Tuesday, July 31, 2007

சோர்ந்து போன தருணம்

நான் ஒரு மருத்துவராக இருப்பதால் மற்ற மருத்துவர்களை , ( அவர்கள் தவறு

செய்யும்போது) ஆதரிப்பேன் என்று நினைக்க வேண்டாம்.

அதற்காக நான் ரொம்ப நல்லவள், தவறே செய்யவில்லை என்றெல்லாம் சொல்ல

மாட்டேன். மருத்துவத்தில் சில சில தவறுகள் ஏற்படத்தான் செய்கின்றன. ஆனால்

பாதிப்பு அதிகமாகும் போது அந்த தவறுகள் யார் செய்திருந்தாலும் மன்னிக்க

முடியாதுதான். என்ன! முன்னுரை பலமாக இருக்கிறதா?/

ஆனால் நான் இப்பொழுது

எழுதும் விஷயம் என் மனதை மிகவும் பாதித்த ஒன்று.

நான் திருச்சியில் இருந்த போது நடந்த சம்பவம் இது. (about 2 years back) எனக்கு

தெரிந்த ஒரு குடும்பம்.

இரண்டே பிள்ளைகள் (இரட்டைக குழந்தைகள்) . மூத்தவன் திவாகர் BE முடித்துவிட்டு

பெங்கலூரில் வேலை. அவன் தங்கை சுமதி. அவளும் BE முடித்துவிட்டு சென்னயில்

வேலை. மிகுந்த பாசாமான குடும்பம். முதன் முதலாக அண்ணன் தங்கை இரண்டு

பேரும் வெவ்வேறு ஊருக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை..மனமில்லாமல்

பிரிந்தனர்..

திவாகர் ஒரு நாள் காலையில் பெங்களூரிலிருந்து ஊருக்கு கிளம்பும் போது ஓடிப்

போய் பஸ் ஏற கீழே விழுந்து கை எலும்பு உடைந்தது. எப்படியோ திருச்சி வந்து

சேர்ந்துவிட்டான். அங்குதான் விதி விளையாடி விட்டது.

உடைந்த எலும்பை சரி செய்ய ஒரு ஆஸ்பத்திரியில் சேர்ந்தான். அறுவை

சிகிச்சைக்கும் தயாராகி.... அவன் நண்பர்கள் யாவருக்கும் தொலை பேசி, சிரித்து,

இன்னும் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு எல்லோருடனும் பேசுகிறேன் என்று

சொல்லி உள்ளே போன திவாகர்..

மயக்க மருந்து கொடுக்கும் போதே....என்ன ஆச்சு என்று தெரியலை... மற்றும்

சில டாக்டர்கள் வரவழைக்கப்பட்டனர் ... திவாகருக்கு ' வெண்டிலேட்டர்' மூலம்

சுவாசம்.... க்ளுக்கோஸ்.. பாட்டில்கள்....

நாட்கள், வாரங்கள் , மாதங்கள்.....ம்.. திவாகர் ஒரு "vegetable"---- "BRAIN DEATH" ....---

எவ்வளவோ வைததி்யங்கள்... உடைந்து போன குடும்பம்... திவாகரை காதலித்த

ஈழத்து பெண்... பார்த்துக்கொண்டிருந்த வேலையை விட்டு விட்டு அவர்கள்

குடும்பத்துடனே இருந்துவிட்டாள்.. physiotherapy.. ட்யூப் மூலம் சாப்பாடு

வகையறாக்கள் etc. etc....

இன்று காலையில் இங்கு மழை.....நானும் மழைக்காக ஆஸ்பத்திரியிலுள்ள கோவில்

பக்கம் ஒதுங்கினேன்..

அங்கு..

திவாகர், சுமதி, அந்த ஈழத்து பெண்....அடையாளம் தெரியாத அளவு மாற்றம்..

மெலிந்து, கண்களில் சோகம்..

திவாகர் இருண்ட வானத்தை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான்.. ...


ஒரு wheel chair-ல் உட்கார்ந்துக்கொண்டு....31 comments:

நாமக்கல் சிபி said...

//திவாகர், சுமதி, அந்த ஈழத்து பெண்....அடையாளம் தெரியாத அளவு மாற்றம்..

மெலிந்து, கண்களில் சோகம்..

திவாகர் இருண்ட வானத்தை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான்.. ...


