Saturday, November 17, 2007

ஏன் இந்த கொலை வெறி..?/?????

ஏன் இந்த கொலை வெறி..இளம் பருவத்தினர்....... வாழ்க்கையில் இன்னும் எவ்வளவோ சாதிக்க வேண்டிய கண்மணிகள்.. ஏன்? ஏன் இப்படி.?


ஒவ்வொறு நாளும் ஐ.சி.யூ-க்குள் நுளையும் போது மனசு 'பட படவென்று அடிக்கிறது... மிகவும் செல்வாக்கு பெற்ற பி.பி.ஓ-க்கள் தங்கள் கீழ் வேலை செய்யும், பணியாளர்களுக்கு என்ன பாதுகாப்பு கொடுக்கிறது? அவர்கள் உயிருக்கு என்ன உத்திரவாதம் உள்ளது.?, சென்னையில் மட்டும் தான் இப்படியா?
நேற்று விடியற்காலையில் நான்கு மணி அளவில் வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும் போது அவர்கள் பயணித்த கேப் median மீது மோதி, நான்கு பேருக்கு பலத்த அடி. அதில் ஒரு இளைஞன் மிகவும் சீரியசான நிலையில் உள்ளார்.

இந்த குழந்தைகளின் பெற்றோர்களை பார்க்கும் போது ரொம்ப பாவமா இருக்கு. முதல் இரண்டு நாட்களுக்கு Company HR " Dont worry, we will take care" என்கிறார்கள். after that they simply disppear from the scene.
பெரும்பாலும் மிகவும் ஏழ்மையான குடும்பத்து பெற்றோர்களைத் தான் பார்க்க முடிகிறது.

அதுபோல நேற்று evening Tidel park road-l தலை தெறிக்க சென்ற ஒரு 2 Wheeler Rider ( 'Dominos Pizza ' rider.) எவ்வளவு அழகாக Balance செய்து ஒவ்வொறு ட்ராக்காக மாறி மாறி கடைசியில், சிக்னலுக்காக நிறுத்தும் போது கீழே விழுந்தார்.(அவ்வளவு வேகம், பரபரப்பு). ஒரு ஐந்து நிமிடம் லேட்டான pizza ஆறி போய்விடுமோ!
its ok if the pizza gets cold, but not our life!

15 comments:

குட்டிபிசாசு said...

அம்மா,

தமைப்ப பார்த்துட்டு நீங்க கூட மொக்கை பதிவு போட ஆரம்பிச்சிடீங்கனு வந்தேன். சீரியஸ் தான்!!

இது பாஸ்ட்புட் காலம்! இந்த இளைஞர்கள் அடங்க மாட்டாங்க!

முத்துலெட்சுமி said...

dr .. title எல்லாம் சூப்பரா போடறீங்களே?
BPOசுமோ பாத்தாலே நடுங்குது.. இங்க டில்லியிலும் அதே கதைதான்..

கோபிநாத் said...

ஒன்னும் சொல்லறதுக்கு இல்லம்மா :(

ரசிகன் said...

அக்கா.. இது அந்த இளவட்டங்களின் தவறே தவிர ,பிபிஓ இதற்க்கு என்ன செய்ய முடியும் என்று புரியவில்லை.
தன்னை நம்பி ஒரு குடும்பம் இருக்குன்னு ஒரு நெனப்பே இல்லாம..லேட்டா கெளம்பி பந்தய கணக்கா ,தலைக்கவசம் கூட இல்லாம பறக்கறவிங்க..புரிஞ்சிக்க மாட்டேங்கராய்ங்களே..

நாகை சிவா said...

இதில் நிறுவனங்களை சொல்லி ஏதும் ஆவ போவது இல்லை.(காப்பீடு செய்து கொடுத்த பட்சத்தில்)

வேகம் தான்....அவசர உலகில் இருந்து இப்படி ஆகி விட்டோம். (என்னையும் சேர்த்து தான்)

//இந்த இளைஞர்கள் அடங்க மாட்டாங்க!//

புரியும் வரை அடங்க மாட்டார்கள், புரிந்தால் அடங்குவார்கள்.

வடுவூர் குமார் said...

இங்கேயும் பிட்ஸா ஆட்கள் இப்படித்தானா?? :-(

Anonymous said...

These fast food delivery boys may have timelines that they have to deliver the ordered item within 45 minutes to each customer. Othewise, they promize to give the pizza free (atleast in US). It may work in US as the traffic may not as congested as in India.

