Tuesday, July 3, 2007

அம்மணிகளுக்கு!!!!

1980 -ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த ஒரு incident.

அப்பொழுதுதான் சென்னையிலிருந்து வட ஆற்காடு மாவட்டத்திலுள்ள ஒரு சிறிய நகரத்திற்கு மாற்றலாகி போயிருந்தோம்...நல்ல வேளை! ஜூலை மாதத்தில் மாற்றலாகியிருந்ததால், ஸ்கூல் அட்மிஷன் கிடைத்தது. எனக்கும் அங்குள்ள ஒரு NURSING HOME-ல் வேலை கிடைத்தது.(we were very new to the town).

நக்ஸலைட் தீவிரவாதிகள் கொஞ்சம் ஊடுருவியிருந்த நேரம். காட்டில் ஒரு 20 நாட்கள் கேம்ப் என்று போய்விட்டார். அந்த நாட்களில் இப்ப மாதிரி சரியான கம்யூனிகேஷன் வசதி கிடையாது. 'ட்ரங்க்' புக் பண்ணி மணிக்கணக்காக காத்திருக்க வேண்டியிருக்கும். எப்பொழுது வீட்டிற்கு வருவார் என்பதெல்லாம் தெரியாது.(இதனால் குழந்தைகளை சமாளிப்பது பெருங்கஷ்டம்..அப்பா எப்போ வருவாங்க என்ற கேள்விக்கு, தேய்ந்து போன கிராம போன் ரெக்கார்ட் மாதிரி ஒரே பதில் சொல்ல வேண்டியிருக்கும்)
ஒரு நாள் மாலை 5 மணியளவில் 45 வயது மதிக்கதக்க ஒருத்தர் எங்கள் வீட்டிற்கு வந்து, எனது அத்தையிடம் என்னைப் பார்க்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.. அத்தையும் ஏதோ பேஷண்ட் என்று நினைத்து என்னைக் கூப்பிட்டார்கள். ' சார், duty க்கு போன இடத்தில் அடிபட்டு, ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்னியுள்ளார்கள்' என்று பதட்டமாக சொன்னார். இதைக்கேட்ட என் அத்தை ' என்ன ' என்று சத்தம். என்னுடைய மனதும் கொஞ்சம் பதட்டம் அடைந்தது. அவர் விலாவாரியாக எனக்கு சொல்ல ஆரம்பித்தார். அந்த காட்டிற்குள் செல்வது கஷ்டம். அதனால் அவரே என்னை அழைத்துச் செல்வதாக கூறினார். மனதில் கவலை, சந்தேகம், ஒரு உறுத்தல . 'அப்படியும் ஆகியுருக்குமோ?'. தொலைபேசி வசதி வீட்டில் இல்லை.
என் கணவ்ர் எப்பொழுது வெளியூர் சென்றாலும், போய் சேர்ந்ததும் தகவல் சொல்ல சொல்லுவேன் . அவர், ' எனக்கு ஏதாவது ஆனால் முதன் முதலில் உனக்குத்தான் தகவல் வரும். எந்த தகவலும் வரவில்லை என்றால் நான் சுகமாக இருக்கிறேன் என்று நினைத்துக் கொள்' என்பார். இது என் மனதில் வரவே, நான் பின்பக்கம் போய் மாடி ஏறி பக்கத்து வீட்டு(parapet wall) சுவரைத் தாண்டி, அவர்களிடமுள்ள தொலை பேசி மூலம், காவல் நிலயத்தை தொடர்புக்கொண்டேன். writer உடனே 'அம்மா மைக் வாட்ச் பண்ணிக் கொண்டுதான் இருக்கிறோம். எந்த அசம்பாவிதமும் கிடையாது, எதற்கும் நான் அந்த கேம்ப்க்கு போன் மூலம் தொடர்புக்கொண்டு சொல்கிறேன் என்று நான் பேசிய தொலைபேசியின் நம்பரை வாங்கிக் கொண்டார். என்னுடைய பதட்டம் அவருக்கு நியாயமாக தோன்றிருக்கிறது.
திரும்பி போலிஸ் ஸ்டேஷனிலிருந்து பதில் வராமல் போகவே நான் செய்வது தெரியாமல் வீட்டிற்குள் வந்தேன். . இத்ற்கிடையில் என் அத்தை வந்த மகாரஜனுக்கு காபிக்கொடுத்து உபசரணை. மருமகளை பத்திரமாக அழைத்துக்கொண்டு செல்லும்படி அன்புக் கட்டளை வேறு.
ஒரு சில நிமிடத்தில் ஒரு போலிஸ் ஜீப்பில், இன்ஸ்பெக்டர் சில காண்ஸ்டபிள்கள்....... வந்திருந்த நபர் ஒரு மாதிரியாகிவிட்டார். முதன் முதலில் சாதரண தொனியில் விசாரணை. அதன் பிறகு, காவல் துறை பாணி விசாரணை..
அப்புறம்தான் தெரிந்தது உண்மை...... 3 வருடங்களுக்கு முன்பு ஒரு 'திருட்டுக் கேசில் என் கணவ்ர் அவருக்கு 2 வருடம் தண்டனை வாங்கிக் கொடுத்ததை மனதில் வைத்து பழிவாங்க துடித்திருக்கிறார். நாங்கள் தனியாக இருந்த நேரம் பார்த்து குடும்பத்திற்கு ஏதாவது கஷ்டம் கொடுக்கலாம் என்று நினைத்து வந்திருக்கிறார்..நேற்று என் பக்கத்துவீட்டு பெண்மணியிடம் இப்படித்தான் ஒருத்தன் ' GAS LEAK' செக் பண்ணுகிறேன் என்று பணம் பறிக்க முயன்று நல்ல தரும அடி வாங்கி சென்றான்.

