Friday, August 17, 2007

இன்று நான் சந்தித்த இரண்டு நிகழ்ச்சிகள்

லிப்டுக்காக காத்துக்கொண்டிருந்த போது சந்தித்தவைகள்...

ஏழு வயது பையன்..... அறுவை சிகிச்சைக்காக.. stretcher-ல் படுக்க வைத்து அழைத்துச்செல்லும்போது, மிக கவலையோடு சுற்றி நின்றுக்கொண்டிருந்த தன் பெற்றோர்களை பார்த்துவிட்டு பக்கத்தில் நின்றுக்கொண்டிருந்த தன் தங்கையை பார்த்து, 'நன்னா ( செல்லமாக கூப்பிடும் பெயர் போலும்) நான் ஒரு வேளை ஆப்பரெஷன் பண்ணும்போது சாமிக்கிட்ட போய்ட்டேன்னா அம்மாவையும், டடாவையும் நல்லா பார்த்துக்கோ. இல்லேன்னா நான் சாமிக்கிட்ட போய் உன் கண்ண பிடுங்க சொல்வேன்"
குழந்தைகளால் எப்படி இப்படி பேச முடிகிறது? டி,வி-ன் தாக்கமா? அல்லது வீட்டு பெரியவர்கள் பேசுவதை கேட்டா?

இந்த மனிதரைப் பார்க்கும்போது கொஞ்சம் திடகாத்திரமாத்தான் தெரிந்தார்.... ஆனால் வாயில் புற்று நோய்.. ...radiation-க்காக காத்துக்கொண்டிருக்கும் போது மனைவி , " உங்கிட்ட எத்தனதடவை சொல்லிருப்பேன்யா.. அவனோடு சேராதன்னு..அவனா இப்ப இங்க வந்து உனக்கு help பண்ண போறான்.. ரொட்டி துண்ட பார்த்த நாய போல வால ஆட்டிக்கிட்டு போனே.. .....என்ன ஆட்டம் ஆடின....இப்ப பாரு இப்படி குந்திக்கிட்டு இருக்க..... உனக்கு நல்ல வேணும்யா.." கணவர் ஒன்றும் பேச முடியாது மனைவியிடமிருந்து தண்ணீரை வாங்கி குடிச்சுகிட்டு, கண்ணீர் விட்டார்....
என்னத்த சொல்ல?

35 comments:

நாமக்கல் சிபி said...

//நான் ஒரு வேளை ஆப்பரெஷன் பண்ணும்போது சாமிக்கிட்ட போய்ட்டேன்னா அம்மாவையும், டடாவையும் நல்லா பார்த்துக்கோ. இல்லேன்னா நான் சாமிக்கிட்ட போய் உன் கண்ண பிடுங்க சொல்வேன்//

:(

//குழந்தைகளால் எப்படி இப்படி பேச முடிகிறது? //

குழந்தைகளின் மனசு புதிய சிலேட்டு மாதிரி! எதைக் காண்கிறார்களோ, எதைக் கேட்கிறார்களோ அவை அப்படியே பதிந்துவிடும்!

நாமக்கல் சிபி said...

//கணவர் ஒன்றும் பேச முடியாது மனைவியிடமிருந்து தண்ணீரை வாங்கி குடிச்சுகிட்டு, கண்ணீர் விட்டார்....//

அவர் கண்ணீர் விடுறது இருக்கட்டும்! அந்த அம்மாவின் வேதனை என்னவென்று யார் அறிந்து கொள்வது!

மங்கை said...

ஹ்ம்ம்ம்...குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் இருக்கும் வித்தியாசம்...

கள்ளம் கபடம் இல்லாத உள்ளம்...தான் இல்லைன்னாலும் தன் பெற்றோரை பார்த்துக்க சொல்லும் நல்லுள்ளம்...

ஆனால் எல்லா விதத்திலுல் துணையாக இருக்க வேண்டிய மனைவியின் குத்திக்காட்டல்..

என்னத்தை சொல்ல....மனிதர்கள் பலவிதம்...ஒவ்வொன்றும் ஒரு விதம்...

