Friday, September 21, 2007

மக்கள்ஸ் கொஞ்சம் சொல்லிகொடுங்க!

I agree that I am an old timer....

எவ்வளவு முன் நோக்கு எண்ணங்கள் இருந்தாலும் இந்த காலத்து இளைஞர்களுடன் போட்டி போடுவது கஷ்டம்தான்.

பள்ளிகூடத்தில் படிக்கும் போது லீவு லெட்டர்களும், மாமா கொடுத்த பரிசு பொருளுக்கு நன்றி சொல்லியும் கடிதம் எழுத கற்று கொடுத்தார்கள். கடிதம் எழுதும் முறைகளை நான் கற்று கொண்டேன். கடிதமென்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒரு முறையிருந்தது. ஆனால் இந்த ?பத்து வருடங்களுக்கிடையில் என்ன மாற்றங்கள்!

இங்கு சென்னை வந்த பிறகு, அதுவும் இந்த அட்மினிஸ்ட்ரேஷன் வேலை எடுத்த பிறகு எனக்கு தினசரி வரும் மெயில்கள் என்னை ஆச்ச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. அடடா... அதுவும் இந்த இன்ட்ரா மெயில்கள் (intra mails)... ...... ஒரே கம்பெனியில் வேலை பார்க்கும் மக்கள் தங்கள் சீனியர்களுக்கும், தங்கள் கீழ் வேலை செய்பவர்களுக்கும் அனுப்பும் மெயில்களை வாசிக்கும் போது உண்மையிலே மெய் சிலிர்க்க்கிறது......
எனக்கு இன்று வந்த ஒரு மெயில் இப்படி ஆரம்பிக்கிறது....
Hi m'm. mtg at 10. plz cme 2 conf hall.
madam என்று டைப் பண்ண எவ்வளவு நேரமாகும்? அதுவும் hi.. ..
இவர்களுக்கு என்று ஒரு dictionary உருவாக்கலாம் போலிருக்குது. ..
fyki- for your kind information.
mtg-meeting.
grtg-greeting... (மறந்து கூட யாரும் நம்பள greet பண்ண மாட்டாங்க :)

wrtcon - with reference telephonic conversation...

மக்கள்ஸ்... கொஞ்சம் சொல்லி கொடுங்க.. இந்த acronyms???---

22 comments:

Anonymous said...

:(

குசும்பன் said...

எனக்கும் இதுபோல் சில விசயம் புரியாது ஒரு முறை ராம் கூட சாட் செய்யும் பொழுது அதுபோல் Bfn என்றார், என்ன தல அப்படின்னா என்றேன். Bye for now என்று விளக்கம் கொடுத்தார். பிறகுதான் புரிந்தது.

ரவிசங்கர் said...

web acronyms என்று கூகுளில் தேடி வரும் எண்ணற்ற முடிவுகள் மூலம் கற்றுக் கொள்ளலாம்.

கண்மணி said...

இப்பைது ரொம்ப அவசியமா? ஹிஹி;)

கோபிநாத் said...

என் சோக கதை கேளு ப்ளாக் குலமே...:)

உங்கள் பக்கம் நன்றாக உள்ளது :)))

நாகை சிவா said...

ஐயோ... இங்கவுமா? எஸ்.எம்.எஸ் லனா ஒகே.. மெயில் எல்லாம் ரொம்பவே அதிகம்... நாங்க எல்லாம் இது போல இன்னும் மாறல....

நீங்க கேட்டதால் ஒன்னே ஒன்னு... என்னய ரொம்ப கடுப்பேத்தியது இது

OMG - ஒ! மை காட் மாம்.... :(

மங்கை said...

எனக்கும் வயசாயுடுச்சு டாக்டரம்மா..
:-))

அபி அப்பா said...

அதை ஏன் கேக்கறீங்க டாக்டர், என் கூட வேலை பார்க்கும் கேசவன் என்பவரை நான் மெயில்ல k7 ன்னு குறிப்பிட அந்த உம்மனாம் மூஞ்சி கூட சிரிச்சிடுச்சு:-))

Anonymous said...

