Thursday, November 15, 2007

நினைவுகள்..

ஆறடிக்கு மேல் இருப்பாரா?
இதுதான் என மனதில் அவரை பார்த்ததும் தோன்றிய முதல் கேள்வி. அசத்தும் புன்னகையுடன் கூடிய சிரிப்பு....
என்னையும், என் ஃப்ரண்டையும் அழைத்துக் கொண்டு போய் உட்கார வைத்தார்.
டிசம்பர் மாதத்தில் ஒரு மாலை வேளை...
இடம்: Fort St. George - உள்ளே இருக்கும் church. அங்கு நடந்த கிறிஸ்துமஸ் ஆராதனை (Christmas Carol Service)-ல் கலந்துக் கொள்ள நான் சென்ற போதுதான் அவரைப் பார்த்தேன்.
கொஞ்ச நேரம் சென்று என் பக்கத்து சீட்டில் குனிந்து prayer பண்ணி கொண்டிருந்த வரை பார்த்ததும், மனதில் ஒரு சந்தோஷம்...திருட்டுத்தனமாய் ஒரு லுக்...
கட்டை குரலில் பாடினார். (என்னடா இப்படி பாடுகிறார் என்று யோசித்தேன்)
service முடிந்து வெளியே வந்தோம்.... ஒரு பத்து நிமிஷம் இருங்க இதோ வந்து விடுகிறேன் என்று சொல்லி விட்டு சென்றார்..
காக்கி யூனிஃபார்மில் திரும்பி வந்தவரை பார்த்ததும் என் கண்களில் ஒரு மிரட்சி.
"நல்லா பாடுறீங்களே! கான்வென்டில் படித்தீர்களா" என்றார்.
" ஆமாம்". என்றேன். அவர் யூனிஃபார்மில் என் கண். இவ்வளவு பக்கமாக நின்று எந்த காவல்துறை அதிகாரியுடனும் பேசியதில்லை..
அவருடன் பேசும் போது நான் மொத்த தலையும் உயர்த்தி பார்க்க வேண்டியதிருந்தது.
ஆனால் அவரோ தன் கண்ணை மட்டும் தாழ்த்தி என்னிடம் பேசினார். . (stand at ease).... லேட் ஆகிவிட்டதே! எப்படி போவீர்கள்? ஹாஸ்டலில் பெர்மிஷன்?" என்றார்..
"பத்து மணிக்குள் செல்ல வேண்டும்"
"சரி வாங்க", என்று சொல்லிவிட்டு தன் பக்கத்திலிருந்த கான்ஸ்டபிளிடம் எங்களை பஸ் ஏற்றி விட சொன்னார். கொஞ்ச தூரம் எங்களோடு நடந்து வந்தவர்,
சிரித்துக்கொண்டே "பார்க்கலாம்" என்று சொல்லிவிட்டு நகர்ந்தார். இப்படித்தான் என் " மாசியை" முதலில் சந்திதேன்.
அவரை பற்றி முன்னமே தெரியுமானாலும், அதுதான் நான் அவரை முதன் முதலில் சந்தித்தது. செக்ரடேரியட்டில் செக்யூரிட்டி ஆபிஸராக அப்போது அவர் இருந்தார். அதன் பிறகு ஒரு குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது மறு சந்திப்பு. அதிகம் பேசமாட்டார். A MAN OF FEW WORDS...


ஒரு மாதத்திற்கு பிறகு ஒரு நாள் மாலை என் HOSTEL--லுக்கு வந்தார். அப்பொழுது நான் inter-collegiate ball badminton tournament- Finals- -ல் Ethiraj College -மாணவிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தேன். வேடிக்கைப் பார்த்தார். ஜெயித்தே ஜெயித்து விட்டோம்! நேராக எங்கிட்டே வந்து " you are fit to be a police officer's wife"- என்றார்...............அவர் ரசித்தவைகள்....எம்.ஜி.ஆர்...ஆயிரத்தில் ஒருவன் படத்தை --100 தடவைக்கு மேல் பார்த்தேன் என்பார்.பிடித்த இடம்.. ....நாகர்கோவில்.வேலை செய்த 17 இடங்களில் பிடித்த இடம் கோவை. (கோவை மக்களின் மரியாதை கலந்த பேச்சு ரொம்ப பிடிக்கும்)சாப்பாட்டு பிரியர் அல்ல. ஆனால் 'நுங்கு' மிகவும் பிடிக்கும்.Paris-ல் EIFFEL tower-ம், அமெரிக்காவின் நயாகரா Falls பார்த்த போது.. வாழ்க்கையில் அவர் ஆசைப்பட்டதெல்லாம் கிடைத்துவிட்டதாக நினைத்து சந்தோஷப்பட்டார்..