சிவபாலன் said...

டாகடர்

ரொம்ப வருத்தமாக இருக்கிறது.. மனிதன் எவ்வளவு துன்பங்களுக்கு ஆளாகிறான்..ம்ம்ம்..

நீங்க சொன்ன மாதிரி.. இந்த டிவிக்களும் ஒரு காரணம்.. ஏனென்றால் ஒரு வீட்டில் நட்க்கும் மரனத்தை ஒரு Episode முழுவதும் காண்பிக்கிறாங்க.. சில் சீரியல் களப்ப ஒரு வாரம் முழுவதும் காண்பிக்கிறாங்க.. அங்க எல்லாம் தெரிந்துகொள்கிறார்கள்..ம்ம்ம்..

என்னத சொல்ல..

அருட்பெருங்கோ said...

குழந்தைகள் நம் உலகத்துக்குள் மிக எளிதாக வந்துவிடுகிறார்கள். நாம் தான் அவர்கள் உலகத்துக்குள் நுழைவதில் தடுமாறுகிறோம்.-அண்மையில் வலைப்பதிவில் எங்கோ படித்தது.

/அவர் கண்ணீர் விடுறது இருக்கட்டும்! அந்த அம்மாவின் வேதனை என்னவென்று யார் அறிந்து கொள்வது!/

ம்ம்ம்... இருபக்க வேதனைதான். இருவரும் புரிந்து கொள்ள வேண்டுமே :(

நாமக்கல் சிபி said...

//ஆனால் எல்லா விதத்திலுல் துணையாக இருக்க வேண்டிய மனைவியின் குத்திக்காட்டல்..
//

மங்கை மேடம்!

அது குத்திக் காட்டல்னு ஏன் எடுத்துக்கணும்?

ஏதாச்சும் ஒண்ணுன்னா அப்புறம் அவங்க நிலைமை என்ன? புருஷனை சரியாப் பார்த்துக்காம விட்டுட்டா! அதான் நோவு வந்து போய்ச் சேர்ந்துட்டான்னு ஊர்ல பேசுவாங்களே!

அவங்க இயலாமையின் வெளிப்பாடு அது! அழுது தீர்த்த பிறகு அவங்க ஆற்றாமையை இப்படித்தான் தீர்த்துக்க முடியும்!

எனக்கு ஆப்பரேஷன் நடந்தப்போ என் மனைவி ஆப்பரேஷன் தியேட்டர் வாசலிலே உக்காந்துகிட்டு எப்படி அழுதுகிட்டு இருந்தாங்கன்னு அப்புறமாத்தான் தெரியும்.

நானோ உள்ளே நடந்த அறுவை சிகிச்சையை ஜாலியா டிவில நானும் பார்த்துகிட்டிருந்தேன்!

நானானி said...

டெல்ஃபைன்! ஒரு டாக்டரா?
இன்றுதான் உங்கள் பதிவு பார்த்தேன்.
குழந்தைகள் மனசு...பார்ப்பதை,கேட்பதை அப்படியே கவ்விக்கொள்ளும்.பெற்றோரைப் பார்த்துக்கொள்ளவேண்டும் என்ற சின்ன மனசு...பெரிய மனசுக்கு இருக்குமா என்பது கேள்விக்குறி!!

இரண்டாவது..பின்னாளில் மனைவிதான் தாங்கவேண்டும் என்ற நினைப்பில்லாமல் ஆடும் கணவர்களுக்கு சாட்டையடி!!

நானானி said...

டெல்ஃபைன்! ஒரு டாக்டரா?
இன்றுதான் உங்கள் பதிவு பார்த்தேன்.
குழந்தைகள் மனசு...பார்ப்பதை,கேட்பதை அப்படியே கவ்விக்கொள்ளும்.பெற்றோரைப் பார்த்துக்கொள்ளவேண்டும் என்ற சின்ன மனசு...பெரிய மனசுக்கு இருக்குமா என்பது கேள்விக்குறி!!

