Saturday, June 30, 2007

சின்ன சின்ன எட்டுகள்.....

வல்லி உங்களுக்குத்தான் என் முதல் நன்றி........ you have been the source of inspiration to start my Tamil blog apart from தெ.கா.
தமிழ்மணத்திற்குள் அவ்வப்போது வந்து என் பின்னோட்டங்களை மட்டும் இட்டு பதிவுகளையும், கும்மிகளையும் ரசித்துக்கொண்டிருந்த எனக்கு .
இப்போதைக்கு இது ஒரு பிரளயத்தனமான முயற்சிதான்.
எட்டு சாதனைகள்...no no எட்டு incidents? in life...
மறக்க முடியாத நல்ல விஷயங்கள் பல...
மறக்க முயற்சி செய்பவைகள் சில....
1953:
நான் பிறந்த
அன்றே ஒரு சாதனை படைத்துவிட்டேன். ஆண்குழந்தை பிறக்கும் என்று ஆவலாக இருந்த அப்பாவிற்கு நான் வந்து பிறந்தால், ஏப்ரல் ஒன்றாம் தேதி
அதுவும் இரண்டு பெண்களுக்கு பின்பு ...
என்னைப் பார்க்க கூட பிடிக்காமல் எடுத்தாரே ஒரு ஓட்டம்..பாம்பே போய் பதினைந்து நாட்கள் தங்கி அதன் பிறகு வந்து என்னைப்பார்த்தாராம். (how disappointing!)

ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது TRINITY COLLEGE OF MUSIC -LONDON-ல் violin courses எடுத்து அதன் பிறகு, முதன் முதலாக ஒரு concert-ல் solo வாக violin வாசித்தது.. இன்றளவும் அது எனக்கு ஒரு பெரிய விஷயம்தான்.

SSLC படிக்கும்போது நடந்த விஷயம்.. அரையாண்டு பரீட்சையில் தமிழில் 20 மார்க்கும், composite maths -ல் 30 மார்க்கும் வாங்கி சாதனை படைத்தேன்.. அதற்குக் கிடைத்த பரிசு?
என் டீச்சர், என் டெஸ்ட் paperஐ முதுகில் குத்திவிட்டு ஒரு நாள் முழுவதும் ஸ்கூலில் இருந்து அதோடு வீட்டுக்கு செல்ல வேண்டியதாகிவிட்டது...
அன்று என் முதுகும் பழுத்துவிட்டது....(cool)


ஆனால் இந்த தோல்வியும் அதற்கு எனக்கு கிடைத்த தண்டனையும் என் வாழ்க்கையே மாற்றியது. p.u.c.ல் மதுரை university ல்
இரண்டாவது ரேங்க் எடுத்து மருத்துவக் கல்லூரிக்குள் நுழைந்தேன்.(cake walk?)

1975
எனது மிக பெரிய சாதனை இதுதான்...மிகவும் orthodox ஆன குடும்பத்திலிருந்து வந்த நான் ஒரு காவல் துறை அதிகாரியை காதலித்து திருமணம் செய்தது... அவருடன் வாழ்ந்த நாட்களே பெரிய சாதனைதான் :) .... இரண்டு அழகான குழந்தைகள், அவர்களுக்கு நல்ல படிப்பு, வேலை.. 17 வெவ்வேறு ஊர்கள் (காதல் வாழ்க).:))))))))))))