அவருக்கு மிகவும் பிடித்த பெண்- என் அம்மா.


புத்தக பிரியர்.


மிகவும் பத்திரமாக பாது காத்து வைத்திருந்த பொருள் -- 1975 -ம் வருட என் டைரி...(அதில் நான் அவருக்கென்று ஒரு கவிதை எழுதிருந்தேன். பிற்காலத்தில் என் குழந்தைகள் அந்த டைரியை படித்துவிட்டு mills and boon book படித்த மாதிர்ரியிருக்கிறது என்றார்கள்.)


பிடித்த பாடல்கள் - ரோஜாவில் வரும் ' சின்ன சின்ன ஆசை" & 'டூயட்'-ல் வரும் அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி பாட்டு.


he was very passionate about his police job. அவருடைய royal enfield வண்டிதான் பிடித்த வாகனம்.


எனக்கு 1980 களில் அமெரிக்காவில் settle ஆகும் சந்தர்ப்பம் வந்த போது "வேண்டாமே" என்றார். அவரை பொறுத்தவரை 'அமெரிக்கா' சுற்றி பார்க்க மட்டும்தான்.

தன் குழந்தைகளை நண்பர்களாகவே கருதினார். பெண்கள் independent -ஆக இருக்க வேண்டும்.....


சமையல் தெரியாது. ( குக்கரில் 5 விசில் வந்ததும் ஆஃப் பண்ண சொன்னால், சமையலறையிலே செட்டிலாகிவிடுவார்).


ஒரு நிறைந்த வாழ்வை வாழ்ந்து, நிறைந்த வாழ்வை கொடுத்து விட்டு சென்றுவிட்டார்.his blog

http://besafeonroads.blogspot.com/

http://masilamani-sachidanandam.memory-of.com/

please visit his blog and also his memorial site.

21st november is his first death Anniversary.

31 comments:

இம்சை said...

Me the firstu... we will keep uncle in our prayers

delphine said...

thanks Imsai!

இலவசக்கொத்தனார் said...

ஒவ்வொரு வரிக்கும் ஒரு பதிவு போடலாம் போல.

நல்ல நினைவுகள் டாக்டர்.

delphine said...

நன்றி கொத்ஸ்..
நல்ல நினைவுகள்....சந்தோஷமான கணங்கள்.

Kasi Arumugam - காசி said...

ஓ... ஒரு வருசம் ஆகிவிட்டதா? :(
மாசிலாமணி சாருடன் பேசியது இன்னும் பசுமையாக இருக்கின்றது, டாக்டர். நினைவூட்டியதற்கு நன்றி.

பாலராஜன்கீதா said...

உங்கள் இனிய நினைவுகளை எங்களுடன் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி டாக்டர்.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

உங்களுடைய ஆங்கில வலைப்பதிவுதான் நான் முதலில் படித்த உங்களது வலைப்பதிவு. கூடவே மாசிலாமணி அவர்களின் வலைப்பதிவையும் அவ்வப்போது எட்டிப்பார்ப்பேன். போலீஸ்காரர் ஒருவர் வலைபதிவது சந்தோஷமாக இருந்தது. அவரது மரணம் பற்றி தெ.கா. சொன்னபோது மிகவும் துக்கமாக இருந்தது. எங்களுக்கு அதற்குள் ஒருவருடம் போய்விட்டதா என்றிருந்தாலும் உங்களுக்கு ஒரு மாமாங்கம் போல இருக்கும் என்று உணர்கிறேன். அவ்வப்போது சாரைப்பற்றி எழுதுங்களேன். இப்போது நீங்கள் அவரைப்பற்றி எழுதுவதையும் படிக்கிறேன்.

நன்றி!

-மதி

Thekkikattan|தெகா said...

டாக், அதுக்குள்ளயும் ஒரு வருடம் ஓடிப்போச்சா. நமக்கு பிடிச்சவங்க என்னைக்குமே நம்மை விட்டு விலகுவதில்லைதானே... இன்னமும் மாசி சார் நம்மோடத்தான் இருந்துட்டு இருக்கார்.

முழுமையாக வாழ்ந்த மனிதர் என்பது முற்றிலுமாக உண்மை. எல்லாம் நல்லபடியாக நடந்தேற ப்ரார்தனைகளுடன்...

தெகா.

தஞ்சாவூரான் said...

//எனக்கு 1980 களில் அமெரிக்காவில் செட்ட்லெ ஆகும் சந்தர்ப்பம் வந்த போது "வேண்டாமே" என்றார். அவரை பொறுத்தவரை 'அமெரிக்கா' சுற்றி பார்க்க மட்டும்தான்.//

நல்ல புரிதல்.

