Friday, July 20, 2007

இது ஒரு வீக் என்ட் பதிவு..///

இது ஒரு வீக் என்ட் பதிவு..
ஒரு டாக்டர்.. PROFESSOR... .. ஒரு நாளைக்கு ஐந்து பேருக்கு மேல் பார்க்க மாட்டார். பார்க்கவும் முடியாது. ஏனெனில் அவருக்கு நேரமே இருக்காது. neuro சர்ஜரியில் மிகவும் பேர் போனவர். COMPUTER ASSISTED SURGERY-ல்... மண்டைக்குள் ஓட்டை போட்டு செய்கிற SURGERY எல்லாம் அவருக்கு ஒரு சில மணி நேரம் தான்.
மாலை ஐந்து மணி கன்சல்டேஷனுக்கு 4.59 க்கு வருவார். அதற்கு முன் IN PATIENT- போய் பார்த்துவிடுவார். ஆனால் பொறுமைக் கொஞ்சம் கம்மி தான். குடு குடுப்பாண்டி போல் ஓடிக்கொண்டே இருப்பார்.
இப்படித்தான்.....
..ஒரு நாள் அவருக்கு ஐந்துபேர் காத்துக்கொண்டிருந்தனர்.
அவர் SECRETARY அவரிடம் CASE FOLDERS கொண்டு கொடுத்துவிட்டு PATIENTS பற்றி ஒரு சின்ன முன்னோட்டம் கொடுத்தாள்.
முதல் பேஷண்ட் பார்த்தார். என்ன நினைத்தாரோ தெரியலை.. நேரே படியேறி..(லிப்ட் உபயோகிக்க மாட்டர்.) மூன்றாவது மாடியிலுள்ள ஒரு பேஷண்டைப் பார்த்துவிட்டு திரும்பி CONSULTATION- க்கு வந்தார். அடுத்த பேஷண்ட்...முடிந்தது.... மூன்றாவது பேஷண்டை உட்கார சொன்னார் பரிசோதித்தார். அவர் பாட்டுக்கு காரில் ஏறி போய் விட்டார். கவுச்சில் படுத்திருந்த பேஷண்ட் ரொம்ப நேரமாக டாக்டரை காணாததும் secretary-டம் டாக்டர் எங்கே என அவளுக்கு ஒன்றும் புரியலை.... அவள் உடனே மொபைலில் டாக்டரை விழித்தாள்.. டாக்டர் வீட்டுக்கு மறந்து போயே விட்டார். அதன் பிறகு அவர் திரும்பி வந்து patient பார்த்தது அடுத்த விஷயம்.. ஆனால் இங்கு என்ன பிரச்னை என்றால் வாரத்தில் ஒரு தடவையாவது அவர் இது மாதிரி செய்யவே, நம்ப SECRETARY உடனே அவர் எங்கு சென்றாலும் போனில் கூப்பிட்டு LOCATION கேட்க ஆரம்பித்தாள். இப்படித்தான் இரண்டு வாரத்திற்கு முன்பு டாக்டர் இப்படி பண்ணவே, அவளும் LOCATION கேட்க அவர் வீட்டம்மா , அவளிடம் 'என்ன என் கணவரை வேவு பார்க்கிறாயா?' என்று கத்த இவளுக்கு ஒன்றுமே புரியலை. இத்தனைக்கும் நமது மருத்துவருக்கு 60-க்கு மேல் வயது... வீட்டுக்கு வீடு வாசற்படித்தான்..

சரி வந்தது வந்துட்டீங்க இங்கேயும் கொஞ்சம் எட்டி பாருங்க.. எனக்கு பிடித்த ஒரு ஆசிரியர்... எழுதியதை...
have a safe week end..
safe driving...

22 comments:

அபி அப்பா said...

நல்ல டாக்டர் தான்! இவர வச்சி பல காமடி பதிவு போடலாம் போல இருக்கே!

தருமி said...

