Wednesday, August 8, 2007

மருத்துவ காப்பீடுகள்..

"டாக்டர்தானா ?"

"ஆமாம்"'.

" நான் பாண்டிசேரியிலிருந்து சேகர் பேசுகிறேன்.

எனக்கு இடுப்பு எலும்பில் ஒரு ஆப்பரேஷன் செய்யணும்'


"ஓ!.... சரி, நீங்க தவறுதலாக என் நம்பருக்கு வந்துட்டீங்க..

நான் உங்களை எலும்பு சிக்ச்சை பிரிவுக்கு கனெக்ட் பண்ரேன்"

"இல்லை, இல்லை, நான் உங்களோட தான் பேசணும்.

எனக்கு இன்சூரன்ஸ் இருக்குது,


அதற்கு apply பண்ணணும். அது ஓகே ஆனதும் தான் ஆப்பரேஷன்"

" ம்ம். சரி, நான் கீழே insurance help desk இருக்குது. அங்க connect பண்றேன் "

" இல்ல மேடம், அவங்களுக்கு சரியா விபரம் சொல்லதெரியலை."

" சரி.. சொல்லுங்க,"

"ஒன்றுமில்லை மேடம், இடுப்பு எலும்பில் ஒரு ஆப்பரேஷன் பண்ன

சொல்லியிருக்கிறார் எங்க குடும்ப டாக்டர்.

அதற்கு 35,000 ரூ ஆகும் என்றார்.


எனக்கு இன்சூரன்ஸ் இருக்கு அதுதான்.........

அங்கு சென்னையில் பண்ணலாம் என்று...'


" சரிங்க..... no problem .. எந்த இன்சூரன்ஸ் கம்பெனிங்க?"

'ICICI LOMBARD' (ஆஹா...icici...... நமக்கு ஆப்புத்தான்.

ஆனால் சொல்லும்போதே அவருக்கு ஒரு குதூகூலம்.)

" எப்ப எடுத்ததுங்க?"

"ஒரு மாசம் ஆச்சு மேடம் ( என்ன சந்தோஷம்......).

ஒரு மாசம் கழிச்சு, ஆஸ்பத்திரியில் எதுக்கு

வேணும்னாலும் treatment எடுக்கலாம்னு சொன்னாங்க"


"ம்ம்ம்.. எப்படி எடுத்தீங்க? on line?"

" இல்ல மேடம்...call center.....அவங்க என் மொபைல் நம்பரில் கூப்பிட்டு

medi claim பண்ணிக்கிறீங்களான்னு கேட்டாங்க. ..எங்கிட்ட எல்லா காப்பியும்

இருக்குதுங்க."


( .. அய்யோ பாவம்..)

"இல்ல சார்... ப்ரீமியம் கட்டி குறைந்தது ஒரு வருஷமாவது ஆகணும்.

அதுவும் நீங்க ப்ரீமியம் எடுப்பதற்கு முன்பே இப்ப உள்ள நோய் இருந்தால்

இன்சூரன்ஸ் மூலம் cashless கிடைப்பது கஷ்டம்"

" மேடம், என்ன நான் இளிச்ச வாயனா?

உங்க கிட்ட இந்த வியாதி மூன்று மாசத்திற்கு முன்பே

இருக்குன்னு சொல்ல.. இப்ப இரண்டு நாளுக்கு

முன் தான் எனக்கு வலியே ஆரம்பிச்சுது""


"ஓஹோ.. சரி.. ஆனால் உங்களுக்கு இதற்கு இன்சூரன்ஸ் கவர்

கிடைக்காதுங்க. ப்ரீமியம் கட்டி ஒரு வருடமாவது ஆகணுமே!"

" என்ன மேடம் , உங்க insurance help desk (ஒரு எழுத முடியாத ஒரு வார்த்தை)

ஆளுங்களுக்குத்தான் மண்டையில் மூளையில்லை என்றால்,

உங்களுக்கும் ஒன்றுமே இல்லை...."

போன் கட்டாகிவிட்டது...

நண்பர்களே!
மருத்துவக்காப்பீடு செய்வது தற்சமயம் மிகவும் அவசியமாகி விட்டது. அதுவும் மருத்துவ செலவுகள் அதிகமாகிக் கொண்டே செல்வதால், சாதாரண middle class people மிக அவதிப் படுகிறார்கள். அதுவும் புற்று நோய் போல வியாதிகளின் தாக்கம் இருக்கும்போது இன்னும் அதிகமான கஷ்டம் தான்.
நாளுக்கு நாள், இன்சூரன்ஸ் கம்பெனிகள் புற்றீசல் போல் வந்துக்கொண்டே இருக்கின்றன. தகவல் நுட்ப துறைக்கு அடுத்து இப்பொழுது மிக வேகமாக வளரும் துறை இன்சூரன்ஸ்தான். ஆனால் நாம் இன்சூரன்ஸ் பண்ணுவதற்கு முன்பு ஆராய வேண்டிய, தெரிய வேண்டிய நிறைய விஷயங்கள் உள்ளன. இந்த மருத்துவக்காப்பீடுகள் மூலம் நமக்கு நிறைய கஷ்டங்கள் தீருகின்றன..... ஆனால் நீங்க சரியான, இன்சூரன்ஸ் கம்பெனியில் பாலிசி எடுத்திருக்கிறீங்களா?

