Sunday, November 18, 2007

என் கடைசி பதிவுங்கோ!

என்ன ஆச்சுன்னு கேட்காதுங்க! ஆனால் இதுதான் என் கடைசி பதிவு.....
என்னவோ தெரியலங்க இப்பல்லாம் இந்த ஸண்டே வந்தா பிடிக்கல..,, ஒரே போர்தான். அதுவும் மழை பெய்தால் .... .. எனக்கு போர் அடிச்சா உங்களுக்கும் போர் அடிச்ச மாதிரிதானே! நாளை திங்கள் கிழமையா... உடனே monday morning blues- னு ஒரு status message போட்டு வச்சுருவேன். திங்கள் கிழமை என்ன தோணும்னா sunday யே தேவலைன்னு தோணும்.. சரிதானே! சரி வாங்க வந்து கொஞ்சூண்டு சிரிச்சுட்டு போங்க,,,...
நம்ப டாக்டருங்க ஜோக்குதான். அவங்க பண்ணுகிற அலம்பு தாங்கலங்க..


"இன்னைக்கு உங்களுக்கு ஆபரேஷன்?"
"போங்க டாக்டர், இன்னைக்குதான் நர்ஸ் சிரிச்சு, சிரிச்சு பேசினாங்க. இப்படி சொல்லி என்னை கஷ்டப்படுத்துறீங்களே!"

டாக்டர் எனக்கு 3 மாதமா கடுமையான இருமல்"
"அப்படியா? சும்மாவா இருந்தீங்க."
"இல்ல டாக்டர் இருமிகிட்டேதான் இருந்தேன்."

"டாக்டர் இந்த ஆபரேஷன்ல நான் பிழைச்சிடுவேனா?"
"அது தெரியாது, ஆனா கடன் தொல்லையில இருந்து நான் பிழைச்சிடுவேன்!"

டாக்டர்: உடம்புக்கு ஆயிரம் வியாதி வரத்தான் செய்யும் அதுக்காக இப்படி பயந்தா எப்படி?
நோயாளி: நான் பயப்படறது நோய்க்கு இல்ல டாக்டர். உங்களுக்கு தான்.

என்ன டாக்டர் எனக்கு மூணு தடவை ஆபரேஷன் பண்ணிட்டீங்களா?"
"யோவ் மூணு தடவை மயக்க மருந்து கொடுத்தேன். கொடுத்த 5 நிமிஷத்துல எந்திரிச்சுகிட்டு இதே கேள்வியை கேட்டுக்கிட்டிருக்கே."


"அந்த டாக்டர் மத்தவங்களைத் திட்டும்போது அடிக்கடி 'எலும்பை' எண்ணிடுவேன்னு சொல்றாரே, ஏன் அப்படி?"
"அவர் எலும்பு நோய் நிபுணராச்சே அதான்!"

"டாக்டர், எனக்கு காலையிலேர்ந்து உடம்பெல்லாம் அரிக்குது!"
"எனக்கு காலையிலேர்ந்து கை அரிக்குது, அது உங்களாலே எனக்கு வருமானம் வர்றதுக்குத்தானா?"

"டாக்டர், நான் என்ன சாப்பிட்டாலும் என் உடம்பிலே ஒட்டமாட்டேங்குது!"
"அப்படியா! தினமும் ஒரு பாட்டில் கோந்து சாப்பிடுங்க உடம்பிலே ஒட்டும்!"

சரிங்க... வற்ரட்டுமா?
ஜனவரியில் 2008-ல் பார்ப்போம்.
(இந்த வருஷத்து கடைசி பதிவு இதுதாங்கோ!

36 comments:

குசும்பன் said...

"சரிங்க... வற்ரட்டுமா?
ஜனவரியில் 2008-ல் பார்ப்போம்.
(இந்த வருஷத்து கடைசி பதிவு இதுதாங்கோ!"

செல்லாது செல்லாது இன்னும் அடுத்த வருசத்துக்கு எத்தனை நாட்கள் இருக்கு அதுக்குள்ள எதுக்கு லீவ்????????

இரண்டாம் சொக்கன்...! said...

ஹி..ஹி....நைஸ்...

அப்பாலிக்கா...ஒரு டெக்னிகல் அனலிஸிஸ்...

டாக்டர்...ஏன் லீவு போடறாங்கன்னு...

