Wednesday, June 27, 2007

இலையுதிர்காலம்

வசந்தகாலம் என்று ஒன்றிருந்தால்....
இலையுதிர்காலம் என்று ஒன்று வந்துதானே ஆக வேண்டும்?...
வசந்தமாகவே எல்லாம் இருந்துவிட்டால்....வாழ்க்கைக்கு அர்த்தமே
இல்லாமல் போய்விடும். வாழ்க்கையும்
திகட்டிப் போய்விடும்.
நான் சந்தித்த , என்னை சிந்திக்க வைத்த
சில தருணங்கள், சில மனிதர்கள்,
நல்லவர்கள், திருந்தியவர்கள்..
எத்தனையோபேர்....
எனக்கு முதலில் பிடித்திராத
மருத்துவத்தொழில்...ஆனால் அதுவே
எனது வாழ்க்கையாகிவிட்டது. ..
காவல்துறை எனக்கு தந்த நல்ல
மனிதர்கள், அரிய சந்தர்ப்பங்கள்,
வாழ்ந்த வாழ்க்கையில் எத்தனை
சந்தோஷங்கள்......
" born with a silver spoon" என்பார்களே..
அது எனக்கு மிகவும்
பொருந்தும். சுயபுராணமாக
இருந்துவிடக்கூடாதே என்று ஒரு பக்கம்
பயம்..இந்த blogஐ தொடற்சியாக maintain
பண்ண முடியுமா என்று பார்ப்போம்...
எத்தனை பதில் கிடைக்காத கேள்விகள்
வாழ்க்கையில்.....

18 comments:

தருமி said...

வரவேணும்... வரவேணும்..
நல்வரவு..

Thekkikattan|தெகா said...

வாங்க வாங்க வந்து சொல்லுங்க. படிக்க காத்திருக்கிறேன். தொடர்ந்து எழுதணும் சில பேர் (மாதிரி காட்டான்) மாதிரி ஆடிக்கொண்ணு அமவாசைக்கொண்ணுனு இல்லாம அடிக்கடி வந்து எழுதணுமின்னு கேட்டுக் கொள்(ல்)கிறேன்.

கோபிநாத் said...

வணக்கம் அம்மா ;)))

வருக..வருக...வாழ்த்துக்கள் ;))

பாலராஜன்கீதா said...

மருத்துவத் துறையில் தாங்கள் சாதித்த சந்தித்த அனுபவங்களை எழுதும்படி வேண்டிக்கொள்கிறோம்.

துளசி கோபால் said...

வாங்க வாங்க நல்வரவு.

இலையுதிர் காலம் வந்து போனபிறகு, வசந்தகாலம் வந்துரும்.

எதுவுமே , காலங்கள் உட்பட ஒரே நிலையா இருக்கறதில்லை.

அதுதானே வாழ்க்கை?

உங்களை இங்கேப் பார்த்தது மனசுக்குச் சந்தோஷமா இருக்கு.

delphine said...

நன்றி பேராசிரியரே! எழுதுவதுக்கு ரொம்ப ஆசை தான். நேரம்தான் கிடைக்குதா என்று தெரியலை.

delphine said...

தெ.கா. காட்டான்? நீங்கள் கொடுத்த ENCOURAGEMNET தான். ஒரு புதிய முயற்சி. எடுபடுமா?

delphine said...

நன்றி கோபி. தற்சமயம் எந்த நாட்டில்? ஆணி எல்லாம் ஒழுங்கா பிடுங்கிறீர்களா.?

delphine said...

ஆமாங்க கீதா.. நிச்சயமாக மருத்துவ துறையின் நிறை, குறைகளை எழுதப்போறேன். நிறையை தவிர குறைகள்தான் அதிகம் உள்ளது.

delphine said...

துளசி உங்களை மாதிரி நல்ல இனிமையான நண்பர்களை நான் வலையுலகம் மூலம்தான் பெற்றுக்கொண்டேன். thank you sooooo much.

Anonymous said...

வாங்க..வாங்க மேடம்... எங்க ஜோதியில் ஐக்கியமாகுங்கோ!!
யாரங்கே! ஒரு சிகப்பு கம்பளத்தை எடுத்து விரி!!

வவ்வால் said...

உங்களை வலைப்பதிவிற்கு சுகாதாரமாக வரவேற்கிறேன்! ஆரோக்கியமான பதிவுகள் போடுங்கள். பின்னுட்ட தொற்று நோய் தாக்காமல் பார்த்துக்கொள்ளவும். எதிர் பாராத அனானி கொசுக்களிடம் இருந்து தப்பிக்க கொசு வலை பயன்படுத்தவும்! நோஞ்சானாக இருக்கும் தமிழுக்கு குளுக்கோஸ் ஏற்றவும்.

அப்பொல்லோவா வசூல் ராஜாவின் தலையகம் ஆச்சே! உண்மைகளை வெளியிடுவீர்களா ,ரமணா பாகம் இரண்டு எடுக்க கேப்டன் திட்டமிட்டு இருக்காராம்!

கீதா சாம்பசிவம் said...

வாங்க மேடம், நலவரவு, இன்னிக்குத் தான் பார்த்தேன் உங்க பேரைத் தமிழ்மணத்தில். உங்க அனுபவங்களே போதுமே ப்ளாக் மெயின்டைன் செய்ய!

delphine said...

வவ்வால் என்ன இப்படி ஒரே அடியா தாக்குறீங்க? ஆரோக்யமான விஷயங்கள் ஆரோக்யம் பற்றியவைகள்..
this could be an interactive blog. கேள்விகள் கேழுங்கள் பதில் சொல்கிறேன்....

delphine said...

நன்றி கீதா.

தென்றல் said...

வணக்கம்! நல்வரவு!!

உங்களை தமிழிலில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி!

delphine said...

:)

குட்டிபிசாசு said...

அம்மா,

சுயபுராணம் எழுத தான் பதிவு. வசந்தகாலம் மட்டுமில்ல, இலையுதிர்காலமும் ரசிக்கக்கூடியதுதான். தொடர்ந்து எழுதுங்கள்!!

வாழ்த்துக்கள்!!