இரண்டாவது..பின்னாளில் மனைவிதான் தாங்கவேண்டும் என்ற நினைப்பில்லாமல் ஆடும் கணவர்களுக்கு சாட்டையடி!!

மங்கை said...

சிபி....

நீங்க சொல்றதும் சரி தான்...எனக்கு மனசுல தைச்சது....இந்த வரிகல் தான்

''....இப்ப பாரு இப்படி குந்திக்கிட்டு இருக்க..... உனக்கு நல்ல வேணும்யா.//

நானும் இது போல பாதிக்கப்பட்ட பெண்களை பார்த்துட்டு தான் இருக்கேன்
ஆதங்கத்தில் சொன்ன வார்த்தைகள்னு எனக்கு இப்ப புரியுது....

என்ன பாதிச்சது இந்த கடைசி வரி தான்
சிபி..

PPattian said...

வாயில் புற்று நோய்க்கு காரணம் "பான் பராக்" போன்ற ஏதாவதா? மனைவி தன் கணவனுக்கு வேறொருவர்தான் அந்த பழக்கத்தை ஏற்படுத்தினார் என்று அவரை திட்டுகிறாரா? ஒரு ஊகம்தான்..

ramachandranusha said...

மேடம், சில பிள்ளைகள் இப்படி ஓவரா பேசும். வீட்டில் பெரியவர்களும் என்னமா பேசுது என்று தட்டிக் கொடுத்தால்,
அவ்வளவுதான். அடுத்து அந்தம்மாளுக்கு இன்னைக்குத்தான் சமயம் வாய்த்தது. பிரிச்சி மேஞ்சிட்டாங்க. பாவம் அந்தாளு
கேட்கிற எடத்துல இன்னைக்கு இருக்காரூ.

delphine said...

சிபி.....
குழந்தைகளின் மனசு புதிய சிலேட்டு மாதிரி! எதைக் காண்கிறார்களோ, எதைக் கேட்கிறார்களோ அவை அப்படியே பதிந்துவிடும்!///
நீங்க சொல்வது முற்றிலும் சரிதான்... நாம் குழந்தைகள் முன்பு எதுவும் பேசும் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்..

delphine said...

சிபி & மங்கை...
அந்த பெண் உண்மையிலே குத்திதான் கண்பித்துக் கொண்டிருந்தாள். வசதியற்ற ஒரு குடும்பம்.. ஒரு நோய்க்கு செலவு செய்யும் போது நிச்சயமாக எந்த பெண்ணுமே குத்தி காண்பிக்கத்தான் செய்வாள் போலும்...
அந்த கணவன் மொத்த கெட்ட பழக்கங்களும் உள்ளவரே!

delphine said...

ரொம்ப வருத்தமாக இருக்கிறது.. மனிதன் எவ்வளவு துன்பங்களுக்கு ஆளாகிறான்..ம்ம்ம்..///
சிவா நிஜமாகவே மிக கஷ்டம்தான் இவர்கள் படும் வேதனைகள்....

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

டாக்டர்.. அந்த மனைவி பேசும் டயலாக்கை நானும் பேசியிருக்கிறேன்.. எனது தந்தையிடம்.. அதில் தவறேதும் இல்லை. அனுபவித்துப் பார்த்தால்தான் அந்த வேதனை புரியும்.. வேறு வழியில்லை. வருவதை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்.. இன்றைய இளைஞர்களிடம் நாளைய மனைவிமார்கள் கேட்கப் போகின்ற கேள்விகளில் இதுவும் ஒன்றாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்..

சகாதேவன் said...

டாக்டர்,
சினிமா, டிவி திரைக்கதைகளை முதலில் சென்ஸார் செய்து பிறகுதான் படமாக்கவேண்டும் என்று வந்தால் எப்படி இருக்கும். குடும்பச்சண்டைகள், வயலன்ஸ், குறைந்தால் குழந்தைகளும் பெரியவர்களும் மனம் மாறக்கூடும்.
சகாதேவன்

தருமி said...