நாம் தனியாக வீட்டில் இருக்கும் போது தெரியாதவர்கள் யார் வந்தாலும் நாம் வீட்டிற்குள் விடக்கூடது எனபதைச் சொல்லத்தான் இதை எழுதிருக்கிறேன். வீட்டிலிருக்கும் அம்மணிகளும், தங்க மணிகளும் ஜாக்கிரதையாக இருங்கள். grill gate வழியாக பேசி அனுப்பிவிடுங்கள். இப்பொழுதுதான் cell phone வசதி உள்ளதே! யார், என்னவென்று confirm பண்ணிக்கொள்ளலாமே!

34 comments:

Anonymous said...

Same applies in internet communications like Chat/Mail/Blog etc. Need to be extra careful before giving out any personel details.

வல்லிசிம்ஹன் said...

டெல்ஃபின், எத்தனை பெரிய ஆபத்திலிருந்து தப்பி இருக்கிறீர்கள்...

சமயோசிதமா செயல் பட்டதால் நல்லதாப்போச்சு. அப்போதெல்லாம் யாரையும் சீக்கிரம் சந்தேகப்படமாட்டோமெ... போலீஸ்காரர் பொண்டாட்டின்னா ச்சும்மாவா. பலே பலே.

முத்துகுமரன் said...

பயனுள்ள பதிவு,

எப்போதும் சமயோசிதமாக செயல்பட்டால் எந்தவிதமான பிரச்சனைகளையும் எதிர்கொள்ள இயலும். கொஞ்சம் தன்னம்பிக்கையும் கூட வேண்டும்.

அனானி சொன்னதும் கவனத்தில் கொள்ளத்தக்கது

குட்டிபிசாசு said...

@ டெல்பின் அம்மா,

உங்களோட இடுகை பார்க்க மிக்க சந்தோசம்.

உங்களுக்கு நடந்த சம்பவம் போல நான் நிறைய கேள்விபட்டு இருக்கேன். தனியாக இருக்கும் போது பெண்களும், குழந்தைகளும் அன்னியரிடம் சற்று கவனமாக இருப்பது அவசியம்.

வாழ்த்துக்கள்!!

அபி அப்பா said...

நான் முதல் கெமெண்ட் போட எல்லாம் தயாராகிகிட்டு இருக்கும் போது மீட்டிங் கால் சரின்னு வந்து பார்த்தா 2 கமெந்த்! சரி விடுங்க அடுத்த பதிவிலே பார்த்துப்போம்!

துளசி கோபால் said...

//போலீஸ்காரர் பொண்டாட்டின்னா ச்சும்மாவா. பலே பலே.//

ரிப்பீட்டேய்............

அபி அப்பா said...

பயன்படும் பதிவு எல்லாருக்குமே! அதுவும் இப்போ உழைக்காம பணக்காரனாகனும்ன்னு ஆசை எல்லாருக்கும் வந்துடுத்து. (ஓரே பாட்டுல பணக்காரனாகும் வழக்கத்தை ஒழிங்கப்பா சினிமாவில்) நல்ல பதிவு டாக்டர்!!

காட்டாறு said...

டெல்ஃபின் அம்மா, இலையிதிர்காலம் ஆரம்பித்த முதல் கூகிள் ரீடர் மூலம் வாசித்திருந்தாலும், இது தான் என் முதல் மறுமொழி. தமிழில் பதிவு ஆரம்பித்தமைக்கு பாராட்டுக்கள். இந்த பதிவில் சொன்னது போல் பெண்கள் சமயோசிதமா செயல்பட்டால் நல்லது. யாரையும் கண்டவுடன் நம்புவது பேதமை என்றாகிவிட்டது. நல்ல பதிவு. தொடர்ந்து எழுதுங்கள்.

பங்காளி... said...

இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் நமது உள்ளுணர்வு சொல்வது சரியாக இருக்கும் என்பது என்னுடைய தனிப்பட்ட அனுபவம்.

siva gnanamji(#18100882083107547329) said...

