Thursday, August 9, 2007

என் பார்வையில்.... மருத்துவ காப்பீடுகள் - 1

ரொம்ப நாளா இன்சூரன்ஸ பற்றி எழுதணும்னு

தோணிச்சு. மக்கள் படும் கஷ்டங்கள்

வேதனைகள், கோபம், பிரச்னைகள்.. ...

இதெல்லாம் தினம் தினம் சந்திக்கும் போது

ஏண்டா, மனுஷ வாழ்க்கைன்னு இருக்கும்......

நோயால் கஷ்டப்படுவது ஒரு பக்கம்

என்றால், அதற்கு செலவு செய்ய வழியில்லாமல்

திண்டாட்டம்..சிலர் கடன் வாங்கி வைத்தியம்

பண்ணுகிறார்கள். சிலர் வீடுகளையும்,

தோட்டங்களையும் விற்றுவிட்டு வந்து

ஆஸ்பத்திரியே கதி என்று இருக்கிறார்கள்.

ஒரு சிலரிடம் மாத்திரமே இன்சூரன்ஸ் உண்டு.

நம்முடைய வாழ்க்கை

முறை மாற மாற, நிறைய

நோய்கள் வருகிறதா? அல்லது இந்த

நோய்களை கண்டு பிடிக்க் புது புது


டெக்னாலாஜி வந்திருப்பதலா?

எதுவாகினும் நம் வீட்டில் யாராவது

படுத்துவிட்டால் மொத்த குடும்பமும்

கதி கலங்கி போய் விடுகின்றனர்.

சந்தோஷமாக இருந்த வீடு கலகலப்பற்று

போய் விடுகிறது.

நாம் புத்திசாலிகளாக இருந்தால்

நாம் பிற்காலத்தில் யாரையும் பண செலவு

செய்ய எதிர்பார்க்காமல், நம்முடைய

வைத்திய செலவுகளை நாமே பார்த்துக்கொள்ளலாம்.

நமக்கு மட்டுமல்ல நம்முடைய பெற்றோர்கள்,

மனைவி ,குழந்தைகள் யாவருக்கும்

தேவைப்படும் வைததி்ய செலவுகளை

பார்த்துக்கொள்ளலாம். மருத்துவ காப்பீடு செய்வது

ஒரு வகையில் சேமிப்பு மாதிரி.

ரூ30,000 முதல் 5 லட்சம் வரை நாம் காப்பீடு

செய்துக்கொள்ளலாம். சில பெரீய கம்பெனிகளில்

ஒரு லட்சத்திற்கு மேல் தான் பாலிஸி எடுக்க முடியும்.

91 நாள் குழந்தையிலிருந்து 60 வயது வரை

இன்சூர் பண்ணிக்கொள்ளலாம்.

இரண்டு விதமான காப்பீட்டு திட்டங்கள் இருக்கின்றன

ஒன்று தனிகாப்பீடு ( individual insurance),

அடுத்தது குழும காப்பீடு.

தனி காப்பீடு திட்டத்தில், தனி மனிதர் மாத்திரமே

இன்சூர் பண்ணிக்கொள்ள முடியும்.

குழும காப்பீடு திட்டத்தில், குடும்பத்திலுள்ள

அனைவரும் இன்சூர் பண்ணிக்கொள்ளலாம்.

(அதாவது, கணவர், மனைவி, தங்கள் பெற்றோர், பிள்ளைகள்) .

கட்டும் ப்ரீமியம் அதிகமாக இருக்கும்.

குடும்பத்திலுள்ள ஏதாவது ஒரு அங்கத்தினர்

எல்லோருக்கும் ப்ரீமியம் கட்டுவார்.

குழும காப்பீடின் கீழ் நிறுவனங்களின்

காப்பீடுகள் வருகின்றன....

நிறுவனங்கள் தங்களிடம் பணியாற்றும்

பணியாளர்களுக்கும் அவர்களுடைய

குடும்பத்தினருக்கும் காப்பீடு செய்துக்கொள்கின்றன.

(தொடரும்)

17 comments:

குசும்பன் said...

நல்ல பயனுல்ல கட்டுரை!!! மொத்தமாக தொகுத்து விடுங்கள் கடைசியாக

delphine said...

எப்படி தொகுக்கணும்னு எனக்கு சொல்லிகொடுங்க குசும்பரே! அதெல்லாம் தெரியாமத்தான் இன்னும் ப்ளாக் உலகத்தில் உலாத்துகிறேன் :(

முத்துலெட்சுமி said...