1978
படித்து முடித்த கையோடு தாராபுரம் என்ற ஊரில் வேலைக்கு சேர்ந்த முதல் நாள் அனுபவம் இது.
கிராமத்தில் ஒரு மருத்துவ அம்மணியால் குழந்தை பேறு பார்க்கபட்ட ஒரு பெண்ணிற்கு... ஆறாவது பிரசவம் குழந்தை பிறந்து 15 மணி நேரமாகியும் நஞ்சு (placenta) வெளியே வராமல், உதிரம் கொட்டி..... பேச்சு மூச்சு இல்லாமல் ...ஒரு மாட்டு வண்டியில் வைக்கோலை பரப்பி அந்த பெண்ணை அதில் படுக்க வைத்து, நடு ராத்திரியில் கொண்டு வந்தார்கள்.
கஷ்டப்பட்டு நஞ்சை வெளியில் எடுத்து, ஆஸ்பத்திரியில் வேலைப்பார்த்த staff+ நான் யாவரும் ரத்தம் கொடுத்து அந்த பெண்ணைக் காப்பாற்றியது. அடுத்த நாள் காலையில் அந்த பெண்ணின் குழந்தைகள் ஆளுக்கு ஒர் sweet வைத்துக்கொண்டு எனக்காக காத்துக்கொண்டிருந்தது. (we were so committed)

1978-2006..

இருபத்தைந்தாயிரத்திற்கு மேல் பிரசவங்கள் ...... என் மருத்துவ வாழ்க்கையில்..(not in private practice)
டாக்டர்ஸ் தினமான இன்று இதை எழுதுவதில் மிகவும் சந்தோஷப்படுகிறேன்!

2006
என் கணவர் கோவையிலிருந்து சென்னைக்கு மாற்றலாகி விட்டதால் அவர் ஜூலை மாதமே சென்னை வந்து விட்டார். நான் அக்டோபர் மாதம்தான் வர முடிந்தது. தன்னந்தனியாக காரை ஓட்டிக்கொண்டு கோவையிலிருந்து சென்னை வந்த என்னை...
அவர் ஆபிஸில் மற்றக்காவல் துறை அதிகாரிகள் இருப்பதைக்கூட பொருட்படுத்தாமல் என் உச்சி முகர்ந்து " you can try going for the Himalayan Rally"
என்று சொன்னபோது
..இரண்டுபேர் கண்களிலும் கண்ணீர் துளிகள்.( daring devil).
தற்சமயம் சென்னை trafficல் கார் ஓட்டுவது அதைவிட மிக பெரிய சாதனை...


எட்டு பேரை அழைக்கணுமா? கஷ்டம்தான்.
இதை வாசிக்கும் நண்பர்கள் உதவி செய்யுங்களேன்!

53 comments:

அபி அப்பா said...

டாக்டர்! 25000 குழந்தைகளை பெற்றெடுத்த தாயே! வணங்குகிறேன்!

தருமி said...

எட்டில் பலதும் 'அம்மாடி' ரகம். வாழ்த்துக்கள்.

மருத்துவர்கள் நாளின் சிறப்பு வாழ்த்துக்களும்...

தருமி said...

On second thought:
தலைப்பு நன்றாக இருக்கிறது .. eights / steps

சின்னச் சின்ன எட்டுகளாக - steps-களாக - தெரியவில்லை. பெரிய பெரிய leapsகளாகத்தான் தெரிகின்றன.

துளசி கோபால் said...

சூப்பர் எட்டு வச்சுட்டீங்க.

அம்மாடி............. 25 ஆயிரமா?

வாழ்த்து(க்)கள்.

நண்பர்கள் உதவி செய்யறப்ப பதினாறா உதவுங்கப்பா. எனக்கும் வேணும் ஒரு 'எட்டு'

புள்ளை புடிக்கிறவங்க யாருப்பா இங்கே:-)

ஜெஸிலா said...

அப்பப்பா பதிவு உலகில் நுழைந்தவுடன் எட்டுப் போட வச்சிட்டாங்களா? அப்ப பதிவு உலகில் பறக்க உரிமம் கிடைத்துவிட்டது. ;-) நான் போட்ட எட்டுக்கும் உங்க எட்டுக்கும் ஒரு ஒற்றுமையுள்ளது. நாம் இருவரும் எழுதிய எட்டில் முதல் சாதனையாக இருவரும் சொன்னது நம் பிறப்பைப் பற்றி. ;-)

G.Ragavan said...