இந்த absent mindedness பற்றி இரு கேள்விகள்:
1. மற்ற திறனுள்ளவர்களும் இந்த மறதியோடு இருப்பது மூளையின் ஒரு பகுதியின் குறைபாடுதானா?

2. ஏன் இந்த absent mindedness எப்போதும் professors-களோடு தொடர்பு படுத்தப் படுகின்றன? :(

குசும்பன் said...

பல வேலைகள் செய்வதால் மறதியா, இல்லை பொறுப்பு இல்லாததால் மறதியா, எனக்கு காலையி சாப்பிட்டோமோ என்பது மறந்து விடும். யார் போண் நம்பரும் எனக்கு நினைவில் இருக்காது...இதுக்கு எல்லாம் என்ன காரணம்

மங்கை said...

//ஏன் இந்த absent mindedness எப்போதும் professors-களோடு தொடர்பு படுத்தப் படுகின்றன? :( //

அதானே...அது ஏனுங்க டாக்டரம்மா அப்படி?

அடுத்த ஆரய்ச்சிக்கு தலைப்பு ரெடி ஆயுடுச்சு

அபி அப்பா said...

தருமி சார்!

பேராசிரியர் - ஞாபகமறதி ரெட்டை குழந்தைகள்!(சார், நீங்க கூட அப்படின்னு ஒரு பட்சி சொல்லுதே):-))

துளசி கோபால் said...

நல்ல வேடிக்கை போங்க:-)))))

எல்லாரும் கேட்ட கேள்வி ரிப்பீட்டே(ய்)

ப்ரொஃபஸருக்கும் மறதிக்கும் அப்படி என்ன லிங் இருக்கு?

இளவஞ்சி said...

இந்த பிரச்சனை ஐன்ஸ்டீனுக்கே இருந்ததுன்னு எங்கனயோ படிச்சிருக்கேன் :)


அம்பளைங்களுக்கு ஒரு நேரத்துல மூளைல ஒரு த்ரெட்டுதான் மும்முரமா வேலை செய்யும். மத்ததெல்லாம் அனிச்சையாக நடக்கறதுதான். நாங்க எல்லாம் ரொம்ப கவனமா ஏதாவது செஞ்சிக்கிட்டு இருக்கும்போது ஏதாவது கேட்டா திணறிடுவோம். ஆனா பொம்பளையாளுங்க அப்படி இல்லை. இயற்கையிலயே அஷ்டாவதனிங்க...

இது ஏங்க?

delphine said...

அபி அப்பா.. அதெல்லாம் உங்களால்தான் முடியும்.. and also Kanmani. எனக்கு காமெடி அதெல்லாம் வராது..

delphine said...

தருமி said..
ஏன் இந்த absent mindedness எப்போதும் professors-களோடு தொடர்பு படுத்தப் படுகின்றன? :( ///

பேராசிரியர்தான் பதில் சொல்ல வேண்டும்.
:(

delphine said...

குசும்பன் said... @@
மறதியானது எல்லொறுக்கும் பொதுவானது... ஆனால் .. professor களுக்கு அதிகம் என்று கேள்விப்பட்டிருக்கேன்...

delphine said...

மங்கை & துளசி ...வரவுக்கு நன்றி.. உங்கள் கேள்விக்கு என்ன பதில்? யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்!

delphine said...

இளவஞ்சி..
தெகா தான் இப்போ ரொம்ப சீரியஸாக ஆராய்ச்சியில் இறங்கியிருக்கிறார்.. அவரே ஆராய்ச்சி பண்ணி சொல்லட்டும்..

Thekkikattan|தெகா said...

absent mindedness - ஒரே நேரத்தில் பல விசயங்களை ஓட விடுவது. அதுவும் பயங்கர பிசியாக இருப்பவர்கள்.

டாக்டர் நமது வசந்தன் சாரின் ப்ளாக் பக்க லிங்கை கொடுத்து அசத்தி விட்டீங்க. இங்கு நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

அதற்கும் சேர்த்தே நன்றி.

Thekkikattan|தெகா said...

