Saturday, June 30, 2007

Doctor's day!

டாக்டர்ஸ் டே நம் நாட்டில் ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் ஒன்றாம் தேதி கொண்டாடப்படுகிறது.

டாக்டர்கள் நம் நாட்டிற்கும், சமூகத்திற்கும் ஆற்றிய அரிய பல தொண்டுகளை நினைவுக்கொண்டு அவர்களுக்கு

நன்றி செலுத்தும் நாளாகும். பல்மருத்துவர்களிலிருந்து homeopathic வரைக்கும் எந்த வித்தியாசமும் பாராது --
எல்லோராலும் கொண்டாடப் படுகிறது. .மூத்த டாக்டரும், social service oriented mind டன் திகழ்ந்த டாக்டர் பி.சி. ராய் அவர்களின் பிறந்த நாள் மட்டுமல்ல, அவர் இறந்த நாளும் இதுவே. இது நாம் அவரைக் கௌரவிப்பதாகும்.
டாக்டர்களுக்கான official symbol ஆன red carnation தானம், தர்மம் , அன்பு, தைரியம், மற்றும், எந்த நேரத்திலும் சிகிச்சை அளிக்க கூடிய திறமை, இவை யாவற்றையும் தாங்கி நிற்கும் அடையாளமாகும். இந்த நாள் டாகடர்களுக்கும் தங்களைப் பரிசோதித்துப் பார்க்கும் நாளாகவும் திகழ்கிறது. படித்து முடிக்கும் போது எடுக்கும்
'oath'ஐ தாம் பாதுக்காற்றுக்கொண்டோமா, தங்கள் கடமைகளை சரிவர செய்தோமா,பணம் மட்டும் குறிக்கோளாக இல்லாமல் மனிதத்துவத்தோடு நோயாளிகளிடம் நடந்துக்கொண்டோமா என்று அவர்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.


டாக்டராக திகழ்வது ஒரு சாதரண வேலை அல்ல அது ஒரு commitment to service. தற்சமயம் டாக்டர்கள் போட்டி மனப்பான்மையுடன், பணத்திற்காக எதுவும் செய்ய திகழ்பவர்களாக இருக்கிறார்கள். முன்பு எல்லாம் கடவுள் என்று வர்ணிக்கப்பட்ட டாக்டர்கள், slowly they are losing their charm. கிராமப்புறத்தில் வேலை செய்ய மறுத்து, விடுகிறார்கள். இந்த நிலமை மாற வேண்டும். மருத்துவர்கள் இன்னும் ஒரு விஷயத்தையும் மனதில் கொள்ளவேண்டும் . நோய் தடுப்ப்க்கும் முறைகளை கையாளவேன்டும். மருத்துவர்- நோயாளி உறவு வலுபட வேண்டும். அவர்களுக்கும் வாழ்க்கையில் ஒரு உந்துதல் தேவை.
இந்த நாளில் உங்களுக்கு தெரிந்த, உங்களுக்கு பிடித்த ,உங்கள் குடும்ப டாக்டருக்கு உங்கள் வாழ்த்துக்களை தெரிவியுங்களேன்! ஏதாவது ஒரு சின்ன பரிசை அனுப்பிவைக்கலாமே! (ஒரு ரோஸ் பொக்கே?)...


29 comments:

முத்துகுமரன் said...

வாழ்த்துகள் டாக்டர். மருத்துவராக சேவையாற்றும் அனைத்து மருத்துவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்

மங்கை said...

வாழ்த்துக்கள் டாக்டரம்மா...

Thekkikattan|தெகா said...

தங்கள் கடமைகளை சரிவர செய்தோமா,பணம் மட்டும் குறிக்கோளாக இல்லாமல் மனிதத்துவத்தோடு நோயாளிகளிடம் நடந்துக்கொண்டோமா என்று அவர்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.//

ஹும், எத்தனை டாக்டருங்க இப்படி இருக்காங்க. முதலுக்கு மோசமில்லாம இருக்கணுமின்னுதான் நினைக்கிறாங்கலே தவிர யாரும் உங்கள மாதிரி பொழைக்கத் தெரியாத ஆளா இருக்கிறதில்லைன்னு நினைக்கிறேன்.

சில டாக்டர்கள் கொடுக்கிற காசிற்கு நோயாளிகளை சில சந்தேகக் கேள்விகள் கூட கேட்க விடுறது இல்லை. இந்த நிலைமையில நீங்க இப்படி யோசிக்கிறீங்க.

நீங்கள் ஒரு முறை என்னிடம் கூறியது நன்றாக நினைவிலிருக்கிறது "தனியாக க்ளினிக் வைத்தால் தேவையில்லாத unethical (Obstetrics/gynecologist என்பதால்) விசயங்களை செய்ய நேரிடும் அது தொழில் தர்மம் கிடையாது என்பதால்" என்று நினைத்த நினைப்புக்கு உங்களை எங்கு வைத்துப் பார்ப்பது என்று இன்னும் விளங்கவில்லை. உங்க மாதிரி எல்லா டாக்டர்களும் இருந்து விட்டால் இந்த நாடு சுபிட்சமடையும்.

