Friday, August 3, 2007

மறக்க இயலாத நேரங்கள்....

அம்மா வீடு எப்பவுமே ஒரே அல்லோலகல் பட்டுக்கொண்டே

தான் இருக்கும். வீட்டில் நிறைய ஆட்கள் வேலை

செய்துக்கொண்டிருப்பார்கள்...நெல் அவிப்பது.....

வைக்கோல் காய வைப்பது.....

தினம் ஏதாவது ஒரு வேலை இருந்துக்கொண்டே

இருக்கும். அது மட்டுமின்றி எங்கள் வீட்டில் 50 பசு

மாடுகள் வேறு..... பால் கறப்பவர்கள், பால் வாங்க

வருபவர்கள்.. 'பண்ணை வீடு' மாதிரிதான்.

வீடே ஒரே சுறுசுறுப்பாக இருக்கும்.

ஒரு ஏக்கர் நிலத்தில் நடு மையத்தில் வீடு.

சுற்றியும் முற்றங்கள்....

செடிகள், மரங்கள், திராட்சை தோட்டம்,

"கப்பை" என்கிற கிழங்கு தோட்டம் .......

வீட்டை சுற்றி பெரீய மதில் சுவர்கள் .... ...

( நாங்க நாலு பெண்குட்டிகளாக்கும்)அப்பாவின்

எதிரில் நாங்கள் யாரும் நின்று பேச மாட்டோம்.

அவ்வளவு பயம்...ஒரு நாள் காலையில் வீடு ஒரே பரபரப்பு....

கொத்தனார்கள் சிலர் வந்து ஒரு பக்க மதிலை உடைத்தார்கள்.

செங்கல், சிமென்ட்..இத்யாதிகள்..

அப்பா அங்குமிங்குமாக வீறு நடை போட்டு வேலை வாங்கிக்

கொண்டிருந்தார்கள்... ஒரு வேப்ப மரத்தை

வெட்டினார்கள். அதில் சுற்றிகொண்டிருந்த பிச்சி பூ

கொடியை வெட்ட வேண்டிய சூழ் நிலை.. ..

அக்கா விற்கு ஒரே கவலை..

ஒரு மூச்சு அழுகை.. அப்பா அவளைப்

பார்த்து முறைத்தார்.. 'கப்சிப்' அடங்கி விட்டாள்.

நாங்களெல்லாம் பயந்தே போய் விட்டோம்...

ஒன்றும் புரியாமாலே பள்ளிக்கூடம் போய்விட்டோம்....

அக்கா மட்டும் தான் ஆசையாக வளர்த்த பிச்சி பூ

செடியை வெட்டி விட்டார்களே என்று சாப்பிடாமல்

இருந்தாள். சாயந்தரம் வீட்டுக்கு போகும் போது வீட்டின் முன் கூட்டம்....மாலை, எலுமிச்சம் பழம்... ..

அம்மாவும், அப்பாவும் எங்களை சீக்கிரம் போய் முகம்

கழுவிவிட்டு uniform மாற்றிவிட்டு வர சொன்னார்கள்....

'பாம்''பாம்' என்று சப்தம்....வந்தாச்சு வந்தாச்சு

என்று சொல்லி கொண்டு வீட்டில் வேலை செய்பவர்கள்

யாவரும் ரோட்டை நோக்கி ஓடினார்கள்...

அழகு ரதமாக வந்து நின்றது அப்பா வாங்கியிருந்த BROWN கலர் 'அம்பாசடர் கார்"......இது 1965 ல்.....

1985...
நானும் என் கணவ்ர் மாசியும் கார் வாங்க ஆசைப்பட்டோம்.

அப்போதுதான் மாருதி கார்களின் வருகை ஆரம்பம்.

அவருக்கு ராயல் என்பீல்டு புல்லட் வண்டி இருந்தாலும்,

எனக்கு (பொண்டாட்டி டாக்டராச்சே..சும்மாவா..)

ஒரு கார் வாங்கிக் கொடுக்க ஆசைப்பட்டு ஒன்று புக் பண்ணினார்.

