Saturday, June 30, 2007

சின்ன சின்ன எட்டுகள்.....

வல்லி உங்களுக்குத்தான் என் முதல் நன்றி........ you have been the source of inspiration to start my Tamil blog apart from தெ.கா.
தமிழ்மணத்திற்குள் அவ்வப்போது வந்து என் பின்னோட்டங்களை மட்டும் இட்டு பதிவுகளையும், கும்மிகளையும் ரசித்துக்கொண்டிருந்த எனக்கு .
இப்போதைக்கு இது ஒரு பிரளயத்தனமான முயற்சிதான்.
எட்டு சாதனைகள்...no no எட்டு incidents? in life...
மறக்க முடியாத நல்ல விஷயங்கள் பல...
மறக்க முயற்சி செய்பவைகள் சில....
1953:
நான் பிறந்த
அன்றே ஒரு சாதனை படைத்துவிட்டேன். ஆண்குழந்தை பிறக்கும் என்று ஆவலாக இருந்த அப்பாவிற்கு நான் வந்து பிறந்தால், ஏப்ரல் ஒன்றாம் தேதி
அதுவும் இரண்டு பெண்களுக்கு பின்பு ...
என்னைப் பார்க்க கூட பிடிக்காமல் எடுத்தாரே ஒரு ஓட்டம்..பாம்பே போய் பதினைந்து நாட்கள் தங்கி அதன் பிறகு வந்து என்னைப்பார்த்தாராம். (how disappointing!)

ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது TRINITY COLLEGE OF MUSIC -LONDON-ல் violin courses எடுத்து அதன் பிறகு, முதன் முதலாக ஒரு concert-ல் solo வாக violin வாசித்தது.. இன்றளவும் அது எனக்கு ஒரு பெரிய விஷயம்தான்.

SSLC படிக்கும்போது நடந்த விஷயம்.. அரையாண்டு பரீட்சையில் தமிழில் 20 மார்க்கும், composite maths -ல் 30 மார்க்கும் வாங்கி சாதனை படைத்தேன்.. அதற்குக் கிடைத்த பரிசு?
என் டீச்சர், என் டெஸ்ட் paperஐ முதுகில் குத்திவிட்டு ஒரு நாள் முழுவதும் ஸ்கூலில் இருந்து அதோடு வீட்டுக்கு செல்ல வேண்டியதாகிவிட்டது...
அன்று என் முதுகும் பழுத்துவிட்டது....(cool)


ஆனால் இந்த தோல்வியும் அதற்கு எனக்கு கிடைத்த தண்டனையும் என் வாழ்க்கையே மாற்றியது. p.u.c.ல் மதுரை university ல்
இரண்டாவது ரேங்க் எடுத்து மருத்துவக் கல்லூரிக்குள் நுழைந்தேன்.(cake walk?)

1975
எனது மிக பெரிய சாதனை இதுதான்...மிகவும் orthodox ஆன குடும்பத்திலிருந்து வந்த நான் ஒரு காவல் துறை அதிகாரியை காதலித்து திருமணம் செய்தது... அவருடன் வாழ்ந்த நாட்களே பெரிய சாதனைதான் :) .... இரண்டு அழகான குழந்தைகள், அவர்களுக்கு நல்ல படிப்பு, வேலை.. 17 வெவ்வேறு ஊர்கள் (காதல் வாழ்க).:))))))))))))