ஒரு wheel chair-ல் உட்கார்ந்துக்கொண்டு....
//


:(

நாமக்கல் சிபி said...

//திவாகர், சுமதி, அந்த ஈழத்து பெண்....அடையாளம் தெரியாத அளவு மாற்றம்..

மெலிந்து, கண்களில் சோகம்..

திவாகர் இருண்ட வானத்தை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான்.. ...


ஒரு wheel chair-ல் உட்கார்ந்துக்கொண்டு....
//


:(

குசும்பன் said...

"திவாகர், சுமதி, அந்த ஈழத்து பெண்....அடையாளம் தெரியாத அளவு மாற்றம்.."

சோகம் தான் பாராட்ட பட வேண்டியது அந்த ஈழத்து பெண்

PPattian said...

Pathetic! Cannot digest.

ஏன் டாக்டர் இது?

Thekkikattan|தெகா said...

அடப் பாவத்தே, டாக்டர்! அப்படி அனஸ்தீசியா கொடுக்கும் பொழுது ஒவர் டோஷ் கொடுத்ததினாலயா இது? எப்படி நடந்திருக்கும். கொடுமை.

எனக்கு போன தடவை கே.ஜி மருத்துவ மனையில் ஒரு சிறு அறுவை சிகிச்சை பண்ணிய பொழுது இந்த அனஸ்தீசியா கொடுத்தது ஒரு முறை பயம் காட்டி மறைந்தது, இப்பொழுது இதனைப் படிக்கும் பொழுது.

முத்துலெட்சுமி said...

படிக்கவே கொடுமையா இருக்கே...என்ன ஒரு சோகம்.:(

காட்டாறு said...

என்ன ஆச்சி டாக்டர்? எலும்பு முறிவுக்கு சிகிச்சை செய்யப் போனதால் ஆனதா? இல்லை தவறி விழும் போது ஏற்பட்ட தாக்கமா? விளக்கமா எழுதுங்க.

அப்படியே, நாம் ஏதாவது உதவி செய்ய முடியுமான்னும் எழுதுங்க டாக்டர்.

//திவாகரை காதலித்த ஈழத்து பெண்... பார்த்துக்கொண்டிருந்த வேலையை விட்டு விட்டு அவர்கள்
//
மனித நேயம் இன்னும் உயிரோட தான் இருக்குது.

delphine said...

சிபி..
இன்று முழுவதும் எனக்கு 2 வருடங்களுக்கு முன்பு அந்த குடும்பம் பட்ட வேதனைத்தான் நியாபகம் வந்தது.

delphine said...

ஈழத்து பெண்ணின் (தாய் கிடையாது) அப்பா கனாடா PR. திருமணம் முடிந்த பிறகு அங்கு செல்வதாக ஏற்பாடு.. ஆனால்..

delphine said...

Yes. HARI... VERY DIFFICULT EVEN FOR ME TO DIGEST.

delphine said...

தெகா.. அனெஸ்தீசியா கொடுக்கும்போது மிக கவனமாக இருக்க வேண்டும்! வேறு எங்கேஎயும் கவனம் செலுத்தகூடாது

delphine said...

ஆமா முத்து, படித்த உங்களுக்கு இப்படியிருக்கும் போது பார்த்த எனக்கு எப்படியிருக்கும்? அதுவும் அந்த குடும்பத்தை நன்றாகவே தெரியும்!

அருட்பெருங்கோ said...

சோகமும் வேதனையும் வாழ்க்கையில இருக்க வேண்டியதுதான்.... இந்த அளவுக்கா??? அந்த ஈழத்துப் பெண்ணின் நிலை... மிகவும் வேதனை... :(((

delphine said...

இல்லீங்க காட்டாறு.. மயக்க மருந்து குடுக்கும் போது சரியான அளவு ஆக்சிஜன் போகாததால்.. திவாகருக்கு ...Brain Death.
lack of Oxygen for more than three minutes will result in brain death..

கோபிநாத் said...

ஏன்ன சொல்லறது...வேதனையாக இருக்கு ;-(

\\ஈழத்து பெண்... பார்த்துக்கொண்டிருந்த வேலையை விட்டு விட்டு அவர்கள்

குடும்பத்துடனே இருந்துவிட்டாள்..\\

Great

லொடுக்கு said...

:(

J K said...

படிக்கும் போதே வேதனையா இருக்கு.

இதை முன்பே கேள்விப்பட்டிருக்கேன்...