Paheerathan said...

என்ன செய்வது டாக்டர் எல்லாம் வேகம் படுத்தும் பாடு...!

இளைய தலைமுறையின் மீது தங்களுக்கு இருக்கும் அக்கறையை மதிக்கிறேன்

இரண்டாம் சொக்கன்...! said...

எங்க அம்மாச்சி அடிக்கடி ஒன்னு சொல்லுவாங்க...

....மனுசனுக்கு ஒன்னு சொல்புத்தி வேணும் அல்லது சுயபுத்தி வேணும்...ரெண்டும் இல்லாட்டி அவன ஆண்டவனால கூட காப்பாத்த முடியாது...

இப்ப வண்டி ஓட்றவய்ங்கள பாக்கும் போது இதான் நினைவுக்கு வருது..ம்ம்ம்ம்ம்

துளசி கோபால் said...

பீட்ஸா டெலிவரிக்காரன் பறக்கரதுலே என்ன ஆச்சரியம்? அதான் ஒரு குறிப்பிட்ட நேரம்( 20 இல்லை 30 நிமிஷம்) இருக்காம். ஆர்டர் செஞ்சு டெலிவரி டைம் இதுக்கு மேலே ஆயிருச்சுன்னா பீட்ஸாவுக்கு காசு கொடுக்க வேணாம். இலவசமாயிரும்.

அதான் இப்படி மனோ வேகத்துலே போறாங்க.

நம்மூர் மாதிரி இடத்துலே டெலிவரிக்கு ஒரு ரெண்டு நாள் டைம் தரலாம்.

Compassion Unlimitted said...

First timer here...AAngilatthukku mannikkavum Doc...
Many years back when one of my clients from Japan came here,he commented technology and rules should go hand in hand.ie rules should come into effect so that technologies advantage could be absorbed by us..Here we have the super bikes on the road but the rules go kite flying.
What u mentioned as sirens of ambulance blaring in the late hours sends a chill thru the spine.Honestly is there a solution other than the self discipline !!
TC
CU

நானானி said...

பீட்சா ஆறிவிட்டால் பரவாயில்லை குறித்தநேரத்துக்குள் டெலிவரி செய்யாவிடால் ப்ரீயாக கொடுக்கவேண்டுமே! அதுதான் அந்த அசுர..எம வேகம்!

delphine said...

அருண்@ குட்டி பிசாசு, ரொம்ப நாளா காணோமே! மொக்கையெல்லாம் போட தெரியாது அருண்...கொஞ்சம் சீரியஸ் பேர்வழிதான்..(எழுதுவதில்)
முத்துலட்சுமி.. நன்றி.. அங்கு சுமோ! இங்கு டாடா இண்டிகா..
கோபி..நன்றி.
ரசிகன் தம்பி.. விடியற்காலையில் நடந்த ஆக்ஸிடெண்ட்.. ஓட்டுனர் தூங்கிருக்கலாம்.(or probably misjudgement).
சிவா.. மிஞ்சி போனா ஒரு லட்சம் அல்லது இரண்டு லட்சம் காப்பீடுகள்தான். அது இரண்டு மூன்ரு நாட்களுக்குள் தீர்ந்து போய்விடுகிறதே!

delphine said...

இங்கேயும் பிட்ஸா ஆட்கள் இப்படித்தானா?? :-(///
..குமார்... இங்கு சென்னையில் அதுவும் வெள்ளிகிழமை மாலை ட்ராஃபிக்-ல் செல்லும் 2 வீலர்களை பார்க்கும் போது பயமா இருக்கு.


It may work in US as the traffic may not as congested as in India.
you are absolutely right Anony.

இளைய தலைமுறையின் மீது தங்களுக்கு இருக்கும் அக்கறையை மதிக்கிறேன்///
Thank you Pakeerathan. they are the backbone of our society!
சொக்கரே! நன்றி.. அடிக்கடி நிறைய பழமொழி சொல்கிறீங்க. ம்ம்.

துளசி.. இது ரொம்ப அநியாயம்..உயிரை பணயம் வைத்து?

delphine said...

WELCOME COMPASSION UNLIMITED!!
VERY AGONIZING TO WATCH YOUNG BOYS ON THE VENTILATOR..

இந்த அசுர வேகம்... தேவையா நனானி.?