Saturday, October 27, 2007

பிடிச்சா சிரிங்க..

சென்னையில் நல்ல மழை... ஜன்னலை திறந்து வெளியே பார்த்தால்....... பக்கத்து வீட்டு கொய்யா மரத்திலிருந்து சொட்டு சொட்டா தண்ணீர் விழுகிறது... முருங்கை மரத்தில் அத்தனை முருங்கைகாய்கள்.( ம்ம்... இன்று சமையலுக்கு ஒன்றை பறித்துவிட வேண்டியதுதான்..). ..
என் வீட்டில் வேலை செய்யும் அம்மணி வரவில்லை...sunday... ....பாவம்.. அவளுக்கும் இந்த குளிரில் போர்த்திகொண்டு தூங்க வேண்டும் போலிருக்கும்...... எனக்கு சளி பிடித்துக்கொண்டு இருமல்...இந்த மழை நாட்கள் வந்தாலே கஷ்டம்தான். ஒரு வேலையும் செய்ய தோணாது......
internet-ஐ மேய்ந்துக்கொண்டிருக்கும் போது பார்க்க நேர்ந்த சில ஜோக்குகள்...
டாக்டர்களை பற்றி எத்தனை damaging ஜோக்ஸ் வந்தாலும் எனக்கு சிரிக்கத்தான் தோணும்...(most of them are like that only) .ஆனால் நர்சுகளை பற்றி ஜோக்குகள் வந்தால் பிடிக்காது. ஜோக்குதானே என்று அதை தள்ளி வைக்கும் மன பக்குவம் எனக்கு இல்லை. ஏனெனில் அவர்கள் படும் கஷ்டங்களை கண்கூடாக பார்ப்பதால் என்னவோ! நான் ரசித்த சில ஜோக்குகளை நீங்களும் ரசிங்களேன்.!!

"நம்ம தலைவர் சுத்த அல்பம்!"
"ஏங்க?"
"அவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தா என் மனைவிக்கு ஒரு நர்ஸ் பட்டமாவது கொடுங்க. எப்படியாவது என் தம்பிக்கு ஒரு கம்பவுன்டர் பட்டம் கொடுங்கன்னு நச்சரிக்கிறாராம்."


"இரும்பிக்கிட்டே இருக்கிற அவன் ஏன் டாக்டர் போட்டோவை பார்த்துகிட்டே இருக்கான்."
"அவங்க அம்மா இருமல் வந்தா டாக்டரை பார்க்கச் சொன்னாங்களாம்."


என்னது! காய்ச்சலுக்குன்னு போன உனக்கு ஆபரேஷன் நடந்துச்சா, கொடுமையா இருக்கே?"
"டாக்டர் வைச்ச தர்மா மீட்டரை முழுங்கிட்டேன். அதான்!"


"டாக்டர் நீங்க இன்னிக்கு ஆபரேஷன் பண்ண இருந்த பேஷண்ட் தப்பிச்சு ஓடிட்டார்."
"சரி, பரவாயில்லை விடுங்க பிழைச்சு போகட்டும்"


"நீங்க அதிர்ஷ்டசாலி டாக்டர்"
"எப்படி சொல்றீங்க?"
"உங்களுக்கு ஏதாவது ஆபரேஷன்னா, நீங்க பண்ணிக்க வேண்டியதில்லை பாருங்க!"


"டாக்டர் நீங்க ஆபரேஷன் பண்ணினதுல இருந்து எனக்கு ஒரே தும்மலா வருது!"
"அடடா... என்னோட பொடி டப்பா உங்க வயித்துல தான் இருக்கா?"


"தலைவர் திடீர்னு ஆஸ்பிடல் கட்டுகிறாரே என்ன விஷயம்?"
"அவருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கிறாங்களாம். தொழிலை ஆரம்பிச்சுடலாம்னு பார்க்கிறாரு."

( ரொம்ப நாளாச்சு தமிழ் மணம் பக்கம் வந்து... என்னை மறந்துடக்கூடாது பாருங்க... அதுக்குதான் இந்த போஸ்ட்.all these jokes are taken from HOT mail)

38 comments:

வித்யா கலைவாணி said...

