போகும்போது மலைச்சுட்டேன். ஆனால் பயமாக இருந்தது..கிழே விழுந்தால்..
தொல்ஸ்... என்ன சின்ன குழந்தை மாதிரி.. ஒரு ட்ரிப் வந்துடுங்க. பார்க்க அமோகமான இடம்... பார்க்கமட்டும்தேன்,

delphine said...

கோபி, & கப்பி சார்,
நன்றி..என்னை மாதிரி வயதானவர்களுக்கு ஏற்ற இடம் நான் வந்திருக்குமிடம்..

delphine said...

அனானி.. அனானியாவே இருந்துட்டா எப்படி? நன்றிங்க.. என் மாசி சொன்ன மாதிரி ரசிக்க மட்டும்தேன். என் அம்மா க்ரீன் கார்ட் holder. மொத்த குடும்பத்தில் பாதிபேரும் இங்குதான். 1970-ல் குடிவந்தவர்கள். எனக்கு கிடைத்த க்ரீன் கார்ட் வேண்டாம் என்று விட்டவள். இந்த நாடு சரியில்லை என்று சொல்ல முடியாது.அமெரிக்காவில் எனக்கு பிடித்தவைகள் நிறைய உண்டு. என்னை பாதிக்கும் விஷயங்களும் உண்டு.. எது நல்லதோ அதை மட்டும் எடுத்துக்க வேண்டும். இதுதான் என் கொள்கை...
Thank you Anony. I guess you must be in States,..Right!

தென்றல் said...

வாங்க..வாங்க!!

//பயங்கர பசி. குளிர். இந்த ப்ளேன்களில் பசிக்கும் போது நமக்கு தேவையான சாப்பாடு கொடுக்கமாட்டார்கள்.//
//வெஜிட்டேரியனாகி விடுவது நல்லது. சீக்கிரம் சாப்பாடு கிடைக்கும். சாப்பிடும் படியாகவும் இருக்கும்.//

:)

//கேள்விக்கு மேல் கேள்விகள். திரும்பி ஓடி போய்விடலாமா என்று ஒரு நினைப்பு.....//

இதுக்கேவா?? ;(

Baby Pavan said...

பாட்டி சூப்பர், கலக்குங்க நல்லா என்சாய் பண்ணிட்டு வாங்க...உங்களுக்காக சீக்கிரம் ஒரு பதிவு போடரோம்...

தருமி said...

எனக்கெல்லாம் இந்த ப்ளேன்ல போறது, மேலேயிருந்து கீழே மேகம் பார்க்கிறது, பனிமலைகளைப் பார்க்கிறது,அடுத்த நாடுகளைப் பார்க்கிறது, புதுப்புது நாடுகள், இடங்கள், முகங்கள் பார்க்கிறது, அந்தந்த ஊரு உணவுகளை ட்ரை பண்ணிப் பார்க்கிறது, நடுக்குற குளிரை அனுபவிக்கிறது - இது ஒண்ணுமே பிடிக்கிறதேயில்லைங்க. ச்சீ.. புளிக்கும்.

ம்ம்..ம்.. சரி விடுங்க. :(

அங்க எதுனாச்சும் பதிவர் சந்திப்பு நடக்கப் போகுதுங்களா?

நாகை சிவா said...

அருமையாக விடுமுறை நாட்கள் ஆரம்பித்து விட்டது போல இருக்கேன்..

விமாத்தில் இந்தியாவில் இருந்து பாரீஸ் வரை நம் உணவையும் அதன் பிறகு வெஜ் ஆர்டர் கொடுப்பது தான் சரி. ஏன்னா அவங்க கொடுக்குற நான் வெஜ் அவ்வளவு கேவலமா இருக்கும்

இரண்டாம் சொக்கன் said...

ஆஹா....

சந்தோசமா இருக்கியளா...அது போதும் தாயீ..

நல்லா என்சாய் பண்ணுங்க

அப்படியே அந்த ஊர் அம்மனிகளை நெம்ப கேட்டதா சொல்லீருங்க...ஹிஹி..

delphine said...

வந்துட்டேன் தென்றல்..கேள்விக்கு மேல கேள்வியா? ம்ம்ம்.. இன்னும் நிறைய கேள்விகள் மனதிலுண்டு...நீங்க எல்லோறும்தான் பதில் சொல்லணும்..

பவன் குட்டி, நன்றி,.. கலக்கிட்டா போச்சு.