1.டாக்டரம்மாவுக்கு ஒரு ப்ரேக் தேவைப்படுது

2.டாக்டரம்மா ஏதாவது ஊருக்கு போவாங்களா இருக்கும்...அங்க ப்ளாக் வசதிப்படாதுன்னு நினைக்கிறேன்.

3.என்னை மாதிரி இம்சைங்க கிட்ட இருந்து தப்பிக்க நினைச்சிருக்கலாம்...

ஹி..ஹி....கரீக்டா தாயே...!

அபி அப்பா said...

டாக்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்டர்! என்னாச்சு எங்கள பாத்து கெட்டு போயிட்டீங்களா????

இருந்தாலும் இந்த நெகட்டிவ் தலைப்பு எனக்கு பிடிக்கலை பிடிக்கலை பிடிக்கவே இல்லை:-(((

அபி அப்பா said...

சொக்கா!! கரீட்டு கரீட்டு!!!என்னை பார்க்க இங்க வந்துகிட்டே இருக்காங்க:-))

Seemachu said...

என்ன ஆச்சு டாக்டர்..
பதிவு எழுதுவது போரடிச்சிட்டதா?

நீங்களெல்லாம் எழுத வந்ததால தானே.. எங்களுக்கு உங்க அறிமுகம் கெடச்சுது..

நிறுத்திடாதீங்க...

ஆமா.. உங்க US பயணத்திட்டமெல்லாம் எப்படியிருக்குது?

அன்புடன்,
சீமாச்சு...

இரண்டாம் சொக்கன்...! said...

இன்னாது...US...ஆ....

டெக்னிகல் அனலிஸிஸ் இங்கியும் ஒர்க் அவுட் ஆவுதே....ஹி..ஹி...

ரசிகன் said...

அப்பாடா..நாங்க்கூட.இப்பத்தானே தெரிஞ்சிக்கிட்டோம்.. அதுக்குள்ள இது கடைசிப்பதிவுன்னுட்டாய்ங்களேன்னு நெனச்சேன்..
ஜோக்கு படிக்க மனசு வரலிங்க அக்கா..அப்புறந்தேன்..கடைசி வரில..

// ஜனவரியில் 2008-ல் பார்ப்போம்.
(இந்த வருஷத்து கடைசி பதிவு இதுதாங்கோ!//
படிச்சேன்..
இப்ப சொல்லறேன்.. ஜோக்கெல்லாம் சூப்பர்....
அதிலும் அந்த பயப்படற ஜோக் பிரமாதம்..

தஞ்சாவூரான் said...

//டாக்டர்: உடம்புக்கு ஆயிரம் வியாதி வரத்தான் செய்யும் அதுக்காக இப்படி பயந்தா எப்படி?
நோயாளி: நான் பயப்படறது நோய்க்கு இல்ல டாக்டர். உங்களுக்கு தான்.//

:))

சீக்கிரம் வாங்க. தொடருங்க..

இம்சை said...

Enjoy your vacation and come back soon with your trip experiences and lot of photos.

Compassion Unlimitted said...

Nethu than unga sitekku mudal muraiyaga vanden..vanda muhoortham TATA bye bye sollitteenga..If on Vacation have a nice time
TC
CU

தருமி said...

//ஆமா.. உங்க US பயணத்திட்டமெல்லாம் எப்படியிருக்குது?//

ஓ! அப்டியா? நல்லபடியா போய்ட்டு வாங்க ...

SP.VR. SUBBIAH said...

கடைசி' என்கிற வார்த்தையைச் சொல்லாதீர்கள் மேடம். அதுவும் மருத்துவரான நீங்கள் சொல்லலாமா?

அதுவும் இந்த ஆண்டு நிறைவாவதற்கு இன்னும் 43 தினங்கள் இருக்கிறது.

அடுத்த மாதம் மறுபடியும் வந்து ஒரு பதிவை இடுங்கள். அது வரும் ஆண்டை வரவேற்பதாக இருக்கட்டும்

ஒரு வாழ்த்துச் செய்தியுடன் வாருங்கள்!

வசந்தம் ரவி said...

என்னங்க இப்படி பதர வச்சுடீங்க......இப்போ தான் நிம்மதியா இருக்கு

மின்னுது மின்னல் said...

வசந்த காலத்தில் சந்திப்போம் !!!

துளசி கோபால் said...

