Monday, September 10, 2007

புகை உடலுக்கு பகை.....

புகை உடலுக்கு பகை........
என் பங்குக்கு சில டிப்ஸ்...புகை பிடிப்பதை நிறுத்த ப்ளான் பண்ணியதும் முதலில் நம் குடும்பதிலுள்ள மக்களின் உதவியையும், புகை பிடிக்காத நண்பர்களின் உதவியையும் நாடலாம்.தினசரி உடற் பயிற்சி செய்வதால் புகை பிடிக்கும் எண்ணம் மாறிவிட நிறைய வாய்ப்பு உண்டு. புகை பிடிப்பதை நிறுத்தும்போது சில symptoms உண்டாகும். அப்பொழுது பாசிட்டிவாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். புகை பிடிக்க ஆசை வரும்போது அந்த ஆசையை ஒரு சில நிமிடங்கள் தள்ளி போடலாம். அந்த நேரங்களில் ஏதாவது ஜூஸ் அல்லது தண்ணீர் குடிக்கலாம். அதே நேரம் அந்த இடத்திலிருந்து வேறு இடத்திற்கு மாறுங்கள்.. வேறு ஏதாவது ஒரு வித்தியாசமான நிகழ்ச்சியை நினைத்து பார்க்கலாம். நல்ல பெரீய மூச்சாக எடுத்து விடவும். சிகரெட்டுக்கு ஆகுமான செலவை தனியாக எடுத்து வைப்பீர்களானால் அது ஒரு பெரிய சேமிப்பாகுவதை காணலாம். புகை பிடிக்க தோன்றுகிற நேரத்தில் "கம்"போன்று ஏதாவது சுவைக்க முயற்சி செய்யவும்.ஒரு நாளைக்கு ஒன்று என்று கணக்கு வைத்து சிகரெட்டை பிடிக்கவும். சிகரெட் இல்லாத ஒவ்வொறு நாளும் நமக்கும், நம் குடும்பத்தார்க்கும் நல்லது என்று சந்தோஷமாக நினைப்போம். நமது சேமிப்பு(SAVINGS) அதிகமாவதை பார்த்து சந்தோஷப்படலாம்.அதில் மிச்சம் பிடித்த பணத்தை வைத்து மனைவிக்கு ஏதாவது பரிசு பொருள் வாங்கிக் கொடுக்கலாமே.!

(டிஸ்கி) நானும் ஒரு டிஸ்கி போடறேன்..இந்த போஸ்ட் யாருக்கு டெடிக்கேட் பண்ரேன்னு தெரியுமா?.. என்னை ரொம்ப கலாய்க்கிற ஒரு சக்கரவர்த்திக்குத்தான். கண்டு பிடிங்க பார்ப்போம்!

21 comments:

வடுவூர் குமார் said...

ஒரு சக்கிரவர்த்திக்குத்தான்
இங்க நிறைய பேர் இருக்கிறாங்க.

அபி அப்பா said...

சிபி தான் விட்டுட்டாரே! வேற யாருக்காவது டெடிகேட் பண்ணுங்கம்மா! நெசமாவே விட்டுட்டாரா இல்ல குமட்டுல குத்தனுமான்னு கேளுங்க:-))

மகேந்திரன்.பெ said...

Im the Escape

:)

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

மேடம் புகைப் பிடிக்கும் பழக்கம் என்பது இப்போது அதுதான் ஆண்களின் கவுரவம் என்ற கணக்கில்தான் வளர்ந்து வரும் இளைய சமுதாயத்தினரிடம் பரப்பப்பட்டு வருகிறது. எவ்வளவுதான் நோயாளிகளை நேருக்கு நேர் பார்த்தாலும், உடனிருந்து அந்தச் சோகத்தை அனுபவித்தாலும் நோய் தாக்காதவர்களும் உண்டே என்கிற புள்ளிவிவரக் கணக்கில் நம்பிக்கை வைத்துத்தான் ஆணுலகம் கொளுத்திக் கொண்டிருக்கிறது.. அவரவர் உணர்ந்து கொண்டால் மட்டுமே இதை குறைக்க முடியும்.

மற்றபடி உங்களைக் கலாய்க்கும் அந்த சக்கரவர்த்தியை பொறுத்தமட்டில்.. இப்படி ஒரு பதிவைப் போட்டு அவரை டென்ஷன்பட வைச்சீங்கன்னா ஒரு பாக்கெட்டை காலி பண்ணிட்டுத்தான் மறுவேலை பார்ப்பாரு அந்த மனுஷன்.. இதெல்லாம் தேவையா டாக்டரு..?

delphine said...

thanks Kumar..
I have corrected it...

J K said...