நீங்கள் வேலை செய்யும் சூழலை நினைத்தால் மருத்துவர்கள், செவிலிகள் வாழ்க்கையை நினைத்து ...
பாவமாதான் இருக்கு.

மஞ்சூர் ராசா said...

குழந்தையின் மனம் சிலேட்டு போல என ஜெகன் சொல்வது உண்மை தான். குழந்தை பேசியதில் பெரிய தவறொன்றும் இல்லை என்றே தோன்றுகிறது. ஒரு சில குழந்தைகள் தவிர எல்லா குழந்தைகளும் இப்படி பேசுவது தற்காலத்தில் சகஜமே.

அந்த அம்மா பேசியது அவரது இயலாமையின் வெளிப்பாடே தவிர வேறில்லை. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம் இது போன்றதொரு தருணத்தில் அக்காரணங்கள் அனைத்தும் ஒன்றாக கூடி மனதை வலிக்க செய்யும் போது இது போன்ற வார்த்தைகள் வருவதை நாம் தவறாக கொள்ள முடியாது. ஆனால் அந்த வார்த்தைகளின் பின்னால் அடங்கியிருக்கும் ஆழமான பாசமே அப்படி வெளிப்பட்டிருக்கிறது என்றே எனக்குப்படுகிறது.

மின்னுது மின்னல் said...

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
டாக்டர்.. அந்த மனைவி பேசும் டயலாக்கை நானும் பேசியிருக்கிறேன்.. எனது தந்தையிடம்.. அதில் தவறேதும் இல்லை. அனுபவித்துப் பார்த்தால்தான் அந்த வேதனை புரியும்..
////


அதே...

நானும் எனது தந்தையுடன் சொல்லிகிட்டு தான் இருக்குறேன் கேட்பதில்லை

நாளைக்கு என்னிடமிருந்தும் இது போல வார்த்தை வராமல் இருக்கனும் இருக்கும் என்னயிருந்தாலும் தந்தையில்லையா....

மின்னுது மின்னல் said...

குழந்தைகள் இப்பவெல்லால் நம்மளைவிட அதிகமா சிந்திக்கிறாங்க இதுல சில நல்லதும் உண்டு சில கெட்டதும் உண்டு...


உதாரணம்

எனது சிஸ்டர் பையனுக்கு 3 வயசு அவனை போயி கடையில் எதோ வாங்க சொல்ல அவனும் கடைக்கு போக செருப்பை தேடுறான் ஸிஸ்டர் சொல்லுறாங்க பக்கத்திலதானே இருக்கு கடை எதுக்கு செருப்புனு அதுக்கு அவன் சொல்லுறான்..

அறிவிருக்கா செருப்பில்லாமல் கடைக்கு போக சொல்லுற எதிர்வீட்டு நீலோஃபர் பார்த்தால் என்ன பத்தி என்ன நினைக்கும்னு....

(நிலோஃபருக்கு வயசு 1 1/2 )
எனது பிரெண்ஸ் கமாண்ட் :
மின்னலு உன்னையெல்லாம் மிஞ்சுடாண்டா உன் மருமகன்.. :(

தஞ்சாவூரான் said...

அதிகமா சூலம், மூலம்னு டிவில பாத்ததாலே வந்த வினைதான் இதுனு நினைக்கிறேன். அதுவும் இல்லாமே, பெரியவங்க குழந்தைங்க முன்னாடி என்ன பேசனும் என்ன பேச கூடாது என்பதும் முக்கியம்.

அந்த மனைவி, குத்திக் காட்டுவதாகத் தெரியவில்லை. ஆதங்கம் மாதிரிதான் தெரியுது. பொது இடத்துல அந்த மாதிரி அவங்க பேசுற அளவுக்கு நடந்துகிட்டது, கணவர் தப்புதான்.

delphine said...

சிபி.. புருஷன் அன்பா இருந்தா எல்லா மனைவியும் அன்பாத்தான் இருப்பாங்க.. அழுவாங்க..

delphine said...

நனானி...
நான் டாக்டர்தான்..,

delphine said...

