Tuesday, November 6, 2007

Deepaavali wishes !!!


தீபாவளி என்றாலே சந்தோஷம்தான்..........
யாவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...
எல்லாரும் தீபாவளி ஜோர்ல இருக்காங்க... ... நானும்தான்...........................

நோயாளி: ஊசி குத்தினால் வலிக்காதுன்னு சொன்னீங்க இப்ப பயங்கரமா வலிக்குது டாக்டர்?
டாக்டர்: எனக்குத்தான் வலிக்காதுன்னு சொன்னேன்.

டாக்டர்: உங்களுக்கு நெஞ்சுவலி எப்படி இருக்கு?
ஸ்டெனோ: சுருக், சுருக்னு குத்துது டாக்டர்!

"உங்களுக்கு ஊசி போடனும்! ஸ்பெஷலா? சாதாவா?"

"ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்?"

"ஸ்பெஷல்னா, ஊசி போட்ட இடத்துல நர்ஸ் தேய்ச்சுவிடுவாங்க!

சாதான்னா, கம்பவுண்டர் தேய்ச்சுவிடுவாரு!"

"என்னது ஆபரேஷன் செஞ்ச டாக்டர் மயக்கம் போட்டு விழுந்துட்டாரா?"

"ஆபரேஷன் சக்ஸஸ் ஆயிடுச்சாம்."


"எங்க டாக்டர் ஆபரேஷன் செஞ்சதுல இதுவரைக்கும் மூணு பேருதான் செத்திருக்காங்க."
"அவ்வளவு கெட்டிக்காரரா?"
"அவர் ஆபரேஷன் செஞ்சதே மூணு பேருக்குத்தான்."

"அந்த டாக்டர்கிட்ட போனா மூணு வேளையும் கஞ்சிதான் குடிக்கணும்."
"ஏன்?"
"அவரோட ஃபீசை செட்டில் பண்ணினதுக்கப்புறம் அதுதானே முடியும்."

எனக்கு பிடித்த துறை காவல் துறை.......ஆனால் அவர்களைப் பற்றி எத்தனை ஜோக்குகள்!!enjoy!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


"எதுக்காக அந்தத் திருடனை, இன்ஸ்பெக்டர் இந்த அடி அடிக்கிறார்?"
"திருட்டுத் தொழிலை விட்டுடப் போறதா சொன்னானாம்."

"இன்ஸ்பெக்டர் சார், பிளேடு பக்கிரி என் பர்ஸைப் பிடுங்கிட்டு ஓடறான் சார்!"
"பர்ஸ்ல எவ்வளவு பணம் வச்சிருந்தே?"
"எதுக்குக் கேட்கறீங்க?"
"அவன்கிட்டே மாமூலைக் கரெக்டா கணக்குப் பண்ணி வாங்க வேண்டாமா?"

"இந்த ஊர்ல திருடர்களே கிடையாதா?"
"இருந்தாங்க! இந்த ஊர் இன்ஸ்பெக்டர் டிரான்ஸ்பர் ஆகி, வேறே ஏரியாவுக்குப் போயிட்டதாலே, அவங்களும் அவர் ஏரியாவுக்கே போயிட்டாங்க."

"எங்க ஊர் போலீஸ், திருட்டுப் போன மறுநாளே திருடனைப் பிடிச்சுடுவாங்க."
"இதென்ன பிரமாதம், எங்க ஊர் போலீசுக்கு, திருட்டு போறதுக்கு முதல் நாளே தெரிஞ்சுடும்."

"கபாலி! உன்னைப் போலீஸ் தேடுது."
"நான் இந்த மாசம் ஒரு தப்பும் பண்ணலியே."
"அதான், ஏன் பண்ணலைன்னு தேடுது."

Have a safe and Happy Deepavali! !!

( jokes from MSN)23 comments:

Baby Pavan said...

டாக்டர் பாட்டிக்கு என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.....அன்புடன் பவன்.

தாமோதர் சந்துரு said...

உங்களுக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள். ஏங்க டாக்டர் ஜோக் படிச்சுட்டு உங்க டாக்டர் நண்பர்களெல்லாம் சும்மாவா இருக்கறாங்க?

delphine said...

நன்றி பவன் குட்டி...
ஓ! நீ பொண்ணுன்னு நினச்சேன்!

delphine said...

நன்றி சந்துரு... டாக்டர்களை எனக்கு பிடிக்காது என்று என் டாக்டர் நண்பர்களுக்கு நல்லாவே தெரியும். "திருத்த முடியாத கேசு " என்பார்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு டெல்ஃபின் வாழ்த்துக்களுக்கு நன்றி.

உங்கள்க்கும் எங்கள் தீப நன்னாள் வாழ்த்துக்கள். ஜோக்ஸ் ப்ரமாதம்:)))

மங்கை said...

டாக்டரம்மா...நன்றி

உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

ரசிகன் said...

