Sunday, July 15, 2007

நம் younger generation.....

வாழ்க்கையின் நிறைய நாட்களை மகப்பேரு மருத்துவத்திலே கழித்துவிட்டதால்,

வாழ்க்கையில் எனக்கு எப்பவுமே ஒரு பாசிட்டிவ் நோக்கம்( positive attitude) உண்டு.


கர்ப்பிணி பெண்கள் குழந்தை பேறுக்கு வரும்போது 8-லிருந்து 10 மணி நேரம்


கஷ்டப்படுவார்கள். ஒரு சில சமயங்களில் மாத்திரமே 24 மணி நேரம் ஆகும்.


எதுவாயிருந்தாலும் ஒரு அழகுக் குழந்தை, ரோஸ் கலரில் கையை, காலை ஆட்டி


உதைக்கும்போதும் அதை நாங்கள் நிமிண்டி விட்டு, அழ வைத்து வேடிக்கைப்


பார்க்கும்போதும் அதன் அழகே தனிதான். அதுவும் அந்த தாய்க்கு அவ்வளவு

வேதனை பட்டபிறகு அவள் குழந்தையைப் பார்க்கும்பொழுதும் கட்டி அணைத்துக்

கொஞ்சும் போதும் உலகத்தில் அவள் பட்ட கஷ்டங்கள் யாவும் மறந்தே

போய்விடுகிறது. எனக்கும்தான்...

இந்த 10 மாதங்களாக நான் இந்த சந்தோஷத்தை இழந்துவிட்டதாகவே


தோன்றுகிறது. இரவு, பகல் என்று வேலைப்பார்த்தது போய் ஆபீஸ் நேரத்தை தேர்ந்து

எடுத்து ஒரு பெரிய ஆஸ்பத்திரியின் நிர்வாகத்திலிருப்பது challenging ஆக


இருந்தாலும், அந்த பிஞ்சுக் குழந்தைகளைக் கையில் எடுத்த நாட்கள் நிச்சயமாக ஒரு


வசந்தகாலமாகியப் பொற்காலம்தான். நல்ல நேரங்களை மட்டும் வாழ்க்கையில்


பார்த்துக்கொண்டிருந்த எனக்கு தற்சமயம் புற்று நோயால் அவதிப்படுபவர்களைப்


பார்க்கும்போது மனதை என்னவோ செய்கிறது. இந்த நோயாளிகளைப்


பார்க்கும்போதெல்லாம் வாழ்க்கையின் quality of life போய்

விட்டதோ என்று கூட நினைக்க தோன்றுகிறது. அதிலும் மிகவும் இள வயதினரை,


குழந்தைகளை புற்று நோய் தாக்கும் போதும், அந்த குழந்தைகளும் அவர்கள்


பெற்றோர்களும் படும் வேதனைகளையும் வார்த்தையால் விவரிக்க இயலாது.

chemotherapy-க்கும் radiation-க்கும் வரும் பலதரப்பட்ட ஆண், பெண்களை

பார்க்கும்போது என்னை அறியாமலே எனக்குள் ஒரு insecurity உண்டாகிறது.

ஆஸ்பத்திரி corridor-ல் நேற்று நடந்து சென்றுக் கொண்டிருந்த போது நான்


பார்த்த ஒரு காட்சி என்னை மிகவும் பாதித்தது. 25 வயதான , brain tumour-ல்

அவதிப்படும் ஒரு மணிப்புரி பெண்ணிற்கு தலயை மொட்டை அடித்து, 25 தையல்கள்

போட்டு இருந்தது. அவளுக்கு ஒரு காலும் கையும் உணர்ச்சியற்றுப்போய் இருந்தது.

அவளை ஒரு wheel chair-ல் வைத்து ஜன்னல் பக்கம் வேடிக்கை

காண்பித்துக்கொண்டிருந்தாள் ஒரு உதவி செவிலி (nursing aid). இந்த பெண்ணுக்கும்

21 வயதுதான் இருக்கும். மணிப்புரி பெண்ணுக்கு சுத்தமாக தலை நிற்காததால் இந்த

நர்ஸ் பொண்ணு அவள் மீது தலையை சாய்க்கவைத்து , அவள் வாயிலிருந்து ஒழுகும

ஜொள்ளை (drool) துடைத்துவிட்டு வேடிக்கைக் காண்பித்துக்கொண்டிருந்தாள். மொழி

வித்தியாசமாக இருந்தாலும், எதோ தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் பேசிக்கொண்டே

இருந்தாள். அதன் பிறகு அவள் காதில் ear phones மாட்டிவிட்டு ஒரு Walkman-ல்

பாட்டு போட்டு காண்பித்தாள். கொஞ்ச நேரம் கழித்து நர்ஸ் பொண்ணு அழகாக ஒரு

தமிழ் பாடலை அவளுக்கு பாடிக் காட்டினாள்.

