Sunday, November 4, 2007

பட்டாசு இல்லாத தீபாவளிகள்....

என் அம்மா வீட்டில், கிறிஸ்துமஸ்,ஈஸ்டர் தவிர வேறு எந்த பண்டிகைகளும் கொண்டாடமுடியாது. பண்டிகைகள் ஒரு FUN TIME என்று என் அப்பவால் எடுத்துக் கொள்ள முடியவில்லை. பழங்காலத்து மனுஷன். ஆனால் என் "மாசி"க்கு, எந்த பண்டிகையானாலும் ஓகே தான். அதனால் குழந்தைகள் பண்டிகை நாட்களில் மிகவும் குதூகலமாகவே இருப்பார்கள்.
மாசியால் அதிக நேரம் குழந்தைகளுடன் spend பண்ண முடியாது . இரவு கூட வீட்டிற்கு வர முடியாத நாட்கள் உண்டு.. ஆனால் எப்பொழுதும் அவர்கள் தேவையை நன்றாகவே பூர்த்தி செய்வார்.....

தீபாவளி அன்று நிச்சயம் பட்டாசுகள் உண்டு. விசேஷங்களுக்கு ஏற்ப செய்ய வேண்டிய இனிப்புகளையும் செய்ய வேண்டும். குழந்தைகளின் சந்தோஷம்தான் முக்கியம். பிள்ளைகளுக்கோ அப்பா நல்ல நாட்களில் வீட்டில் இல்லையே என்று ஒரு வருத்தம் இருக்கும்...


1997.. தீபாவளி ..... என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றுதான்.


காஞ்சீபுரத்திலிருந்து 1997 மார்ச் மாதம் பெரம்பலூர் மாவட்டத்திற்கு transfer. அதன் பிறகு இரண்டு மாதத்திற்குள் ஜெயம் கொண்டானுக்கு transfer...

அடிக்கடி transfer ......

புது இடம், புது ம்மக்கள்..

நான் திருச்சியிலே தங்கிவிட்டேன். எனக்கு அங்கு வேலை கிடைத்தது. மகன் கோடைக்கானல் ஸ்கூலில் படித்து கொண்டிருந்தான். தீபாவளிக்கு 4 நாட்கள் லீவு கிடைக்கவே அவனும் அவன் ஃப்ரண்ட் -ம் திருச்சி வந்தார்கள். அப்பாவிற்கு போன் செய்து எப்ப என்னை பார்க்க வருவீங்க, பட்டாசு வேண்டும் என்று கேட்டான். அவர் " லீவு இல்லை . ஆனால் எப்படியும் வந்து உன்னை பார்த்து பட்டாசு கொடுத்துவிட்டு சென்று விடுவேன்" என்றார்.

நானும் தீபாவளி க்கு முந்தின இரவு night shift -க்கு போய்விட்டேன். இரவு ஒரு மணிக்கு அவர் ஆஸ்பத்திரியில் என்னை வந்து பார்த்தார். வீட்டிற்கு போய் மகனிடம் கொஞ்ச நேரம் பேசிவிட்டு,

உடனே ஆண்டி மடம்(ஜெயம் கொண்டான்) போக வேண்டும் என்றார். நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. அன்று இரவு புது பட ரிலீஸ் மாதிரி ஒன்பது குழந்தைகள் பிறந்தன.. பயங்கர busy......

கிடைத்த கொஞ்ச நேரம் லேபர் வார்டில் ஒரு குட்டி தூக்கம்... என்னவோ கனவுகள். அவருக்கு accident ஆனது போல்... ..