அட்வான்ஸாக ரூ 10,000/- கட்டிவிட்டு சுமார் 6 மாத

காலம் காத்திருந்து புது வண்டி எங்கள்

போலீஸ் குவார்ட்டர்ஸ்க்குள் நுழையும் போது

அத்தனை நண்பர்களும் சந்தோஷமாக எங்களை

வரவேற்றது... என்னவோ நேற்று நடந்தது போல்தான்

இருக்கு........ அதன் பிறகு நாங்களும் எத்தனையோ கார்கள்

மாற்றி விட்டோம்....

2007-ல்

நானும் இன்னைக்கு ஒரு காரு வாங்க போறேன்..

ஆனால் அந்த த்ரில், அந்த கூட்டம், அந்த எதிர்பார்ப்பு, பரபரப்பு

எல்லாம் missing...

27 comments:

அபி அப்பா said...

டாக்டர் என்னை வச்சு ஒரு ரவுண்ட் அடிக்கனும் புது கார்ல!:-))

கண்மணி said...

வாஆஆஆஆஆஆஆழ்த்துக்கள் புது காருக்கு
மனசு சந்தோஷமா இருந்தா நம்மைச் சுத்தி நடக்கிற எல்லாமே சந்தோஷமாத் தெரியும்.
நாங்கதான் உங்க கூட இருக்கமே [பா.ச.குடும்பம்];))

கோபிநாத் said...

\\ஆனால் அந்த த்ரில், அந்த கூட்டம், அந்த எதிர்பார்ப்பு, பரபரப்பு

எல்லாம் missing... \\

நாங்க எல்லாம் இருக்கும் போது இப்படி எல்லாம் சொல்லக்கூடாது...ஆமா...

அப்பறம் புது காருக்கு வாழ்த்துக்கள்ம்மா ;-))

கோபிநாத் said...

எல பாசக்கார மக்கா...நம்ம டெல்பின் அம்மா புது காரு வாங்கியாறாங்க....சீக்கிரம் ஒடியாங்க டா ;-)))


ஒரம்போ...ஒரம்போ.

டெல்பின் அம்மா வண்டி வருது

வாங்கடா வண்டியை தள்ளுங்கடா

வந்து இங்க வந்தனம் பண்ணுங்கடா

ஒரம்போ ஒரம்போ....

பாசக்கார குடும்பம்

கோபிநாத் said...

அடுத்த பாடலை பாட வருகிறார் எங்கள் பாசக்கார குடும்பத்தின் அண்ணன் அபி அப்பா ;-))


புதுவண்டி புதுவண்டி

காப்பாத்த வந்த புதுவண்டி

நாலும் தெரிஞ்ச வண்டி

நாகரிகமான வண்டி

ஒட்டபோறது டெல்பின் அம்மா தாண்டி

புதுவண்டி...அய்.. புதுவண்டியேய்
;-)))

மங்கை said...

டாக்டரம்மா....

உங்க வீட்ட பத்தி சொல்லியிருப்பது நேர்ல பார்த்த மாதிரி இருக்கு... ரொம்ப நல்லா இருக்கு டார்க்டரம்மா..
எனக்கே உங்க வீட்ட ஒரு ரவுண்ட் வந்த மாதிரி ஒரு உணர்வு..

வாழ்த்துக்கள்...நான் சொன்னது மறந்துடாதீங்க..:-))..

Sugar

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

அப்ப இன்னும் வரலையா..?

ஓசி ரவுண்ட் அடிக்கிற ஆசை... இழுத்துகிட்டே இருக்கு.. :(

துளசி கோபால் said...

ஹைய்யா.புதுக்காரா?

அதோட ஜாதக விவரம் சொல்ரதில்லையா?
குணம், நிறம் இத்தியாதிகள்?

எனக்கும் ஒரு ஓசி ரைடு ப்ளீஸ்..................

வாழ்த்து(க்)கள்.

டேக் கேர்.

அபி அப்பா said...

//வாழ்த்துக்கள்...நான் சொன்னது மறந்துடாதீங்க..:-))..