நல்ல ஜோக்ஸ் மட்டும் தேர்ந்தெடுத்து இட்டுள்ளீர்கள். அடிக்கடி எழுதுங்கள்.Blog Archive இருந்தால் பழையவைகளை திரும்பிப் பார்க்க உதவும்.

கடைசி பெஞ்ச் said...

நல்ல ஜோக்ஸ்!

மழைக்கால காலை வேளை சிரிப்புடன் தொடங்கி இருக்கு!

புருனோ said...

//ஏனெனில் அவர்கள் படும் கஷ்டங்களை கண்கூடாக பார்ப்பதால் என்னவோ!//
அரசு மருத்துவக்கல்லூரிகளில் உள்ள செவிலியர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்களின் பணியினால் (அதாவது ஒரு வேலையும் செய்யாமல் இருப்பதால்) மற்றவர்கள் (குறிப்பாக மருத்துவர்கள்) படும் கஷ்டத்தை நீங்கள் பார்க்க வில்லை போலிருக்கிறது

delphine said...

Thanks Vidya!

Blog Archive இருந்தால் பழையவைகளை திரும்பிப் பார்க்க உதவும்.///
சரி பண்ணிட்டேன் பாருங்க வித்யா!

delphine said...

கடைசி பெஞ்ச்... நன்றி.. மழைக்காலம் ...சென்னையில் வாழ்க்கை கஷ்டம்...
"last bench" ungka profile missing?


புருனோ! ஒரு சில செவிலியர்கள் வேண்டுமென்றால் அப்படியிருக்கலாம். 21 வயதில் செவிலியர்களாக வாழ்க்கையில் அடி எடுத்து வைக்கும் பெண்களை பார்க்கும் போது பரிதாபமாகவே இருக்கிறது.

வித்யா கலைவாணி said...

//21 வயதில் செவிலியர்களாக வாழ்க்கையில் அடி எடுத்து வைக்கும் பெண்களை பார்க்கும் போது பரிதாபமாகவே இருக்கிறது.///
உண்மை தான். சில சமயங்களில் நர்ஸ்கள் படும் 'கஷ்டங்களை' பார்க்கும் போது, Bsc Nursing படிக்க முடியாமல் போனது கூட நன்மைக்கோ என்று நினைக்கத் தோன்றும்.

.:: மை ஃபிரண்ட் ::. said...

testing 1,2,3....

இரண்டாம் சொக்கன் said...

ர்ரொம்ப பிஸியா...ஆளையே காணோம்....

இப்பத்தான் எந்திரிச்சேன்...சாமியாடிக்கிட்டே வந்து சிஸ்டம் முன்னால உங்காந்து, இப்ப உங்க புண்ணியத்துல சிரிச்சிட்டு இருக்கேன்..

ஹி...ஹி...டாங்ஸ்

நான் கூட எழுதி நாளாச்சி, இன்னிக்கு எளுதீரணும்.

அப்பாலிக்கா...ஸ்ட்ராங்கா ஒரு மிளகுரசம் வச்சி சாப்டுங்க, இருமல் சளிக்கு நல்லாருக்கும்...(டாக்டருக்கே வைத்தியம் சொல்ற பேஷண்ட் நானாத்தான் இருக்கும்)

நான் ஏன் பேஷண்ட் ஆனேன் தெரிந்து கொள்ள என்னுடைய பதிவுக்கு ஓடி வாருங்கள்....(ஹி..ஹி..கோவிக்காதீங்க தாயே...சைக்கிள் கேப்ல ச்சின்னதா ஒரு வெளம்பரம்...)

நாகை சிவா said...

//"டாக்டர் நீங்க இன்னிக்கு ஆபரேஷன் பண்ண இருந்த பேஷண்ட் தப்பிச்சு ஓடிட்டார்."
"சரி, பரவாயில்லை விடுங்க பிழைச்சு போகட்டும்"


"நீங்க அதிர்ஷ்டசாலி டாக்டர்"
"எப்படி சொல்றீங்க?"
"உங்களுக்கு ஏதாவது ஆபரேஷன்னா, நீங்க பண்ணிக்க வேண்டியதில்லை பாருங்க!"//

சூப்பர்... :)

நாகை சிவா said...