ஹரி.. வாயில் புற்று நோய்க்கு காரணம் பான் பராக், வெற்றிலை, புகையிலை, சிகெரட்,,..
முக்கியமாக பான் பராக்தான். நிறைய வட இந்தியர்களை பார்க்க முடிகிறது. மனைவியை treatment -க்கு அழைத்துக் கொண்டு வருவார்கள்,, .. இவர்களிடம் எத்தனை முறை சொன்னாலும் கேட்கவும் மாட்டார்கள்..

காட்டாறு said...

எல்லோரும் சொல்லிட்டாங்க டாக்டர். அதனால இந்த நிகழ்வு சம்பந்தமா இரு கேள்விகள்.
1) அறுவை சிகிச்சைக்கான நோயாளியிடம், அவர்களுக்கு எந்த விதமான சிகிச்சை அளிப்பீங்கன்னு விவரமா சொல்லுவீங்களா?
2) வாயில் புற்று நோய்க்கு ரேடியேஷன் கொடுக்கும் போது, நாக்கு, மூக்கு பாதிக்கப் படுமா? ஏனெனில் என் மாமாவிற்கு வாயிலுள் மேல் பாகத்தில் புற்று நோய் வந்து அப்பல்லோவில் அனுமதிக்கப் பட்டார். radiation கொடுத்து மூக்கு கருப்பாகி விட்டது. ஆனால், பாதிப்பு ஏதும் இருக்காது என மருத்துவர் சொன்னார். இது உண்மையா?

பின்குறிப்பு:
மாமா இறந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. அவருடன் இருந்து அவரைப் பார்த்துக் கொண்டதால் மனதில் பல நிகழ்வுகள் ஆழப் பதிந்ததால் இந்த கேள்வி.

வெற்றி said...

நல்ல பதிவு.

உண்மைத் தமிழன்(03027376146007401490) said...

சொல்ல மறந்து போனது. எங்க அப்பா பெயர் சவடமுத்து. அவர் இருந்தவரை நான் அப்பாவாகவே மதிக்கவில்லை. அவர் போனபிறகுதான் அவரின் அருமை தெரிகிறது. இப்போது எனக்கு அப்பா ஸ்தானத்தில் இருப்பவர் டோண்டு ராகவன் சார்தான்.

delphine said...

பிரிச்சி மேஞ்சிட்டாங்க.////
yes. Ramacahanranusha,
இதற்கு மேலும் அந்த அம்மா பேசிக்கிட்டேதான் இருந்தாங்க.. அவங்க ஆதங்கமதான்....

delphine said...

இன்றைய இளைஞர்களிடம் நாளைய மனைவிமார்கள் கேட்கப் போகின்ற கேள்விகளில் இதுவும் ஒன்றாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.. ////

வணக்கம் உண்மைதமிழன் சார்...
அப்படீன்னா நீங்க தப்பிச்சுட்டீங்களா?
எல்லாமே நாம் பார்க்கும் பார்வையிலும், மன பக்குவத்திலேயும் தான்.

delphine said...

நீங்கள் வேலை செய்யும் சூழலை நினைத்தால் மருத்துவர்கள், செவிலிகள் வாழ்க்கையை நினைத்து ...
பாவமாதான் இருக்கு. ////


நானாவது பரவாயில்லை தருமி சார்( I am almost one foot in the grave)....21 வயதில், வாழ்க்கையின் PRIME-ல் இருக்கும் செவிலியர்களை பார்க்கும் போது மிக கஷ்டமாக இருக்கும். வேலையின் ப்ரஷர்...இப்படிபட்ட நோயாளிகள்...

முத்துலெட்சுமி said...

இந்த காலத்துல குழந்தைங்க ரொம்ப பேசறாங்க தான் ஆனா சில சமயம் எத்தனை புத்திசாலிங்கன்னு இருக்கும் சில சமயம் அதிகபிரசங்கித்தனமா இருக்கும்..


