Tuesday, July 10, 2007

'குடிப்பழக்கம்'--- ஒரு 'NO' சொல்லலாமே!

குடிப்பழக்கம் அதிகமான, குடிக்க வேண்டும் என்று உணர்வுள்ள நண்பர், குடிபழக்கத்திற்கு அடிமையான நண்பர் அல்லது உறவினருக்கு எப்படி நம்மாலான உதவிகளை செய்ய முடியும்?நமக்கு தெரிந்தவர்களில் யாராவது குடிக்க வேண்டும் அல்லது அளவுக்கு
அதிகமாகக்குடித்து தன் வாழ்க்கையையும், தன்னை சுற்றி இருப்பவர்களின்
வாழ்க்கையையும் நாசமாக்கவேண்டும் என்கிற உணர்வுடன் இருப்பவர்களை,
அதிலிருந்து அவர்கள் விடுபட உதவி செய்ய முயற்சிப்பதே நமது முதல் செயலாகும்.
தீர்வுகளைக் கண்டறிய அறிவுரைகள், நமது சொந்த அனுபவங்களை, நமக்கு
தெரிந்தவர்கள் பட்ட கஷ்டங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் போன்றவற்றை நாம்
செய்யலாமே.

அவர்கள் கூறுவதை அமைதியாகக் கேட்பது மிகவும் சிறந்த செயல். எதனால்
அவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றுக் கண்டறிய வேண்டும். குடிக்க
வேண்டும் என்கிற உணர்வுள்ளவர்கள் பதில்களையோ அல்லது தீர்வுகளையோ
தேடுவதில்லை. அவர்களை நமது வழிக்கு கொண்டு வருவது அவ்வளவு
சுலபமானாதும் இல்லை. அவர்களுடைய மற்றொரு முகத்தை காண்பிக்கவும், ஒரு
சிலர் அவர்களுடைய மன ஆபாசங்களையும் வெளிபடுத்துவதற்கான ஒரு mask
அவர்களுக்குத் தேவைப்படுகிறது.

கேட்பது (listening)- உண்மையாகக் கேட்டல்(true and sincere) - அவ்வளவு
எளிதானதல்ல. ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காகக் கருத்துக்கூறுவது,
அறிவுரை சொல்லுதல் அல்லது வேறு ஏதாவது கூறுவது - என்ற நமது உள்ளுணர்வை
நாம் கட்டுப்படுத்த வேண்டும். அந்த நபர் நம்மிடம் கூறும் விஷயங்களைக் கேட்பது
மட்டுமின்றி அதற்குப் பின்னால் உள்ள அவர்களது உணர்வுகளை அவர்களது
கோணத்தில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டும், ...not from our view.


குடிப்பழக்கம் உள்ள ஒருவருக்கு உதவும்போது நாம் நினைவில் கொள்ள வேண்டிய
சில அம்சங்கள்

அவர் எதற்காக இதை செய்கிறார்?

அவர் எந்த கோணத்தில் வாழ்க்கையை நோக்குகிறார்?

எந்த விதத்தில் அவரது மனம் நோகடிக்கப்பட்டுள்ளது அல்லது பாதிக்கப்பட்டுள்ளது?

தன் சுய நினைவை இழப்பதற்காக இந்த செயலை செய்கிறாரா?

வாழ்க்கையில் எந்த ஒரு பிடிப்பும் இல்லாததால் இதில் ஈடுபடுகிறாரா?

மனதில் தீராத ஒரு பயத்தினால் செய்கிறாரா? அல்லது ஒரு தமாஷுக்கு செய்கிறாரா?

ஒரு நம்பிக்கையான, அக்கறைகாட்டும் ஒருவரை நாம் தேர்வு செய்துக்

கொள்ளவேண்டும். வாழ்க்கையின் நல்ல கணங்களை எடுத்துக்கூறலாம்.

அவருக்கு நிறைய importance கொடுத்து அவர் பிரச்னைக்கு தீர்வுக்காண sincere
ஆக முயற்சிக்கவேண்டும்..

குடிப்பழக்கத்தால் வரும் பின்விளைவுகள், குடும்பத்தாருக்கு அதனால் ஏற்படும்

வேதனைகள் எல்லாவற்றையும் எடுத்துச்சொல்லலாம்..