21 வயசுல நர்ஸ் ஆகுறவங்க பாடு திண்டாட்டம் தான். ஆனால் அதையும் அவர்கள் திறம்பட செய்கின்றார்கள் என்பது பாராட்டப்பட வேண்டிய விசயம்... இது போன்ற சிறிய வயது நர்ஸ்கள் பெரும்பாலும் தனியார் மருத்துவமனைகளில் தான் வேலை செய்கிறார்கள். அதனால் பல விதங்களில் பல வித திண்டாட்டங்கள்.

ஆனால் பெரும்பான்மையான அரசு மருத்துவமனைகளில் வேலை செய்யும் நர்ஸ்கள், மருத்துவமனை ஊழியர்கள் எல்லாம் நோயாளிகளிடமும், அவர்களை அழைத்து கொண்டு வருகின்றவர்களிடமும் எப்படியெல்லாம் நடந்துக் கொள்ள கூடாதோ அப்படி எல்லாம் நடந்து கொள்ள மிக பெரிய அவலம்.

சென்னையில் பெரும்பான்யான அரசு மருத்துவமனைகளில் நான் கண்ட காட்சிகளை வைத்து சொல்கிறேன். அனைவரையும் கூற வில்லை என்பது உங்களுக்கே தெரியும்.

ஏன் இப்படி என்று சிலரை கேட்டால்... சார்.. உங்களுக்கு ஒரு நாள் கூத்து அப்படி தான் தெரியும்.. எங்களுக்கு இது தான் வாழ்க்கை.. இப்படி நடந்துக்கிட்டா தான் உண்டு என்கிறார்கள்...

புருனோ said...

//21 வயதில் செவிலியர்களாக வாழ்க்கையில் அடி எடுத்து வைக்கும் பெண்களை பார்க்கும் போது பரிதாபமாகவே இருக்கிறது.//

நான் தனியார் மருத்துவமனைகளில் குறைந்த சம்பளத்திற்கு 12 மணி நேரம் (சில இடங்களில் 16 மணி நேரம்) வேலை பார்க்கும் செவிலியர்களைப்பற்றி கூறவில்லை....

10 வகுப்பு + 3 வருடம் பயிற்சி முடித்த உடன் 12,000 மாதம் ரூபாய் சம்பளத்துடன் (IAS Officer's first pay கூட மாதம் 18000 ரூபாய் தன்ன்) வேலைக்கு சேர்ந்தபின் மருத்துவக்கல்லூரிகளில் உருப்படியான (ஊசி போடுவது, இரத்தம் எடுத்து சோதனைக்கு அனுப்புவது, temp measurement, BP measurement உட்பட) ஒரு வேலை கூட பார்க்காமல் வெறுமனை duty registerல் 2 பக்கம் மற்றும் எழுதுவதற்கு மாதம் 12,000 ரூபாயா.... எனக்கு தெரிந்து மருத்துவக்கல்லூரிகளில் அறுவை அரங்கைத்தவிர பிற இடங்களில் செவிலியர்கள் வேலை பார்ப்பதே இல்லை.... case sheetல் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் மருந்துக்களை storesல் இருந்து பெறுவதற்கு indent கூட எழுதமாட்டார்கள்.....

இதை விட கிராம சுகாதார செவிலியர்கள் என்று ஒரு சாரார் இருக்கிறார்கள்.... ஒரு பதிவேடு கூட பராமரிப்பது கிடையாது.... இந்த நிலையில் இவர்களுக்கு அரசு செலவில் செல்போன் வேறு (பிரசவ காலங்களில் யாராவது அவசரமாக தொடர்பு கொள்ள)... 70 விழுக்காடு அந்த செல்பேசி எடுக்கப்படமாட்டாது....

இது போல் அரசு பணத்தை வீணடிக்கும் செவிலியர்கள் இருப்பதால் தான் தனியார் மருத்துவமனைகளிலும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, அரசு தாலுகா மருத்துவமனை போன்ற இடங்களில் (நேர்மையாக, கடமை உணர்ச்சியுடன் கடினமான) பணிபுரியும் செவிலியர்கள் கூட கெட்ட பெயர் வாங்குகிறார்கள்....

துளசி கோபால் said...

முருங்கைக்காய் என்ன ஆச்சு?

தருமி said...