Sugar //

மங்கை! என்னவோ ரகசியம் போல இருக்கே, என் கிட்ட சொல்லுங்க நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்:-))

கண்மணி said...

துளசிக்கா பி.பி.சி ல சொன்னான் பாக்கலையா
மாருதி சாண்ட்ரோ
கலரு..........ஆங் சிவப்பு?பீச்?
ம்ம்ம் சில்வ்ர் கிரே....அட கலரா முக்க்க்யம் ஓசி ரைடு தானே
நாந்தேன் முன் சீட்டு....

delphine said...

அபி அப்பா..கண்மணி.. வாங்க வாங்க... சாயந்தரம் 6 மணிக்கு Mount Road-ல் ஓசி ரைட் போகலாம் வாங்க! வாங்க..

delphine said...

வாங்கடா வண்டியை தள்ளுங்கடா///

கோபி.. நான் வாங்கிறது புது வண்டிப்பா... ..ஆமா பாசக்கார குடும்பம் நீங்க எல்லாம் இருக்கும் போது எனக்கு என்ன கவலை? ஏதோ கலையில் மனசு கஷ்டமா இருந்துச்சு.. அதான்..

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//2007-ல்

நானும் இன்னைக்கு ஒரு காரு வாங்க போறேன்..

ஆனால் அந்த த்ரில், அந்த கூட்டம், அந்த எதிர்பார்ப்பு, பரபரப்பு

எல்லாம் missing...//

டாக்டரக்கா!
இப்போ நீங்க ஒரு ஏர்பஸ் 380 வாங்கினால் தான் அந்தக் கூட்டம், பரபரப்பு இருக்கும்.
அந்தளவுக்கு இந்தியாவும் ஒளிருது.
சந்தோசம் தானே

delphine said...

மங்கை...சர்க்கரை.....எல்லாம் நியாபகம் இருக்கு... எங்க வீட்டிற்கு வந்தது..நன்றி.

delphine said...

பாலா... பட்டறை வேலை முடியட்டும்.. ஒரு ரவுண்டு அடிச்சுடுவோம்....ஆனால் பெட்ரோல்.. நீங்கத்தான் போடணும் சரியா?
இது எப்படியிருக்கு???????

delphine said...

டாக்டரக்கா!
இப்போ நீங்க ஒரு ஏர்பஸ் 380 வாங்கினால் தான் அந்தக் கூட்டம், பரபரப்பு இருக்கும்.
அந்தளவுக்கு இந்தியாவும் ஒளிருது.
சந்தோசம் தானே ///
தம்பி யோகன்... என்னத்த சொல்ல.. ?

Thekkikattan|தெகா said...

ரொம்ப ஆர்வமூட்டக் கூடிய நினைவு கூர்தல். பண்ணை வீடு, யானை கட்டி போர் அடித்த அந்தக் காலம், அந்த அம்பாசடர் கார்... :-)

இப்ப ஹாப்பி ரைடுங்க!!

delphine said...

கண்மணி சென்ன்னைக்கு வாங்க .. நல்லாவே ஊர் சுற்றலாம்...(ஆனால் ரூட் நீங்கத்தான் சொல்லிகொடுக்கணும்).
தெகா.. நன்றி.. யானையைக் கட்டி தீனி போட்ட மாதிரி தான்..ரொம்ப costly affair..

பங்காளி... said...

ஆஹா...

கார் மேட்டரா...என்னோட ஒரே வீக்னஸ் கார்தான்...ஹி..ஹி...

அதுவும் புதுகார்ல பரவியிருக்கிற...அந்த ப்ளாஸ்டிக் ஸ்மெல்...ம்ம்ம்....அனுபவிக்கனும்....

என்னடா பேத்றானேன்னு பாக்கறீங்களா...ஹி..ஹி..நானொரு கார் பைத்தியம்.

புது வண்டிக்கு வாழ்த்துக்கள்...வருசத்துக்கு ஒரு புதுகார் மாத்த உங்களுக்கு ஆண்டவன் அருள் புரிவாராக!

Anonymous said...