எவ்வளவு சகிப்புத்தன்மை, எவ்வளவு பொறுமை! எவ்வளவு concern!


நம் இளம் வயதினர் உண்மையிலே பாராட்டுக்குரியவர்கள்தான்.

Truly we are blessed
to have such young people in our land....
23 comments:

துளசி கோபால் said...

ஆமாங்க. மருத்துவத்தில் செவிலியர்கள் பணி மகத்தானது. இதைப் பாராட்ட வார்த்தைகளே இல்லைங்க.
உறவினர்கள்கூட சிலசமயம் அலுத்துக்குவாங்க. ஆனா............ கடவுள் இவுங்களை நல்லா வச்சுருக்கணுமுன்னு
வேண்டிக்கறேன்.

நாமக்கல் சிபி said...

//Truly we are blessed to have such young people in our land//

அந்த செவிலிப் பெண் போற்றுதலுக்குரியவர்.

அவரின் மனிதாபிமான உள்ளத்திற்கு தலை வணங்குகிறேன்!

அபி அப்பா said...

நான் கொஞ்சம் ஒரு மாதிரியா ஆகிட்டேன். பதிவின் தாக்கம் அப்படி! ஆமாம் டாக்டர் அந்த உதவி நர்ஸ் பெண் என்னன்னு சொல்வது வார்த்தைகள் கூட கோர்வையா வரவில்லை!

dharumi said...

இதுபோன்று மருத்துவமனைகளில் வேலை செய்வோருக்கு depressive-ஆக இருக்காதா என்று நினைப்பதுண்டு.

Thekkikattan|தெகா said...

டாக்டர், மனதை நெருடும் பதிவு இது.

என் நண்பன் ஒருவன் அவ்வப்பொழுது கூறுவான். நாம் வாழ்க்கையில் ஒன்று மற்ற விசயங்களுக்காக அடித்துக் கொண்டு மணம் பிணக்குற்று வாழும் பொழுது, இது போன்ற ஹாஸ்பிடலுக்கோ அல்லது ஒரு மயானத்திற்கோ ஒரு எட்டு எட்டிப் பார்த்து விட்டு வந்தால் நாம் எவ்வளவு பாக்கியசாலிகள் இன்று உயிருடன் இருப்பதற்கும், இந்த விதமான உயிரைக் குடிக்கும் நோய்களிலிருந்து தப்பி இருப்பதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று உணர்ந்து ஒரு qualityயான வாழ்க்கை வாழ வழி வகுக்கும்மென்று.

உங்கள் பதிவை படித்ததும் என் மனதில் ஏற்பட்டதும் இதே எண்ணம் தான் இப்பொழுது. உங்களுக்கே insecuirty உணர்வு எட்டிப் பார்த்ததென்றால், சாமான்யர்களுக்கு?

மேலும் ஒரு கொசுறுச் செய்தி, அது போன்ற செவிலிப் பெண்களால் தான் மேற்கத்திய நாடுகளில் நமது நர்ஸ்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கச் செய்கிறது.

நன்றி இந்தப் பதிவினை கொணர்ந்தமைக்கு!!

delphine said...

நன்றி துளசி..
இத்தனை வருடங்கள் செவிலியர்களுடன் வேலை செய்தும் அவர்களது உழைப்பை நாம் எத்தனை முறை பாராட்டிருப்போம்?///?? :(

delphine said...

hi! சிபி!!
தினந்தோறும் இதுமாதிரி காட்சிகளைப்பார்க்கும் இளம் செவிலியர்களுக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும்?

delphine said...
This comment has been removed by the author.
கண்மணி said...

வந்துட்டேன்.
நல்ல பதிவு.
ஆனால் இது போன்ற மருத்துவ பதிவுகள் வாழ்க்கையின் நிச்சயமின்மை பற்றிய பயத்தையே தருகின்றன.
செவிலியர்களின் சேவையும் சகிப்புத்தன்மையும் பாராட்டப் பட வேண்டிய ஒன்று.
அபி அப்பா சொன்னது உணர்ச்சியில் அவருக்கு வார்த்தை கோர்வையா வரவில்லை என்று.

கோபிநாத் said...

அருமையான பதிவும்மா ....எழுத்து நடையும் சூப்பர் ;)))

\\பாட்டு போட்டு காண்பித்தாள். கொஞ்ச நேரம் கழித்து நர்ஸ் பொண்ணு அழகாக ஒரு

தமிழ் பாடலை அவளுக்கு பாடிக் காட்டினாள்.

எவ்வளவு சகிப்புத்தன்மை, எவ்வளவு பொறுமை! எவ்வளவு concern!\\

அந்த சகோதரிக்கு உண்மையில் போற்றுதலுக்குரியவர்.


\\நம் இளம் வயதினர் உண்மையிலே பாராட்டுக்குரியவர்கள்தான்.\\

இளம் வயதினர்களிடம் இருக்கும் நல்ல குணங்களை பதிவிட்டு அவர்களை பாராட்டாவும் செய்த உங்களை எப்படி பாராட்டுவது ;))))

delphine said...