காலையில் ஆறு மணிக்கு லால்குடி போலீஸ் ஸ்டேஷனிலிருந்து போன்.. அவருக்கு ஒரு சின்ன ஆக்ஸிடெண்ட் என்று.... லால்குடி திருவரங்கத்திலிருந்து 15 கிலோமீட்டர் தூரமிருக்கும்.... என் 'armada' van -ஐ எடுத்துக்கொண்டு சென்றேன். அவர் வந்த வெள்ளை அம்பாஸடர் கார் லால்குடி ஆஸ்பத்திரிக்கு முன் ... .... முன் பாகம் சிதைந்திருந்தது.. ..உள்ளே பார்த்தேன்.. ஒரே ரத்தம்.. .. கூட்டம் கூட்டமாக மக்கள் காருக்குள் எட்டி பார்த்து ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள்... ஒரு போலீஸ்காரர் வந்து என்னை உள்ளே அழைத்து சென்றார்... மாசிக்கு தலையில், .. கையில் எல்லாம் கட்டுகள்... சட்டையெல்லாம் ரத்தம் ...என்னைப் பார்த்ததும் ஒரு சிரிப்பு... எங்கிட்டே வந்து மெலிதாக தான் கொண்டு வந்த ' pistol" -ஐ காணோம் என்றார். அவருக்கு அடிபட்ட வேதனையை விட பிஸ்டல் தொலைந்ததுதான் பெரிசாக பட்டது.. நானும் அவரும் ஒரு போலீஸ் துணையுடன் accident ஆன இடத்திற்கு போனோம். ரோடு மிக மோசம்.. ... வலியுடன் வயலுக்குள் இறங்கி அரை மணி நேரம் தேடி கண்டுபிடித்தார். அப்புறம் தான் மனதில் ஒரு தெம்பு.... (வண்டி ஒரு புளிய மரத்தில் மோதி, பின் கதவு திறந்து இவர் வயலில் விழுந்துவிட்டார். அந்த வேகத்தில் பிஸ்டலும் வெளியில் விழுந்துவிட்டது. நல்ல காலம்! தீபாவளியானதால் அந்த பக்கம் யாரும் வரவில்லை) திரும்பி லால்குடி வந்து அங்குள்ள போலீஸ் ஆபிசரிடம் பிஸ்டலை ஒப்படைத்து விட்டு திருச்சி GH சென்றோம் . மகன் தன் அப்பாவை அந்த கோலத்தில் பார்த்ததும் கட்டி பிடித்து கதறினான்... ....(தன்னால்தானே அப்பாவுக்கு accident ஆகிவிட்டது).. அதன் பிறகு CMC -vellore-ல் போய் கையில் #-க்கு அறுவை சிகிச்சை செய்து.. அங்கு இரண்டு வாரம் ........

அந்த தீபாவளிக்கு பிறகு என் மகன் இது நாள் வரை பட்டாசு வெடிப்பதில்லை.

18 comments:

Anonymous said...

//நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. அன்று இரவு புது பட ரிலீஸ் மாதிரி ஒன்பது குழந்தைகள் பிறந்தன.. பயங்கர busy...... //
அப்ப‌ த‌மிழ் ப‌ட‌த்துல‌ வ‌ர்ர‌ காட்சிக‌ள் இத‌ப்பாத்துதான் எடுத்துருக்காங்க‌ போல‌ இருக்கே.

//அதனால் குழந்தைகள் பண்டிகை நாட்களில் மிகவும் குதூகலமாகவே இருப்பார்கள். //

ஆமாம் டாக்ட‌ர். சின்ன‌ வ‌ய‌சில‌ தீபாவ‌ளி நாட்க‌ள்ல‌ ப‌ட்டாசு அக்க‌ம் ப‌க்க‌த்தாரோட‌ வெடிக்க‌ற‌ ச‌ந்தோஷ‌ம் இன்னும் நினைவுல‌ இருக்கு. ப‌க்க‌துலயும் எதுத்த‌ வீட்டுல‌யும் கிறிஸ்த‌வ‌ர்க‌ள். எங்களுக்கு கிறிஸ்ம‌ஸுக்கு பெரிய‌ கேக் குடுப்பாங்க‌. தீபாவ‌ளி ச‌ம‌ய‌த்துல‌ நாங்க‌ அவ‌ங்க‌ளுக்கு ப‌ல‌கார‌ம் குடுப்போம். நிறையா மிஸ் ப‌ண்ண‌றேன் இப்ப‌.

கோபிநாத் said...

மனதை தொட்ட பதிவு! :)

தீபாவளி வாழ்த்துக்கள் :)

துளசி கோபால் said...

ரொம்ப டச்சிங் டச்சிங் கொசுவத்தி.

உங்க 'மாசி'யை நினைச்சு நாங்களும் பெருமைப்படறோம்.

எங்களுக்கும் அடுத்தவருசம் முதல் பட்டாஸ் அநேகமாக் கிடையாது.

இங்கே கை ஃபாக்ஸ் டே பட்டாஸ் விற்பனைக்கு ஆப்பு வைக்கப்போகுதாம் எங்க அம்மா.

ரெண்டு மூணு தீ விபத்து ஏற்பட்டுருச்சு(-:

.:: மை ஃபிரண்ட் ::. said...

டாக்டர், கொசுவர்த்தி நல்லா சுத்தியிருக்கீங்க. நல்லா இருக்கு பதிவை படிக்க. :-)

நாமக்கல் சிபி said...

