Thursday, October 11, 2007

வாருங்கள் நடக்கலாம்.!


வாருங்கள் நடக்கலாம்.....

நாளை அக்டோபர் 12 ம் தேதி மிக முக்கியமான ஒரு நாள். ஆர்த்ரைடிஸ் என்கிற நோயால் பீடிக்கபட்டிருக்கும் மக்களுக்கு நாம் உதவலாமே! வாருங்கள்...அவர்கள் கையை பிடித்து நாம் அவர்களை நடக்க வைக்கலாம்.
எலும்பு மற்றும் மூட்டு வலிகளால் அவதிப்படும் மக்கள் அதிகமாக வெளியில் வருவதில்லை. அவர்களுக்கு சில சமயம் ஒரு தாழ்வு மனப்பான்மை உண்டாகிறது. மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுக்கிறோமோ என்றே நிறைய பேர் வீட்டிற்குள் அடைந்து கிடக்கிறார்கள்.
எலும்பு மற்றும் மூட்டு தசைஎலும்புகளில் ஏற்படும் குறைபாடுகள் காரணமாக உலகம் முழுவதும் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை பல மில்லியன்களாகும். உலகமெங்கும் வாழும் பல நூறு மில்லியன் மக்களுக்கு வெகு காலமாக தொடர்ந்து இருந்து வரும் மிக தீவிரமான உபாதைக்கும், உடல் ஊனத்திற்கும் முக்கிய காரணங்களாக இந்த குறைபாடுகளே கருதப்படுகின்றன. ஒவ்வொரு வருடமும் ஒரு பெரிய அளவில் நோயாளிகளும், மருத்துவ மற்றும் விஞ்ஞான குழுக்களும் கூடி இந்த குறைப்பாடுகளை பற்றி தேசிய, மாநில, உலக அளவிலான விழிப்புணர்வுகொண்டு வர முயற்சி செய்கின்றனர். அவர்கள் அவர்களால் முடிந்ததை செய்யட்டும். நாம் நம் பங்குக்கு நமக்கு பிரியமானவர்களை அவர்கள் கைபிடித்து அழைத்து செல்வோம்.அவர்களுக்கு ஒரு காக்கும் கரங்களாவோம்.
On World Arthritis Day, people with arthritis from around the world join together to make their voices heard and raise awareness of arthritis.

The aims of World Arthritis Day are:

To raise awareness of arthritis in all its forms among the medical community, people with arthritis and the general public
To influence public policy by making decision-makers aware of the burden of arthritis and the steps which can be taken to ease it
To ensure all people with arthritis and their caregivers are aware of the vast support network available to them.

9 comments:

நாகை சிவா said...

கை கொடுப்போம் கண்டிப்பாக...

தொடர்ந்து நல்ல விதயங்களை பதிந்து கொண்டு வருகின்றீர்கள்.

வாழ்த்துக்கள் :)

அபி அப்பா said...

சூப்பர் பதிவு! நல்லது டாக்டரம்மா!செய்யறோம் அப்படியே!

delphine said...

தமிழாக்கம் செய்ய உதவியவர்கள்- ushiveda.&
..இஞ்சி என்கிற எஞ்சினீயரான my friend

வேதா said...

உபயோகமான தகவல்கள் கொண்ட பதிவு டாக்டர் :)

/எலும்பு மற்றும் மூட்டு தசைஎலும்புகளில் ஏற்படும் குறைபாடுகள் காரணமாக உலகம் முழுவதும் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை பல மில்லியன்களாகும்/

பொதுவாக மூட்டு வலியை ஆரம்ப நிலையில் பெரிதாக எடுத்துக்கொள்ளாததும் காரணமோ?

Anonymous said...

என் அம்மா ருமடாய்ட் ஆர்த்தரைட்டிஸ் வந்து இரண்டு வருடம் படுத்த படுக்கை. இரண்டாவது வருசக்கடைசியில் ஹார்ட் அட்டாக் வந்து இறந்து போனார்கள். உங்க பதிவு பல நினைவுகளை கிளறிவிட்டுவிட்டது

துளசி கோபால் said...

அவசியமான பதிவு.

நடக்கலாமுன்னா எங்கே? குளிர் இன்னும் குறையலை. வீட்டுக்குள்ளே ட்ரெட்மில் வாக்தான். கண் முன்னால் எதாவது பழைய சினிமா.

இல்லேன்னா நடக்கும் 'மஜா' இருக்காதே:-))))

எனக்கும் ஆத்தரைட்டீஸ்னு சொல்லி இருக்காங்க(-:
இதுக்கு மருந்துன்னு ஒண்ணும் இல்லையாமே..... நீங்க என்ன சொல்றிங்க டாக்டர்?

கண்மணி said...

உபயோகமான இன்னுமொரு டாக்டர் ;) பதிவு

காட்டாறு said...

தினமும் 1 மணி நேரமாவது நடப்பதாலும், கால்சியம் மிகுந்த உணவு வகைகளை சாப்பிடுவதாலும், நோயின் தன்மையை குறைக்கலாமின்னு சொல்லுறாங்களே டாக்டர். அப்படியா? இது குறித்து நீங்கள் தொடர் எழுதலாம் டாக்டர். இப்போதெல்லாம் வீட்டுக்கு ஒருத்தருக்காவது மூட்டுவலி இருப்பது சாதாரணமாகிவிட்டது.

மங்களூர் சிவா said...

நடப்பதால் இப்படி ஒரு பயனா? மிக்க நல்லது.

போன மாதம் வாக்கிங் பற்றி நான் எழுதிய ஒரு பதிவு உங்கள் பார்வைக்கு