ஆரம்பித்தாச்சா தொடர்ந்து படிப்பேன் டாக்டர்..

மங்கை said...

ஆஹா...டாக்டரம்மா....

பின்னிட்டீங்க... சீக்கிறம் அடுத்த பதிவ போடுங்க....

எத்தனை தேவையான விஷ்யம் இது..

delphine said...

தொடர்ந்து படிக்க மட்டுமல்ல முத்துலட்சுமி... அவசியம் காப்பீடு செய்துக்கொள்ளுங்கள். it will be very useful in your later life.

முத்துலெட்சுமி said...

என் மகளுக்கு கையில் ஒரு ஆபரேஷன் செய்த போது மெடிக்கிளைம் இருந்தது...ஆனால் மகனுக்கு 40 நாளில் ஆபரஷன் நீங்க சொன்னமாதிரி அப்ப இப்படி செய்யமுடியாது கை காசு போட்டோம்.

மங்கை said...

ஆஹா...நான் போட்ட பின்னூட்டம் கம்ப்யூட்டர் சாப்பிட்டுடுச்சு...

கலக்குறீங்க டாக்டரம்மா....கலக்குறீங்க
அருமையா வந்திருக்கு...

எவ்வளவு உபயோகமான தகவல்கள்... சீக்கிறம் அடுத்த பாகம் போடுங்க டாக்ட்ரம்மா

delphine said...

ஆமாம் முத்துலட்சுமி 91 வது நாளிலிருந்துதான் இன்சூரன்ஸ் செய்ய முடியும்.

delphine said...

மங்கை நன்றி...நிறைய இருக்குது.. ஆனால்.. சரியான தமிழ் வார்த்தைகள் தெரியாமல் கொஞ்சம் தடுமாற்றம்.. வெளியில் சொல்லவே என்னவோ மாதிரி இருக்கு... உதவி செய்யுங்க மாமி.

மங்கை said...

டாக்ட்ரம்மா...

நான் உதவி செய்யறேன்..ஆனா... என் கிட்ட கேட்டதா கூட வெளிய சொல்லாதீங்க.. அப்புறம் உங்களுக்கு போனி ஆகாது..:-)))

நீங்களே கலக்கிட்டீங்க டாக்டரம்மா

கண்மணி said...

கட்டுரை அருமை அவசியமானதும் கூட.
அது சரி உதவுங்க மாமின்னு அவங்க கேக்க உதவுகிறேன் ஆனா யார்கீட்டயும் சொல்லாதீங்கன்னு இவங்க சொல்ல இதுக்குப் பேருதான்
'சிதம்பர ரகசியமா'? அய்ய்ய்ய்யோ அய்ய்ய்யோ
[பாருங்க நம்மால முடிஞ்ச நாரதர் வேலை]

Thekkikattan|தெகா said...

டாக்டர்,

நல்ல தொடக்கம். தொடர்ந்து கொஞ்ச கொஞ்சமாக கொடுத்தாலும் தெளிவாக நீங்கள் சந்தித்த மக்களின் ப்ரச்சினைகளிலிருந்து (இன்சூரன்ஸ் எடுத்து க்ளைம் பண்ண முடியாமல் சில நேரங்களில் மக்கள் அவதியடைவது வரை...), கம்பெனிகள் எப்படி காப்பீடு விற்பனைகளுக்கு பல சில உத்திகளை கையாள்கிறது எனபது வரைக்கும் புட்டு, புட்டு வைச்சிடுங்க.

பாபு மனோகர் said...

பயனுள்ள பதிவு..அடுத்த பதிவை எதிர்பார்க்கிறோம்.

இதுவரை தள்ளிபோட்டுவிட்டேன்... எல்லாம் சோம்பேரித்தனம்தான்.. தங்கள்
பதிவை பார்த்ததும் உடனே பாலிஸி எடுக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.

delphine said...

கண்மணி, நீங்களுமா!

delphine said...

கம்பெனிகள் எப்படி காப்பீடு விற்பனைகளுக்கு பல சில உத்திகளை கையாள்கிறது எனபது வரைக்கும் புட்டு, புட்டு வைச்சிடுங்க. ///
தெகா.. அவசியம் எழுதுகிறேன்.

delphine said...

தங்கள்
பதிவை பார்த்ததும் உடனே பாலிஸி எடுக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. ///
ப்ளீஸ் பாலிசி எடுங்க... அதற்கு முன்னால் யாரிடம் எடுக்கபோறீங்க? ஏமாற்ற நிறைய பேர் காத்திருக்காங்க பாபு மனோஹர்.

Anonymous said...

:)