நல்லா விடுமுறையை எஞ்சாய் பண்ணிட்டு அப்படியே பதிவுகளுக்கு மேட்டரைத் தேத்திக்கிட்டு வாங்க.:-)

மெர்ரி கிறிஸ்மஸ் & ஹேப்பி நியூ இ(ய்)யர்.


என்றும் அன்புடன்,
துளசி & கோ

Paheerathan said...

ஒரு நிமிஷம் ஆடித்தான் போனேன் உங்கள் தலைப்பை பார்த்து டாக்டர்
அப்புறந்தான் கடைசிவரி ஆறுதலாயிருந்தது

//டாக்டர்: உடம்புக்கு ஆயிரம் வியாதி வரத்தான் செய்யும் அதுக்காக இப்படி பயந்தா எப்படி?
நோயாளி: நான் பயப்படறது நோய்க்கு இல்ல டாக்டர். உங்களுக்கு தான்.//

இது சூப்பர்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

டாக்டரக்கா!
நத்தார் விடுமுறைக்குச் செல்லத்தான் வேண்டும். இப்படி 1 1/2 மாதம் முன் செல்வது, சற்று அதிகம் தான்.
இனிய நத்தார் புதுவருட வாழ்த்துக்கள்.
மீண்டும் வருக...

delphine said...

ஆங்... குசும்பா...நான் ஊர்ல இலாத போது என்னை வச்சு ஏதும் காமெடி பண்ணிடாத. சரியா?

சொக்கரே! உங்க டெக்னிகல் அனல்ய்சிச் சரியாத்தான் இருக்கு. ஆமா... எனக்கு ஒரு பெரிய ப்ரேக் தேவை படுது...இந்த ஒரு வருடம் எனக்கு 30 வருடம் வாழ்ந்த மாதிரி இருக்கு...வேலையும் கஷ்டம், சென்னை வாசியாக இருப்பது இன்னும் கஷ்டம்..ஏதாவது ஊருக்கு...ம்ம்ம். கரீட்டா சொன்னீங்கோ.. டெக்ஸாஸ் போய் வருகிறேன். ஒரு மாத லீவு..... உங்கள இம்சைன்னு சொல்லாதுங்க... எனக்கு நிறிய நல்ல நண்பர்கள் கிடைத்துள்ளார்கள்.

தொல்ஸ்..பயந்ந்துட்டீங்களா..அப்படி வேகமா ஒரு போன் அடிச்சுட்டீங்க.. ம்ம்.

delphine said...

இல்ல சீமாச்சு. போர்டிக்கல.. லீவுதான்.

ரசிகன் நன்றி...அடுத்த வருஷம் இன்னும் நிறைய ஜோக்கோடு வருகிறேன்.

cheena (சீனா) said...

இரண்டாம் சொக்கன் சொன்னது சரியாப் போச்சு - அபி அப்பா சொன்ன மாதிரி நெகட்டிவ் சொற்களை நாம எல்லொருமே தவிர்க்கலாமே !!
துளசி சொன்னதுக்கு ஒரு
ரிபீட்டேய் !!!

cheena (சீனா) said...

புத்தாண்டில் புதுச் செய்தியுடன் புத்துணர்வோடு பதிவுகள் பதிவதற்கு நல் வாழ்த்துகள்

ஜெகதீசன் said...

:))
2008க்கு இன்னும் 1 மாசத்துக்கு மேல இருக்கே டாக்டர்... அதுவரைக்கும் பதிவு போடமாட்டீங்களா?

நானானி said...

இன்னாடா! ஈதுன்னு வந்தாக்கா...லீவுன்னுட்டீங்க.சரி..சரி
உங்களுக்கெல்லாம் லீவு தேவைதான்.
டெக்ஸாஸ் நல்லா எஞ்ஜாய் பண்ணிட்டு
அப்டியே பதிவுக்குத் தேவையான சமாசாரம்ஸ் தேத்திக்கிட்டு வாங்க.
அதுவரை உங்க பேஷண்ட்ஸ் பொழச்சுப்போகட்டும்.
MERRY CHRISTMAS & HAPPY 2008!!!

Sivasamraj said...

விடுமுறையை ஓய்வாக கழித்துவிட்டு உற்சாகத்தோடு மீண்டும் வாங்க மேடம்.
அட்வான்ஸ்டு கிருஸ்த்மஸ், புத்தாண்டு வாழ்த்துகள் :-)

கோபிநாத் said...