அந்த அம்மா சொன்னதுல தப்பே இல்லைங்க..நல்லது சொன்னாக்கூட கேக்கலையே இப்ப திட்டுனா நாலைக்கு அவ சொன்னதை கேக்காம பட்டோமேன்னு இனியாவது கேக்கத்தோணும் இல்லையா அவருக்கு ...

பாரி.அரசு said...

வாழ்வின் துன்பத்தின் விளிம்பில் வெளிப்படும் இயலாமை சொற்களாகவே தெரிந்தாலும்...! அதன் உள்ளே புதைந்துக்கிடக்கும் உண்மைகள் ஓவ்வொரு மனிதனையும் சுடுகிறது.

ஏதோ ஓரு சூழலில் சென்னை புற்றுநோய் ஆராய்ச்சி நிலையத்திற்க்கு மருத்துவ நண்பர் ஒருவரை சந்திக்க சென்றேன்.

வாய்ப்பகுதியில் ஏற்ப்படும் புற்றுநோயை பற்றி பேசிக்கொண்டிருந்த போது, அவர் சொன்ன வார்த்தைகள், "இந்த பான், புகையிலை, சிகரெட் உபயோகிக்கும் நபர்களை இங்கே அழைத்து வந்து ஓரு நாள் இந்த நோயால் துன்பப்படும் நபர்களுடன் தங்க வைத்து, சேவை செய்ய சொல்ல வேண்டும், அப்போதுதான் அதன் வலி புரியும்" என்றார்.

மருத்துவ சேவையில் அங்கே கழிவுகளை அகற்றும் நபரிலிருந்து, உயர் நிலை மருத்துவர் வரை நிச்சயமாக வணக்கத்திற்க்கும், மரியாதைக்கும் உரிய மனிதர்க்கள் என்பது உண்மை.

உங்களுடைய சேவைக்கு வாழ்த்துகள்

வல்லிசிம்ஹன் said...

மேடம், சில பிள்ளைகள் இப்படி ஓவரா பேசும். வீட்டில் பெரியவர்களும் என்னமா பேசுது என்று தட்டிக் கொடுத்தால்,
அவ்வளவுதான். அடுத்து அந்தம்மாளுக்கு இன்னைக்குத்தான் சமயம் வாய்த்தது. பிரிச்சி மேஞ்சிட்டாங்க. பாவம் அந்தாளு
கேட்கிற எடத்துல இன்னைக்கு இருக்காரூ//
இதுதான் உண்மை டெல்ஃபின்.
வயசுக்கு மீறின வார்த்தைகள் கற்றுக்கொள்வது டிவியிலிருந்து.
அந்தப் பையன் நலா இருக்கணும்.
அந்த அம்மாவுக்கு என்ன வேதனையோ.
தப்ப்பு செய்யும்போது வராத கண்ணீர்
நோய் வந்ததும் வந்துவிடுகிறது பார்த்தீர்களா..:((

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

டாக்டரக்கா!
முதற் பெருமை நம்ம தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையே சாரும். 'பிஞ்சில் பழுக்க வைப்பது தானே' அவங்களுக்குக் கைவந்தகலை.
2 வது ,மிக வேதனை ...காலம் கடந்த ஞானம் அவர் பெற்றுள்ளார்.
அப்பெண்தான் பரிதாபத்துக்குரியவர்.
தவறு செய்யாமல் பெரும் தண்டனை
அனுபவிக்கிறார்.

கண்மணி said...

இரண்டையுமே சம்பந்தப் பட்டவங்க மன நிலையிலிருந்து பார்க்கனும்.
பையன் சொன்ன வார்த்தைகள் வேனும்னா பிஞ்சில் பழுத்ததாக இருக்கலாம்.ஆனா பெத்தவங்க மீதுள்ள பாசம் பாராட்டப் பட வேண்டியதே.
இரண்டாவது பெண் வேதனையின் விரக்தியின் விளிம்பிலிருந்து பேசும் வார்த்தைகள் இதுவுன் அன்பின் வெளிப்பாடே.இரண்டுமே தப்பேயில்லை.