அபி அப்பா.. எனக்கும் மனதை என்னவோ செய்தது..

delphine said...

தருமி சார்,
நிச்சயமாக depressive ஆகத்தான் இருக்கும். my colleagues also complain about this.

காட்டாறு said...

நல்ல பதிவுக்கு நன்றி டாக்டரம்மா.

//delphine said...
தருமி சார்,
நிச்சயமாக depressive ஆகத்தான் இருக்கும். my colleagues also complain about this.
//

இன்னும் கொஞ்சம் விரிவாக பதிலளித்திருக்கலாமோ? ஏனெனில், இது போல பணியிடத்தில் வேலை செய்வது துவக்கத்தில் மன அழுத்தத்தை கொடுத்தாலும், போகப் போக வாழ்க்கையை ரசிக்கவும், மற்றவர்களிடம் அன்புடனும், பகிர்தலுடனும் நடந்து கொள்ளும் மனநிலையைக் கொடுக்கும் என்பது என் கருத்து. நான் உணர்ந்ததால் தான் இவ்வாறு கூறுகிறேன்.

சிவபாலன் said...

Doctor,

Excellent Post!

tbr.joseph said...

இதுபோன்ற தாதிகளை முதியோர் இல்லத்திலும் பார்த்திருக்கிறேன்.

அவர்களும் ஒருவகையில் குழந்தைகள் போலத்தான். இயலாமை, பிடிவாதம் எல்லாம் உள்ள குழந்தைகள்.

இவர்களைப் போன்றோரால்தான் இந்த உலகம் இன்றும் சுழன்றுக்கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

உண்மையான வார்த்தைகள் டெல்ஃபின். எத்தனை பேர் உங்கள் உலகத்தை எட்டிப் பார்க்கிறொம்??

தெ.கா சொல்லுவது போல வாழ்வின் உண்மை,மருத்துவமனையிலும் மயானத்திலும் தான் இருக்கிறது.

நாம் கொள்ளும் சிறு சிறு மனக்கசப்புகள் உண்மை சேவையின் முன்னால் துரும்பாகிவிடும்.
அந்தச் செவிலியும் அவள் போன்ற மற்றவர்களையும் கடவுள் ஆஸீர்வாதம் செய்திருப்பார். அது தொடர என் பிரார்த்தனைகள்.

delphine said...

தெகா.
நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்..
நானும் என் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பது என்னவோ உண்மைதான்.
நர்ஸ்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கச் செய்கிறது.///
yes. very true. our girls are really concerned.

delphine said...

இது போன்ற மருத்துவ பதிவுகள் வாழ்க்கையின் நிச்சயமின்மை பற்றிய பயத்தையே தருகின்றன.///

உண்மைதான் கண்மணி.

முத்துலெட்சுமி said...

உண்மைதான் டெல்பின் நம்மநாட்டு பெண்கள் எத்தனை அருமையான நர்ஸா இருக்காங்க கனிவா அன்பா , நான் நிறைய இடத்தில் என் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன்.

அதான் எல்லா நாட்டுலயும் அவங்களை விரும்பி அழைக்கிறாங்க..

மங்கை said...

டாக்டரம்மா...

செவிலியர்கள்ல கேரள பெண்களுக்கும், வட கிழக்கு மாநிலப் பெண்களுக்கு ஈடு இணையில்லை..

நல்ல பதிவு டெலஃபின்

delphine said...

கோபி, இளம் நர்ஸ்கள் இங்கு செய்யும் பணிகளைப்பார்க்கும்போது மிகவும் ஆச்சர்யமாக உள்ளது.. எவ்வளவு stressful/

delphine said...

காட்டறு, வருகைக்கு நன்றி..இது வரை நான் எத்தனையோ ஆஸ்பத்திரிகளில் வேலை செய்துள்ளேன். ஆனால் தற்சமயம் வேலைப் பார்க்கும் இடம் புற்று நோய் நோயாளிகள் அதிகமாக இருக்கும் இடம். பத்து நாட்களுக்கு ஒரு முறை அல்லது வாரம் ஒரு முறை அட்மிட் ஆவதால் நர்ஸ்களுக்கு நோயாளி மேல் ஒரு பாசம் உண்டாகிறது.திருப்பி திருப்பி இந்த பேஷண்ட்ச் அட்மிட் ஆவதால் ஒரு அந்நியோன்னியம் உண்டாகிறது. அவர்கள் வீட்டுக்கு செல்லும்போது lift வரை வந்து வழி அனுப்பும் நர்ஸ்களை பார்க்க முடிகிறது. சில சமயம் மிகவும் critical ஆகும் போது ICU-குள் போய் அந்த நோயாளிகளை பார்க்கிறார்கள்....it is really tough both physicaly and mentaly.

pria said...

Good that I got ur blog back. Its been months now I lost reading it.