\\"என் கடைசி பதிவுங்கோ!"\\


இதெல்லாம் ஓவரு...;(

முத்துலெட்சுமி said...

\\நானானி said...
இன்னாடா! ஈதுன்னு வந்தாக்கா...லீவுன்னுட்டீங்க.சரி..சரி
உங்களுக்கெல்லாம் லீவு தேவைதான்.
டெக்ஸாஸ் நல்லா எஞ்ஜாய் பண்ணிட்டு
அப்டியே பதிவுக்குத் தேவையான சமாசாரம்ஸ் தேத்திக்கிட்டு வாங்க.
அதுவரை உங்க பேஷண்ட்ஸ் பொழச்சுப்போகட்டும்.
MERRY CHRISTMAS & HAPPY 2008!!!//வழிமொழிகிறேன்... டாக்டர்..

நாகை சிவா said...

ரைட்... நல்லப்படியா விடுமுறையை கழித்து விட்டு வாருங்கள் :)

ஜனவரியில் இந்தியாவில் தானே இருப்பீர்கள். முடிந்தால் சந்திக்கலாம். பதிவர் பட்டறையில் சந்திக்க முடியாமல் போய் விட்டது.

சும்மா இருந்தீங்க, இல்ல இறுமி கிட்ட தான் இருந்தேன்... செம ரகளை :)

தென்றல் said...

தலைப்புலேயே ஷாக் குடுக்கிறீங்களே, டாக்டர்!

நல்லபடியா போய்ட்டு வாங்க! மீண்டும் சந்திப்போம்!

மங்களூர் சிவா said...

//
தென்றல் said...
தலைப்புலேயே ஷாக் குடுக்கிறீங்களே, டாக்டர்!

நல்லபடியா போய்ட்டு வாங்க! மீண்டும் சந்திப்போம்!

//
ரிப்பீட்டேய்
:-)

கண்மணி said...

இது ரொம்ப டூஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ மச் அம்புட்டுதான் சொல்வேன்

J K said...

என்னடா இது சீரியஸா இருக்கேனு உள்ள வந்த நகைச்சுவை/நையாண்டினு வகைப்படுத்திரூந்திங்க. அப்புறம் தான் கொஞ்சம் ரிலாக்ஸ்...

//நல்லா விடுமுறையை எஞ்சாய் பண்ணிட்டு அப்படியே பதிவுகளுக்கு மேட்டரைத் தேத்திக்கிட்டு வாங்க.:-)

மெர்ரி கிறிஸ்மஸ் & ஹேப்பி நியூ இ(ய்)யர்.//

ரிப்பீட்டேய்!...

Anonymous said...

நீங்களும் ரொம்ப கெட்டு போயிட்டீங்க :D இந்த மாதிரி தலைப்பைப் போட்டே பிதியை கிளப்புறீங்களே!இந்த வருசத்துக்கு இதுதான் கடைசி பதிவா?சரி அட்வான்ஸ் christmas,new year வாழ்த்துக்கள் எல்லாம் இப்போவே சொல்லி நானும் எஸ்கேப்.

இரண்டாம் சொக்கன் said...

இன்னும் கெளம்பலையா.....?

சீக்கிரமா கெளம்புனாத்தானே...சீக்கிரமா வரமுடியும்....

ஹி..ஹி...

delphine said...

எனது அருமை நண்பர்களுக்கு,
என்ன எல்லோரும் இப்படி ஒரு அன்பு மழைய பொழிஞ்சிட்டீங்க!
நான் டிசம்பர் மாதம் 8-ம் தேதி காலை சென்னையை விட்டு புறப்படுகிறேன்..ஜனவரி மாதம் 10-ம் தேதி திரும்புவேன்...தங்க போகும் இடம்--- san antonio-Texas...
Thank you very much for all your wishes. It gives me such a good feeling to get to know you all...
i will soon write the phone number to contact me there.

ஆஷ் அம்ருதா said...

HAPPY JOURNERY AND BON VOYAGE AUNTY.

ADVANCE CHRISTMAS AND NEW YEAR WISHES

kavidhai Piriyan said...

நான் முதன் முதலாய் படித்தது இந்த வருடத்திற்கான உங்களின் கடைசி
பதிவு...எனது ஆரம்பம்.....

புத்தாண்டில் உங்கள் வருகைக்காக காத்திருகிறோம் டாக்டர்..................புதிய சிகிசைகளுடன் வாங்க...........