தருமி சார், ரொம்ப குளிரா இருந்தா வீட்டுக்குள்ளே இருந்துட வேண்டியதுதான்...ஆனால் இதமான குளிரும், வெயிலும் கலந்து இருந்தா நிஜமாகவே அனுபவிக்கலாம். ..ம்ம்ம்.. பதிவர் மாநாடு? நான் ரொம்ப தெற்கே இருக்கேன் . நம்ப பதிவர்களெல்லாம் வடக்கே இருக்கிறார்கள்.. பார்ப்போம்.!

சிவா.. பாரிஸ்வரை நம் உணவு கிடைத்தது. நான் வெஜ் சகிக்கலைதான். அதனால்தானோ என்னவோ நம் மக்கள் நிறைய பேர், இட்லி கட்டி எடுத்து கொண்டு வந்திருந்தார்கள்.

delphine said...

சொக்கரே..
இங்கு ஸ்பானிஷ் மக்கள் அதிகம் வாழும் இடம். ஸ்பானிஷ் மக்கள் பார்க்க அழகா இருக்கிறாங்க. சரி சரி.. அம்மணிகளின் காதில் போட்டு வைக்கிறேன். சரிதானே!( உங்க வீட்டு அம்மா எங்கே? ஊரில் இல்லையோ?)

கண்மணி said...

என்ஞாய் மேடம் அது சரி வயசானவங்க இருக்கிற எடத்துல நீங்க ஏன் அம்மணி?ஹாஹா
நிறைய நிறைய அனுபவங்களை எதிர் பார்க்கிறோம்.
[ஹூம் இந்தியாவைத் தாண்டாத ஒரு அப்பாவி நான்.]

பெத்த ராயுடு said...

மேடம்,

ஃபோன் கார்ட் எல்லாம் வாங்கியாச்சா?

என்னது இப்ப நல்ல வெதரா?

எப்பவும் நல்ல வெதருக்கு நீங்க தெற்கு கலிபோர்னியாவுக்கு வாங்க.

//ஸ்பானிஷ் மக்கள் பார்க்க அழகா இருக்கிறாங்க.//

அது!!!!.....
பரீட்டோ சாப்பிட்டுகிட்டே señoritas கிட்ட என் சார்பா hola சொல்லிருங்க.

ரசிகன் said...

டெல்ஃபின் அக்கா,சூப்பரேய்ய்ய்.....:)

ஆனா நா கேட்ட போட்டோ மிஸ்ஸிங் :(

ரசிகன் said...

// ப்ளேனுக்குள் நம் பாண்டிச்சேரி மக்கள் கூட்டம். //

ஆஹா..இதுல் ஏதும் உள்குத்து இல்லியே..:P

ரசிகன் said...

//என் பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஒரு இந்தியரிடமிருந்து, புதினா இலை, கொத்தமலி இலை, கறிவேப்பிலை, மற்றும் சாதம், சாம்பாரெல்லாம் எடுத்து வெளியே போட்டார்கள். தடை செய்யப் பட்டவைகளை நாம் ஏன் கொண்டு செல்ல வேண்டும்? அதனால்தானே இந்தியர்களென்றால் இவ்வளவு கேவலமாக ஒரு ட்ரீட்மெண்ட்?//

சில பேர் இப்படி என்னவோ கொத்தமல்லி இலை புதையல் மாததரி...

இப்போ நம்ம ஊர் ஊற்காயிலிருந்து மசாலா,குழம்புத்தூள் வரை ஹைப்பர் மாட்க்கெட்டுகளில் பாக்கறேன்.பின்ன ஏதுக்கு மத்த நாடுக்களுக்கு போகும் போது இப்படி செல பேரு செய்யறாய்ங்கன்னு பிரியலை...

காட்டாறு said...

சூப்பரா ஆரம்பிச்சிருக்கீங்க. நல்லா அனுபவிங்க. அப்படியே அனுபவக் கதைகளையும் எழுதுங்க.

பனிகளின் மத்திலே பாடனுமின்னு சொன்னிங்கன்னா... கண்டிப்பா நம்ம இடத்துக்கு ஒரு நடை வந்துட்டு போங்க. கார்கள் செய்யுமிடம். நல்லா இருக்குமில்ல.

மறந்துறாம மான் குட்டிகளை கேட்டதா சொல்லுங்க.

வசந்தம் ரவி said...

மனம் லயித்து படித்தேன் ........அருமை