1978
படித்து முடித்த கையோடு தாராபுரம் என்ற ஊரில் வேலைக்கு சேர்ந்த முதல் நாள் அனுபவம் இது.
கிராமத்தில் ஒரு மருத்துவ அம்மணியால் குழந்தை பேறு பார்க்கபட்ட ஒரு பெண்ணிற்கு... ஆறாவது பிரசவம் குழந்தை பிறந்து 15 மணி நேரமாகியும் நஞ்சு (placenta) வெளியே வராமல், உதிரம் கொட்டி..... பேச்சு மூச்சு இல்லாமல் ...ஒரு மாட்டு வண்டியில் வைக்கோலை பரப்பி அந்த பெண்ணை அதில் படுக்க வைத்து, நடு ராத்திரியில் கொண்டு வந்தார்கள்.
கஷ்டப்பட்டு நஞ்சை வெளியில் எடுத்து, ஆஸ்பத்திரியில் வேலைப்பார்த்த staff+ நான் யாவரும் ரத்தம் கொடுத்து அந்த பெண்ணைக் காப்பாற்றியது. அடுத்த நாள் காலையில் அந்த பெண்ணின் குழந்தைகள் ஆளுக்கு ஒர் sweet வைத்துக்கொண்டு எனக்காக காத்துக்கொண்டிருந்தது. (we were so committed)

1978-2006..

இருபத்தைந்தாயிரத்திற்கு மேல் பிரசவங்கள் ...... என் மருத்துவ வாழ்க்கையில்..(not in private practice)
டாக்டர்ஸ் தினமான இன்று இதை எழுதுவதில் மிகவும் சந்தோஷப்படுகிறேன்!

2006
என் கணவர் கோவையிலிருந்து சென்னைக்கு மாற்றலாகி விட்டதால் அவர் ஜூலை மாதமே சென்னை வந்து விட்டார். நான் அக்டோபர் மாதம்தான் வர முடிந்தது. தன்னந்தனியாக காரை ஓட்டிக்கொண்டு கோவையிலிருந்து சென்னை வந்த என்னை...
அவர் ஆபிஸில் மற்றக்காவல் துறை அதிகாரிகள் இருப்பதைக்கூட பொருட்படுத்தாமல் என் உச்சி முகர்ந்து " you can try going for the Himalayan Rally"
என்று சொன்னபோது
..இரண்டுபேர் கண்களிலும் கண்ணீர் துளிகள்.( daring devil).
தற்சமயம் சென்னை trafficல் கார் ஓட்டுவது அதைவிட மிக பெரிய சாதனை...


எட்டு பேரை அழைக்கணுமா? கஷ்டம்தான்.
இதை வாசிக்கும் நண்பர்கள் உதவி செய்யுங்களேன்!

Doctor's day!

டாக்டர்ஸ் டே நம் நாட்டில் ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் ஒன்றாம் தேதி கொண்டாடப்படுகிறது.

டாக்டர்கள் நம் நாட்டிற்கும், சமூகத்திற்கும் ஆற்றிய அரிய பல தொண்டுகளை நினைவுக்கொண்டு அவர்களுக்கு

நன்றி செலுத்தும் நாளாகும். பல்மருத்துவர்களிலிருந்து homeopathic வரைக்கும் எந்த வித்தியாசமும் பாராது --
எல்லோராலும் கொண்டாடப் படுகிறது. .மூத்த டாக்டரும், social service oriented mind டன் திகழ்ந்த டாக்டர் பி.சி. ராய் அவர்களின் பிறந்த நாள் மட்டுமல்ல, அவர் இறந்த நாளும் இதுவே. இது நாம் அவரைக் கௌரவிப்பதாகும்.
டாக்டர்களுக்கான official symbol ஆன red carnation தானம், தர்மம் , அன்பு, தைரியம், மற்றும், எந்த நேரத்திலும் சிகிச்சை அளிக்க கூடிய திறமை, இவை யாவற்றையும் தாங்கி நிற்கும் அடையாளமாகும். இந்த நாள் டாகடர்களுக்கும் தங்களைப் பரிசோதித்துப் பார்க்கும் நாளாகவும் திகழ்கிறது. படித்து முடிக்கும் போது எடுக்கும்
'oath'ஐ தாம் பாதுக்காற்றுக்கொண்டோமா, தங்கள் கடமைகளை சரிவர செய்தோமா,பணம் மட்டும் குறிக்கோளாக இல்லாமல் மனிதத்துவத்தோடு நோயாளிகளிடம் நடந்துக்கொண்டோமா என்று அவர்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.