குடிப்பழக்கத்தை விடுவதற்கு Naltrexone (Vivitrol), Disulfiram (Antabuse) போன்ற

மருந்துக்கள் தான் தற்சமயம் உபயோகப் படுத்தப்படுகின்றன.

counseling is the best form of treatment. there are lots of support groups who help

in deaddiction. 24 மணிநேர helpline-ம் உள்ளது.

SAY 'NO' TO ALCOHOL.....

34 comments:

குட்டிபிசாசு said...

டெல்பின் அம்மா,
நல்ல தகவல்! நன்றி!!

முத்துலெட்சுமி said...

நல்லா எழுதினீங்க...இதுக்குத்தான் ஒரு டாக்டர் வேணுங்கறது..பாருங்க பேசாம இருந்தா மாறிடுவாங்களோன்னு சில ர் நினைக்க...அது எதிரா மாறிட க்கூடாது இல்லயா...

ஆனா குடிக்கு பழகிட்டவங்களுக்கு காரணமே தேவையில்லை ஆரம்பிக்கும் போது மட்டும்தானே காரண்ம் தேவை..
அப்புறம் சந்தோஷம் அதான் கொஞ்சம்..இல்லன்னா துக்கம் தனிமை இல்லன்னா வேற எதாவது என்று சொல்லிக்கிட்டே போனா ??

என் குழந்தைக்கு மனைவிக்கு நான் ஒரு ஹீரோ என்று சொல்லிக்கொண்டு இருப்பவர்கள் நாளை இந்த பழக்கத்தால் ஒரு ஜீரோ ஆகாம இருக்கணும்ங்கற எண்ணம் கூட இல்லாதவர்களை என்ன வென்று சொல்வது.


பதிவுக்கு நன்றி.

குசும்பன் said...

அருமையாக சொல்லி இருக்கிறீர்கள், கண்டிப்பாக மாற்றம் இருக்கும் என நினைக்கிறோம்...பொருத்து இருந்து பார்ப்போம். குடிப்பவர்களுக்கு அதனால் வரும் தீமைகள் எல்லாம் தெரியாமல் இல்லை, அலச்சியம் தான் காரணம். ஒரு நிமிசம் மனைவி, மக்கள் எல்லாரையும் நினைத்து பார்த்தால் அப்புறம் எப்படி குடிப்பார்கள்

துளசி கோபால் said...

நண்பர் ஒருவர் இப்படித்தான் குடிப்பழக்கத்துக்குள் போய் மீளாமலே சில வருஷங்களுக்கு முன்னே
தற்கொலை செஞ்சுக்கிட்டார். மனைவியும் மூணு குழந்தைகளும் இருக்காங்க.

தம்பி said...

நன்றி.

நாமக்கல் சிபி said...

//counseling is the best form of treatment. there are lots of support groups who help//

நல்லா சொல்லி இருக்கீங்க!

Good Post!

அபி அப்பா said...

நானும் ஒரு அட்டெண்ட்டன்ஸ்!

தருமி said...

நானும் ஒரு அட்டெண்ட்டன்ஸ்!

ரிப்பீட்டே!

கோபிநாத் said...

அருமையான பதிவு....தேவையான பதிவு

பதிவுக்கு மிக்க நன்றி

delphine said...

நன்றி குட்டி பிசாசு...தகவல் மட்டும் அல்ல....

delphine said...

இதுக்குத்தான் ஒரு டாக்டர் வேணுங்கறது////
இதைப்பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்குது.
இந்த பழக்கத்தால் ஒரு ஜீரோ ஆகாம இருக்கணும்///
இதுதான் இந்த பதிவின் நோக்கம்..

delphine said...

கண்டிப்பாக மாற்றம் இருக்கும் என நினைக்கிறோம்.////
எங்காவது பிரச்னையா?

துளசி கோபால் said...

தாராளமா நோ சொல்லலாமே.

"நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்
இன்று ராத்திரிக்குத் தூங்கவேணும்
ஊத்திக்கிறேன் கொஞ்சம்........"


இப்படித்தான் பலரும் இருக்காங்க.

Anonymous said...

can u pls tell me what is the dosage of these medicines to be given to a diabetic patient?? so that i can also try and make my life happy with my hubby

முத்துகுமரன் said...