சக்கரவர்த்தியும் இப்படிதான் கூறுகிறார்...(புகை உடலுக்கு பகை)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

டாக்டரக்கா!
உண்மைத் தமிழன் சொல்லுவது போல இதை ஏதோ கௌரவமாகக் கருதும் துர்ப்பாக்கிய நிலை நமது சமுதாய இளைஞர்களிடம் வெகு வேகமாகப் பரவியது வேதனையே!
இது நின்று கொல்லும் நஞ்சு அத்துடன் பக்கத்தில் இருப்போரையும் சேர்த்துக் கொல்வது; புரிந்தும் இவர்கள் தொடர்வது...ஆச்சரியமே...

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

டாக்டரக்கா!
உண்மைத் தமிழன் சொல்லுவது போல இதை ஏதோ கௌரவமாகக் கருதும் துர்ப்பாக்கிய நிலை நமது சமுதாய இளைஞர்களிடம் வெகு வேகமாகப் பரவியது வேதனையே!
இது நின்று கொல்லும் நஞ்சு அத்துடன் பக்கத்தில் இருப்போரையும் சேர்த்துக் கொல்வது; புரிந்தும் இவர்கள் தொடர்வது...ஆச்சரியமே...

Hariharan # 03985177737685368452 said...

நவம்பர் 1992 முதல் மே 2005 வரை கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் சிகரெட் புகைத்திருக்கிறேன்.

2004ல் தினசரிக்கு 30 சிகரெட் ஒவ்வொரு சிகரெட்டுக்கும் போலோ மிண்ட் என்று கூட்டணி வேறு.

தற்போது இரண்டரை ஆண்டுகளாக 100% புகை மறுப்பாளன். எனது தினசரி சிகரெட் பட்ஜட் ரூ200 ஆண்டுக்கு 60000 தொகை இன்று இயலாதவர்களுக்கு கல்வி, மருத்துவ உதவிகளுக்குப் பயன்படும்படியாகச் செலவிடப்படுகிறது.

கெட்ட பட்ஜெட்டை நல்ல பட்ஜெட்டாக மாற்றிக்கொண்டதில் எனக்கு நிறையவே மனநிறைவு.


பேஷன், டென்ஷன் ரீலீஃப், ஸ்டைல்னுதான் 14 வருஷம் உலகின் அனைத்து பிராண்ட் சிகரெட்டாக நடுநிசி 12மணி அதிகாலை 3மணி என்று ஐன்ஸ்டீனை மிஞ்சி யோசித்திருக்கிறேன்!

மிக முக்கியமாக சிகரெட்டை அப்படியே துறக்கவேண்டியது அவசியம். ஒரு நாளைக்கு ஒன்று என்பதெல்லாம் வேதாளம் முருங்கைமரத்தில் மிகவேகமாக ஏறும்!

சட்டென்று மறந்து திரும்பிப் பார்க்காமல் முதல் 15நாட்கள் சிகரெட் நட்புவளையத்திலிருந்து விலகியிருந்தால் சாத்தியப் படுவதுதான்!

புகை நிறுத்தாமல் தொடர்ந்தால் பின்னாளில் மருத்துவத்துக்கு பெரிய தொகை அவசியப்படும். அதுக்கு நிறுத்தி அந்தப் பணத்தில் அடுத்தவர்களுக்கு உதவினால் மனநிறைவு கிட்டும்!

என்னால் முடிகிறது எனும் புகைமறப்பு என்பது எல்லோராலும் முடியும் :-))

கண்மணி said...

குசும்பனா?

நிச்சயமா நான் இல்லை டாக்டரம்மோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

அது சரி நிறுத்துவதற்கான காரணம் நிறைய ஏன் சொல்லலை?
அப்போல்லோ டாக்டர் பலர் சொன்னது
1. மாரடைப்புக்கு முக்கிய காரணம்.
2.புகைப்பவரைவிட அருகிலிருப்போரை அதிகம் பாதிக்குமாம்.
ஹூம் சினிமாவிலேயே குடி குடியைக் கெடுக்கும்னு புகைத்தல் உடல் நலத்திற்கு கேடு ன்னு எழுத்தக் காட்டிக் கிட்டே குடிக்க புகைக்க செய்யறாங்களே

பங்காளி... said...

எனக்கு சம்பந்தமில்லாத பதிவு...

நானெல்லாம் சமத்து....ஹி..ஹி..

Anonymous said...

டாக்டர், இங்க ஆம்பளங்கள விட பொம்பளங்க தான் அதிகம் புகைக்கறாங்க. ஆனா கர்ப்பம்மோ இல்ல வேற ஏதாவதொ உடல் பிரச்சனை அப்படீன்னா உடனே விட்டுர்றவங்களையும் பாத்துருக்கேன்.

delphine said...

அபி அப்பா... என்ன சிபிக்கு வக்காலத்து வாங்குறீங்க.. உங்களுக்கும் உதைதான்....

மகேந்திரன்.பெ said...

ரிப்பீட்டு
ஐம் தி எஸ்கெப்பூ அகெய்னு

....
:)

delphine said...