நீங்க கார் வாங்கின நேரம் பெட்ரோல் விலை குறையட்டும் டாக்டர்.
கார்ல பாசக்கார குடும்பம் பூராவும் இருக்கு. இருங்க நானும் தொத்திக்கறேன்.

வல்லிசிம்ஹன் said...

have you bought the car Delphine.
greetings for a long and helathy road trip. May all your journeys be happy ones.
Vallisimhan.

குசும்பன் said...

\\ஆனால் அந்த த்ரில், அந்த கூட்டம், அந்த எதிர்பார்ப்பு, பரபரப்பு

எல்லாம் missing... \\

நிஜம்:(

அபி அப்பா said...
டாக்டர் என்னை வச்சு ஒரு ரவுண்ட் அடிக்கனும் புது கார்ல!:-))

மின்னல் அபி அப்பா என்னமோ ஆசை படுகிறார் திரும்ப ஒரு முறை அங்க கூட்டிக்கிட்டு போய் நல்லா "கவணி"ன்னு சொல்லுங்க பிறகுதான் கப்சிப்ன்னு அடங்குவாறு.

சுல்தான் said...

சின்ன வயது மற்றும் வாலிப வயதைத் தாண்டி, பிள்ளை குட்டி என்று ஆன பின்னால், நம் மகிழ்ச்சியை பிள்ளைகளின் முகத்தில்தானே எதிர்பார்க்கிறோம். பிள்ளைகள் நாம் சிறு வயதில் கொண்ட அளவுக்கு மகிழ்வு அடையவில்லைதான். காரெல்லாம் சாதாரணமாக ஆகி விட்டது. யோகன் சொல்வது போல் ஒரு ஏர்பஸ் வாங்கினால் அந்த பழைய சந்தோஷம் வருமோ என்னவோ!.
கொஞ்சம் வித்தியாசமாகவும் நவீனமாகவும் ஏதும் வாங்கினால் நம் சிறுவயது குதூகலம் நமக்கும் நம் குழந்தைகளுக்கும் வரலாம்.

அருட்பெருங்கோ said...

சந்தோசமெல்லாம் அனுபவிக்கும் போது தெரியறதில்ல... அப்புரம் நெனச்சுப் பார்த்தா தான் அதோட அருமையெல்லாம் தெரியுது...

சரிங்க மேடம்... புதுக்காருக்கு என்னோட வாழ்த்துக்களும் :)

காட்டாறு said...

வாழ்த்துக்கள் டாக்டரம்மா. என்னையும் சேர்த்துக்கோங்க ரவுண்ட் போறதுக்கு. நல்ல பிள்ளையா ட்ரைவர் சீட்டுல உட்கார்ந்து வருவேன். ;-)

சகாதேவன் said...

உங்கள் வசந்த கால நினைவுகள் மிக அழகாக சொன்னீர்கள்.
நானும் 48ல் அப்பா வாங்கிய ஷெவர்லெ புதிய கார் வரும் வரை வீட்டு வாசலிலேயே காத்திருந்தேன். அந்த கார் இன்னும் இருக்கிறது. சிவாஜி பாடுவது போல் ரேஷன் கார்டில் சேர்க்கச்சொல்வது போல் எங்கள் குடும்பத்தில் ஒன்றாக இருக்கிறது.
புதிய கார் வருகைக்கு வாழ்த்துக்கள்.

நானானி said...

புது காருக்கு நல்வரவு டாக்டர்! என் அப்பாவோட செவர்லெட் 1947 மாடல்
நினைவு தெரிந்து அதில்தான் சுற்றியிருக்கிறேன். அது எங்கள் செல்லம். என்னை ரோட்டில் நடக்கவிட்டதேயில்லை. ஆனால் கல்யாணமாகி 15 வருடம் கழித்து நாங்கள் வாங்கிய பியட் வந்தபோது என்னவொரு த்ரில்!!
பாடிகாட் முனீஸ்வரர் கோவிலில் பூஜை போட்டீர்களா? மதபேதமில்லாமல் எல்லோடும் புதுவண்டியோடு போகுமிடம்!