மனித சமுகத்திற்கு தேவையான மற்றுமொரு பயனுள்ள பதிவு.

நன்றி டாக்டர்.

PPattian said...

விளையாட்டாக ஆரம்பித்து, மனதளவில் அடிமையாகி (Psychological addiction) பின் உடலளவில் அடிமையாகி (physiological addiction)வெளியில் வர முடியாமல் தவித்து, என்னால் மது இல்லாமல் வாழ முடியாது என்ற நிலைமைக்கு தள்ளப்ப்படுகின்றனர்.

ஆரம்ப கட்டங்களிலேயே சரியான அறிவுரையும் விழிப்புணர்வும் தேவை.

Thekkikattan|தெகா said...

பிரயோசனமான பதிவு!

தானே தருவித்துக் கொள்ளும் நல்ல, தீய பழக்க வழக்கங்களுக்கு மனமே அடிகோலிடுகிறது முதன்மையாக (ஒரு வயதிற்குப் பிறகு). அது புகைப் பிடிப்பதாகட்டும், குடிப்பழக்கமாக இருக்கட்டும்.

நல்ல மன ஆரோக்கியமே எல்லாவித தீயவித பழக்க வழக்கங்களுக்கும் ஒரு தீர்வு.

ஆமா, நம்மூர்ல அதிகமாக ஆண்கள் மட்டுமே புகைப்பிடிப்பதும், மது அருந்துவதிலும் ஈடுபடுகிறார்கள், ஆனால் பெண்கள் அவ்வாறு செய்வது கிடையாது. பெண்களின் ஆற்றாமையை போக்க அவர்கள் எதில் தஞ்சம் அடைகிறார்கள்?

புரியாமல் கேக்கிறேன். யாரவது தெரிந்தவர்கள் கூறவும்.

delphine said...

குசும்பன் வரவுக்கு நன்றி.. ரொம்ப நாளாக இந்த குடி பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தேன். இன்றுதான் நேரம் கிடைத்தது. "கிணறு வெட்ட பூதம் கிளம்பின கதையாகிவிட்டது"

delphine said...

thanks Thulasi..

குடிக்கு அடிமையானவர்கள் நிறைய பேர் தங்கள் முடிவை தாங்களே தேடிக் கொள்கிறார்கள்..
"நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்
இன்று ராத்திரிக்குத் தூங்கவேணும்
ஊத்திக்கிறேன் கொஞ்சம்........"///
ம்ம்ம்.. என்ன செய்ய..?

delphine said...

தம்பி.. நன்றி..

வவ்வால் said...

ஏங்க உஙகளுக்கு சமூக பொறுப்பு இருக்குனு காட்டிக்க இப்படி ஒரு பதிவா!

தண்ணி அடிக்கிறவங எல்லாம் , நாசமா போனது போல சொல்றிங்க, இன்று இருக்கும் ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ் ல இருந்து அமைச்சர்கள் வரைக்கும் தண்ணி அடிக்குறாங்க!

த்மிழ் நாடு கவர்மென்ட் நடக்கிறதே டாஸ்மாக் தர வருமானத்தில தான்! பேசாம உங்க செல்வாக்க பயன்படுத்தி மது விலக்கு கொண்டு வாங்க ஒரு நல்லது நடந்தாக எடுத்துகலாம்!

delphine said...

சிபி, கோபி,
வரவுக்கு நன்றி..
counseling தான் முதல் form of treatment...ஆனால் குடிப்பழக்கம் உள்ளவ்ர்களை அழைத்துச்செல்வது மிக கஷ்டம்.

delphine said...

அபி அப்பா, தருமி சார்..
அது என்ன அட்டெண்டன்ஸ்...? எதற்கு? அதற்கு ஒரு ரிப்பீட் வேறு...
Hம்ம்.

delphine said...

thanks Muthukumaran

delphine said...

ஆரம்ப கட்டங்களிலேயே சரியான அறிவுரையும் விழிப்புணர்வும் தேவை.///

விழிப்புணர்ச்சி.. அதுதான் நம்மிடம் இல்லீங்களே.. ஹரி..

delphine said...