உண்மைத்தமிழன்....
நோய் தாக்கும் என்று தெரிந்தும் நாம் திரும்ப திரும்ப தவறு செய்துக்கொண்டு தானிருக்கிறோம். புற்று நோய் வரும் என்று தெரிந்தும் வாயில் பான் பராக் போட்டு மென்றுக்கொண்டு செல்பவர்களை என்ன செய்வது? பார்த்து பார்த்து எனக்கும் சலிப்பு தட்டிவிட்டது.

delphine said...

யோகன் தம்பி.. எப்படி கொன்றாலும் பரவாயில்லை, எனக்கு பிடித்ததைதான் செய்வேன் என்று இருக்கும் மக்களை என்ன செய்ய?
நுறையீரல் புற்று நோய் பெண்களையும் தாக்க ஆரம்பித்துவிட்டது.:(

delphine said...

ஹரிஹரன்.. நிஜமாகவே உங்களை நினைக்கும் போது சந்தோஷமாக உள்ளது. வைராக்கியம் தேவை. நிச்சயமாக மறக்க முடியும். நன்றி.

delphine said...

ஜேகே நன்றி..

மகேந்திரன்.... அது என்ன எஸ்கேப்? புரியலை. அதுவும் இரண்டு முறை..

அபி அப்பா...

:(
நன்றி கண்மணி.. ஆமா அதை passive smoking என்று சொல்வோம்.

பங்காளி.. அதென்ன ஒரு சிரிப்பு? "எங்க அப்பா குதிருக்குள் இல்ல என்கிற கண்க்கு?"
நன்றி அம்மிணி..

பங்காளி... said...

ஹைய்யோ டாக்டர்...

நான் மெய்யாலுமே தம்மடிக்கிறவன் இல்லை....அதுக்கு பின்னால ஒரு கதையிருக்கு....

கல்லூரியின் இரண்டாமாண்டில் நாலஞ்சு பேரா பெங்களூரூ போனோம்...சரி எவன் பார்க்கப் போறான் தம்மடிச்சி தண்ணியடிப்போம்னு எல்லாம் வாங்கீட்டு வந்தமா...

எனக்கு தண்ணியடிக்க பிடிக்கல...சரி தம்மடிப்போம்னு JSP யோ JPS னு ஒரு ப்ராண்ட் வாங்கி அடிச்சோம்.சும்மா சொல்லக்கூடாது...ஹி..ஹி..நல்லா இருந்துச்சி...என்ன கொஞ்சம் காஸ்ட்லி...ஆனாலும் ரெண்டு நாளா சிகரெட்டும் கையுமா....கொண்டாடியாச்சி

மதுரைக்கு திரும்பினா எங்க தேடியும் அந்த ப்ராண்ட் கிடைக்கல...சரின்னு உள்ளூர் கிங்ஸ் வாங்கி அடிச்சா...யக்க்க்...புடிக்கல

புலி எங்காச்சும் புல்ல திங்குமா...அன்னிக்கு விட்டதுதான்...இன்னிக்கு வரை இஷ்டமில்லை...ஆனா நம்ம பங்காளி பயலுக எல்லாம் இன்னும் கண்ட்டினியூ பண்றாய்ங்க...ம்ம்ம்ம்ம்ம்

(ஏண்டா கேட்டோம்னு தோணுமே...ஹி..ஹி..விதி வலியது டாக்டர்)

மங்கை said...

டாக்டரம்மா...

எனக்கு இந்த பழக்கம் இல்லை...:-))

ஆனா எங்க பாட்டி...ஹ்ம்ம் சூப்பரா அடிப்பாங்க..சுருட்டு...

காட்டாறு said...

டாக்டர், எனக்கும் இந்த பழக்கம் இல்லை. என்னை சுற்றியிருப்பவர்களுக்கும் இந்த பழக்கமில்லை. அதனால பகையிலிருந்து தப்பிச்சேன்.

ஐரோப்பிய நாடுகளில் என்னுடன் வேலைப் பார்த்த நல்லவர்கள் என்னுடன் பகிர்ந்து கொண்டதை சொல்ல ஆசைப் படுகிறேன். புகைப் பிடிப்பதால் பல தீமைகள் இருந்தாலும், நல்ல (?) நண்பர்களை பெற்றுத் தந்ததும் இந்த பழக்கம் தான்னு அடிச்சி சொன்னாங்க. இந்த கூற்றில் உள்ள உண்மை ஆராய வேண்டிய ஒன்று தான். இப்படியும் யோசிக்கலாம்: ஒருத்தர் திருந்தினா, கூட இருப்பவங்க திருந்துவாங்கன்னு ஒரு நம்பிக்கை வைக்கலாம் தானே. ஆனா பங்காளி சொல்வதை வைத்துப் பார்த்தால்.... அவர் திருந்தினாலும்(?), மற்றவர்கள்....நடக்காது போலவே.