தருமி,

1. மற்ற திறனுள்ளவர்களும் இந்த மறதியோடு இருப்பது மூளையின் ஒரு பகுதியின் குறைபாடுதானா? //

அது என்ன திறனுள்ளவர்களுக்கு மட்டும் ஏன் எல்லா மன சம்பந்தப்பட்ட disorder உள்ளவர்களுக்கும் இந்த மறதி என்பது ஒரு பொதுவான விசயமே :-D

2. ஏன் இந்த absent mindedness எப்போதும் professors-களோடு தொடர்பு படுத்தப் படுகின்றன? :( //

அதுவா, அரைச்ச மாவே அரைக்கிறங்கள்லே சில profs அவங்களுக்கு இந்த ப்ரச்சினை இருந்திருக்காதே. புதுசு, புதுசா ஏதாவது பாடம் எடுக்கும் பொழுது சொல்லணுமின்னு நினைக்கிறவங்களுக்கு வேணா இந்த நீங்க சொன்ன factor ஒத்துவருமின்னு நினைக்கிறேன்.

நீங்க புதுசா படிச்ச விசயத்தை நினைவு கூர்வது நிமித்தமாக சதா அதனைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது (அடுத்த வகுப்புக்காக) உங்கட ஹாண்ட் கர்சீப்பையோ, அல்லது மூக்கு கண்ணாடியையோ மறந்து வைச்சுட்டுப் போயிடுவீங்க... பசங்க பின்னாலேயே ஓடிவந்து கொடுக்கணும்... ;-)

பி.கு: இதில் வாத்தியார் ஏதாவது பசங்க ஏடாகூடமாக கேள்வி கேட்டு embarass பண்ணியிருந்தா அது நிமித்தமாக நடக்கும் ஞாபக மறதி இதில் அடங்காது :-)))

தருமி said...

ஹலோ .. இங்க யாரு ..? நான் என்னமோ ஒரு கேள்வி கேட்டேனே .. மறந்தே போச்சே.. யாராவது கொஞ்சம் நினைவுபடுத்துங்களேன் .. ப்ளீஸ்..

:(

கோபிநாத் said...

\\'என்ன என் கணவரை வேவு பார்க்கிறாயா?' என்று கத்த இவளுக்கு ஒன்றுமே புரியலை. இத்தனைக்கும் நமது மருத்துவருக்கு 60-க்கு மேல் வயது... வீட்டுக்கு வீடு வாசற்படித்தான்..\\

:))))))))

என்ன கொடுமை சார் இது ;)))

Anonymous said...

இந்த மறதி பொதுவா ஆண்களுக்கு மட்டும் அதிகம் வருமாமே!!!

delphine said...

தெகா.. அடுத்த ஆராய்ச்சியா..?

delphine said...

ஹலோ .. இங்க யாரு ..? நான் என்னமோ ஒரு கேள்வி கேட்டேனே .. மறந்தே போச்சே.. யாராவது கொஞ்சம் நினைவுபடுத்துங்களேன் .. ப்ளீஸ்..

:(
தருமி சார்.. இது ஞாபக மறதியில்லை..deliberately forgetting things..:(

delphine said...

கோபி. சின்ன அம்மிணி...
வரவுக்கு நன்றி..

கண்மணி said...

டெல்பின் இந்த மாதிரி ஆப்சென்ட் மைண்டட் ஆம்பளைங்க அதிகம் [நோ கேர்ல்ஸ்] எனக்குத் தெரிந்து ரெண்டு புரஃபெசர்ஸ் மனவியோட சினிமாவுக்கு போயிட்டு வரும்போது [அதுவும் இண்டெர் வெல்ல படம் முடிஞ்சிடுச்சின்னு]தனியா வந்துட்டாங்க.
ரொம்ப அறிவாளியா இருந்தா இப்படித்தானோ;)

வவ்வால் said...

இதுல வீக் என்ட் எங்கே இருந்து வந்துச்சு, டொக் , டப்..ஷ்க் நு சத்தம் வரவே இலலியே இந்த பதிவுல ?