Sunday, July 22, 2007

தெரிந்துக்கொள்ளுங்கள்-3

நான்கு நாட்களுக்கு முன்பு நம் blogger friend - டமிருந்து எனக்கு ஒரு மெயில்

வந்தது. அதில் அவருடைய தமிழ் ஆசிரியரை ஆஸ்பத்திரியில்
சேர்த்திருப்பதாகவும் , அவரை எப்படியாவது காப்பாற்றிக்கொடுக்க வேண்டும்
என்றும் எழுதியிருந்தார். நானும் ஆசிரியரை போய் பார்த்தேன். 69 வயதான
திரு. இராமபத்ரன் அவர்கள் , எந்த விதமான உணர்வும் இல்லாது
படுத்திருந்தார். மயிலாடுதுறையில், காலயில் குளித்துக்கொண்டிருக்கும் போது
கீழே விழுந்து அதன் பிறகு பாண்டிசேரி
போய், அங்கிருந்து சென்னைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தார். 15 நாட்களுக்கு
மேல் I.C.U.- லிருந்து அப்புறம் neuro I>C.U விற்கு மாற்றியுள்ளார்கள். இத்தனை
நாளும் வெண்டிலேட்டரிலிருந்து தற்சமயம் அதிலிருந்து wean பண்ணி,
ஆனாலும் critical stage தாண்டவில்லை. tracheostomy- பண்ணியிருந்தது.. ...
இவர் basal Ganglionic bleed என்ற நோயினால் கஷ்டப்படுகிறார்.
இதன் காரணம்...
மூளைக்கு செல்லும் இரத்தக்குழாய்கள் வெடித்ததால் வந்த கஷ்டம்.
நாம் நிறைய நேரங்களில் நமக்கு வரும் வியாதிகளை serious ஆக
எடுத்துக்கொள்வதே இல்லை. தமிழ் ஆசிரியரும் அப்படித்தான் இருந்திருக்க
வேண்டும். ஏனெனில் அவருக்கு, இரத்த அழுத்தமும், சர்க்கரை நோயும்
சேர்ந்தே இருந்திருக்கிறது. அவர் அதற்கு சரியான வைத்தியம்
பண்ணிக்கொண்டாரா என்று தெரியவில்லை. தொந்தரவுகள் எதுவும் இல்லாத
வரை நாம் சந்தோஷமாகத்தான் இருக்கிறோம்.
இந்த இரண்டு நோய்களும் ஆரம்ப காலத்தில் எந்த வித கஷ்டங்களையும்
கொடுக்காது. இரத்த அழுத்தமும், சர்க்கரை வியாதியும் பெரும்பான்மையில்
இரட்டைக்குழந்தைகள் போல். சேர்ந்தே வரும்.....

இதில் அதிக பாதிப்பு ஆண்களுக்குதான். மாரடைப்பு, மூளையிலுள்ள இரத்த
குழாய்கள் வெடிப்பது போன்ற மிக serious ஆன நோய்களால்
தாக்கபபடுகிறார்கள். just simple steps to be followed..
40 வயதுக்கு மேலான ஆண்கள் மாதம் ஒரு முறை B.P-ம் , மூன்று
மாதத்திற்கு ஒரு முறை blood sugar -ம் test பண்ணிப்பார்த்துக்கொள்ள
வேண்டும். 2 வருடத்திற்கு ஒரு முறை master health check up அவசியம் பண்ண
வேண்டும். நிறைய ஆஸ்பத்திரிகளில் இப்பொழுது இந்த வசதி உண்டு.... இது
ஒரு package. தேவையான எல்லா டெஸ்ட்களும் இதில் அடக்கம். சாப்பாட்டில்
கொஞ்சம் கட்டுப்பாடோடு இருப்பது மிக அவசியம். atleast 20 minutes of brisk
walking is necessary.
திரு ராம பத்திரனுடைய சிகிச்சைக்கான நிறைய செலவுகளை அவரது
மாணவர்கள் ஏற்றுக்கொண்டிருப்பது உண்மையிலே பாராட்டுக்குறிய
விஷயம்....
அபிஅப்பா & சீமாச்சு .... உங்களுக்காக .....அவர் நிச்சயம் சீக்கிரமாக
குணமடைவார் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு..

13 comments:

மின்னுது மின்னல் said...

siikkiram kunamataiya piraaththikkireen

துளசி கோபால் said...

அடடா.............. இப்படியா ஆச்சு?

ஆசிரியர் நலம்பெற ஆண்டவனை வேண்டுகின்றோம்.

இவர்தான் அனுமன்மாலை என்ற துதியை எழுதுனவர் இல்லையா?

ஏங்க டெல்பீன்,

பலசமயங்களில் 'முதியவர்கள் கீழே விழுந்துட்டாங்க. அதனால் ---- சம்பவிச்சது'ன்னு
கேள்விப்படறோமே. இது வயசானதால் எலும்புங்க பலமில்லாது போறதாலே
சம்பவிக்குதா?

கோபிநாத் said...