அபி அப்பா said...

நோய் நொடி இல்லாமல் வாழ்வதே பெரிய செல்வம்:-((

துளசி கோபால் said...

கடவுளே............... ஏன் இப்படியெல்லாம் மனுஷங்களை ஆட்டிவைக்கிறென்னு
அழத்தான் முடியுது.

கஷ்டங்களைப் பார்க்கும்போதும்,எதிர்பாராத துக்கங்களை தெரிஞ்சுக்கறபோதும்,
ரொம்ப சோர்ந்து போகுது மனசும் உடலும்.

இன்னிக்கு நம்ம ஆசிஃப்பின் மனைவியின் மரணம்.(-:

ஒண்ணுமே செய்யத்தோணாமல் பித்துப் பிடிச்சமாதிரி இருக்கு.

மங்கை said...

ஹ்ம்ம்ம்...டாக்டரம்மா...நானும் இது மாதிரி ஒரு கேஸ் பார்த்து இருக்கேன்.,, மெடிக்கல் நெக்லிஜென்ஸ்
கொடுமை...அந்தப் பெண்ணை பாராட்ட வார்த்தைகள் இல்லை...

Sen said...

very tragic..
hope a miracle happen
and the family gets
the happiness back.

delphine said...

அருட்பெருங்கோ,கோபி, லொடுக்கு ,ஜேகே..
நாம இது மாதிரி கேஸ்கள கேட்டிருக்கலாம்... ஆனால் இந்த ஈழத்து பெண் மாதிரி யாரையும் பார்க்க முடியாதுன்னே நினைக்கிறேன்....

நளாயினி said...

மனசு கனத்திடுச்சு.

நளாயினி said...

உண்மை இல்லைத்தானே. நீங்கள் பொய்தானே சொல்லுறீங்கள். மனசே கனத்திடுச்சு. அது தான் திரும்ப கேட்டேன்.

delphine said...

நளாயினி..
உண்மையா நடந்ததுங்க..
நம்ப முடியலைத்தான்.:(

பங்காளி... said...

சமயங்களில் நிதர்சனங்களை ஜீரணித்துக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது....

ம்ம்ம்ம்ம்

delphine said...

நிதர்சனங்கள்!
பங்காளி இதையெல்லாம் பார்த்து பார்த்து மனசு கனமாகிவிடுகிறது.

பங்காளி... said...

//இதையெல்லாம் பார்த்து பார்த்து மனசு கனமாகிவிடுகிறது.//

டாக்டர்...

இந்த இடத்தில்தான் ஸென் உங்களின் உதவிக்கு வருகிறது....

ஸென் என்பதன் ஆரம்பமே 'இங்கே இப்போது இருப்பது'...இது பழக்கமாகிவிட்டால் எங்கேயும் எப்போதும் எல்லாமும் இனையும்.

அதாவது உங்களின் நாற்காலியில் நீங்கள் உட்கார்வதும், நாற்காலி உங்களை இருத்திக் கொள்வதும் ஒன்றேயாகும்.அதன் பின் வாழ்க்கை தொடர்ந்தாலும் அர்த்தங்கள் ஆழமாகும்.அனுபவங்கள் முழுதாகும்.


இதை பழகிப் பாருங்கள் டாக்டர்...

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வருத்தமாகத் தான் இருக்கிறது.
ஆனால் மருத்துவர் வேண்டுமென்று செய்திருக்க மாட்டார்.ஆயிரத்தில் ஒன்று போலும்.இவற்றை அறிந்தாவது, இயன்றவரை எல்லோருடனும் இனிமையுடன் வாழப் பழகுவோம்.
அந்த ஈழப் பெண்-பிறந்த நாட்டுக்கும்
எமக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

.:: மை ஃபிரண்ட் ::. said...

:-((((

இந்த மாதிரி பல கதைகளை நானும் கேட்டிருக்கிறேன். சாதாரண சீக்குன்னு சொல்லி அட்மிட் ஆகி, பிறகு குணமே படுத்த முடியாத பிரச்சனைகளுடான் திரும்புகின்றனர் சிலர். அதில் மிகவும் கொடுமையோ கொடுமை என்னவென்றால் சிலரின் உயிரும் பறிக்கப்படுகின்றது. :-(

பங்காளி... said...

ஹை...புது டெம்ப்ளேட்...நல்லாருக்கு