அவசியமான தகவல்....
தனியாக வீட்டில் இருக்க நேர்பவர்கள்
[குறிப்பாக,பெண்கள் மற்றும் முதியோர்] இதை மனதில் இருத்த வேண்டும்.

முத்துலெட்சுமி said...

ம்..புத்திசாலித்தனமா நடந்துருக்கீங்க..

delphine said...

HI ANONY.
YES. WE HAVE TO BE VERY CAREFUL NOT TO LET OUT ANY OF OUR PERSONAL DETAILS.
WELL, YOU COULD HAVE WRITTEN YOUR NAME!.

delphine said...

நன்றி வல்லி. கம்யூனிகேஷன் was also a problem !!

கோபிநாத் said...

அனைவருக்கும் பயனுள்ள பதிவு ;))

கலக்குங்க ;))

நாகை சிவா said...

அவசியமான பதிவு

sam said...

//போலீஸ்காரர் பொண்டாட்டின்னா ச்சும்மாவா. பலே பலே.//

ரிப்பீட்டே!

ஜெஸிலா said...

சென்னையில் தெரியாதவங்க வந்தா நாங்க கதவையும் திறப்பதில்லை. துபாயில் இதுவரை திருட்டு பயமில்லை. ஆனால் அங்கங்க நடக்கதான் செய்கிறது.

delphine said...

ஹாய் முத்துகுமரன்.. தன் நம்பிக்கை and presence of mind....

delphine said...

hi! குட்டி பிசாசு எங்கே காணோமே என்று பார்த்தேன்.

delphine said...

பயன்படும் பதிவு எல்லாருக்குமே! அதுவும் இப்போ உழைக்காம பணக்காரனாகனும்ன்னு ஆசை எல்லாருக்கும் வந்துடுத்து///
நல்ல பாயிண்ட்.

delphine said...

போலீஸ்காரர் பொண்டாட்டின்னா ////

ஆமாங்கா துளசி..

delphine said...

காட்டாறு!

யாரையும் கண்டவுடன் நம்புவது பேதமை என்றாகிவிட்டது..
கண்டவுடன் மட்டுமல்ல காணாமல் chat மட்டும் பண்ணி நம்புவதும் அதைவிட மடத்தனம்.

delphine said...

பங்காளி ,
ஆம் நம் உள்ளுணர்வும் நிறையவே சொல்லும்..right. Thank you.

delphine said...

சிவ ஜி. வருகைக்கு நன்றி.

Thekkikattan|தெகா said...

just finished reading this piece
wow, interesting just like in a movie...

btw coffee too :-))

Thekkikattan|தெகா said...

HI ANONY.
YES. WE HAVE TO BE VERY CAREFUL NOT TO LET OUT ANY OF OUR PERSONAL DETAILS.
WELL, YOU COULD HAVE WRITTEN YOUR NAME!.//

:-)))))))))))))))
u r being so funny at times
well, u cud have written ur name
:-P

it seems like he gaurds his anony status really well :-)

வைசா said...

அந்த மாதிரியான கலவரமான நிலைமையிலும் நிதானமாகச் சிந்தித்துச் செயல்பட்டிருக்கிறீர்கள். எத்தனை பேரால் இது முடிந்திருக்கும்? இந்தப் பதிவு பலரையும் சிந்திக்க வைக்கும்.

வைசா

delphine said...

முத்து லக்ஷ்மி...
புத்திசாலித்தனம்?
ஹூம்... என் முட்டாள்தனத்தையும் , எழுதுகிறேன்.
:(

delphine said...

கோபி and சிவா வருகைக்கு நன்றி.

delphine said...

//போலீஸ்காரர் பொண்டாட்டின்னா ச்சும்மாவா. பலே பலே.//

thanks Sam!

delphine said...

it seems like he gaurds his anony status really well :-)


:extra careful" தெ கா.

delphine said...

இந்தப் பதிவு பலரையும் சிந்திக்க வைக்கும்.///
நன்றி வைசா. முதல் தடவையாக என் blog க்கு வர்ய்கை தந்துள்ளீர்கள். நன்றி.

குசும்பன் said...

டெல்ஃபின் அம்மா , நல்ல பத்வி, தனியாக இருப்பவர்களுக்கு உபயோகமாக இருக்கும்.

கண்மணி said...

இதைப் படித்ததும் நான் ஏமாந்த கதை ஒன்று சொல்லத் தோன்றுகிறது.
படித்த வேலை பார்க்கும் பெண்ணாக இருந்தாலும் சாமி பேரைக் கேட்டு ஏமாந்தேன்.முட்டாள் என்று நினைப்பார்கள் என்பதால் இதுவரை சொல்லலை.ஆனால் நம் அனுபவம் மற்றவர்க்குப் பாடமாகும் என்றால் சொல்லலாம்.என் அடுத்த பதிவில் சொல்கிறேன்.