\\உண்மையிலே பாராட்டுக்குறிய விஷயம்...\\

அந்த மாணவர்களுக்கு என் பாராட்டுகள்...ஆசிரியர் நலம் பெற இறைவனை பிரத்திக்கிறேன்.

மங்கை said...

விரைவில் ஐயா குணமடைய ஆண்டவனை வேண்டுகிறேன்..

டாக்டரம்மா...ஒரு நோயைப் பற்றி சும்மா சொல்வதைவிட இது மாதிரி பாதிப்புக்குள்ளானவுங்க வரும்போது, அந்த பாதிப்புக்கான காரணத்தையும். தடுக்கும் விதங்களையும் எடுத்து சொன்னால் நம் நோக்கம் எளிதாக நிறைவேறும்.... தொடர்ந்து இது மாதிரி குடுங்க...

அபி அப்பா said...

ஆமாம் துளசி டீச்சர்! இவர் தான் அனுமன்மாலை எழுதியவர்! இவர் தமிழில் முனைவர் பட்டம் வாங்கியவர்!!

delphine said...

மின்னல்.. என்னுடைய ஆசையும் அதுதான்.

delphine said...

துளசி.. உங்களது ஒரு கேள்விக்கு அபி அப்பா பதில் சொல்லிவிட்டார். ஆசிரியர் குளிக்கும் போது வழுக்கி விழவில்லை.. மயக்கம் போட்டு விழுந்துவிட்டார். பெண்கள் கீழே விழுந்து எலும்பை உடைத்துக்கொள்வதை பற்றி ஒரு பதிவில் எழுதுகிறேன்

delphine said...

ஆமாம் கோபி...
அவருடைய மாணவர்களின் அபரீதமான அன்பைக் கண்டு வியக்கிறேன்.. அவருடைய மாணவர்கள் உதவி செய்வதை பார்த்து எனக்கு ஒரு மலைப்புத்தான். பெற்ற குழந்தைகள் கூட இந்த காலத்தில்தங்கள் பெற்றோர்களை பாரமாக நினைக்கும்போது.. ஒரு ஆசிரியருக்கு அவர்கள் செய்யும் உதவி..ஆசிரியர் - மாணவர் பந்தம்.. இதுதான்.

முத்துலெட்சுமி said...

அவர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

குசும்பன் said...

ஆசிரியர் நலம்பெற ஆண்டவனை வேண்டுகின்றேன்.

"இதில் அதிக பாதிப்பு ஆண்களுக்குதான். மாரடைப்பு, மூளையிலுள்ள இரத்த
குழாய்கள் வெடிப்பது போன்ற மிக serious ஆன நோய்களால்
தாக்கபபடுகிறார்கள்."

ஏன் அப்படி?

அபி அப்பா said...

//"இதில் அதிக பாதிப்பு ஆண்களுக்குதான். மாரடைப்பு, மூளையிலுள்ள இரத்த
குழாய்கள் வெடிப்பது போன்ற மிக serious ஆன நோய்களால்
தாக்கபபடுகிறார்கள்."//

குசும்பா! தம்/தண்னின்னு சீரழிஞ்சு போறது நம்ம இனம் தானப்பா! ஆனா ராமபத்திரன் சார் போல ஒழுக்கசீலர்கலுக்கும் இந்த கொடுமை நடப்பது மனசு கஷ்டமாக இருக்குப்பா!

Thekkikattan|தெகா said...

தமிழாசிரியர் விரைவில் குணமடைய பிரார்த்திப்போம்.

டாக், மங்கை கூறியது போலவே இது போன்ற வியாதிளின் தாக்கத்தை நன்கு அறிந்து கொள்ள நமக்கு வேண்டியவர்களுக்கு வந்திருந்தால் அதனைப் பற்றி பேசுவது போல குறிப்பிட்டு பேசினால். ஈசியாக இருக்கிறது, மனதினுள் வாங்கிக் கொள்வதற்கு.

இது போன்ற வியாதிகள் மிகவும் பொதுவானது ஐந்தில் ஒருவருக்கேனும் இந்தியாவில் பாதிக்க வாய்ப்புகள் அதிகமிருக்கிறது, இல்லையா? இருப்பினும் இதனைப் பற்றிய கவனமின்மையும், அலட்சிய போக்கும் இருக்கத்தான் செய்கிறது. என் அப்பாவிற்கும் உண்டு, ஆனால் சற்று அச்ச மூட்டும் வண்ணம் ஒரு புத்தகத்தை வாங்கி படங்களுடன் கூடியது, அவரின் கண்ணில் படுவது போல வைக்கப் பட்டிருக்கிறது. அப்பொழுதுதான் தவறாமல் (அந்த படங்கள் அச்ச மூட்டக் கூடியது...), மருத்துவரிடம் சென்று இரத்த அழுத்தம், மற்ற இத்தியாதி விசயங்களை பரிசோதித்து கட்டுக்குள் வைத்துக் கொள்வார் என்ற எண்ணத்தில்.

இந் நோரத்தில் நமது பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள், அவர்களின் உதவும் மனப்பான்மைக்கு.

உங்களுக்கு மீண்டும் நன்றி!

delphine said...

மங்கை, முத்துலட்சுமி வரவுக்கு நன்றி.