Wednesday, June 27, 2007

மன அழுத்தம்.. (depression)

நாம் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் பல நேரத்தில் மன அழுத்தத்தை உணர்கின்றோம்.ஒரு சிலருக்கோ இந்த உணர்வுகள் மிகவும் கடுமையானதாகவும், அது தொடர்ந்தும் விடுகிறது.
அவ்வாறு கஷ்டப்படுபவர்களிடம் ‘தைரியமாயிருங்கள்', ‘கவலைப்படாதீர்கள்' 'கடவுள் இருக்கிறார்' என்று கூறுவதெல்லாம் உதவாது.
இந்த வகை மன அழுத்தம் எளிதில் ‘விலகாது',
மன அழுத்தம் (depression) சிகிச்சையளிக்கக்கூடிய மருத்துவ நிலையாகும் என்பதே என் கருத்து. இதுமாதிரி மன அழுத்தத்தில் கஷ்டப்படுபவர்களுக்கு நாம் ஒரு மன நோய் மருத்துவரை நாடுவதின் அவசியத்தை எடுத்து சொல்லவேண்டும்.
நாம் கவனிக்க வேண்டியவைகள்.
பெரும்பாலான நேரத்திலும் ஒர் அழுத்தமான மனநிலையில் எதையோ பரிக்கொடுத்துக்கொண்டு இருப்பது போல் தோன்றுவது

அடிக்கடி மனநிலை மாறுவது - ஒரு நிமிடம் சந்தோஷமாகவும், அடுத்த நிமிடமே எல்லாம் இழந்தமாதிரி இருப்பது.. எப்பொளுதும் சோம்பலாகவே இருப்பது, பலவீனம் ( a feeling of weakness )மற்றும் வாழ்க்கையில் பிடிமானத்தை இழந்துப்போவது.
அடிக்கடி கோபம் வருவது, அதை அடக்கத்தெரியாமல் மற்றவர்களிடம் எரிச்சல் அடைவது , தூக்கத்தில் மாற்றங்கள் - குறைவான தூக்கம்.. திடு திப்பென்று முழித்துக்கொள்வது. திடீரென்று எடைக் கூடுவதோ அல்லது குறைவதோ..
மதிப்பின்மை மற்றும் குற்றவுணர்வு எண்ணங்கள் (feeling of guilty and losing self esteem)
சிந்தித்து தெளிவாக செயல் பட முடியாத ஒரு நிலை..
தற்கொலை பற்றிய எண்ணங்கள, தற்கொலை செய்ய முயற்சி செய்வது, அதில் தோல்வி அடைவது.....குடும்பத்தைக் கவனிக்க முடியாமல் தடுமாறுவது.. ..
இதுதான் மன அழுத்தத்தின் ஆரம்பக்கால கட்டம்..

ஒரு மன நல மருத்துவரை சந்திக்க வேண்டிய நேரம் இதுதான்.

27 comments:

கோபிநாத் said...

அருமையான பதிவு....ஆனால் ஆரம்பக்கால கட்டத்தை மட்டும் சொல்லாம்...அதற்கான தீர்வையும் கூறியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்


மீண்டும் வாழ்த்துக்கள் ;;))

tbr.joseph said...

டெல்ஃபின்,

இப்போதெல்லாம் மன அழுத்தம் ஒரு மிகச் சாதாரணதாகப் போய்விட்டது.

எதிலும் வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணம், தோல்வியை சந்திக்க முடியாத மனப்பாங்கு இதெல்லாம்தான் ஒரு கட்டத்தில் மன அழுத்தத்தில் கொண்டு விடுகிறது.

மேலும் இது ஒரு வியாதியே அல்ல என்று நினைப்பவர்கள்தான் அதிகம்.

ஆகவேதான் அதை ஒப்புக்கொண்டு மருத்துவர்களை நாடுவதில்லை...

இதைக் குறித்து இன்னும் விரிவாக ஒரு மருத்துவன் என்ற முறையில் நீங்கள் எழுதியிருக்கலாமோ என்று தோன்றுகிறது..

பொன்ஸ்~~Poorna said...

வாங்க டாக்டர்.. நீங்களும் தமிழில் எழுத வருவீங்களான்னு, ரொம்ப நாளா தெகாவிடம் கேட்டுகிட்டிருந்தேன்.. வாழ்த்துக்கள்..