ஒரு பாட்டு உண்டு. அகிலாண்ட கோடி ஈன்ற அன்னையேன்னு. 25000 ஈன்ற அன்னைன்னு பட்டம் கொடுக்கலாம். இதுல என்ன சாதனைன்னா....25000 முறை இரண்டு உயிர்களைக் காப்பாற்றீருகீங்க. அதாவது குறைந்த பட்சம் 50000 பேர் உயிர்வாழ நீங்களுமொரு காரணமாயிருக்கீங்க. பாராட்டுகள்.

கடைசிப் பாயிண்ட்டு...அப்படியே ஒரு காதற்கதை படிச்சாப்புல இருந்தது.

இலவசக்கொத்தனார் said...

beautiful.

best wishes on doctors day.

siva gnanamji(#18100882083107547329) said...

டாக்டர் தின வாழ்த்துகள்..........
மேலும் மேலும் சேவை பரவிட
வாழ்க பல்லாண்டு.....

மதி said...

நேத்து பேப்பர்ல ஒரு செய்தி படிச்சேன். ஐட்ச் வந்த ஒரு கர்ப்பிணிக்கு மருத்துவர்கள் பிரசவம் பார்க்க மருத்ததால் கணவரே பிரசவம் பார்த்தார் என்று.

ஆனால் இது போன்றவைகள்தான் செய்தியா வருதே தவிர அபி அப்பா இங்க சொன்னது போல பல மருத்துவர்கள் உங்களைப்போல ஓசை இல்லாம சேவை செய்துகிட்டு தான் வர்ராங்க.

அவர்களுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்

கோபிநாத் said...

இந்த பதிவுக்கு என்ன பின்னூட்டம் போட்டுவது....

அபி அப்பா சொன்னது போல

வணங்குகிறேன்
வணங்குகிறேன்
வணங்குகிறேன்

கோபிநாத் said...

\\நான் ஒரு காவல் துறை அதிகாரியை காதலித்து திருமணம் செய்தது... அவருடன் வாழ்ந்த நாட்களே பெரிய சாதனைதான் :) .... \\

ஆஹா...காக்க காக்க படம் தான் நினைவுக்கு வருகிறது ;)))

கோபிநாத் said...

\\G.Ragavan said...
ஒரு பாட்டு உண்டு. அகிலாண்ட கோடி ஈன்ற அன்னையேன்னு. 25000 ஈன்ற அன்னைன்னு பட்டம் கொடுக்கலாம். இதுல என்ன சாதனைன்னா....25000 முறை இரண்டு உயிர்களைக் காப்பாற்றீருகீங்க. அதாவது குறைந்த பட்சம் 50000 பேர் உயிர்வாழ நீங்களுமொரு காரணமாயிருக்கீங்க. பாராட்டுகள்.

கடைசிப் பாயிண்ட்டு...அப்படியே ஒரு காதற்கதை படிச்சாப்புல இருந்தது.\\

இந்த இடத்துல ஒரு ரீப்பிட்டே கண்டிப்பா போட வேண்டும் ;)))

delphine said...

Hi . Abiappa,
எப்படி நன்றி சொல்லுவது என்று தெரியவில்லை. தங்கள் பதிவில் எழுதி்யுள்ள பெரிய உள்ளம் கொண்ட டாக்டருக்கு முன்பு நானெல்லாம் ஒன்றும் இல்லை.

delphine said...

தருமி சார்.
thanks again.

delphine said...

ஆ... துளசி.. நீங்களும் ஆள் கிடைக்காமல் தெடுகிறீர்கள? dont worry. somebody will come to our rescue.

பங்காளி... said...

புண்ணியவதி...

நல்லா இருப்பீங்க தாயீ...

delphine said...

ஜெஸிலா..
ஆமா .. நம்ப இரண்டு பேருக்கும் நிறைய ஒற்றுமைகள் உ ள்ளன.

delphine said...