புரியாமல் கேக்கிறேன். யாரவது தெரிந்தவர்கள் கூறவும்.///
தெகா..
.அதனால் தான் நம்மூர் பெண்கள் அதிகம் பேர் மன அழுத்தத்தில் சிரமப் படுகிறார்கள். (அதன் பிறகு பேய் பிடித்திருக்கிறது, பேய் ஓட்டுவது....etc. etc..)

மங்கை said...

நல்ல காரியம் பண்ணீங்க டாக்ட்ரம்மா

தெகா.. உங்களுக்கு தான் இப்படியெல்லாம் கேள்வி கேட்க தோனும்...

பெண்கள் சிலரிடம் பொலம்பி தீர்த்துக்குவாங்க.அழுதுடுவாங்க.அதனால
அவர்களுக்கு இந்த மன அழுத்தம் குறையலாம்..

ஆனா இதையும் கிண்டல் தான் பண்றீங்க...சாரி பண்றாங்க...டு பி ஆன் தி சேஃப் சைட்..

ரெண்டாவது, சரி, ஆனது ஆயுடுச்சு.. குழந்தைகள் இருக்காங்கன்னு அனுசரிச்சு போறது ஒரு விதம்

முக்கியமா ஒன்னு.. இந்த சமுதாயம் பெண்கள் குடித்தா ஏத்துக்காதுங்கறது எங்களுக்கு தெரியும்..:-)))
ஒரு வேலை இந்த நிலை மாறுச்சுன்னா எங்க 'நிலைமையும்' மாறுமோ என்னமோ...:-)))

என்ன டாக்ட்ரம்மா நான் சொன்னது சரிங்களா

நல்ல பதிவு

delphine said...

ஆனது ஆயுடுச்சு.. குழந்தைகள் இருக்காங்கன்னு அனுசரிச்சு போறது ஒரு விதம்///
ஆமாங்க மங்கை.. நம்ம ஊரு பெண்களெல்லாம் அப்படித்தான் இருக்காங்க..

delphine said...

hello Anony!
the treatment for alcoholism is a combined one. It starts with Counseling, identifying the problem and then the willingness to take treatment. I mentioned here about the drugs for completion sake.
the Patient has to be admitted, evaluated and then the treatment starts. And the medicines have to be given under the supervision of a qualified doctor. if you need any help regarding this I am too willing to help you. My e-mail is available in my blog. Thank you.

விசாலாட்சி said...

என் கணவரும் ஒரு குடிகாரர் தான்.அது மட்டும் இல்லாமல் கஞ்சா அடிப்பவர்.அவருக்கு இந்த பதிவை படிக்க கொடுத்து இருக்கிறேன். இதை படித்து அவர் திருந்தினால் ரொம்ப சந்தோசம்

வல்லிசிம்ஹன் said...

ஆனது ஆயுடுச்சு.. குழந்தைகள் இருக்காங்கன்னு அனுசரிச்சு போறது ஒரு விதம்///
ஆமாங்க மங்கை.. நம்ம ஊரு பெண்களெல்லாம் //
இது ஒரு விதம்.இன்னோரு விதம் விரக்தியின் எல்லை.
ஆ.அனானிமஸ் இருக்கிறது. சென்னையில் நுங்கம்பாக்கம்ஸெயிண்ட் தெரிசா சர்ச்சில் கூட்டம் நடப்பதைப் பற்றிப் படித்திருக்கிறேன்.
someone the alchoholic trusts shd take them to one ofthese meetings.
and more than that the family members shd also get counselling.otherwise there is no other way anyone can come out of the vicious circle.
thank you once again Delphin.

delphine said...

விசாலாட்சி..
உங்களுக்கு help தேவைப்பட்டால்

Alcoholic Anonymous அணுகலாமே!

delphine said...

Thanks Valli for coming by.

குட்டிபிசாசு said...

//ஆமா, நம்மூர்ல அதிகமாக ஆண்கள் மட்டுமே புகைப்பிடிப்பதும், மது அருந்துவதிலும் ஈடுபடுகிறார்கள், ஆனால் பெண்கள் அவ்வாறு செய்வது கிடையாது. பெண்களின் ஆற்றாமையை போக்க அவர்கள் எதில் தஞ்சம் அடைகிறார்கள்?

புரியாமல் கேக்கிறேன். யாரவது தெரிந்தவர்கள் கூறவும்.//

டிவி சீரியல்கள் பார்க்கிறார்கள்!! :))