Thekkikattan|தெகா said...

சரி மன அழுத்தத்திற்கு prozac போன்ற மருந்துகள் எடுத்துக் கொள்பவர்கள் மிக விரைவிலேயே மற்ற வித இதர விசயங்களுக்கும் ஆட்பட்டு, dependency அதிகரித்து அதுவே ஒரு வியாதியாகவும் மாறிப்போகுதாம்.

அது எந்த அளவிற்கு உண்மை? மன அழுத்தத்திற்கு ஒரு தனிப்பட்ட நபரின் வாழ்வு முறையும், அவர் உலகியல் வாழ் விசயங்களை எப்படி அணுகுகிறார் என்பதனையும் கவனத்தில் கொண்டு வாழ்ந்தால் இந்த மன அழுத்த வியாதியிலிருந்து நிறந்தரமாக தப்பித்துக் தன்னை தற்காத்துக் கொள்ளலாமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

இங்குதான் எவ்வளவுதான் தான் படித்தவர்களாக இருந்தாலும் இந்த "நம்பிக்கை (belief)" அது கடவுள் சார்ந்தாக இருக்கலாம், அல்லது positive outlook about one's life சற்று கூடுதலாகவே உதவி புரியலாம் போல இருக்கிறது.

இந்த மன அழுத்தம் "தன்னால் தான்" எல்லாமே என்ற தற்குறித்தனத்தாலும் ஒரு addictive reactionயாகவும் வெளிப்படுத்தி நாளடைவில் அதுவே தனது குணாதியசமாக மாற்றி ஓட்டும் நபர்களும் உண்டு.

மேலாக இந்த bi-polar, schizophrenia போன்ற வகை மனம் சார்ந்த வியாதிகள் மரபணு கீழிறக்கம் செய்யப் படும் பட்சத்தில் எவ்வாறு இது போன்ற recurring symtomsகளிலிருந்து தப்பிப்பது?

மங்கை said...

அய்யா காட்டான் ஐயா..அதான் டாக்டரம்மா க்ளீன்னா சொல்லீட்டு வாராங்க இல்ல....அவங்க பதிவு விட உங்க பின்னூட்டம் நீநீநீநீநீளமா இருக்குய்யா..:-))))

welcome Delphine....நிறைய எதிர்போர்க்குறோம்...

delphine said...

நன்றி கோபி. தீர்வுகளோடு வருவேன்...

delphine said...

TBR Sir, சரியாக சொன்னீர்கள்..நிச்சயம் விரிவாக எழுதுவேன்.

delphine said...

ஹாய் பொன்ஸ்... ம்ம்ம்.
வந்துவிட்டேன்..

delphine said...

தெகா... கொஞ்சம் பொறுமை.பதிலுடன் வருகிறேன்.

delphine said...

thanks Mangai.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

வாங்க. வாங்க!!

உங்களைத் தமிழில் கண்டதில் மகிழ்ச்சி.

அடுத்த பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் டாக்டர்.

-மதி

delphine said...

மதி ரொம்ப எதிர்பார்க்ரீங்க! sure i will try to come up to your expectation. thank you.

அபி அப்பா said...

டாக்டர்! வாங்க வாங்க தழிழில் உங்களை பார்க்க ஆசையா இருக்கு! நல்ல விஷயங்களா எழுதுங்க!....ஆமா டாக்டர், மன அழுத்தமே இல்லாம எந்த ஒரு சீரியசான விஷயமாக இருந்தாலும் அதை சீரியசா எடுத்துக்காம 'சிரி'யஸா எடுத்துகிட்டு ஜாலியாவே இருக்கேனே நானும் டாக்டரிடம் போகனுமா?:-))

வல்லிசிம்ஹன் said...

டெல்ஃபின், மிக மிகச் சந்தோஷம்.
டிப்ரஷன் டாக்கிள் பண்ண வேண்டிய விஷயம்தான்.
. அதுவும் நீங்க மருத்துவராகச் சொல்லும் பயனுள்ள விஷயங்கள் சந்தேகத்தைத் தீர்க்கும்னு தான் நினைக்கிறேன்.