//தன் குழந்தைகளை நண்பர்களாகவே கருதினார். பெண்கள் இன்டெபென்டென்ட் -ஆக இருக்க வேண்டும்.....//

//வேலை செய்த 17 இடங்களில் பிடித்த இடம் கோவை. (கோவை மக்களின் மரியாதை கலந்த பேச்சு ரொம்ப பிடிக்கும்)//

அட என்னை மாதிரியே நெனச்சு இருக்கார் :)


//ஒரு நிறைந்த வாழ்வை வாழ்ந்து, நிறைந்த வாழ்வை கொடுத்து விட்டு சென்றுவிட்டார்.//

உங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!
அறிமுகம் இல்லையென்றாலும், அவரைப் பற்றி நீங்கள் கூறியிருப்பவை, அவர்மேல் மதிப்பை உண்டுசெய்கின்றன.

நிலா said...

ரசித்துப் படித்துக்கொண்டே வந்தேன். கடைசி இரண்டு வரி படிக்கும் போதுதான் தெரிந்து நெகிழ வைத்து விட்டது.

நிறைந்த ஒரு வாழ்க்கைக்கு ஒவ்வொரு வரியும் சாட்சி.

ஆயில்யன் said...

மேடம் நீங்கள் கொடுத்திருந்த தகவல்களிலிருந்து மாசிலா சாரைப்பற்றியும்,லிங்குகளின் மூலம் அவரது பதிந்த பதிவுகளையும் உணர்ந்தேன்! சாலைப்பாதுகாப்பு பற்றிய தனிபதிவினை நான் இன்றுதான் கண்டேன்! நல்ல எண்ணங்களை விதைத்து சென்றுள்ளார் என்று மட்டும்தான் எனக்கு சொல்ல தோன்றுகிறது!

துளசி கோபால் said...

கண்கள் சந்தித்த அந்த முதல் கணம் மறக்க முடியுமா?

'அண்ணலும் நோக்கினா(ர்)ன்.
அவளும் நோக்கினாள்' தான்.

மாசியைப் பற்றின மலரும் நினைவுகளில் எங்களையும் கூடக்கொண்டுபோனதுக்கு நன்றிங்க.

சினிமாவில் பார்த்துக்கிட்டு இருக்கும் போலீஸ் ஆஃபீஸர்களுக்கு மாற்று மருந்து இவர்.

Paheerathan said...

அழகான பசுமையான நினைவுகள் டாக்டர் ஒரு கணவன் ஒரு அப்பா எப்படி இருக்கவேண்டும் என்று சொல்கின்றன உங்கள் பதிவுகள்
பகிர்ந்தமைக்கு நன்றிகள்

cheena (சீனா) said...

டாக்டர், இது தான் நான் தங்கள் பதிவுகளுக்கு வரும் முதல் தடவை. படிக்க ஆரம்பிக்கும் போதே மனதினில் ஒரு ஐயப்பாடு - இது மாதிரித்தான் இருக்குமென.

சோகங்கள் பகிர்ந்து கொள்வதற்கே - நினைவுகளில் மூழ்கி மகிழ்வது சோகத்தை அதிகரிக்கும் என்றாலும் அது வாழ்க்கையில் தேவையான ஒன்று. ஓராண்டு ஓடி விட்டதா ??
அன்றைய தினம் பிரார்த்தனை செய்கிறேன்.

தென்றல் said...

முதன் முதலில் கண்மணி அவர்களின் வலைப்பதிவில்தான் நீங்கள் அறிமுகம்.. பின் உங்களின் ஆங்கில வலைப்பூவை படித்தபொழுது மனசு கனத்தது.

ம்ம்..இது நெகிழ்வான பதிவு...

நினைவுநாளில் என்னுடைய பிராத்தனைகளும்...

கண்மணி said...

NO WORDS TO CONSOLE U.BUT YOU R A BLESSED WOMAN TO HV A PARTNER LIKE MASI
டெல்பின் இன்னுமொரு தனிப்பதிவில் சாருடைய போட்டோ மற்றும் அவரது மெமோரியல் பிலாக் உரல் குடுத்து கேண்டில் ஏற்றச் சொல்லுங்களேன்[விரும்பினால்]
ஒரு நல்ல மனிதர் பற்றி இன்னும் நிறையப் பேர் அறிந்து கொள்வார்கள்.

கண்மணி said...

NO WORDS TO CONSOLE U.BUT YOU R A BLESSED WOMAN TO HV A PARTNER LIKE MASI
டெல்பின் இன்னுமொரு தனிப்பதிவில் சாருடைய போட்டோ மற்றும் அவரது மெமோரியல் பிலாக் உரல் குடுத்து கேண்டில் ஏற்றச் சொல்லுங்களேன்[விரும்பினால்]
ஒரு நல்ல மனிதர் பற்றி இன்னும் நிறையப் பேர் அறிந்து கொள்வார்கள்.