ராகவ்ஸ்... ஹா ஹா . you really make me blush

Thekkikattan|தெகா said...

அடேங்கப்பா 25,000 போதுமா :-)

சரி, சரி இம்பூட்டு பேருக்கு பாத்திருக்கிய அப்படியே எனக்கும் ஒண்ணு பார்த்துக் கொடுத்துருங்களேன் 25,001ஆ.

//என்னைப் பார்க்க கூட பிடிக்காமல் எடுத்தாரே ஒரு ஓட்டம்..பாம்பே போய் பதினைந்து நாட்கள் தங்கி அதன் பிறகு வந்து என்னைப்பார்த்தாராம். (how disappointing!)//

இதில பாருங்க ஒரு விசயம். இந்த தடவை நான் ஊருக்கு வந்திருந்தப்ப ஒரு ஆறு பெண்களை பெத்தவர் சொன்னார், அப்பா கொஞ்சம் பயந்த சுபாபமா இருந்தா அவருக்கு கண்டிப்பாக பெண் குழந்தைகள்தான் பிறக்குமாமென்று. அவர் சொன்ன தோரனை நல்ல நகைச்சுவை கலந்ததாக இருந்தது :-). அந்த நேரத்தில்.

இங்கே உங்க அப்பா ஓட்டமெடுத்தார் என்றவுடன் அதுதான் ஞாபகத்திற்கு வந்தது.

ஓ! நீங்க வயலின் கூட வாசிப்பீங்களா? இன்னமுமா? அப்ப ஒரு தடவை எங்க குரூப்க்கு வாசிச்சு காமிப்பீங்கன்னு சொல்லுங்க.

எல்லா எட்டும் பட்டு பட்டுங்க. அதிலும் உங்கள் காதல் கதை... அசத்தல்.

delphine said...

கொத்ஸ் அண்ட் sivagnanamji
வாழ்த்துக்களுக்கு நன்றி..

delphine said...

மதி,
கணவர் பிரசவம் பார்ப்பது, பிரசவ நேரத்தில் கூட இருப்பது எல்லாம் நல்ல விஷயமே...
+2 படிக்கும் மாணவன் experiment பண்ணாமல் இருந்தால் போதும்... சரிதானே மதி

delphine said...

கோபி தம்பி...
ரிப்பிட்டே!!!
you made me blush again!

delphine said...

பங்காளி ..
பெரிய வார்த்தை....
இப்ப நினைத்துப்பார்க்கும்போது நிஜமாகவே மலைப்பாக இருக்கிறது. எப்படி அந்த stamina கிடைத்தது... நிச்சயமாக என் கணவரின் support இல்லாமல் இது முடியாது..எத்தனை ஆஸ்பத்திரிகள்.. அது என்னவோ எங்கு போனாலும் உடனே வேலை கிடைக்கும்..

delphine said...

தெ.காட்டான்..
25001...ம்ம்... வாங்க பார்த்திடலாம்.. என் கைக்கு பெண்குழந்தைகள் தான் அதிகம்... அந்த ரோஸ் கலர் குழந்தைகளை கையில் தூக்கி தலைகீழாக போட்டு இரண்டு அடி அடித்து... ஆகா.. என்ன சந்தோஷம்..i have had the most rewarding times in my life.....
அப்பா மிகுந்த கோபக்காரர். அவர் கடைசி காலம் வரை கைகட்டிக்கொண்டுதான் அவர் எதிரில் நின்றேன்..
வயலின் வாசித்து ரொம்ப நாளாச்சு.. i think i can give a try.
Thanks for the visit.

முத்துலெட்சுமி said...

...ம்...கலக்கல்.எட்டு.

Benjamin George said...