இயல்பாகவே துன்பங்களைச் சமாளிப்பவர்கள் இருக்கிறார்கள். ஆல்கஹால்,வேலியஸ்,,லார்பொஸ் என்று செல்பவர்களும் இருக்கிறார்கள்.

uppres and downers என்று விதவிதமா மருந்துகள் சாப்பிடும் பலபேருக்கு சாதாரண ஃப்ராக்ச்சரிலிருந்தே அந்தப் பழக்கம் வருகிறது.
அதைச் சமாளீப்பதையும் சொல்லுங்கள்.மிக்க நன்றி டெல்பின்.
மிக்க நன்ற்

ஜெஸிலா said...

வாழ்த்துகள் டெல்ஃபின். நானும் மன அழுத்தத்தை பற்றி ஒரு பதிவு எழுதி இருக்கிறேன். பார்த்துவிட்டு கருத்து சொன்னால் திருப்தியாக இருக்கும்.

உங்களுக்கு இருக்கா மன உளைச்சல்?

துளசி கோபால் said...

மன அழுத்தத்தை அப்படியே விட்டுட்டா அபாயம்தான்.

இன்னிக்கு இவ்வளவு அளக்குற நான் ஒரு சமயம் ( 6 வருசத்து முந்தி)
மன அழுத்தம் கூடிப்போய் என்னெவெல்லாமோ செஞ்சுக்க இருந்தேன்.

இங்கே 'லைஃப் லைன்'ன்னு ஒருஹெல்ப் லைன் இருக்கு. அதுலே எவ்வளோ முறை
தொலைபேசி என் கஷ்டத்தைச் சொல்லி அழுதுருக்கேன். நாம் யார், அவுங்க யார்னு
தெரியாத நிலையில்( முன்பின் அறியாதவங்களிடம்) கஷ்டத்தைச் சொல்லுறது கொஞ்சம்
சுலபமா இருக்கு. அவுங்க ஆறுதலா ரெண்டு வார்த்தை சொல்றது மட்டும் ஒரு ரிலீஃப்
தருதான்னா...... அது காரணம் இல்லை. நம்ம கஷ்டத்தை வெளியில் கொட்டிடறோம் பாருங்க
அது உண்மைக்குமே கொஞ்சம் (அப்போதைக்கு மட்டும்தான்) ஆறுதலைத் தந்துருது.

இது இல்லாம இங்கே ஒரு கத்தோலிக கான்வெண்ட்லேயும் ஒரு ஹெல்ப் லைன் தொலைபேசி எண்
இருக்கு. அங்கே அந்தப்பகுதியில் நமக்காக ஜெபம் செய்வார்களாம். அங்கேயும் சிலமுறை தொலைபேசி
இருக்கேன்.

கடவுள் அனுப்புன வரம் மாதிரி அந்த சமயம் ஒரு விளம்பரம் பேப்பரில் வந்துச்சு. டிப்ரெஷனில் இருந்து
விடுபட ஒரு ஆறு வார கோர்ஸ். ஒரு உந்துதலில் நானும் பெயர் கொடுத்து அங்கே அந்த வகுப்புலே
சேர்ந்துக்கிட்டேன். அங்கே போனபிறகுதான் என்னோட கஷ்டம் ஒரு கஷ்டமே இல்லைன்னு புரிஞ்சது.

அந்த ஆறுவாரம் முடியும்போது, நானே ஒரு சப்போர்ட் க்ரூப்லே சேர்ந்து மன அழுத்த்தம் இருக்கறவங்களுக்கு
கவுன்சிலிங் பண்ணற அளவுக்குத் தேறிட்டேன்.

அப்ப மட்டும் நான் அந்த வகுப்புலெ சேராம இருந்திருந்தா............... உங்களுக்குத்
'துளசிதளம்' இல்லாமப்போயிருக்கும்:-))))

delphine said...

hi Abiappa!
ஆமா டாக்டர், மன அழுத்தமே இல்லாம எந்த ஒரு சீரியசான விஷயமாக இருந்தாலும் அதை சீரியசா எடுத்துக்காம 'சிரி'யஸா எடுத்துகிட்டு ஜாலியாவே இருக்கேனே நானும் டாக்டரிடம் போகனுமா?:-////
நீங்க எங்கும் போக வேண்டாம்.. கும்மி அடிக்க பதிவுகள் போட்டால் போதும். யாருக்கும் மன அழுத்தம் வராது.

delphine said...