// உங்களுக்கு ஊசி போடனும்! ஸ்பெஷலா? சாதாவா?"
"ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்?"
"ஸ்பெஷல்னா, ஊசி போட்ட இடத்துல நர்ஸ் தேய்ச்சுவிடுவாங்க!
சாதான்னா, கம்பவுண்டர் தேய்ச்சுவிடுவாரு!"//
ஹா..ஹா..ஏனுங்க.. டாக்டரம்மா..உங்க துறையையே இப்பிடி கலாய்கிறீங்க...நல்லாயிருக்கு.

// "எங்க ஊர் போலீஸ், திருட்டுப் போன மறுநாளே திருடனைப் பிடிச்சுடுவாங்க."
"இதென்ன பிரமாதம், எங்க ஊர் போலீசுக்கு, திருட்டு போறதுக்கு முதல் நாளே தெரிஞ்சுடும்."//
இது டாப்பு..ஹா..ஹா..

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..

ரசிகன் said...

// உங்கள்க்கும் எங்கள் தீப நன்னாள் வாழ்த்துக்கள். ஜோக்ஸ் ப்ரமாதம்:)))//
வல்லிசிம்ஹன் அக்கா.. தீபாவளிய நல்லா தமிழ்படுத்தி சொல்லியிருக்கீங்க..நல்லாயிருக்கு..

வித்யா கலைவாணி said...

தீபாவளி சரவெடிகள் அருமை. அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

இரண்டாம் சொக்கன்...! said...

அநியாயத்துக்கு சேம்சைட் கோல் அடிக்கிறீங்க....

சந்தோசமா இருக்கு....ஹி..ஹி..

வாழ்த்துக்கள் தாயே....

நாகை சிவா said...

வாழ்த்துக்களுக்கு நன்றி...

சிரிப்பு வெடிகள் எல்லாம் அருமை :)

அதிலும் ஸ்பேஷல், சாதா ஊசி செம சர வெடி :)

கோபிநாத் said...

மீண்டும் மீண்டும் சிரிப்பு :))

மீண்டும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் :)

துளசி கோபால் said...

பட்டாசு இல்லைன்னு சொல்லிட்டு, இப்பச் சிரிப்புவெடிகள் வெடிச்சுட்டீங்க!!!!

இனிய வாழ்த்து(க்)கள், டெல்ஃபீன்.

வல்லிசிம்ஹன் said...

@ரசிகன்,
நன்றி.
மாசி சாருக்கும் மனம் நிறைந்த நினவின் வாழ்த்துகள்.

தென்றல் said...

நல்லா இருந்தது..ஜோக்கலாம்..!

நாங்க சொல்லவேண்டிய ஜோக்கலாம் நீங்களே சொல்லிடுறீங்க...

வாழ்த்துக்கள், மேடம்!

.:: மை ஃபிரண்ட் ::. said...

ஹாஹாஹா...

நல்லா இருக்கு ஜோக்ஸ்.

தீபாவளி வாழ்த்துக்கள் டாக்டர். ;-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//delphine said...
நன்றி பவன் குட்டி...
ஓ! நீ பொண்ணுன்னு நினச்சேன்!
//

தம்பி, உங்கப்பா பண்ண கூத்துல நீ பொண்ணுனுதான் எல்லாரும் நெனச்சிட்டு இருக்காங்களே!

என்ன கொடுமை இது இம்சை!!! :-P

Baby Pavan said...

.:: மை ஃபிரண்ட் ::. has left a new comment on the post "Deepaavali wishes !!!":

//delphine said...
நன்றி பவன் குட்டி...
ஓ! நீ பொண்ணுன்னு நினச்சேன்!
//

தம்பி, உங்கப்பா பண்ண கூத்துல நீ பொண்ணுனுதான் எல்லாரும் நெனச்சிட்டு இருக்காங்களே!

என்ன கொடுமை இது இம்சை!!! :-P

ஆமா அக்கா டோக்டர்கெ நான் பொண்ணு மாதிரி இருக்கென்னா பாருங்க....

கொஞ்சம் யாராவது இம்சைக்கு எடுத்து சொல்லுங்கப்பா....

குட்டிபிசாசு said...

டெல்பின் அம்மா,

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!

siva gnanamji(#18100882083107547329) said...

ஜோக் வெடிகள் பிரமாதம்! ஹா ஹா!

தீபாவளி வாழ்த்துக்கள்!

நானானி said...

டாக்டருக்கு என் மனமார்ந்த பண்டிகை
வாழ்த்துக்கள்!!
அதென்ன உங்கள் காலை நீங்களே வாரிக்கொள்கிறீர்கள்?
அப்படின்னா..எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் கேட்டால் டாக்டரே ஊசி போட்ட இடத்தை தேய்ச்சு விடுவாரா?

delphine said...

Thanks Valli, Mangai,
Hope You all Had a wonderful day!

Baby Pavan said...

delphine said...
நன்றி பவன் குட்டி...
ஓ! நீ பொண்ணுன்னு நினச்சேன்!

நீங்களெ இத பாத்து ஒரு நல்ல தீர்ப்பா சொல்லுங்க.
http://kuttiescorner.blogspot.com/2007/11/blog-post_06.html