நாகை சிவா said...

அழமான நினைவுலைகள்.

எங்கள் பிராத்தனைகள் உங்களுடன் துணை வரும்.

மங்கை said...

டாக்டரம்மா...

உணர்வுபூர்வமான இடுக்கை
இங்க சொன்ன ஒரு சில அனுபவங்களே உங்களுக்கு கிடைத்த வாழ்க்கையின் அழகை சொல்ல போதுமானது..

ஒரு வருடம் ஓடிவிட்டது...ஹ்ம்ம்.. ஒரு காவல்துறை அதிகாரியாகத்தான் எனக்கு அவரை தெரியும்...இங்கு மாசியாய் மேலும் ஜொலிக்குறார்..

தேவ் | Dev said...

நினைவுகளின் சாலை வழியில் உங்களோடு எங்களையும் சேர்த்தேக் கூட்டிப் போய்விட்டீர்கள்..

மாசி சாருக்கு ஒரு அருமையான நினைவஞ்சலியாக இந்தப் பதிவு அமைந்துள்ளது..

பிராத்தனைகளில் இணைகிறோம்...

குசும்பன் said...

நல்ல ஒரு பதிவு.

இன்னும் கொஞ்சம் உங்கள் முதல் சந்திப்பு பற்றியும் சொல்லுங்களேன்.

ரசிகன் said...

டாக்டர்..அக்கா.. ரொம்பவே ரசிச்சேன் உங்க நினவலைகளை..
உங்க ஹீரோவோட அப்ரோச்சும் ரொம்பவே சூப்பர்..
பிடிச்சிருக்கு உங்க காதல் கதை..

ரசிகன் said...

நாங்க்கூட டாக்டருங்க வாழ்க்கையில இந்த அன்பு / சென்டிமென்டுக்கெல்லாம் அம்புட்டு ரசனை பத்தாதுன்னு நெனச்சிக்கிட்டிருந்தேன்..
நீங்க அவர ரசிச்சதும் அவரு உங்கள மதிச்சதும் அருமை.. ரொம்ப குடுத்து வச்சவங்க ரெண்டு பேருமே..
( குக்கரில் 5 விசில் வந்ததும் ஆஃப் பண்ண சொன்னால், சமையலறையிலே செட்டிலாகிவிடுவார்).

ரசிகன் said...

// ஒரு நிறைந்த வாழ்வை வாழ்ந்து, நிறைந்த வாழ்வை கொடுத்து விட்டு சென்றுவிட்டார்.//
இதை லேட்டாத்தான் கவனிச்சேன்..
வருந்துகிறேன்.. நீங்களும் , மனதில் காதலும் உள்ளவரை,அவரும் வாழ்கிறார்.. உங்கள் மனதினுள்.

ரசிகன் said...

அவருக்கு பிடித்த ஒவ்வொன்றையும் நீங்கள் நினைவு கூறும் போது.. அவர்மீது நீங்க ஏம்புட்டு அன்பு வைச்சிரிக்கீங்கன்னு புரியுது..

ரங்கன் said...

நான் சொல்ல நினைத்ததை என் நண்பர்கள் சொல்லிவிட்டார்கள்
அதனால்...

உங்களை பிரிந்தாரா?

நீங்கள் மகிழ்ச்சியுரும்போது உங்களுக்குள் மகிழ்ச்சியாய் அவர்,

நீங்கள் கவலைக்கொள்ளும்போது ஆறுதலாய் அவர்,

நீங்கள் தடுமாறும் போதெல்லாம் வழிகாட்டியாய் அவர்,

நீங்கள் கடக்கும் ஒவ்வொரு கணமும் உங்கள் வாழ்க்கையாய் அவர்,

நீங்கள் இப்போது சொல்லுங்கள் அவர்
உங்களை பிரிந்தாரா ?

இரண்டாம் சொக்கன் said...

...No one can die - while he loves!

Behind every great love is a great story......

ம்ம்ம்ம்ம்....

Compassion Unlimitted said...

Very touching.What is important is the impressions he has left behind in you and your kids.
I can feel the pain .but let me assure you he is in the safe hands of the Almighty
TC
CU

அருட்பெருங்கோ said...

ஒரு வருடம் ஆகிவிட்டதா மேடம்? :(

நிறைவான வாழ்க்கைக்கு நினைவாஞ்சலியாக இருக்கிறது இப்பதிவு.

delphine said...

My dera Friends,
I want to Thank you all for sending your tributes and lighting a candle in my husbands memorial site. I am really overwhelmed!

rahini said...

arumaiyana ninaivukal
anpodu
rahini