ஜெஸிலா வாசித்தேன். மிக தெளிவாக எழுதியிருக்கிறீர்கள். நனறி கலந்த வாழ்த்துக்கள்.

கண்மணி said...

ஆஹா வந்துடிச்சி...ஆசையில் ஓடி வந்தேன்....என்னன்னு கேக்கறீங்களா?உங்க பதிவுதான்.
prolonged ஆ இல்லாம ஒரு ஷார்ட் பீரியட் மட்டும் இருக்கும் மன அழுத்தம் உளைச்சல் தப்பில்லைதானே.ஃபீல் பண்ணாட்டி நாம மனுஷங்களேயில்லையே.

delphine said...

வல்லி..
எல்லாவற்றிற்கும் மனதே காரணம். அந்த நாட்களில் அதிகமாக இந்த மாதிரி மன அழுத்ததிற்கு யாரும் முக்கியத்துவம் கொடுத்ததில்லை. ... ஆனால் இப்பொழுதெல்லம் .. நாம் நம் younger generation அடிக்கடி சொல்லும் வார்த்தையே 'O! I am stressed'..ஒரு விஷயம் தெரியுமா.. fracture க்கு கூட tranquilizers கொடுக்கும் இந்த நாட்களில் , theres is one theory that says depression causes fracture and thats why it is more common in old people.

delphine said...

துளசி.. இந்நாட்களில் மன அழுத்தம் இருப்பதை வெளியே சொல்ல தயங்கும் போது தாங்கள் வெளிப்படையாக கூறுவது பற்றி மிக சந்தோஷம். மன அழுத்தம் ஒரு கொடிய நோய். சாதரணமாக த் தான் ஆரம்பிக்கும்... ஆனால் தற்கொலை செய்யும் அளவிற்கு கொண்டும் போய்விடும்..
yes. we do have a lot of help line here. நம் மனதில் இருப்பதை யாரிடமாவது சொல்லி அழுதுவிட்டால் அந்த மன பாரம் இறங்கி நாம் புத்துணர்ச்சி பெற்றவர்களாகுவோம்.
the best treatment is COUNSELING.. I REPEAT COUNSELING.

delphine said...

prolonged ஆ இல்லாம ஒரு ஷார்ட் பீரியட் மட்டும் இருக்கும் மன அழுத்தம் உளைச்சல் தப்பில்லைதானே.ஃபீல் பண்ணாட்டி நாம மனுஷங்களேயில்லையே.///
ஆடலுடன், பாடலுடன் வந்த கண்மணிக்கு நன்றி... கொஞ்ச நாளாக உங்கள் கும்மி பதிவுகளை காணாமல் பாசக்கார குடும்பம் மன உளைச்சலில் இருப்பதாக கேள்வி.

ரவிசங்கர் said...

மருத்துவம் சார் அனுபவக் குறிப்புகளை உங்க கிட்ட இருந்து விரிவா எதிர்ப்பார்க்கிறேன்..தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்

பங்காளி... said...

இது குறித்த எனது பின்னூட்டம் நீளமாக இருக்குமென்பதால் தனி பதிவாக போடுவதே உத்தமமாய் இருக்கும்....

சீரான இடைவெளிகளில் சுயபரிசோதனை அவசியம்...ஆனால் பலர் மன அழுத்தத்திற்கு உரிய சிகிச்சை மேற்கொள்ளாமல் தன்னையும், தன்னை சுற்றியுள்ளவர்களையும் சித்ரவதை செய்வதுதான் நிதர்சனம்.

பாபு மனோகர் said...

அய்யோ டாக்டர்! நீங்கள் சொன்ன அறிகுறி எல்லாமே இருக்குற மாதிரியில்ல இருக்கு...நேரே போய் அட்மிட் ஆகிவிடவேண்டியது தானா?

delphine said...

ரவி சங்கர் நன்றி..

குட்டிபிசாசு said...

டெல்பின் அம்மா,

இன்றைய காலகட்டங்களில் இதுபோன்ற மன அழுத்தம் அல்லது மன சோர்வு எல்லாரிடமும் காணப்படுகிறது. பொதுவான இயலுமான தீர்வுகளை தாங்கள்: முன்வைத்தால் மிகவும் உபயோகமாக இருக்கும்.

நன்றி!!