இது பற்றி என் அடுத்த பதிவில்..

22 comments:

தருமி said...

விலாவாரியா எழுதுவீங்கன்னு நினைக்கிறேன்...ரொம்ப தேவையானதல்லவா...

பங்காளி... said...

ஆஹா...பயனுள்ள விஷயம்

கண்டிப்பாக எழுதுங்க தாயே...மருத்துவ காப்புறுதி திட்டம் என்கிற பெயரில் பெரிய அளவில் மோசடி நடைபெறுவதாகவே நினைக்கிறேன். எந்த ஒரு நிறுவனமூம் வாடிக்கையாளர்களிடம் உண்மை சொல்வது இல்லை, இதற்கு முகவர்களும் காரணம் தங்களுக்கு கிடைக்கும் 15-18% கமிஷனுக்காக மிகைப்படுத்தி சொல்லி வாடிக்கையாளர்களை ஏமாற்றுகிறார்கள்.

உங்களைப் போல மருத்துவமனையில் இருப்பவர்களால் மட்டுமே இதிலுல்ள உண்மை நிலவரத்தினை வெளிச்சம் போட்டு காட்ட முடியும்.

எனவே நிர்ப்பந்தம் ஏதுமில்லாமல் விலாவாரியாக எழுதினால் அதை அறிந்தவர் தெரிந்தவர்களுக்கெல்லாம் சொல்லலாம்...அவர்களையும் பிறருக்கு சொல்லச் சொல்லலாம்....

Thekkikattan|தெகா said...

டாக்,

இது உண்மையிலேயே ஒரு காமெடி தான். நம் மக்கள் அரை குறையாக விசயங்களை தெரிந்து கொண்டு எல்லா வற்றையும் அறிந்தது போல் பேசுவது. பிறகு, உண்மையிலேயே விசயங்களை சொல்பவர்களிடத்தில் கடிந்து கொண்டு கிடைப்பதையும் கோட்டை விடுவது.

இந்த பெரும்பாலான இஞ்சூரன்ஸ் கம்பெனிகள் சகட்டு மேனிக்கு பாலிசிகளை வித்துத் தள்ளுவது ஒரு புறம், அதுவும் வசதிக்கு தகுந்தது போல ப்ரீமியம் கட்ட விடுவது அது போன்ற திட்டங்களில் எது போன்ற மருத்துவ சிகிச்சைகள் அடங்குமென்பதனை தெரிந்து கொள்வதே ஒரு பெரிய மண்டை அடி.

எழுதுங்க இது சம்பந்தமா நிறைய பதிவுகள். தேவைப்படுது. கொடுமை போங்க.

அரவிந்தன் said...

விரிவான கட்டுரையை எதிர்பார்க்கிறோம்..

அன்புடன்
அரவிந்தன்

காட்டாறு said...

இரண்டு வாரங்களுக்கு முன் ஒரு நாள் இந்தியாவிலிருந்து வேலை விஷயமாக வந்திருந்த என் நண்பர் கதை கதையாக எப்படி இன்சுரன்ஸ் கம்பெனிகள் ஏமாற்றுகின்றன என்பதை கவலையுடன் கூறினார். அவர்கள் ஏமாற்றிவது ஒரு புறமிருந்தாலும், நாம் சரிவர அவர்கள் கொடுக்கும் பாரங்களை வாசிப்பதில்லை என்றும் கூறினார். மேலும் எழுதுங்கள்.

முத்துலெட்சுமி said...

எல்லாரும் தெரிஞ்சிக்கவேண்டிய விஷய்ம் கண்டிப்பா விளக்கமா எழுதுங்க..

அபி அப்பா said...

டாக்டர், மிக பயனுள்ள பதிவு இதுவும். உங்கள் பதிவு எல்லாமே ரொம்ப யூஸ்ஃபுலா இருக்கு டாக்டர்!

துளசி கோபால் said...

விளக்கமா எழுதுங்க ப்ளீஸ்.

//நாம் சரிவர அவர்கள் கொடுக்கும் பாரங்களை
வாசிப்பதில்லை என்றும் கூறினார்//

காட்டாறு சொன்னது சரிதாங்க. பொடி எழுத்துலெதான் 'விஷயமே' இருக்கு. அதுவுமில்லாம,
இதுக்குன்னே ஒரு இங்கிலீஷ் யார் கண்டிபிடிச்சாங்களோ........... படிச்சுப் பார்த்தாலும் ஒண்ணும்
புரியாது. குழப்பமான ஒரு வார்த்தை அமைப்போட இருக்கும். சிம்பிளா சொல்ல மாட்டாங்களே(-:

நாம் வேணுமுன்னா kiss னு சொல்லலாம்.

aynthinai said...

