Wednesday, July 18, 2007

தெரிந்துக் கொள்ளுங்கள்-2

அட்ரியனை நான் இன்று சந்தித்தேன். என்ன அழகு அவன்.....
என்னைப்பார்த்து சிரித்தபோது......எனக்கு அவனை கட்டி பிடித்து ஒரு முத்தம் கொடுக்கவேண்டும் போல் இருந்தது..... ம்ம். கொடுத்தும் விட்டேன். ஒரே சிரிப்புத்தான் அவனுக்கு....... சந்தோஷம் எனக்கு.. பின்ன இருக்காதா...... குறு குறுவென்ற கண்களுடன்.....காந்த கண்கள்.. ..

அட்ரியனுக்க வயது இரண்டு....நேற்றுதான் பிறந்த நாள் கொண்டாடினான். அவன் அப்பாவின் கையிலிருந்து என் மீது தாவ முயற்சி செய்துக் கொண்டிருந்தான். அவன் அம்மாவிடம் ஒரு சந்தோஷம் கலந்த துக்க சிரிப்பு. இந்த சிறு குழந்தைங்கு பார்க்கும் போதெல்லம் மனதில் ஒரு.. பதட்டம். அவன் அம்மாவும் அப்பாவும் ஒரு விமான comapany -L வேலை. கை நிறைய சம்பளம். தாய் தந்தையோடு கூட்டு குடும்பம். கல கலவென்று இருந்த அந்த குடும்பத்திற்கு ஒரு பெரிய அடி..

அட்ரியனின் வலது testis -ல் ஒரு சின்ன கட்டி.. வீக்கம்.. தொட்டால் வலி கிடையாது. ஆரம்பித்து 15 நாட்கள்தான் ஆகியிருந்தது. மும்பையில் ஒரு சிறிய ஆஸ்பத்திரியில் காண்பித்திருக்கிறார்கள். 3 நாட்களுக்கு antibiotics.(தேவை இல்லாதது). அதன் பிறகு ரத்த பரிசோதனைகள்....இரண்டு மூன்று டாக்டர்களிடம் மாறி மாறி கன்சல்டேஷன்...ஒரு வழியாக ஸ்கேன் மூலம் கண்டு பிடிக்க 15 நாட்கள் ஆகிவிட்டது. அந்த சின்ன கட்டியிலிருந்து பயாப்சி செய்த போது ...... பெரிய ஷாக்.
ரேப்டோமையோ சார்கோமா (Rhabdomyosarcoma)....... ஆப்பரேஷன் மூலம் அந்த பக்கத்து testes யை எடுத்துவிட்டார்கள். தற்சமயம் CHEMO THERAPY AND RADIATION -க்கும் சென்னை வந்துள்ளார்கள்.....

..குழந்தைகளை மட்டும் தாக்கும் இது ஒரு வினோதமான கேன்சர். ஒரு பில்லியன் குழந்தைகளில் ஒன்று என்கிற விகிதம். இந்தியாவில் அதிகமாக இந்த மாதிரியான கேன்சர் ரிப்போர்ட் ஆகவில்லை. இது சதைகள், கொழுப்பான பிரதேசங்கள், ரத்தக் குழாய், மற்றும் நரம்புகளிலிருந்து, உருவாகிறது.... சிறு குழந்தைகள்தான் பாதிக்கப்படுகின்றன. கருவில் இருக்கும் பொழுதே இந்த cancer உருவாகுவதும் உண்டு.
முதலில் CHEMOTHERAPY-ம் அதன் பிறகு RADATION-ம் கொடுக்க PLAN . குழந்தை எப்படி தாக்கு பிடிக்க போகிறதோ? மிகவும் கஞ்சத்தனமான அந்த company இந்த குழந்தையின் மருத்துவ செலவை முழுவதும் ஏற்றுக் கொன்டிருப்பது ஒன்றுதான் ஆறுதலான விஷயம்..

23 comments:

குசும்பன் said...

மிகவும் கஷ்டமான ஒன்று, அவன் எதிர் காலத்தையும் இந்த பாழாய் போன சமுதாயத்தையும் நினைத்தால் மிகவும் பயமாக இருக்கிறது, எத்தனை அவமானங்களை சந்திக்க நேரிடும் அவன்..இதற்கு ஏதும் தீர்வு கிடையாதாஅ?

அபி அப்பா said...

சூப்பர் டாக்டர்! தொடரட்டும் உங்கள் சேவை!

தருமி said...

adrian.........
ச்சே.. ஒண்ணும் புரியலைங்க.. எத்தனை சோகங்கள்...

எப்படித்தான் இந்த வேலைய பார்க்கிறீங்களோ?

வசூல்ராஜாவில சொல்றது மாதிரி - can you just be mechanical with your patients? அதுவும் முடியாது ..

ஒரே குழப்பமா இருக்கு..

ஜெஸிலா said...