இந்த காலத்தில் இப்படியும் சில மனிதர்கள். நல்லாருங்க, ரொம்ப நாளைக்கு.

அன்புடன்,

தெகா.

P.S: By the way, happy Docs day!!

கண்மணி said...

அட்வான்ஸ் வாழ்த்துக்கள் டெல்பின்

delphine said...

மருத்துவராக சேவையாற்றும்///
நன்றி முத்துகுமரன்..(i got the message)

delphine said...

Hi Mangai and Kanmani , வாழ்த்துக்களுக்கு நன்றி.

delphine said...

தெகா..
என்ன சொல்ல? என் கண்கள் பனிக்கின்றன.

நாகை சிவா said...

வாழ்த்துக்கள் டெல்பின்...

நாகை சிவா said...

சரியா ஜுலை ஒன்று அன்று வாழ்த்து சொல்லி இருக்கேன் டாக்டர்... என் மற்ற மருத்துவ நண்பர்களுக்கும் கண்டிப்பாக வாழ்த்து கூறுவேன்...

delphine said...

thanks சிவா.

தருமி said...

//உங்களுக்கு தெரிந்த, உங்களுக்கு பிடித்த ,டாக்டருக்கு உங்கள் வாழ்த்துக்களை தெரிவியுங்களேன்! ஏதாவது ஒரு சின்ன பரிசை அனுப்பிவைக்கலாமே //

iththudan (maana seehamaha) oru bouquet anuppiyullaen. petruk kollavum!

greetings on doctors'day!

அபி அப்பா said...

டாக்டர் நான் ஒரு பதிவு வேனா போடவா! ரொம்ப நாளா போட நெனச்ச பதிவு போட்டுவிட்டு லிங் தரேன் பாருங்க!

delphine said...

பேராசிரியரே நன்றி....
"ஆசிரியர்கள் தினம் அன்று நான் உங்களைக் கவனித்துக் கொள்கிறேன்"...

delphine said...

ஹாய் அபி அப்பா!
give me the link. sure.

அய்யனார் said...

ஹாப்பி டாக்டர்ஸ் டே!

ஜெஸிலா said...

மருத்துவர் தின வாழ்த்துகள்.

அபி அப்பா said...

டாக்டர்ஸ் டேக்கு நான் ஒரு பதிவு போட்டிருக்கேன் பாருங்க டாட்டர்!

பாலராஜன்கீதா said...

மருத்துவர் தின வணக்கம், நன்றி மற்றும் வாழ்த்துகள்.

// படித்து முடிக்கும் போது எடுக்கும்
'oath'ஐ தாம் பாதுக்காற்றுக்கொண்டோமா, தங்கள் கடமைகளை சரிவர செய்தோமா,பணம் மட்டும் குறிக்கோளாக இல்லாமல் மனிதத்துவத்தோடு நோயாளிகளிடம் நடந்துக்கொண்டோமா என்று அவர்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.
டாக்டராக திகழ்வது ஒரு சாதரண வேலை அல்ல அது ஒரு commitment to service. //

எங்கள் குடும்ப நல மருத்துவர் இப்படித்தான் இருக்கிறார்.

siva gnanamji(#18100882083107547329) said...

டாக்டர் தின வாழ்த்துகள்...
இன்னும் சிலர் இருக்கின்றீர்கள்..
இங்கும் மழை பொழிகின்றது..

siva gnanamji(#18100882083107547329) said...

டாக்டர் பி.சி.ராய்
அரசியல்வாதியாகவும் இருந்தவர்தானே?
மேற்கு வங்க முதல்வராக சேவைபுரிந்தவர்தானே?

மதி said...

"மருத்துவர் தின வாழ்த்துகள்."

எனது இந்த வாழ்த்துக்களையே ரோஜா பொக்கேயாக கருதி பெற்றுக்கொள்ளவும்

கோபிநாத் said...

வாழ்த்துகள் அம்மா ;)))

அனைத்து மருத்துவர்களுக்கும் என் இனிய வாழ்த்துகள் ;))

delphine said...

அய்யனார் & ஜெஸிலா வாழ்த்துக்களுக்கு நன்றி. அடுத்த வருடமும் நியாபகமாக வைத்து வாழ்த்துங்கள்..

delphine said...

எங்கள் குடும்ப நல மருத்துவர் இப்படித்தான் இருக்கிறார்.////
கேட்கவே சந்தோஷமா இருக்கு கீதா.

delphine said...

sivgnanamji! நீங்கள் சொன்னது correct தான். முதலமைச்சர் and He was a great patriot.

delphine said...

மதி & கோபி நன்றி.

தென்றல் said...

வாழ்த்துக்கள், மேடம்!

delphine said...

வழ்த்துக்களுக்கு நன்றி தென்றல்

Thekkikattan|தெகா said...

hello, hello mic testing 0,1,2,3 :-))