:)

பி.கு.
முகப்புப் பக்கம் நல்லா இருக்கே. நல்ல தேர்வு; நல்ல ரசனை (ஏன்னா, எனது பக்கமும் இதே!!)

மங்களூர் சிவா said...

//
அப்பாலிக்கா...ஸ்ட்ராங்கா ஒரு மிளகுரசம் வச்சி சாப்டுங்க, இருமல் சளிக்கு நல்லாருக்கும்...(டாக்டருக்கே வைத்தியம் சொல்ற பேஷண்ட் நானாத்தான் இருக்கும்)
//
ரிப்பீட்டேய்.

ஒரு டாக்டர் சொல்றதை இன்னொரு டாக்டர்கிட்ட செகண்ட் ஒப்பீனியன் கேக்குறதில்லையா அது மாதிரி நான் சொல்றது செகண்ட் ஒப்பீனியன்.

ஏன் நர்ஸ் ஜோக் உங்களுக்கு பிடிக்கிறது இல்லை?

எல்லா நர்ஸ்ங்களும் கஷ்டப்படுறது இல்லை. 'ஐசியு'ல இருக்கிறவங்க மட்டும்தான்னு நல்லா தெரிஞ்ச நர்ஸ் ஒருத்தங்க சொல்றாங்களே!!

முத்துகுமரன் said...

//இதை விட கிராம சுகாதார செவிலியர்கள் என்று ஒரு சாரார் இருக்கிறார்கள்.... ஒரு பதிவேடு கூட பராமரிப்பது கிடையாது.... இந்த நிலையில் இவர்களுக்கு அரசு செலவில் செல்போன் வேறு (பிரசவ காலங்களில் யாராவது அவசரமாக தொடர்பு கொள்ள)... 70 விழுக்காடு அந்த செல்பேசி எடுக்கப்படமாட்டாது....//
இது பொதுமைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டாக இருக்கிறது. ஒரு சில இடங்களில் நடைபெறுவதை வைத்து மொத்த்தமாக கிராம சுகாதார செவிலியர்கள் வேலையே பார்ப்பதில்லை என்பது போன்றதான தொனி தெரிவது மிகவும் வருந்த்தத்தக்கது. சைக்கிளை மிதித்துக்கொண்டு கிராமம் கிராமக சென்று பணிபுரிந்த செவிலயர்களை நான் பார்த்திருக்கிறேன். தங்கள் சொந்த பணத்தில் நோட்டுகள் வாங்கி பதிவேடுகாளாக்கி வைத்திருப்பதையும் கண்டிருக்கிறேன். அவைகூட முறையாக அரசாங்கத்தால் வழங்கப்படாமல் இருக்கிறது. கிராம சுகாதார செவிலியர்களுக்கு நீங்கள் குறிப்பிடும் ஊதியம் இல்லை என்று நினைக்கிறேன். பணி நிரந்தம் செய்யப்படாமால் தொகுப்பூதியம் வாங்கிக்கொண்டு பணிபுரிபவர்களே அதிகம்.

கோபிநாத் said...

\சென்னையில் நல்ல மழை... ஜன்னலை திறந்து வெளியே பார்த்தால்....... பக்கத்து வீட்டு கொய்யா மரத்திலிருந்து சொட்டு சொட்டா தண்ணீர் விழுகிறது\\

ஆஹா...மழையா! ஜாலி தான்..;))

\நீங்க அதிர்ஷ்டசாலி டாக்டர்"
"எப்படி சொல்றீங்க?"
"உங்களுக்கு ஏதாவது ஆபரேஷன்னா, நீங்க பண்ணிக்க வேண்டியதில்லை பாருங்க!"\\

நல்லாயிருக்கு..;))

delphine said...

வித்யா... சின்ன வயசிலே அவங்களுக்கு ஒரு கம்மிட்மெண்ட் ...அதுவும் நோயாளிகளை தூக்கும்போது, பாவம் எவ்வளவு சிரமம் ? எல்லா பெண்களும் ரொம்ப நோஞ்சான் வேறு...


சொக்கன் உங்களை சிரிக்க வச்சுட்டேனா! நல்லதுதானே! இந்த மழையில் வீட்டிற்குள் இருப்பது, இன்னும் நோயை அதிகமாக்கிவிடுமோ என்று தோணுது.