இந்த நோய் கருவில் உருவாக காரணமாக இருந்தது என்ன? தாய்மார்கள் எதை தவிர்க்க வேண்டும் இப்படிப்பட்ட சிக்கலை சந்திக்காமல் இருக்க?

மின்னுது மின்னல் said...

:(

இப்போதெல்லாம் வியாதிகள் நிறைய புதிதுபுதிதாக வருகிறது

சவால்கள் நிறைந்த பணி உங்களுடையது..

PPattian said...

கடவுளே... பிரார்த்திப்பதை தவிர வேறு என்ன செய்ய முடியும்..

delphine said...

குசும்பன்..
கஷ்டமான கேள்வி..வாழ்க்கை என்று ஒன்று இருக்குமே தவிர அதில் quality of life இருக்காது..

delphine said...

அபி அப்பா நன்றி..

delphine said...

பேராசிரியரே...no we cannot be mechanical with patients. they have become a part of our life..
இந்த மாதிரி குழந்தைகளை பார்க்கும் போது மிக கவலையாக உள்ளது.. அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து மன ஆறுதல் தேடிக்கொள்ள வேண்டியதுதான்..

delphine said...

இப்போதெல்லாம் வியாதிகள் நிறைய புதிதுபுதிதாக வருகிறது ///
அப்படி சொல்ல முடியாது மின்னல்.. மருத்துவத்தின் அபரீதமான வளர்ச்சி.. நிறைய வியாதிகளை கண்டுப்பிடிக்க முடிகிறது. but definitely our life style has so much changed that we are throwing ourselves into such disease conditions.

delphine said...

ஆமாங்க ஹரி.. நிச்சயமற்ற வாழ்க்கைக்கு.. கடவுளின் அனுகூலம் தேவை..

சிவபாலன் said...

டாக்டர்

படிக்கும் போதே மனம வேதனைப் படுகிறது.ம்ம்ம்

delphine said...

jesilaa.. this is due to a primitive muscle cell that multiplies in enormous amounts.. this just happens..

Thekkikattan|தெகா said...

கஷ்டமான கேள்வி..வாழ்க்கை என்று ஒன்று இருக்குமே தவிர அதில் quality of life இருக்காது..//

இது ரொம்பக் கொடுமை, டாக்டர் :-((

Thekkikattan|தெகா said...

but definitely our life style has so much changed that we are throwing ourselves into such disease conditions. //

இது கூட நிரம்ப உண்மை. வியாதிகளின் பெருக்கத்திற்கு நாமே முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும். இந்த உரங்களும், பூச்சிக் கொல்லிகளும், ஸ்டீராய்டுகளும் (இறைச்சிகென வளர்க்கும் பிராணிகளின் மீது ஏற்றீ, மீண்டும் நமக்கே) நம்மை சின்னாப் பின்னமாக்கி கொண்டிருக்கிறது.

வேதனை, வேதனை...

மங்கை said...

டாக்டரம்மா...ஹ்ம்ம் கஷ்டமா இருக்கு..
இது மாதிரி நிறைய எழுதுங்க...

காட்டாறு said...

என் தோழியின் குழந்தைக்கு பிறந்து இரண்டே நாளில் நீங்கள் சொல்லியது போலில்லாமல், வேறுவிதமான புற்று நோயிருப்பது தெரிய வந்து.... கஷ்டமான காலமது. கூடவே இருந்ததால் அந்த வேதனை புரிந்து கொள்ள முடிகிறது. தெகா சொல்வது போல் நாமும் ஒரு காரணம் என்றே என் மனதுக்கும் படுகிறது. organic மோகம் வந்து சரி செய்யுமா? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

delphine said...

thanks Siva..

கோபிநாத் said...

ச்சே...என்ன கொடுமை இதெல்லாம்....பாவம் அந்த குழந்தை.... ;(

delphine said...

தெகா.
ம்ம்ம்.. பூச்சி கொல்லிகள் நமக்கு ஒரு சவாலாகவே அமைந்துள்ளது. அடுத்தது ஸ்டீராய்டுகள். இவைகள் இரண்டும் கேன்சருக்கு காரணம் என்பது நாம் யாவரும் அறிந்ததே. அந்தகாலத்தில் செடிகளில் பூச்சி வந்தால் சாம்பல் தூவுவார்கள்.. இப்ப...இந்த பூச்சி மருந்தெல்லாம் நம்பளை சாம்பலாக்கி விடுகின்றன..

delphine said...

கோபி தம்பி & மங்கை :) வருகைக்கு நன்றி.

delphine said...

organic மோகம் //////
அமெரிக்காவில் நிறைய பார்த்தேன்...
even infant and Baby foods now come markes as "organic"... but are they really?.

காட்டாறு நீங்கள்தான் இதற்கு பதில் சொல்லவேண்டும்??/

துளசி கோபால் said...

(-: