Wednesday, July 18, 2007

தெரிந்துக்கொள்ளுங்கள்-1

குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் காலத்திலும் புற்று நோய் வரும் வாய்ப்பு உண்டு.( பால் கொடுப்பதால் அல்ல) . குழந்தைக்கு தாய் பால் கொடுக்கும் ,போது மார்பில் கட்டி வந்தால் உடனே பரிசோதனைகளுக்கு உட்பட வேண்டும். 'பால் கட்டி' என்றோ, அல்லது பால் கொடுப்பதை நிறுத்தினால் சரியாகி விடும் என்று அஜாக்கிரதையாக இருக்க கூடாது. மேம்மோக்ராம் செய்வது உடனே அவசியமாகிறது. மேம்மோக்ராம்க்கு செல்லும் முன் breast pump மூலமாக மார்பிலிருந்து பாலை வெளியேற்றி விட வேண்டும். அப்படி செய்தால்தான் மேம்மோக்ராம் ரிசல்ட் சரியாக இருக்கும். மேம்மோக்ரமும் (MAMMOGRAM), மார்பு சோனோக்ரமும் (SONOGRAM) செய்யும் போது 100% சரியான ரிசல்ட் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது. 10% முதல் 15% வரை தவறான ரிசல்ட் கிடைக்க வாய்ப்புண்டு. ஆகவே பயாப்சி பண்ணுவது அவசியாமாகிறது. FINE NEEDLE BIOPSY செய்து பார்க்கலாம். ஒரு சிறிய ஊசியை உள்ளே செலுத்தி கட்டி அல்லது வீக்கத்திலிருந்து கொஞ்சம் செல்களை (cells) எடுத்து மைக்ரோஸ்கோப் மூலம் பரிசோதித்து பார்க்க படுகிறது.
இது வலியில்லாத ஒரு சின்ன PROCEDURE USUALY DONE AS AN OUT PATIENT.

பாலூட்டும் சமயங்களில் தய்மாருக்கு வரும் ஏனைய பிரச்னைகள்.

1) போதிய அளவு பால் இல்லாதது.

2 ) மார்பின் காம்புகள் புண்ணாகிவிடுவது.

3) மார்பு வீங்குவது.

4) மார்பிலிருந்து இரத்தம் அல்லது சீழ் வடிதல்.

5 )தட்டையான காம்புகள்.

22 comments:

அபி அப்பா said...

ம்

குட்டிபிசாசு said...

டெல்பின் அம்மா,

மிகவும் பயனுள்ள தகவல்கள். பதிவு போட உங்களிடம் நிறைய தகவல்கள் இருக்கு, ஆனால் உங்களுக்கு நேரம் தான் கிடைப்பதில்லை. எங்களுக்கு நேரம் ஓரளவு இருக்கிறது, தகவலுக்கு தான் திண்டாட்டம். (அதனாலதான் எல்லாம் கவுஜ, மொக்கைபதிவு.)

தங்கள் சேவை தமிழ்மணத்திற்குத் தேவை.

செந்தழல் ரவி said...

டெல்பின் அக்கா

நல்ல பதிவு...பெண்களுக்கு உருப்புடியான தகவல்கள்...நிறைய எழுதுங்க !!!

முத்துலெட்சுமி said...

நல்ல பதிவு..

என் பெரியம்மா இதுபோன்றதொரு மார்பகப்புற்றுநோயால் இறந்துபோனார்கள்.கட்டியைமுதலில்
வெளியே சொல்ல ப்பயம்..வெட்கம்.
பின்னால் ப்ரச்சனை தர ஆரம்பித்த பின் ஓடி பிரயோஜமில்லாமல் போனது.
:(

delphine said...

'ம்' ???

delphine said...

ஹாய் குட்டி....'

ம்ம்ம்.. நேரம்..நம்பளா பார்த்து உண்டாக்கிக் கொள்வதுதானே!
உங்கள் மொக்கை பதிவுகள் வாய்விட்டு சிரிக்கும் படியாகத்தானே இருக்கிறது...

மங்கை said...

நல்ல பதிவு டாக்டரம்மா..

எங்க வீட்லேயும் இந்த ஹிஸ்ட்ரி இருக்கு..ஹ்ம்ம்ம்

இன்னும் இது மாதிரி நிறைய எழுதுங்க

Thekkikattan|தெகா said...

இந்தியாவில் இது போன்று நிறைய கேசுகள் வெளியே சொல்லாமலேயே காலம் கடந்து செல்வதால் சிகிச்சை கூட பயனளிக்காமல் போயி விடுகிறது.