சிவா! நீங்க சொல்லுவதும் சரிதான்... எனக்கும் அந்த மாதிரியான நேரங்கள் வந்ததுண்டு.. அவங்க தலையிலிருந்து அந்த 'கேப் " ஐ உறுவி விடலாமா என்று கூட தோன்றியது உண்டு.

புரூனோ! செவிலியர்களுக்கு 12,000 சம்பளம் கிடைக்கிறது என்று யார் சொன்னார்கள்? ஆரம்பமே 3500/- தான். டாக்டர்களுக்கு கூட 12,000/- கிடைப்பதில்லை. என்னை பொறுத்தவரை இவர்கள் documentation-ல் தான் பாதி நேரம் செலவழிக்கிறார்கள்.
அது சரி புருனோ, ஏன் செவிலியர்கள் மீது இவ்வளவு கோபம்! அப்ப டாக்டர்கள் மேல் இன்னும் அதிகமா இருக்குமோ!ம்ம்ம்.

delphine said...

துளசி.. முருங்கைகாய் பறிச்சுட்டேனே! கொஞ்சம் எட்டி இருந்தது. ஒரு hanger வைத்து அந்த கிளையை இழுத்து 3 காய்கள்... fresh முருங்கைகாய் சாம்பார். இது என் பெட் ரூம் ஜன்னல்... அப்புறம் என் முன் பக்கத்து ஜன்னலில் சப்போட்டா காய் ... மழையின் காரணமாக அந்த ஆப்புரேஷன் கைவிடப்பட்டுள்ளது... (அணில்களுக்கு கொண்டாட்டம்தான்)...

தருமி சார்... முகப்பு ..you mean டெம்ப்ளேட்..ஹி ஹி ஹி..

delphine said...

ஒரு டாக்டர் சொல்றதை இன்னொரு டாக்டர்கிட்ட செகண்ட் ஒப்பீனியன் கேக்குறதில்லையா அது மாதிரி நான் சொல்றது செகண்ட் ஒப்பீனியன்///
approved Mangalore Siva... ரசமும் குடிச்சு, மாத்திரையும் போட்டாச்சு..அதுசரி, அது என்ன i.c.u நர்ஸ் மாத்திரம் கஷ்டப்படுறாங்கன்னு சொல்ரீங்க... இல்லப்பா.. எல்லோறும் கஷ்டப்படறாங்க.


முத்துகுமரன் சொல்வது சரியே!ஊதியம் மிக கம்மி...

delphine said...

கோபி, சென்னையில் நல்ல மழை... எங்கு பார்த்தாலும் வெள்ளகாடுதான்... ஆனால் தி.நகரில் மாத்திரம் கூட்டம் இன்னும் குறையலையாம்.... அதுவும் சரவணா ஸ்டோரில்.. அப்படி என்னத்தான் அந்த சரவணா ஸ்டோரில் இருக்குதோ...

வல்லிசிம்ஹன் said...

டெல்ஃபின், நல்ல நர்ஸுகளைப் பார்க்கும் யோகமே எனக்குக் கிடைத்திருக்கு.

ஜோக் எல்லாம் சூப்பர்.
மழைக்கு இந்தப் பதிவு சூடாகச் சுவையாக இருந்தது.:))

புருனொ said...

//இது பொதுமைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டாக இருக்கிறது.//
நான் 70 சதவீதம் வேலை பார்ப்பதில்லை என்றும் 30 சதவீதம் வேலை பார்க்கிறார்கள் என்று தான் கூறினேன்

// ஒரு சில இடங்களில் நடைபெறுவதை வைத்து மொத்த்தமாக கிராம சுகாதார செவிலியர்கள் வேலையே பார்ப்பதில்லை என்பது போன்றதான தொனி தெரிவது மிகவும் வருந்த்தத்தக்கது.//
ஒரு சில இடங்களில் (30%) நடைபெறுவதை வைத்து மொத்த்தமாக கிராம சுகாதார செவிலியர்கள் அனைவரும் அள்விற்கு மீறி வேலை செய்வதாக கூறுவது தவறு

// சைக்கிளை மிதித்துக்கொண்டு கிராமம் கிராமக சென்று பணிபுரிந்த செவிலயர்களை நான் பார்த்திருக்கிறேன்.//
அவர்களுக்கு எல்லாம் வட்டியில்லாமல் moped வாங்க கடனும், அது போதாதென்று பூந்தமல்லி, மதுரை போன்ற இடங்களில் சம்பளத்துடன் பயிற்சியும் கொடுத்து 4 ஆண்டுகள் ஆகி விட்டது..... வட்டியில்லா கடனில் TVS 50 வாங்கி அதை "sublet" விட்டு காசு சம்பாதித்தவர்களே அதிகம் !!!

// தங்கள் சொந்த பணத்தில் நோட்டுகள் வாங்கி பதிவேடுகாளாக்கி வைத்திருப்பதையும் கண்டிருக்கிறேன். அவைகூட முறையாக அரசாங்கத்தால் வழங்கப்படாமல் இருக்கிறது.//

இதை நான் முழுவதும் மறுக்கிறேன்..... DANIDA Project வந்த பின் கிராம சுகாதார செவிலியர்களுக்கு தேவையான அனைத்து பதிவேடுகளும் வழங்கப்பட்டுள்ளன.. பல மருத்துவமனைகளில் OP Ticket, Token போன்ற தட்டுப்பாடுகள் இருந்தாலும், கிராம சுகாதார செவிலியர்களின் பதிவேட்டுக்கு தட்டுப்பாடு கிடையாது....

// கிராம சுகாதார செவிலியர்களுக்கு நீங்கள் குறிப்பிடும் ஊதியம் இல்லை என்று நினைக்கிறேன்.//
BSc, MSc முடித்த Lab Assistantகளை விட (10 Std) கிராம சுகாதார செவிலியர்கள் அதிகம் சம்பளம் பெறுகிறார்கள் (தமிழகத்தில்)... 70 சதவிதம் பேர் வாரம் 2 நாட்களுக்கு மேல் வேலை செய்வதில்லை...

இவர்களுக்கு அரசு செலவில்
1. செல்பேசி
2. ஆயா

//பணி நிரந்தம் செய்யப்படாமால் தொகுப்பூதியம் வாங்கிக்கொண்டு பணிபுரிபவர்களே அதிகம்.//
முற்றிலும் தவறான தகவல். சந்தேகம் இருந்தால் பொது சுகாதார துறை

கண்மணி said...

உள்ளேன் அம்மா
நலந்தானா நலந்தானா....
தும்ம்மலும் சளியும்....நலந்தானா

மங்கை said...

டாக்டரம்மா

முதல்ல ஒரு விஷயம்....
உங்களை எல்லாம் பார்த்தா பொறாமையா இருக்கு... இனி கொஞ்ச நாள் போனா மழைன்னா என்னன்னு கேட்ப்பேன் போல இருக்கு ...ச்சே..

ஒரே ஃபீலிங்கஸா... ஒரே அடியா ஊர் நியாபகம்...போங்க டாக்டரம்மா...ஹ்ம்ம்ம்

அம்மா ஃபோன் பண்ணி மழையில பத்திரம்னு வெறுப்பேத்தறாங்க..

//தலைவர் திடீர்னு ஆஸ்பிடல் கட்டுகிறாரே என்ன விஷயம்?"
"அவருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கிறாங்களாம். தொழிலை ஆரம்பிச்சுடலாம்னு பார்க்கிறாரு."///

டாக்டரம்மா இது மாதிரி நெறைய பேர் காத்துட்டு இருக்காங்க...:-))

. said...

:)

குசும்பன் said...

delphine said...
கோபி, சென்னையில் நல்ல மழை... எங்கு பார்த்தாலும் வெள்ளகாடுதான்... ஆனால் தி.நகரில் மாத்திரம் கூட்டம் இன்னும் குறையலையாம்.... அதுவும் சரவணா ஸ்டோரில்.. அப்படி என்னத்தான் அந்த சரவணா ஸ்டோரில் இருக்குதோ...///

அந்த பேருக்கு உள்ள பவர்:)சரவணா!! சொல்லி பாருங்க சும்மா அதிரும்ல்ல

Paheerathan said...