டாக்டராக திகழ்வது ஒரு சாதரண வேலை அல்ல அது ஒரு commitment to service. தற்சமயம் டாக்டர்கள் போட்டி மனப்பான்மையுடன், பணத்திற்காக எதுவும் செய்ய திகழ்பவர்களாக இருக்கிறார்கள். முன்பு எல்லாம் கடவுள் என்று வர்ணிக்கப்பட்ட டாக்டர்கள், slowly they are losing their charm. கிராமப்புறத்தில் வேலை செய்ய மறுத்து, விடுகிறார்கள். இந்த நிலமை மாற வேண்டும். மருத்துவர்கள் இன்னும் ஒரு விஷயத்தையும் மனதில் கொள்ளவேண்டும் . நோய் தடுப்ப்க்கும் முறைகளை கையாளவேன்டும். மருத்துவர்- நோயாளி உறவு வலுபட வேண்டும். அவர்களுக்கும் வாழ்க்கையில் ஒரு உந்துதல் தேவை.
இந்த நாளில் உங்களுக்கு தெரிந்த, உங்களுக்கு பிடித்த ,உங்கள் குடும்ப டாக்டருக்கு உங்கள் வாழ்த்துக்களை தெரிவியுங்களேன்! ஏதாவது ஒரு சின்ன பரிசை அனுப்பிவைக்கலாமே! (ஒரு ரோஸ் பொக்கே?)...


Wednesday, June 27, 2007

மன அழுத்தம்.. (depression)

நாம் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் பல நேரத்தில் மன அழுத்தத்தை உணர்கின்றோம்.ஒரு சிலருக்கோ இந்த உணர்வுகள் மிகவும் கடுமையானதாகவும், அது தொடர்ந்தும் விடுகிறது.
அவ்வாறு கஷ்டப்படுபவர்களிடம் ‘தைரியமாயிருங்கள்', ‘கவலைப்படாதீர்கள்' 'கடவுள் இருக்கிறார்' என்று கூறுவதெல்லாம் உதவாது.
இந்த வகை மன அழுத்தம் எளிதில் ‘விலகாது',
மன அழுத்தம் (depression) சிகிச்சையளிக்கக்கூடிய மருத்துவ நிலையாகும் என்பதே என் கருத்து. இதுமாதிரி மன அழுத்தத்தில் கஷ்டப்படுபவர்களுக்கு நாம் ஒரு மன நோய் மருத்துவரை நாடுவதின் அவசியத்தை எடுத்து சொல்லவேண்டும்.
நாம் கவனிக்க வேண்டியவைகள்.
பெரும்பாலான நேரத்திலும் ஒர் அழுத்தமான மனநிலையில் எதையோ பரிக்கொடுத்துக்கொண்டு இருப்பது போல் தோன்றுவது

அடிக்கடி மனநிலை மாறுவது - ஒரு நிமிடம் சந்தோஷமாகவும், அடுத்த நிமிடமே எல்லாம் இழந்தமாதிரி இருப்பது.. எப்பொளுதும் சோம்பலாகவே இருப்பது, பலவீனம் ( a feeling of weakness )மற்றும் வாழ்க்கையில் பிடிமானத்தை இழந்துப்போவது.
அடிக்கடி கோபம் வருவது, அதை அடக்கத்தெரியாமல் மற்றவர்களிடம் எரிச்சல் அடைவது , தூக்கத்தில் மாற்றங்கள் - குறைவான தூக்கம்.. திடு திப்பென்று முழித்துக்கொள்வது. திடீரென்று எடைக் கூடுவதோ அல்லது குறைவதோ..
மதிப்பின்மை மற்றும் குற்றவுணர்வு எண்ணங்கள் (feeling of guilty and losing self esteem)
சிந்தித்து தெளிவாக செயல் பட முடியாத ஒரு நிலை..
தற்கொலை பற்றிய எண்ணங்கள, தற்கொலை செய்ய முயற்சி செய்வது, அதில் தோல்வி அடைவது.....குடும்பத்தைக் கவனிக்க முடியாமல் தடுமாறுவது.. ..
இதுதான் மன அழுத்தத்தின் ஆரம்பக்கால கட்டம்..