தவறாமல் அவ்வப்பொழுது தன் விரல்களைப் பயன் படுத்தி அது போன்ற ஏதாவது கட்டிகள் தென்படுகிறதா என்று உணர்ந்து பார்த்துக் கொள்வதும் ஆரம்பக் கால கட்டிகளை கண்டுபிடிக்க ஏதுவாக இருப்பதாக நான் படித்தவைகளிலிருந்து தெரிந்து கொண்டேன். வீட்டிலும் சொல்லி வைத்ததுண்டு.

டாக்டர் நீங்க வந்தது உண்மையிலேயே நிறைய விழிப்புணர்வேற்ற என்பதை அடித்து சொல்லி வருகிறீர்கள்...

நன்றி...

delphine said...

ரவி... என்னது ஒரே போடு அக்கான்னு...ம்ம். ஓகே.
வரவுக்கு நன்றி..

delphine said...

முத்துலெட்சுமி..
இந்த பெண்களே இப்படித்தான். மறைத்து வைத்து அதன் பிறகு அவர்கள் படும் வேதனை..

delphine said...

குடும்பத்தில் ஒருத்தர் கஷ்டப்படுவதை பார்க்கிறேன் மங்கை..

delphine said...

வாங்க வாங்க தெகா..
35 வயதுக்கு மேலுள்ளா எல்லா பெண் மணிகளும் தங்களை பரிசோதித்துக் கொள்ளவேண்டும். mammogram is very necessary whenever they do a master health check up. that is once in two years atleast...
working here challenges my morale...

கோபிநாத் said...

\\குட்டிபிசாசு said...
டெல்பின் அம்மா,

மிகவும் பயனுள்ள தகவல்கள். பதிவு போட உங்களிடம் நிறைய தகவல்கள் இருக்கு, ஆனால் உங்களுக்கு நேரம் தான் கிடைப்பதில்லை. எங்களுக்கு நேரம் ஓரளவு இருக்கிறது, தகவலுக்கு தான் திண்டாட்டம். (அதனாலதான் எல்லாம் கவுஜ, மொக்கைபதிவு.)

தங்கள் சேவை தமிழ்மணத்திற்குத் தேவை.\\

ரீப்பிட்டேய் ;)

delphine said...

கோபி...


ரீப்பிட்டேய் ;)

காட்டாறு said...

பயனுள்ள பதிவு டெல்ஃபின் அம்மா. 35 அல்லது 40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் கண்டிப்பாக mammogram செய்ய வேண்டுமென்ற கட்டாயம் அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ளது. நம்ம நாட்டிலும் awareness வந்தால் நன்றாக இருக்கும். முத்து சொன்னது போல்.. பல பேர் வெட்கத்தில் சொல்லாம மறச்சி பின் கஷ்டப்படுறாங்க.

வடுவூர் குமார் said...

இங்கு (சிங்கையில்) கொஞ்ச நாட்களுக்கு முன்பு கூட மாதர்கள் மெமொகிராம் செய்து கொள்ளவேண்டும் என்று டிவி, ரேடியா என்று எதை திறந்தாலும் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.அதற்காக மொபைல் பஸ் எல்லாம் வீட்டுக்கு பக்கத்தில் வந்தது.
இலையுதிர்காலம்-- ஒவ்வொரு இலையாக(பதிவாக) விழட்டும்.:-))

delphine said...

நன்றி காட்டாறு..

இந்தியாவிலும் அந்த awareness வந்துவிட்டது. நிறைய தொண்டு நிறுவ னங்கள் இப்பொழுது நிறைய free camp நடத்துகின்றனர். இது ஒரு நல்ல விஷயம் தானே!

delphine said...

குமார்.. வாழ்த்துக்களுக்கு நன்றி..i hope i could come up to your expectation in writing some and good useful things.

மா சிவகுமார் said...

தெளிவாக சுருக்கமாக சொன்ன பாணிக்கு நன்றி. இன்னும் இது போன்ற பலனுள்ள பல தகவல்களை எதிர்பார்த்து,

அன்புடன்,
மா சிவகுமார்

பத்மா அர்விந்த் said...

பதிவுக்கு மிக்க நன்றி.
மார்ப்க புற்றுநோய் குறித்து தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு கையேடு தயாரித்து, அது தமிழ்மண நிர்வாக தளத்தில் இருக்கிறது. முடியுமானால், பதியெடுத்து உங்கள் நோயாளிகளுக்கு வழங்கலாம். NCi புத்த்கத்தைஇயும் இன்னபிற நூல்களையும் அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது.

delphine said...

thanks Padma.. I shall follow it up.

துளசி கோபால் said...

தேவையான பதிவுக்கு நன்றி.

இங்கே நியூஸியில் 50 வயதான பெண்கள் அனைவருக்கும் ரெண்டு வருசத்துக்கு
ஒரு முறை மம்மோக்ராம் இலவசமா செஞ்சுக்க அரசு உதவுது .