Dr. excellent topic,
and it is a need of the day topic too. many people don't aware of the industry. your detailed articles will certaily make a change ,
thanks.
and looking forward your articles in this subject.
Vivek.
Trivandrum

துளசி கோபால் said...

உங்க பதிவை 'தேசி பண்டிட்'லே லிங்க் செஞ்சிருக்கேன்.

http://www.desipundit.com/category/tamil/

delphine said...

நண்பர்களே உங்கள் கருத்துக்களுக்கு நன்றி...விரைவில்....வருவேன்..

delphine said...

நண்பர்களே உங்கள் கருத்துக்களுக்கு நன்றி...விரைவில்....வருவேன்..

delphine said...

துளசி...ஸ்பெஷல் நன்றி..

Anonymous said...

Really very useful and needful topic. please keep it up. we deliberately need a proper guidance.thanking you.

ramachandranusha said...

எழுதுங்க மேடம். துபாயில் இருந்தவரையில் எங்கள் இருவருக்கும், பிள்ளைகள் இருவருக்கும் கம்பனியில் மெடிகல் இன்சூரன்ஸ் கார்ட் தந்து விடுவார்கள்.இங்கும் குடும்பத்தில் அனைவருக்கும் சேர்த்து, குறிப்பிட்ட அளவிற்கு கிளைம் செஞ்சிக்கலாம். இதுவரை பெரிய பிரச்சனையில்லை. ஆனால் இனி தேவை என்று தோன்றுகிறது. எது, எப்படி வாங்குவது என்று விவரமாய் எழுதுங்கள்.

நானானி said...

மிகவும் பயனுள்ள பதிவு டாக்டர்!
மருத்துவகாப்பீடு மோசடிகளை பிட்டுபிட்டு வையுங்கள். நம்பகமான
காப்பீடுகளை அறிமுகப்படுத்துங்கள்.
இந்த பதிவு படிக்கும் போதே சன் நியூசிலும் இதையே செய்தியாக சொன்னார்கள். டச்வுட்!

சிவபாலன் said...

Doctor,

Thanks alot!

Please write more abt this!

Anandha Loganathan said...

எழுதுங்க, படிக்கிறோம்.
எழுத, எழுத

அதற்கு முன் சில சந்தேகங்கள்.

சில வருடங்கள் முன்பு, பங்களூர் மல்லையா மருதுதுவமனையில் எனக்கு ஒரு சிற்ய operation செய்தார்கள்.
அதற்கு முன்னாடி என்னுடைய் காப்பீட்டை approve செய்தபோது அதற்கு ஒரு தோராயமாக சுமார் 25,000 ஆயிரம் ஆகும் எண்று கூறினார்கள்.காப்பீடும் சுமார் 25,000 க்கு approve ஆகிவிட்டது. ஆனால் கடைசியில் எனக்கு ஆன செலவோ வெறும் 8,000 ஆயிரம் தான். இதை பார்த்தா எனது நண்பன், அவர்கள் முழு தொகைக்கும் (25,000) இன்சூயரன்ஸ் கம்பெனிக்கு பில் அனுப்பிவிடுவார்கள் என்று கூறினான். இது உண்மையா?.

இதை உறுதி செய்ய ,இன்சூயரன்ஸ் கம்பெனியின் Toll Free number- க்கு போன் செய்தேன். அதை விட கொடுமை அங்கு யாருக்கும் எதுவும் தெரியவில்லை. பல தடவை போன் செய்தும் அதன் பின்பு, அந்த வருடதிற்க்கான இன்சூயரன்ஸ் முடிந்ததும் நானும் அதை ப்த்தி கண்டு கொள்ளவில்லை.

மங்கை said...

இது எப்படி விட்டுப் போச்சு...சாரி டாக்டரம்மா...எனக்கு கண்டிப்பா தேவை...எழுதுங்க எழுதுங்க

வல்லிசிம்ஹன் said...

Delphine , we have taken Mediclaim policy.
but for travel purposes took another Insurance cover too.
I still cannot figure out some of the clause.
depends on the person ,you take insurance from I guess.
thank you. you are doing a wonderful servie writing abt this. please write some more,so that laypeople (like me)can benefit.

குசும்பன் said...

எங்கு எதுமாதியாக செய்யவேண்டும், எதை எதை சரிபார்கவேண்டும் என்றும் சொல்லுங்கள்.

மக்கள் சட்டம் said...

கிரெடிட் கார்டு விண்ணப்பத்தின் பின்புறம் உள்ள மைக்ரோ எழுத்துகள்,வழக்கறிஞர்களுக்கே ஐயம் எழுப்பும் மொழிநடை ஆகியவற்றை கேள்விக்குள்ளாக்கும் பொதுநல வழக்கு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளோம்.

காப்பீட்டிலும் அதுபோல ஏராள-தாராள பிரசினைகள் இருப்பதாக அறிகிறோம். ஆய்வு செய்து விவரங்கள் வைத்திருந்தால் அதற்கும் ஒரு பொதுநல வழக்கு போட நாங்கள் தயார்.

கரம் கோர்ப்போமா?

-சுந்தரராஜன்