:}:}

prakash said...

மேடம்,..

என்சாய்ய்ய்ய்ய் :-)

முத்துலெட்சுமி said...

கஷ்டம் தான் மேம் .... :) எனக்கும் வயசாகிடுச்சு ...தெரிஞ்சாஎனக்கும் சொல்லுங்க...

கண்மணி said...

g8------great
lol----------lot of laughter
asl---------age/sex/location
cu-----------see you
dc-----------disconnect
b4------------before

innum irukku m'm

பங்காளி... said...

முன்பெல்லாம் பெரிய தொழில்நுட்ப வார்த்தைகளை இப்படி சுருக்கிச் சொல்லி சுளுக்கெடுத்துக் கொண்டிருந்தனர்....இந்த SMS வந்தாலும் வந்துச்சி...இந்த புது மொழி பட்டய கெளப்புது.

சரி உங்க்ளுக்கு ஒரு டெஸ்ட்...ஹி..ஹி..கண்டுபிடிங்க பார்ப்பம்...

ASL..னா என்ன?

பங்காளி... said...

வலைபக்க வடிவமைப்பு...நல்லாருக்கு...

எங்கேயிருந்து பெற்றது/சுட்டது எனக்கூறினால்...ஹி..ஹி..நாங்களும் சுட்ருவோம்...

delphine said...

அனானி.. எதுக்கு இவ்வளவு சோகம்?

குசும்பன், ஒரு சில வார்த்தைகள் நானும் கற்றுக்கொண்டேன்..

thanks Ravisankar...

கோபி... ப்ளாக்.. நல்லா இருக்கா.. ஹி ஹி.. இதெல்லாம் எனக்கு தெரியாதுப்பா. எல்லாம் நம்ப டீச்சர்தான்..


சிவா... OMG --- thank you.

மங்கை வயசாயிடுச்சா? ஆனாலும் கற்றுக்கலாம்.. இப்படி short ஆ எழுத எனக்கு மனசு வரலை. i am sending mails like how I studied to write a letter while in school. but they all tease me..

அபிஅப்பா கேசவன் k7.. ஹ ஹ ஹ

delphine said...

சின்ன அம்மிணி...:)

ப்ரகாஷ்.. thank you soooooooooo much.
முத்துலட்சுமிக்கு வயசாகிடுச்சா? :(

நன்றி கண்மணி.. டீச்சர் என்னுடைய ப்ளாக் நல்லா இருக்குன்னு கோபியும் பங்காளியும் சொல்றாங்க...

பங்காளி....ASL... ஹி ஹி ஹி... கண்மணி டீச்சர் சொல்லிட்டாங்க! :)
நீங்கதான் வலையை விட்டு போறேன்னு ஒரு அறிக்கை விட்டீங்க ! அப்புறம் எதுக்கு சுடணும்..?

பங்காளி... said...

தாயே...

விரைவில் பங்காளி மட்டும் விடைபெறுகிறார்....அவ்வளவே...ஹி..ஹி...

மகேந்திரன்.பெ said...

grrrrrrrrrrrr

தேவ் | Dev said...

my share

ROTFL - rolling on the floor laughing
Lol - laughing out loud
tc - take care
wcm - welcome
gtg - got to go

காட்டாறு said...

இதுல இவ்வளவு இருக்கா? அடேங்கப்பா... பிரகாஷ் கொடுத்த லிங்க் எனக்கும் உபயோகமா இருந்திச்சி. நமக்கும் வயசாச்சில்ல. :)

Ponniyinselvan said...

Dear Doctor,
you r quite right.I too am confused like u.I used to wonder whether i studied Eng Lit.sometimes I am not able to understand the meaning of some sentences.New words,new sentence pattern.At times ,i used to find me a layman.Americanized, Indianised, Intrnationalis'z'ed English.ha, wher are we heading to?
karthik amma

cheena (சீனா) said...

hello

recd ur mail - hru - r there any friends ? i am 5n - wd U mind replying ? b4 saying thx, bye