Sunday, August 19, 2007

என் பார்வையில்...மருத்துவ காப்பீடுகள்.-1

என் பார்வையில்... மருத்துவ காப்பீடுகள்..

நமக்கு சேவை செய்வதற்காக நிறைய தனியார்

காப்பீட்டு நிறுவனங்களும், government owned

நிறுவனங்களும் உள்ளன.

சில Government owned நிறுவனங்கள்:

1) நேஷனல் இன்சூரன்ஸ்

2) யுனைடட் இந்தியா இன்சூரன்ஸ்

3 ) நியூ இந்தியா இன்சூரன்ஸ்

4)ஓரியண்டல் இன்சூரன்ஸ்.

தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள்:

ICICI Lomabrd Health Insurance

The Cholamandalam Health Insurance.

Royal sundaram Insurance

The Star Allied Insurance.

The Reliance Insurance Company.

Bajaj Allianz Insurance Company.

Tata AIG Insurance.

சரி.. இப்ப தனி காப்பீடு திட்டம் பற்றி ......

ஆரம்பத்தில் நிறைய பேர் இந்த திட்டத்தில்தான்

சேர்ந்திருந்தார்கள். (இப்பவும் கூட). இதன் மூலம்

கட்டும் ப்ரீமியத்திற்கு வருமான வரி விலக்கு உண்டு.

அதற்காகவே எடுத்த mediclaim நிறையபேருக்கு

தற்சமயம் உதவுவதை பார்க்கிறேன்.

10 - 15 வருடத்திற்கு முன்பு வரி விலக்குக்காக

எடுத்தவர்களுக்கு தற்சமயம் அது நிறைய போனசோடு

உதவுகிறது. தனி காப்பீடில் நிறைய exclusions உண்டு.

அதாவது சில நோய்களுக்கு இந்த பாலிஸி பாதுகாப்பு

கொடுக்காது. பிரசவம், பிரசவத்திற்கப்பால் உண்டாகும்

கஷ்டங்கள், பிறக்கும் போதே உள்ள குறைகள், நோய்கள் etc..

FAMILY INSURANCE
குடும்பத்திலுள்ள யாராவது ஒருத்தர் குடும்பத்திலுள்ள

ஏனைய அங்கத்தினர்களுக்காக எடுக்கும் பாலிஸி இது.

நான் பார்த்தவரை, வீட்டின் தலைவர் தனக்கு 3 லட்சத்திற்கும்,

தன் மனைவிக்கு 2 லட்சத்திற்கும், குழந்தைகளுக்கு

தலா 50,000 த்திற்கும் எடுத்திருப்பார்.

(அது ஏன் தனக்கு மட்டும் அதிக தொகையில்

இன்சூர் பண்ணிக்கொள்கிறார் என்று அடிக்கடி

நான் யோசிப்பது உண்டு). இந்த பாலிசி சிறந்த

முறையில் உதவுகிறது. திடீரென்று குழந்தைக்கு

முடியாமல் போய்விட்டால், சில இன்சூரன்ஸ்

கம்பெனிகள் மற்ற குடும்ப அங்கத்தினரின்

INSURED AMOUNT- லிருந்து பணம் கொடுத்து உதவும்.

THIS IS KNOWN AS FLOATER POLICY.

இந்த விதமான பாலிசி எடுப்பது மிகவும் நல்லது.

இதரற்கும் வருமான வரி விலக்கு உண்டு.


CORPORATE INSURANCE: ..(தொடரும்)

9 comments:

குசும்பன் said...

புதியதாக பல விசயம் தெரியுது :) மிக்க நன்றி

முத்துலெட்சுமி said...

\\அது ஏன் தனக்கு மட்டும் அதிக தொகையில்

இன்சூர் பண்ணிக்கொள்கிறார் என்று அடிக்கடி

நான் யோசிப்பது உண்டு//

:):)

good informations ..madam

delphine said...

குசும்பன் அங்கு அமீரகத்தில் உங்களுக்கெல்லாம் இன்ஸூரன்ஸ் உண்டா?

delphine said...

முத்து நன்றி.. இதற்கு இன்னும் விடை கிடைக்கவில்லப்பா..

கோபிநாத் said...

பல தகவல்கள் தந்தமைக்கு நன்றிம்மா :)

\\delphine said...
குசும்பன் அங்கு அமீரகத்தில் உங்களுக்கெல்லாம் இன்ஸூரன்ஸ் உண்டா? \\

இல்லைன்னு தான் நினைக்குறேன் :(

மங்கை said...

ஆரம்பிச்சாச்சா...ஹ்ம்ம் நன்றி டாக்டரம்மா...

இதுக்கெல்லாம் விடை எப்பவும் கிடைக்காது..:-))

Thekkikattan|தெகா said...

டாக்டர் எனக்கு ஒரு கேள்வி. இப்ப என்னோட அப்பா, அம்மாவிற்கு வயது 60க்கு மேல. அப்பாவிற்கு டாயபடிஸ் இருக்கு, அம்மாவுக்கு ஒரு இருதய சிகிச்சை பண்ணியிருக்கு. இந்த சூழலில் எந்த காப்பீடு கம்பெனியாவது, அவர்களுக்கு மருத்துவ காப்பீடு எடுத்துக்க அனுமதிக்குதா? ஆம், என்றால் ப்ரீமியம் எவ்வளவு வரும்? எந்த காப்பீட்டு முறை சிறந்தது?

கொஞ்சம் பதில் சொல்லுங்களேன் தெரிஞ்சுக்குவோம், எல்லோரும்.

delphine said...

தெகா..
வாங்க, வந்தீங்க..ஒரு நல்ல கேள்வி கேட்டுட்டீங்க!
55 வயதிற்கு மேல் இன்சூரன்ஸ் கொடுப்பதற்கு ரொம்ப யோசனை பண்ணுகிறார்கள். . 45 வயதிற்கு மேல் இன்ஸூரன்ஸ் எடுக்க வேண்டுமானால் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். எந்த pre-existing disease இல்லை என்று உறுதி செய்த பிறகுதான் இன்ஸூரன்ஸ் பண்ண முடியும்.
icici போன்ற சில நிறுவனங்கள் சில diabetes research institutions கூட கூட்டமைத்து இன்ஸூரன்ஸ் கொடுக்கிறார்கள்... இந்த மாதிரி எடுக்க படும் பாலிசிதாரார் நிறைய ப்ரீமியம் கட்ட வேண்டும். அதுமட்டுமல்ல .. அவர்கள் tie up வைத்திருக்கும் மிக சில ஆஸ்பத்திரியில் மாத்திரமே வைத்தியம் பண்ண முடியும்.(you cant choose the hospital that you wish to take treatment from)...

மங்களூர் சிவா said...

//
அங்கு அமீரகத்தில் உங்களுக்கெல்லாம் இன்ஸூரன்ஸ் உண்டா?
//
நல்ல பதிவு.

துபாயில் என் மாமா உடல் நலம் சரியில்லாமல் இருந்தபோது 4 நாட்கள் ஆஸ்பத்திரியில் இருந்ததுக்கு ஒரு மாத சம்பளம் அளவிற்கு பில் வந்ததாம்.

அங்கும் மெடிகல் இன்சூரன்ஸ் உண்டு என சொன்னார்.