Good one Mom! Really proud to be ur son. U Truly are the best! There are so many things so great about u. If i were to write about u and dad it would certainly take me a life time. Am Glad i enjoyed everybit of my life time with u all. Happy Mom's(DOCTOR)Day! An Apple a Day keeps ma mom Away!!! Love u Mom! U Made My country get more crowded! Anyways 25002 will be Mine! and ur luck will give me one Girl baby like u and Baby Jen. Girl Babies are the BEST! Mother's and Wives are Simply Great! No Comparison! Truly Amazing u people are!!!

கண்மணி said...

delphine i think the spring season has started..[you hv started ;)writting blogs in tamil..haha]
hmmmm...arrival of a rival....

நாகை சிவா said...

நிறைவான எட்டு....

நாகை சிவா said...

//Good one Mom! Really proud to be ur son. U Truly are the best! There are so many things so great about u. If i were to write about u and dad it would certainly take me a life time. Am Glad i enjoyed everybit of my life time with u all. Happy Mom's(DOCTOR)Day! An Apple a Day keeps ma mom Away!!! Love u Mom! U Made My country get more crowded! Anyways 25002 will be Mine! and ur luck will give me one Girl baby like u and Baby Jen. Girl Babies are the BEST! Mother's and Wives are Simply Great! No Comparison! Truly Amazing u people are!!! //

முழுமையான வாழ்விற்கு மேலும் ஒரு உதாரணம்....

வணங்குகிறேன்.

ILA(a)இளா said...

பிரமிப்பா இருக்குஙக

மங்கை said...

வாழ்த்துக்கள் டாக்டரம்மா...

உங்க மன நிறைவும், தன் நலமற்ற உழைப்பும் எங்களுக்கு ஒரு உதாரணமாக அமையும்

delphine said...

முத்துலட்சுமி.. நன்றி..

delphine said...

thanks son!

delphine said...

கண்மணி... வசந்த காலத்திற்கு பின்பு எனக்கு மிகவும் பிடிப்பது இலையுதிர்காலம் தான்.அதுவும் NEW ENGLAND-ல் அந்த கலர் மாறும்போது..MAPLE இலைகள் ..

..அது எப்படி?
arrival of a rival....

நீங்கள் கலக்கல் பெண்மணி...நகைச்சுவையில்.. உங்கள் மாதிரி timing -ஆ எழுத வராது.
keep going..Kanmani.. we want more of your writing...

வல்லிசிம்ஹன் said...

Delphine,
sorry to come so late to comment here. been out of the city.
Welcome to thamizh world.

தினம் ஒரு பதிவு போடுங்க. படிக்க நாங்க இருக்கோம். இத்தனை சாதனைகள்,அத்தோடு அடக்கம்.


மனம் நிறைந்த வாழ்த்துக்கள். உங்கள் கணவர் இன்னும் நேசித்திருப்பார் உங்களை. அவர் படமும் போட்டுப் பதிவு செய்யுங்கள்.
Because real good and strong persons are very hard to come by.

இலையுதிர்காலம்,மீண்டும் வசந்தம் வருவதற்கான அறிகுறி அல்லவா.

ஊருக்கு உழைக்கும் உத்தமப் பெண்ணும் அவர் குடும்பமும் வாழப் பிரார்த்திக்கிறேன்.

ramachandranusha said...

டாக்டரம்மா, இன்னிக்குதான் உங்க பிளாக் பார்க்கிறேன், நேரமில்லாததால் பழக்கமா போகிற விசிட்டு மட்டும்தான். காதல் காட்சி சூப்பர். அந்த பார்ட் மட்டும் கொஞ்சம் விவரமாய் எழுதுவது :-)

பாபு மனோகர் said...

'இருபத்தைந்தாயிரத்திற்கு மேல் பிரசவங்கள் ...... என் மருத்துவ வாழ்க்கையில்..(not in private practice)'

hats off doctor!உங்களை போன்று மற்றவர்களும் நினைக்கத் தொடங்கினால் எவ்வளவு நன்றாக இருக்கும்..