//"நீங்க அதிர்ஷ்டசாலி டாக்டர்"
"எப்படி சொல்றீங்க?"
"உங்களுக்கு ஏதாவது ஆபரேஷன்னா, நீங்க பண்ணிக்க வேண்டியதில்லை பாருங்க!//

அருமை...
டாக்டர் வயிற்றுவலிக்கு என்ன மருந்து...?
ஹா...ஹா....ஹா

முத்துலெட்சுமி said...

டாக்டர் நீங்க அதிர்ஷ்டசாலிங்கற ஜோக் ரொம்பவே சூப்பர்.. மத்த எல்லாமும் ரசித்து சிரித்தேன் நன்றி.

துளசி கோபால் said...

அடடா....அந்த முருங்கைக்காய்களை மரத்தோட படம்பிடிச்சு, அதை என் கண்ணிலாவது கட்டக்கூடாதா? (-:

ramachandranusha(உஷா) said...

டெல்பின் மேடம், பெரும்பாலாலும் நர்ஸ்- டாக்டர், வேலைக்காரம்மா- வீட்டு ஆண், இவர்களை இணைத்து ஜோக் என்று சொல்லும் அபத்தங்கள் எரிச்சலை கிளப்பும்.

delphine said...

வல்லி.. நன்றி.. சென்னை எப்படி? this is my first rainy season at Chennai.. ...

delphine said...

BRUNO! I have no idea about the village nurses. I am now working with a very young group of nurses who seem to spend most of their time with terminally ill patients.
Nurses who work in the CCU always have a terrible in secured feeling. Whenever they have to do a bedside duty for a head Injury patient, they feel very depressed. Leave alone Head Injury.. Take a cancer patient...
A cancer patient walks in for Surgery, and then they undergo Chemo and Radiation... By the time the treatment is over, the nurse gets so much acquaintance with them, that the nurse feels that the patient is a part of her life. Later after sometime when they are wheeled into the CCU with some secondaries and die, obviously they feel that their own kin is dead. I have always had the chance to work with excellent, committed nurses…..

delphine said...

கண்மணி.. .......சளியோடு கூட சேர்ந்து காய்ச்சலும் இன்றைக்கு...ஆபீஸ்க்கு மட்டம்..

மங்கை!.. மழை பெய்கிறது என்று சந்தோஷப்பட்டாலும், சரியான படி தண்ணீர் வடிகால் இல்லாதது கொண்டு வீட்டிற்குள்ளே இருக்க வேண்டிய ஒரு சூழ் நிலை.


குசும்பன் said...

அந்த பேருக்கு உள்ள பவர்:)சரவணா!! சொல்லி பாருங்க சும்மா அதிரும்ல்ல////

:)

பகீரதன் .. வயிற்றுவலிக்கு ... மருந்து... சிரிப்புதான்.:))))))))))

முத்துலட்சுமி ஜோக்குகள் பிடிச்சிருக்கா.. குட்... இன்னும் வருவேன்.(வேறு எதுவும் சரியா எழுத வராதுல்ல) ..

delphine said...

துளசி படம் பிடிச்சு போட்டுடறேன்.... சப்போட்டா கிடைக்குமா துளசி உங்க ஊர்ல?

Bruno said...

// I have always had the chance to work with excellent, committed nurses…..//

I am sure that you are working in a private hospital....

In government Medical colleges, nurses do not even give an injection even when the patient shouts in pain !!!!

What to tell about them ..

I have already told that I was referring NOT all the nurses,.... Only those in the Medical Colleges and VHNs

delphine said...

ஆமா உஷா.. இரண்டு நாளைக்கு முன் ஏதோ ஒரு F.M.-ல் நர்ஸை புரட்டி எடுக்கவா என்றொறு ஜோக் கேட்டேன்! வீட்ட்டு ஆண்களையும் வைத்து ஜோக் போடுவதை வாசிச்சுருக்கேன்.
இன்னைக்கு மழயின் காரணமாக நான் விடுமுறை... இன்னும் கொஞ்சம் ஜோக் வரும்..

goma said...

i enjoyed all the jokes ...here is an invitation for you to visit my blog.valluvam for sinthikka ,ha ..haa..haasyam for sirikka [my tamil font is missing ]

ஜஸ்ட் ஃபார் ஜோக் said...

//பிடிச்சா சிரிங்க//

யார் பிடிச்சா?