ஒரு மன நல மருத்துவரை சந்திக்க வேண்டிய நேரம் இதுதான்.

வாழ்க்கையில்..

வாழ்க்கையில் எத்தனையோபேரை நாம் சந்திக்கிறோம்.. ஒரு சிலரை நமக்குப்பிடித்து போய்விடுகிறது... ஒரு சிலர் நல்லவர்களாக இருந்தாலும் பிடிக்காது போய்விடுகிறது. எத்தனையோ தடவை இதற்கு விடை தேடி தோல்விதான் .. நான் மட்டுமல்ல ... என்னை மாதிரி நிறைய பேர் உண்டு....சில சமயம் கெட்டவர்களென்று தெரிந்தே அவர்களிடம் ஓவராக பேசுவோம். அதன் பிறகு வம்பில் மாட்டிக்கொள்வோம்..
என் நண்பி ஒருத்தி இப்படி மாட்டிக்கொண்டு "வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம்பா" என்று சொல்லி உதறி விட்டுப்போய்விடுவாள். சில சமயங்களில் இது ஒரு நல்ல பிலாசபி என்றே தோன்றும். சரி! இப்படி பினாத்துவது சரிதானா என்று தோன்றுகிறது. ஏதாவது உருப்படியா எஷுத முடியுதா என்று பார்ப்போம்.

அடுத்து என்ன?

ஒரு பதிவு தத்தக்கபிக்க என்று எழுதியாகிவிட்டது. ஆனால் இன்னும் யாரிடமும் இது பற்றி சொல்லவில்லை. தேன்கூடு விற்குள் நுழைய வேண்டுமானல் மூன்று பதிவாது எழுதி இருக்க வேண்டுமாம். அப்படியானால் தான் recognize பண்ணுவார்கள் போலும். எங்கே! ஒன்றுக்கே முடியவில்லை.. பார்ப்போம்! "முயற்சி திருவினையாக்கும்" .
இரண்டு நாட்களாக முயற்சி செய்து முடிந்தது இவ்வளவுதான்...

இலையுதிர்காலம்

வசந்தகாலம் என்று ஒன்றிருந்தால்....
இலையுதிர்காலம் என்று ஒன்று வந்துதானே ஆக வேண்டும்?...
வசந்தமாகவே எல்லாம் இருந்துவிட்டால்....வாழ்க்கைக்கு அர்த்தமே
இல்லாமல் போய்விடும். வாழ்க்கையும்
திகட்டிப் போய்விடும்.
நான் சந்தித்த , என்னை சிந்திக்க வைத்த
சில தருணங்கள், சில மனிதர்கள்,
நல்லவர்கள், திருந்தியவர்கள்..
எத்தனையோபேர்....
எனக்கு முதலில் பிடித்திராத
மருத்துவத்தொழில்...ஆனால் அதுவே
எனது வாழ்க்கையாகிவிட்டது. ..
காவல்துறை எனக்கு தந்த நல்ல
மனிதர்கள், அரிய சந்தர்ப்பங்கள்,
வாழ்ந்த வாழ்க்கையில் எத்தனை
சந்தோஷங்கள்......
" born with a silver spoon" என்பார்களே..
அது எனக்கு மிகவும்
பொருந்தும். சுயபுராணமாக
இருந்துவிடக்கூடாதே என்று ஒரு பக்கம்
பயம்..இந்த blogஐ தொடற்சியாக maintain
பண்ண முடியுமா என்று பார்ப்போம்...
எத்தனை பதில் கிடைக்காத கேள்விகள்
வாழ்க்கையில்.....