Tuesday, August 14, 2007

பாகிஸ்தான்...

இன்று சுதந்திர தினம் காணும் பாகிஸ்தானுக்கு நான் 1985-ல் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. நானும் மாசியும் செல்வதாகத்தான் இருந்தது. ஆனால் மாசிக்கு விசா மறுத்துவிட்டார்கள். (போலீஸ் என்பதால்). ஆகவே நான் மட்டும் தனியாக தில்லியிலிருந்து லாகூர் சென்றேன். போகும் போது இந்தியன் ஏர்லைன்ஸில் செல்லும் பெரும் பாக்கியம் கிடைத்தது. தனியாக சென்றதால், எனக்கு விமானத்தின் முன் பகுதியில் பயணம் செய்த பெண்களுடன் இருக்கை கிடைத்தது. எங்கள் இருக்கைக்கும் ஏனைய பயணிகளுக்குமிடையில் ஒரு பெரிய ஸ்க்ரீன் இருந்தது. பெண் air- hostess தான் எங்களுக்கு பணிவிடை செய்தாள். சரியாக 55 நிமிட பயணம். லாகூர் ஏர் போர்ட் மிக நன்றாக இருந்தது. பர்டா(purdah) போட்ட பெண்கள்தான் immigration -ல் இருந்தார்கள். பெண்களுக்கு என்று தனி வரிசை..... மிகவும் சுலபமாகவே வெளியே வர முடிந்தது. நான் ஒரு 5 நட்சத்திர hotel- புக் பண்ணியிருந்தாலும் அங்குள்ள ground hostess நான் தனியாக வந்திருந்ததால் என்னை பத்திரமாக YWCA செல்வதற்கான ஏற்பாடுகள் செய்தார்.

ஏர்போர்ட் விட்டு வெளியே வரும் போது சாயாங்காலம் 5 மணி இருக்கும். சீதோஷ்ணம் நம்ம தில்லி மாதிரித்தான் கூலாக இருந்தது. HINDI பேசிய ஒரு நல்ல பாகிஸ்தானி ட்ரைவெர். பத்திரமாக கொண்டு சேர்த்தார். ஒரு காசு கூட மேலே கேட்காமல் ymca- உள்ளே வந்து என்னை அங்கேயுள்ள பெண்களுடன் அறிமுகப்படுத்தினார். எனக்கு ஒரு தனி ரூம் கொடுத்து தங்குவதற்குறிய ஏற்பாடுகளெல்லாம் பண்ணினார்கள். நல்ல பிரியமான மக்களை சந்திக்க நேர்ந்தது. நான் தங்கியிருந்த YWCA-ல் ஒரு ஸ்கூல் . பாட திட்டங்களெல்லாம் அவர்கள் தாய் மொழியில் தான். நிறைய முஸ்லிம்களுக்கு இடையில் ஒரே ஒரு இந்துமத பெண்ணையும் ஒரு கிறிஸ்துவ மத பெண்ணையும் பார்க்க முடிந்தது . ஆனால் பெயரெல்லாம் முஸ்லிம் பெயர் தான்.. சாலைகளில் எங்கு பார்த்தாலும் துப்பாக்கி ஏந்திய மிலிட்டரி போலீஸ். ரொம்ப பயமாகவே இருந்தது.

என்னோடு கூட வந்திருந்த டாக்டர் ஒருத்தர் வேறு HOTEL-ல் தங்கியிருந்தார். நானும் அவரும் மாலை வேளையில் hotel-ல் சாப்பிட போன போது இரண்டு பேரும் தனி தனியாக உட்கார்ந்து சாப்பிட்டோம். சாலைகளின் அமைப்பும் கட்டடங்களும் அப்படியே தில்லி மாதிரிதான் ... சீதோஷ்ணமும் ஒரே மாதிரிதான்...'மீட்' என்று மாட்டிறைச்சி கொடுத்தார்கள். அதன் பிறகு மீட் சாப்பிடவே இல்லை. பழைய லாகூர் சென்று நிறைய பழங்களும், பாதாம், முந்திரி, பிஸ்தா வாங்கினேன். அங்குள்ள க்ரிக்கெட் மைதானத்தையும் பார்க்க முடிந்தது. நம்ப ஊர் மாதிரி ரிக்ஷாக்களும் உண்டு. பெண்கள் ஏறுகின்ற வண்டிகளில் ஆண்களுக்கு அனுமதியில்லை.

கன்டோன்மென்ட் பக்கம் செல்லும் எல்லா பயணிகளையும் கடுமையான சோதனை.. இந்திய பெண் என்றதும், சுத்தமாக அனுமதி கிடைக்கவில்லை.

ஒரு வார காலம் தங்கிருந்தேன்.... அங்குள்ள பெண்கள் மிக அன்பாக பழகினார்கள். நிறைய படங்கள் எடுத்துக்கொண்டோம். மாசிக்கு நான் எப்படி இருக்கிறேனோ என்று பயம். ஆனால் ஒரு தந்தியோ, போனோ போட முடியவில்லை. நான் ட்ரங்க் கால் புக் பண்ணி மணி கணக்கா காத்துக்கொண்டிருக்க வேண்டியிருந்தது. 'எதற்கு, ஏன்' என்று அத்தனை கேள்விகள். கடைசியில் பேச கூட முடியவில்லை. நான் அவருக்கு எழுதிய கடிதங்களும், பிக்சர் போஸ்ட் கார்டுகளும் கூட நான் இந்தியா வந்து சேர்ந்த பிறகுதான் கிடைத்தது. ஒரு வாரம் கழித்து தில்லி வந்து இறங்கிய போது மனதில் ஒரு ஏக்கம்.......

திரும்பி ஒரு தடவை போய் பார்க்க விரும்பும் நாட்டில் நிச்சயமாக
பாகிஸ்தானும் ஒன்று..

15 comments:

அபி அப்பா said...

வாவ்! நிச்சயமா அவங்க நமக்கு எதிரி இல்லை டாக்டரம்மா! இங்கு காலைமுதல் ஸ்வீட் தின்னு தின்னு அலுத்து போச்சு, ஏன்னமா பழகுவாங்க தெரியுமா! அவங்க சுதந்திர தினத்துக்கு இந்த பதிவு பொருத்தமான பதிவு!

குசும்பன் said...

பாக்கிஸ்தான் சுதந்திரதினத்தன்று நல்ல பதிவு. :) சும்மா சுற்றி பாக்க போனீர்களா அல்லது வேலை விசயமாக சென்றீர்களா?

தருமி said...

நிறைய பழங்களும், பாதாம், முந்திரி, பிஸ்தா வாங்கினேன். //

இதுக்கா இவ்வளவு தூரம் போனீங்க .. ஹி..ஹி..

முத்துலெட்சுமி said...

ம்..நல்ல கொசுவத்தி பதிவு...:)
அது என்ன இந்து பெண்ணும் கிறித்துவப்பெண்ணும் முஸ்லீம் பெயரே வைத்திருப்பார்களா?

delphine said...

அபிஅப்பா, குசும்பன் நன்றி..பாகிஸ்தான் சுதந்திர நாள் இன்று... என்னவோ பழைய மறக்க முடியாத நியாபகங்கள்..
சுற்றி பார்க்க போகவில்லை குசும்பன்... ஒரு பரீட்சை எழுத சென்றேன்.

delphine said...

என்ன தருமிசார்?
பழமை வாய்ந்த பழைய லாஹூரில்.. இதெல்லாம் அவ்வளவு மலிவு.. அதுவும் தரம் உயர்ந்தவைகள்...

delphine said...

முத்து லட்சுமி.. கொசுவத்தி பதிவு என்றால் என்ன? புரியலை... யாராவது விளக்கம் சொல்லுங்க.. plz..

கோபிநாத் said...

அம்மா அருமையான பதிவு...இங்க அவுங்க ஓட்டல்களில் தான் எங்களுக்கு உணவு...

இங்க வந்த பிறகு எத்தனை நண்பர்கள் தெரியுமா !!!

\\delphine said...
முத்து லட்சுமி.. கொசுவத்தி பதிவு என்றால் என்ன? புரியலை... யாராவது விளக்கம் சொல்லுங்க.. plz..\\

மலரும் நினைவுகள் :-)

Thekkikattan|தெகா said...

அதன் பிறகு மீட் சாப்பிடவே இல்லை. //

அவ்வளவு மோசமாகவா சமைத்திருந்தார்கள்? இனிமே இறைச்சியே சாப்பிடக் கூடாதுன்னு நினைக்கிற அளவிற்கு.

என்னங்க ஒரு தொலைபேசி பண்ணுவதற்கு இத்தனை கட்டுப்பாடுகளா... ஆமா, நீங்க அங்க போன வருஷம் என்னான்னு சொன்னீங்க?

delphine said...

கோபி அவங்க பழக ரொம்ப நல்லவங்க.. உதவி செய்யும் குணமும் உண்டு..

காட்டாறு said...

நான் இங்கிலாந்தில் இருந்த போது, என் பக்கத்து வீட்டுக்காரர் பஞ்சாபி என அறிமுகப்படுத்திக் கொண்டார். உதவிகளும் செய்தார் அந்த பெண்மணி. அவர் இந்தியராதலால் பாசமுடன் பழகுகிறார் என நினைத்தேன். ஆகஸ்ட் 14லில் இனிப்பு கொடுத்து, 15லும் கொடுப்பேன் என்றார். அதுக்கப்புறம் தான் எனக்கு அவர் பாகிஸ்தானி இந்து எனத் தெரிந்தது. பல கதைகள் சொல்லியிருக்கிறார். மிகவும் நல்ல மனிதர். அவர்கள் சுதந்திர தினத்தன்று உங்களின் நினைவுகளைப் பகிர்ந்தமைக்கு நன்றி டாக்டரம்மா.

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

மிஸ்டர் பாரத் said...

//
அதுக்கப்புறம் தான் எனக்கு அவர் பாகிஸ்தானி இந்து எனத் தெரிந்தது.
//

அவர்கள் குடும்பத்தாரில் மற்றவர்கள் என்ன ஆனார்கள். சொந்தக்காரர்கள் கதி என்னவாயிற்று என்று ஒரு தடவைகூடவா நீங்கள் விசாரிக்கவில்லை.

திரு.இந்தியன் said...

//அவர்கள் குடும்பத்தாரில் மற்றவர்கள் என்ன ஆனார்கள். சொந்தக்காரர்கள் கதி என்னவாயிற்று என்று ஒரு தடவைகூடவா நீங்கள் விசாரிக்கவில்லை.//

பதிலுக்கு நம் முஸ்லிம் சகோதரனைப்பற்றி அவர்கள் விசாரித்துவிட்டால்...! :-((

சிவபாலன் said...

டாக்டர்,

சுவைபட எழுதியிருக்கிறீர்கள்.. அருமை!

காட்டாறு said...

அய்யோ என்னங்க கொடுமையிது! மறுமொழி என்ன பதிவு மாதிரியா எழுத முடியும்? அந்த பெண்மணி வேலையினிமித்தம் சொந்த ஊரிலிருந்து மாற்றலாகி வந்து கொஞ்ச மாசம் எங்கள் பக்கத்து வீட்டில் இருந்தார். அவர்கிட்ட சொந்த கதை சோகக் கதையாங்க கேட்க முடியும்?