உங்களுடைய இந்த எட்டில் உள்ளூரவும் செய்திகள் இருந்தது.

delphine said...

வல்லி...என்ன காணோமே என்று நினைத்தேன்.. வாழ்த்துக்களுக்கு நன்றி. ///
all your wishes make me feel ' A COMPLETE WOMAN'.
THANK YOU.

delphine said...

நன்றி மங்கை,

நன்றி இளா.

delphine said...

உஷா!
என்னங்க ரொம்ப வெட்கப்பட வைக்கிரீங்க? அதுவும் இந்த வயதில்..

வரவுக்கு நன்றிங்க..

delphine said...

Thank you Manohar!
my service was mainly in Mission Hospitals. that is why I was able to achieve this. I learnt a lot of ethics from these MISSION HOSPITALS.

பொன்ஸ்~~Poorna said...

ஐயோ ஐயோ!.. அந்த blushing முகத்தை சீக்கிரமே பார்க்கணும்னு ஆவலா இருக்கே! ;)

25000, காதல் கதை, எல்லாத்தையும் மக்கள் பாராட்டிட்டாங்களே... நான் என்னத்த சொல்லுறது :)

தென்றல் said...

/1.....how disappointing!
2....concert-ல் solo வாக violin வாசித்தது
3....என் முதுகும் பழுத்துவிட்டது
4....cake walk
5....காதல் வாழ்க
6....we were so committed
7.இருபத்தைந்தாயிரத்திற்கு மேல் பிரசவங்கள்....
8....என் உச்சி முகர்ந்து " you can try going for the Himalayan Rally"
என்று சொன்னபோது..இரண்டுபேர் கண்களிலும் கண்ணீர் துளிகள்.
(daring devil).
/

பெரிய பெரிய விசயங்களை அமைதியா சொல்லிட்டு 'சின்ன சின்ன எட்டுக்கள்...' னு சொல்றீங்க!ம்ம்ம்ம்... Classic!

அப்ப நாங்க - 25,003ஆ..!!;)

delphine said...

பொன்ஸ்...விரைவில் சந்திப்போம்..

delphine said...

தென்றல்...நன்றி..
மன திருப்தியோடு வாழ்ந்த வாழ்க்கை

எதையும் பாசிடிவாக எடுத்துக்கொள்வது...எனக்கு அவ்ர் கற்றுக்கொடுத்தது

Anonymous said...

நிறைய விடயங்கள். நல்ல கருத்துக்கள். தங்களின் அனுபவத்தை பகிருங்கள். கும்மிகளுக்கு இடம் கொடுக்காதீர்கள்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அடடா? 2500 குழந்தையின் முதல் குரல் கேட்டீங்களா?
உண்மையில் இனிமையான சாதனையே.....
தொடர்ந்து கேழுங்கள்....

delphine said...

யோஹன்.. 2500 அல்ல 25,000..
30 வருடங்கள்...non-stop..
வரவுக்கு நன்றி.

பத்மா அர்விந்த் said...

//On second thought:
தலைப்பு நன்றாக இருக்கிறது .. eights / steps

சின்னச் சின்ன எட்டுகளாக - steps-களாக - தெரியவில்லை. பெரிய பெரிய leapsகளாகத்தான் தெரிகின்றன//

delphine said...

நன்றி பத்மா..

நாமக்கல் சிபி said...

மொய்ப் பின்னூட்டம்!

51 வது பின்னூட்டத்தை அப்படித்தான் சொல்லுவோம்!

நாமக்கல் சிபி said...

மேடம் 8 பதிவை இன்னிக்குத்தான் பார்த்தேன்!

ரிலாக்ஸா படிச்சேன்!

பெரிய சாதனைதான்!

25000 பிரசவம் பார்த்திருக்கீங்க!

கிரேட்!

அருட்பெருங்கோ said...

வாழ்த்துக்களைத் தவிர என்ன சொல்லுவது என்று தெரியவில்லை...