/மகன் தன் அப்பாவை அந்த கோலத்தில் பார்த்ததும் கட்டி பிடித்து கதறினான்... ....(//

:(

பிஞ்சு மனசு!

தருமி said...

//அந்த தீபாவளிக்கு பிறகு என் மகன் இது நாள் வரை பட்டாசு வெடிப்பதில்லை.//

சீக்கீரமே தன் பிள்ளையோடு உங்கள் பிள்ளை பட்டாசு வெடிக்கணும்; அதைப் பார்த்து நீங்க சந்தோஷப்படணும்.

முத்துலெட்சுமி said...

ஒருவருக்கொருவர் இருக்கும் பாசம் தான் எத்தனை அழகானது..
மலரும் நினைவுகள்... ;)

delphine said...

அம்மிணி, பண்டிகை என்றாலே குதூகலம்தான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை..அதற்கு முன்பு செய்கின்ற preparations அதை விட ஜாலிதான்..எல்லாம் இங்கேயும் missing தான்... குழந்தைகள் பெரிதானதும் அவரவர் குடும்பம் என்றாகிவிடுகிறது....

நன்றி கோபி.. தீபாவளி நல் வாழ்த்துக்கள்...

delphine said...

அம்மிணி, பண்டிகை என்றாலே குதூகலம்தான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை..அதற்கு முன்பு செய்கின்ற preparations அதை விட ஜாலிதான்..எல்லாம் இங்கேயும் missing தான்... குழந்தைகள் பெரிதானதும் அவரவர் குடும்பம் என்றாகிவிடுகிறது....

நன்றி கோபி.. தீபாவளி நல் வாழ்த்துக்கள்...

குசும்பன் said...

நல்ல கொசுவத்தி!

அப்புறம் தருமி சார் கமெண்டுக்கு ஒரு ரிப்பீட்டேய்:)

delphine said...

துளசி..நல்ல கொசுவத்தியா..? ம்ம்.. மலரும் நினைவுகள்,
இரண்டு மூணு தீ விபத்தா?.. நம்மூரில தீபாவளி அன்னிக்கு எல்லா ஆஸ்பத்திரி emergency -லும் தீ புண்கள்தான். ஆமா துளசி மாசி ரொம்ப நல்லவர்..

மைஃபிரண்ட்..நன்றி..

சிபி... அவன் அழுத விதம் ஒரு நிமிடம் எனக்கே உயிர் போய் வந்தது.


thanks தருமி சார்...
:)

delphine said...

முத்துலட்சுமி & குசும்பன் நன்றி.

இரண்டாம் சொக்கன்...! said...

புகழ்ச்சிக்கு சொல்லலை...

வர வர....உங்க விவரணங்கள் எல்லாம் சம்பவங்களை நேரில் கொண்ர்கிறது. எளிமையான வார்த்தை பிரயோகங்கள்...

நெருடல் இல்லாத நடை...

அசத்றீங்க....

தீபாவளி வாழ்த்துக்கள்....

நாகை சிவா said...

உங்க மாசிக்கு ஒரு சல்யூட் :)

அருமையான நினைவு அலைகள்

delphine said...

நன்றி சொக்ஸ்!!! எல்லாம் உங்கள மாதிரி ஆன்மாக்களால்தான் கொஞ்சம் எழுத கற்று கொண்டிருக்கிறேன்!


உங்க மாசிக்கு ஒரு சல்யூட் :)////
நன்றி சிவா.. ரொம்ப சந்தோஷமா இருக்குதுப்பா.

delphine said...

நன்றி சொக்ஸ்!!! எல்லாம் உங்கள மாதிரி ஆன்மாக்களால்தான் கொஞ்சம் எழுத கற்று கொண்டிருக்கிறேன்!


உங்க மாசிக்கு ஒரு சல்யூட் :)////
நன்றி சிவா.. ரொம்ப சந்தோஷமா இருக்குதுப்பா.

தென்றல் said...

//அந்த தீபாவளிக்கு பிறகு என் மகன் இது நாள் வரை பட்டாசு வெடிப்பதில்லை.//

மனதை தொட்டது உங்களின் நினைவலைகள்..!

நானானி said...

தீபாவளி தந்தது நல்ல பாடம்தான். பிஸ்டலைத்தேடச்சொன்ன மாசியின் கடமையுணர்வுக்கு ஹாட்ஸ் ஆஃப்!!
நாங்களும் பட்டாசு,மத்தாப்பு வெடித்து,கொழுத்தி நாளாச்சு.
கிளிகளுக்கு றெக்கை மொளச்சு பறந்தாச்சு.